அம்பாறைக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வருகை !!

அம்பாறைக்கு  அன்வர்  முஸ்தபாவின்  அழைப்பில்  பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகர் வருகை !! 

 சிம்ஸ் கேம்பஸ்  பணிப்பாளர் நாயகமும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக் குழுவின்   இலங்கைக்கான சமாதான தூதுவருமான அன்வர் எம் முஸ்தபா அவர்களின் அழைப்பை  ஏற்று  இன்று (28)  இலங்கைக்கான தற்போதைய  பாகிஸ்தானிய  உயர்ஸ்தானிகர்  வைத்திய   கலாநிதி சப்ராஸ்.A.K.சிப்ரா அவர்கள் இன்று அம்பாறைக்கு  விஜயம்  செய்தார்.

சுனாமியால் முழுமையாக  பாதிக்கப்பட்ட கமு / லீடர் எம்.எச. எம் அஸ்ரப்  வித்தியாலயத்துக்கு  இலங்கைக்கான தற்போதைய  பாகிஸ்தானிய  உயர்ஸ்தானிகர்  வைத்திய கலாநிதி சப்ராஸ்.A.K.சிப்ரா அவர்கள் திடீர்  விஜயத்தை  மேட்கொண்டு அப் பாடசாலையின்  குறைகளையும், தேவைகளையும்  அதிபர் , ஆசிரியர்களிடம்  கேட்டு அறிந்து கொண்டார் .  

தொடர்ந்தும் புதிய   பல வசதிகளுடன்  அமையப்பெற்றுள்ள  சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் அலுவலகத்துக்கு  விஜயம் செய்து பிரதேச மாணவர்களினதும், பிரதேசத்தினதும்  கல்வி நிலை பற்றி அறிந்து  கொண்டார் . 

அதனை  தொடர்ந்து  சம்மாந்துறை அக்ரோ  குரூப்பின்  விதை உட்பத்தி  நிலையத்துக்கு  விஜயம் செய்த  இலங்கைக்கான தற்போதைய  பாகிஸ்தானிய  உயர்ஸ்தானிகர்   வைத்திய கலாநிதி சப்ராஸ்.A.K.சிப்ரா அவர்கள் அடங்கிய  குழுவினர்  அந்த நிலையத்தை பார்வையிட்டதுடன் எமது  பிரதேச விவசாயிகளின் நிலைமைகளையும்  இன்னல்களையும்  விரிவாக  அறிந்து கொண்டதுடன் சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகம்  அன்வர் எம் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளின்  பிரகாரம் அண்மையில்   வழங்கிவைக்கப்பட்ட  உழவு  இயந்திரத்தையும் பார்வையிட்டதுடன் . மேலும் பல உதவிகளை  வழங்க தயாராக இருப்பதாக  நம்பிக்கை  தெரிவித்தார். 

கடந்த  சுனாமி  அனர்த்த அவசர  நிலையை  கவனத்தில்  கொண்டு அன்வர் எம் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளை  ஏற்று  பாகிஸ்தானிய  அரசினால்  கல்முனை அஸ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு  அம்புலன்ஸ்  வண்டி  ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது  இங்கு  குறிப்பிட்ட தக்கது. 

-கலைமகன் -

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்