BREAKING NEWS

உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள்.

உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு
கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள்.
---------------------------------------------------------------------------------------

அன்று பிரிட்டிஸ் ஆட்சியில் துருக்கித் தொப்பிக்கு வழக்காடி வெற்றிபெற்றது நம் சமுகம் என வீரவரலாறு பேசியவர்கள் நாங்கள். தற்போது இலங்கையில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாள்கின்றோம். 20 தாவது திருத்தம் பாராழுமன்றில் நிறைவேறியது. முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, பெற்றுத்தரச் சென்ற முஸ்லிம் தலைமைகள், பாரழுமன்ற பிரதிநிதிகள் என்ன செய்துள்ளார்கள்.

எஜமானிய விசுவாசத்தில் கையை உயர்த்திவிட்டு, வீடுகளிலும், டி.வி.யிலும், பத்திரிகையிலம் சமுகம்பற்றி வீறாப்பு பேசுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் விட்டில் கூட்டம்போட்டு தவறுக்காக ஒப்பாரி வைக்கிறார். பிரதமர் றணிலின் காரியாலயத்தில் சுமந்திரனும். நோர்வே அதிகாரியும் உருவாக்கியதுதானாம் அந்த 20வது திருத்தச் சட்டம் ? வெட்கம் இருந்தால் கையை உயாத்திவிட்டு இதை சொல்வார்களா?

ஹக்கீம் கழுகு விழுங்கிபோல கையை உயர்த்திவிட்டு சும்மா இருக்கிறார். றிசாட் துணிச்சலானவர், சோரம்போகமாட்டார் என்றுதான் முஸ்லிம் சமுகம் எதிர்பார்த்தது. நல்லது கெட்டா  ---- ம் உதவாது என்றாகிவட்டது.

27.09.2017 தினகரனில் தம்பி ஹரீஸ் 'வடகிழக்கு இணைய விடமாட்டாராம், கல்முனை மாவட்டம் தராட்டி பதவி துறப்பாராம்'. இதெல்லாம் கை உயர்த்துறதுக்கு முன் செய்ய வேண்டிய விடயங்கள். 20 தாவதுக்கு கையை உயர்த்திவிட்டு வந்து விறாப்பு பேசுவது 'உடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறாமாதிரி இருக்கின்றது.

கல்முனை மாவட்டம் ஒரு தேர்தல்கால உண்டியல் அதை கேட்டுக்கேட்டு மக்களுக்கு புளிச்சிப் போச்சி. அந்த கல்முனை மாவட்டம் எடுக்க எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தது. கேட்டோமா? பேற்றோமா?

1989ல் அஷ்ரப் பிரமாதாசாவை ஆதரித்தபோது கேட்டிருக்கலாம் தந்திருப்பார் கோட்டை விடடோம். பிரேமதாசாவின் 'இம்பீச்மன்' நேரம் கேட்டிருக்கலாம் கேட்டோமா? சந்திரிக்காவின் ஆட்சியை ஒரு அங்கத்துவத்தால் பாதுகத்தபோது கேட்டிருக்கலாம் கேட்டோமா? இரவு 11மணி மட்டும் அவவோட பேசிக்கிருந்து விட்டு வீடு வந்தோம், தீகவாப்பிக்கு 10 ஆயிரம் எக்கர் காணி சுவீகரிப்பு பற்றி பாராழுமன்றில் பேசப்பட்டபோது எந்த எதிர்ப்பும் இல்லை  என்று சொன்னோம். கல்முனை மாவட்டம் பற்றிப்பேசவில்லை.

