Skip to main content

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு

   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள

சிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"

சிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின்
கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(ஆர்.ஹஸன்)
 
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்ட “நிதஹச” சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்ப காலத்தில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியாக அதிக சேவையாற்றியுள்ள டாக்டர். பதியூதீன் மஹ்மூத் போன்றவர்கள் இக்கட்சியின் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளனர். 
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி நிரந்திர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அப்போதைய தலைவர்கள் முன்வரவில்லை. இதனால், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் தூரமாகினர். அதனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் நாங்கள் பாரிய பின்னடைவை சந்தித்தோம். 
இருப்பினும், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பிரிந்து சென்றவர்கள் நாளுக்கு நாள் மீண்டும் இணைகின்றனர்.” – என்றார். 
குறித்த நேர்காணலில் இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
கேள்வி:- இனவாத அமைப்புக்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற ரீதியில் இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்:- இனவாத செயற்பாடுகளினால் எமது நாடே பாதிக்கப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்திக்கும் - பொருளாதாரத்துக்கும் - நல்லிணக்கத்துக்கும் - முன்னேற்றத்துக்கும் அது பாதிப்பாக அமையும். நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் சிந்திப்போமானால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். எனவே, இனவாதம் யார் பேசினாலும் அது எதிர்ப்புத் தெரிவிக்கும். 
கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பிரிந்து சென்றுள்ள முஸ்லிம்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன? 
பதில்:- நாங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் கிழக்கு மாகண சபைத் தேர்தல் உற்பட மூன்று மாகண சபைகளுக்குமான தேர்தல்கள்  மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அதிகளவு முஸ்லிம் மக்களது ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான தயார்படுத்தல்களை நாம் செய்து வருகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு எமது பயணத்தைத் தொடர்வது கஷ்டமான காரியம் அல்ல. 

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313