மேல் மாகாண ஆசிரியர்கள் பலர், பாடசாலை நேரங்களில் வேறு பணிகளில்

மேல் மாகாண ஆசிரியர்கள் பலர்,  பாடசாலை நேரங்களில் வேறு பணிகளில்  ஈடுபடுவது கண்டுபிடிப்பு:
மேல் மாகாண கல்வி அமைச்சிடம் முறைப்பாடு

( மினுவாங்கொடை நிருபர் )

   மேல் மாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள், பாடசாலை நேரங்களில் வெளி வேலைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரியவந்துள்ளது. 
    பாடசாலை வகுப்பு நேரங்களில் டியூஷன் வகுப்புக்கள் நடத்துதல், பிரதேசத்தில் செய்தி சேகரிப்புப் பணிகளில் ஈடுபடல், பல்வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்ளிட்ட தமது சொந்தத் தேவைகளின் நிமித்தம், பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள் இவ்வாறு பாடசாலைக் கடமைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாக, பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், மேல் மாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
   இது தொடர்பில், ஆசிரியர் சங்கங்களின் ஊடாகவும் மேல் மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்சவின் கவனம் திரும்பியுள்ளதுடன், இது சம்பந்தமாக உடனடி அவதானம் எடுத்து செயற்பட்டு, தனக்கு அறிக்கைகளைச்  சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் மேல் மாகாண கல்விக் காரியாலய  கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 
   இதேவேளை, இவ்வாறான நடவடிக்கைச் செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது உடனடியாக தவிர்க்கப்படல் வேண்டும் என்றும், தொடர்ந்தும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிராக, கல்வி நடவடிக்கைச் சட்டங்களுக்கு அமைவாக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேல் மாகாண கல்வி அமைச்சினால் முன்கூட்டியே  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்