ஹக்கீமின் தலைமையில் கட்சி அகப்பட்டபின் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தது. பேசினாரா? கேட்டாரா? ஹென்சாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் கல்முனை மாவட்டம்பற்றி காட்டுங்கள் பார்க்கலாம். தனது செல்வாக்கையும, தனது  ஜ.தே.க.வையம் பாதுகாக்க, பிரதமர் றணிலின் கையை பலப்படுத்த அக்குறணைக்கு மார்க்கட் அபிவிருத்திக்கு 60 கோடி ஒதுக்கியுள்ளார் ஹக்கீம். இலங்கையில் 3ம் தரத்திலுள்ள கல்முனை மார்க்கட் ஒழுகிக் கரைகிறது. இவர்கள் கல்முனை மாவட்டம் பெற்றுதரப் போறார்களாம். வெட்கமில்லை அதை தொடர்ந்து பேச. காகத்தக்கு அது இருந்தால் பறக்கக்க தெரியுமாம்.

முடிந்தால் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி வாக்கைப்பெற பிரதமர் றணிலைக் கொண்டு பிரதேச சபை தருவோம் என்றமாதிரி, பிரதமரையோ, ஜனாதிபதியையோ வைத்து கல்முனை மாவட்டம் தருவேன் என்று சும்மாவாகுதல் சொலலச் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள். ஹரீஸின் வலது தோழில் எழுதும் மலக்கின் பட்டியலை பார்த்தால் அதில் கூடுதலாக 'கல்முனை மாவட்டம' என்ற வார்த்தையும் என்னை ஒன்றும் செய்ய தலைவர் விடுகிறார் இல்லை என்ற வார்த்தையும்தான் இருக்கும். அல்லாவுக்காக இனியும் அதை பேசாதீர்கள்.

கல்முனை ஒரு அழகான தாய் அந்த தாயை 17 வருடமாக ஒரு மலடன் திருமணம் செய்து அந்த தாய்க்கு மலடி என்ற நாமத்தை சூட்டிவிட்டான். அவனை வலுகட்டாயமாக தலாக் சொல்லவைத்து. அந்த தாயின் மானத்தை காக்க, வேறு திருமணம் செய்விக்க கல்முனை இளைஞர்கள் துணிந்துவிட்டார்கள். யார் பதவி விலகினாலும் சரி. பதவி விலகாவிட்டாலும் சரி இது அல்லாஹ் உதவியால் நடந்தேதீரும்.

மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கட்டிய கல்முனை மாநகர கட்டிடம் ஒழுகுகின்றது மழைக்கோட்டு சீலை போட்டு மூடியுள்ளோம். கட்டிடம் யார்ர தலையில் விழும் என்று தெரியாதுள்ளது. பிள்ளை சோடடைக்கு சாணை கொஞ்சுற மாதிரி ஏறாவூர் நகரசபை கட்டிட திறப்பு விழாவுக்கு பிரதமருடன் சென்று பார்த்துவிட்டு வந்தோம். வெட்கம் வரல்லியா அதை பார்க்கப்போன நமது அரசில்வாதிகளுக்கு.

முன்பெல்லாம் என்னத்தை எடுத்தலும் அதாவுல்லா விடுறாரில்ல என்று உங்கட ஏலாமையை சமாளித்தீர்கள். அவர் தோத்துபோய் வீட்டில் இருக்கிறார். இப்ப தலைவர் விடுறாரில்ல என்கிறீங்க. அப்ப நாய்க்கேன் தோல் தேங்காய். அதற்கேன் விடிவிளக்கு என்று சும்மாவா சொன்னாங்க.  

நாங்க 'சாணையோட வந்தது சந்தூக்குவரை' என்று வாழ்ந்து முடிச்சிட்டோம். எங்கட சந்ததிகள் எங்களை பார்த்து இதுதானா கல்முனை? என்று கேட்க வைத்துவிடாதீர்கள்.

கல்முனை ஏன் இவ்வளவுக்கு கேவலப்படுகிறது? மக்களே! சிந்தியுங்கள்.

உலகை ஷியோனிசம் சீரழிக்கின்றது.
கல்முனையை "ஹரீஸிஷம்" சீரழிக்கின்றது.

ஹாஜி நஸீர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar