Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

*நல்லாட்சியில் முஸ்லிம்களுக்குமீண்டும்கொடுக்கப்பட்ட பரிசுப்பொதி*



இலங்கையில், அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகுமூலமும் – விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR) இலங்கையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.இலங்கை அரசுக்கு ஒரு சதம்கூட செலவு இல்லை. ஒரு சில முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களும், தனவந்தர்களும் இவர்களுடைய விடயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடோன்றிற்கோ அல்லது அவர்களது சொந்த நாட்டின் நிலைமை சுமுகம் ஆகும் வரை இவர்கள் தற்காலிகமாக இலங்கையில்  தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.இவர்களின் முழு செலவையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம்(UNHCR) பொறுப்பேற்றுள்ளது.
இங்கு கூட அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் இனவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தலைதூக்கியுள்ளது. இன்று அவர்கள் இலங்கையிலும் கூட மறைந்து ஒழிந்து மறைத்தும் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இவர்களை நாம் ஒன்று கூடி கொலைசெய்வோம் என இனவாதி டான் பிரசாத் வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டு இருந்தான் என்பதை யாவரும் அறிந்த உண்மை. இதற்கு எதிராக, ஒரு சில முஸ்லிம் சட்டத் தரணிகள் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்தும் இன்றுவரை அவன் விசாரணை செய்யப்படாமல் அவனின் இனவாத அடாவடித்தனமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனை விசாரிக்காமல் இருப்பதன் பின்னணி என்ன?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரால்(14/09/2017) மியன்மார் அரசை கண்டித்து, மாளிகாவத்தையில் இருந்து மியன்மார் தூதுவராளையம் வரை ஏற்பாடு செய்யப்பட ஆர்பாட்டத்துக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு, அவர்களின் ஆர்பாட்டம் மருதானையுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடந்த வாரத்தில் இருந்து(சண்டே லீடர் பத்திரிக்கை –Sunday leader 17/09/2017) , மியன்மார் நாட்டினருக்கான இலங்கை விசா நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மியன்மார் நாட்டவர்களை திருப்பி அனுப்பும் படி பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கு இணங்கஉள்நாட்டு அலுவல்கள்அமைச்சர் எஸ்.பி.நாவின்னவினால்  , கட்டுநாயக்க விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு சுற்று நிரூபம்  அனுப்பப் பட்டுள்ளது.இதன் மூலமாக அகதிகளாகவோ எந்த காரணத்திற்காகவோமியன்மார் மக்கள் இலங்கைக்கு வர முடியாத நிலை   ஏற்பட்டுள்ளது.இராஜ தந்திர கடவுச் சீட்டுக்களைத் தவிர.
இன்று வரை, பிரதமரோ, ஜனாதிபதியோ மியன்மார் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எதிராக ஒரு கண்டனமோ, அனுதாபமோ  தெரிவிக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் குண்டுவெடிப்புகள், இயற்கை அனர்த்தம், வடகொரிய அணுஆயுத சோதனைக்கும்,  பாரிஸ் குண்டுவெடிப்பு, சிறு சிறு சில்லறை விடயங்களுக்கும் கண்டனமும் அனுதாபமும் தெரிவிக்கும் அரசாங்கம். பல ஆயிரம் மக்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து உடமைகளை அழித்து நாட்டை விட்டு அப்பாவி மக்களை விரட்டியடிக்கும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

முஸ்லிம்களின் வாக்குகளால்,  உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இது எங்களுக்குக் தருகின்ற இன்னொரு பரிசா.............????????????

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313