ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
மியான்மரில் இருந்து 1.25 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறியுள்ள நிலையில் அங்கு முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 1.25 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 36 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மியான்மர் நாட்டின் ரகினே மாநிலத்தில் பாதுகாப்பு, மனிதநேயம், மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அன்டோனியோ, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ரகினே மாநிலத்தில் வாழ்பவர்கள் நீண்டகாலமாகவே அநீதியான முறையில் நடத்தப்படுவதை அறிந்து வேதபை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:-
ரோஹிங்கியா போராளிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு நான் முன்னர் கண்டனம் தெரிவித்திருந்தேன். ஆனால், தற்போது மியான்மர் நாட்டு பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் பாரபட்சமான தாக்குதல் அங்கு மனிதநேயத்தையும், மனித உரிமைகளையும் மீறும் வகையிலாக அமைந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை மதக்கலவரத்தை மேலும் அதிகப்படுத்தும்.
இதுதொடர்பாக, உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையை வலியுறுத்தியுள்ளேன். அங்கு நிலவரம் மேலும் மோசமடைவதை தடுப்பதற்கான தீர்வை காண சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும். அதேவேளையில், இந்த பிரச்சனைக்கான மூலக்காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ரகினே மாநில முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிப்பது கடினமாக இருந்தால் தற்போதைக்கு அவர்களுக்கு சட்ட அங்கீகாரமாவது வழங்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரத்தின் மூலம் அவர்கள் வெளிப்பகுதிகளுக்கு சென்று கூலிவேலை செய்யவும், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை பெறவும் முடியும்.
ரகினே மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பாக ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த இயான்மர் அரசு முன்வர வேண்டும்.
Comments
Post a comment