BREAKING NEWS

முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் : மாவை சேனாதிராஜாபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதி தீர்­வல்ல. எமது அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுடன் இணக்கம் காண்­ப­தற்கு மேலும் பல கட்­டப்­பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டியுள்ளது என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மத த்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­துவம் குறித்து  தனது மனக் கிலே­சத்­தி­னையே மஹிந்த வெளியிட்­டாரே தவிர அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு முழு­மை­யான எதிர்ப்­பினை அவர் காட்­ட­வில்­லை­யெ­னவும் குறிப்­பிட்ட மாவை எம்.பி., சர்வ­தே­சத்தின் ஆத­ரவு கிடைத்­துள்ள தற்­போ­தைய தரு­ணத்­தினை குழப்­பாது சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்


புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வெளிவந்­துள்ள நிலையில் அது­கு­றித்து எழுந்த விமர்­ச­னங்கள், வட க்கு, கிழக்கு இணைப்­புக்கு எதி­ராக முஸ் லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களின் கருத்­துக்கள், இடைக்­கால அறிக்கை குறித்து முன்னாள் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடும் அவ­ரது அணி­யினர் தென்­னி­லங்­கையில் மேற்­கொள்ளும் பிர­சா­ரங்கள் தொடர்­பாக கருத்­துக்­களை முன்­வைத்த போதே மாவை.சோ.சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யுத்­தத்­திற்கு பின்­ன­ரான ஒரு சூழலில் தமிழ் மக்­களின் நிலைமை மோச­மாக இருந்­தது. நீதி­வி­சா­ர­ணைகள் இன்­றிய நிலையில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்­ட­வொரு சமூ­க­மாக திட்­ட­மி­டப்­பட்ட வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அந்த நிலை­மைகள்  தொடர்ந்தும் நீடித்­த­மை­யினால் எமது மக்கள் ஆட்­சி­மாற்­ற­மொன்­றினை எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.


அதே­போன்று தான் உலக ஒழுங்கில் ஏற்­பட்ட மாற்­றத்தின் கார­ண­மாக இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­ப­ட­வேண்­டு­மென்ற தோற்­றப்­பாடும் சர்­வ­தேச நாடு­க ளில் எழுந்­தி­ருந்­தது. இவ்­வா­றான பின்­ன­ணியில் தான் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றி­ருந்­தது. அதன் பின்னர்  ஐக்­கிய தேசியக் கட்­சியும், சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை தோற்­று­வித்து ஆட்­சி­பீ­டத்தில் அமர்ந்­தார்கள். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கும், பொறுப்­புக்­கூறும் விடயத்­திலும் உள்­நாட்­டிலும், ஐ.நா.விலும், சர்­வ­தே­சத்­திற்கும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்கள்.


அத­ன­டிப்­ப­டையில் முதற்­த­ட­வை­யாக தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான உரு­வாக்கச் செயற்­பா­டொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அந்த முற்­போக்­கான நட­வ­டிக்­கைக்கு நாமும் முழு­மை­யான பங்­க­ளிப்­பினைச் செய்­தி­ருந்தோம். இவ்­வா­றான நிலை­மையில் தான் தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்று வெளியா­கி­யுள்­ளது. இந்த அறிக்­கையில் அனைத்து தரப்­பி­ன­ரி­னதும் முன்­மொ­ழி­வு­களும், இணக்­கப்­பாடு எட்­டிய விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இது இறு­தி­யான அறிக்கை அல்ல.


ஆகவே அந்த அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்ட விட­யங்­களை அல்­லது ஆலோ­சிக்­கப்­பட்ட விட­யங்­களை மைய­மாக வைத்து விமர்­ச­னங்­களை வெளியி­டு­வது தவ­றா­ன­தாகும். காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆரம்ப புள்­ளி­யொன்­றா­கவே நாம் இதனை பார்க்­கின்றோம். இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­ய­வுள்ளோம்.

குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் ஆணையைப் பெற்­றுள்­ளது.  இணைந்த வடக்கு கிழக்கில் உள்­ளக சுய­நிர்ணய அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்­றையே எதிர்­பார்த்து அந்த ஆணையை எமக்கு மக்கள் வழங்­கி­யுள்­ளார்கள்.


ஆகவே எமது அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுடன் ஒப்­பீட்­ட­ளவில் பார்க்­கையில் இடைக்­கால அறிக்­கையில் மேலும் பல படிகள் முன்­னேற்றம் அடை­ய­வேண்­டி­யுள்­ளது. அதி­கா­ரப்­ப­கிர்வு அதி­யுச்­ச­மாக இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்­பா­க நாம் சகல தரப்­பி­ன­ரு­டனும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­ட­வேண்­டி­யுள்­ளது.


மிக முக்­கி­ய­மாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் சம்­பந்­த­மாக நாம் சகோ­தர முஸ்லிம் கட்­சி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி வரு­கின்றோம். குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மான அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும் வகை­யி­லான தனி­ய­லகு ஒன்றை அமைக்கும் கோரிக்­கையை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. அதனை வழங்­கு­வ­தற்கும் நாம் தயா­ரா­கவே உள்ளோம்.

இது சம்­பந்­த­மாக நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டனும் ஏனைய சில தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சுக்­களை ஏற்­க­னவே ஆரம்­பித்து விட்டோம். அந்­தப்­பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்தும் இடம்­பெறும். நிச்­ச­ய­மாக இரு சமூகத்­திற்­கு­முள்ள ஐயப்­பா­டுகள் களை­யப்­பட்டு அவை ஆரோக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்­தினை அடையும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது.


இவ்­வா­றி­ருக்­கையில் இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கட்­சி­களின், தனிப்­பட்ட நபர்­களின் பின்­னி­ணைப்பு குறித்து முரண்­பா­டுகள் பல காணப்­ப­டு­கின்­றன. அவை குறித்து நாம் கலந்­து­ரை­யா­டல்­களை தொடர்ந்தும் செய்­ய­வுள்ளோம். ஏற்­க­னவே நாம் மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி போன்­ற­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்­களை தனித்­த­னி­யாக நடத்­தி­யுள்ளோம். அதே­போன்ற நட­வ­டிக்­கை­களை எதிர்­கா­லத்­திலும் தொட­ர­வுள்ளோம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar