முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
++++++++++++++++++++++++++++++ ++
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
(ஆர்.ஹஸன்)
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையிலுள்ள சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துதல், வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாற்றமான முறையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தனது பரிந்துரையை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்திருந்தது. அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது ‘சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில்’ அறிவித்தார். அதில் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றலிரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும் என்பதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதனால், இச்சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் கைவிடப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளன. நீதிமன்றத்தின் பரிந்துரையானது ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்பதுடன், மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.
மக்கள் மாகாண சபைகளுக்கு வழங்கிய ஆணைக்கு மேலதிகமாக ஒரு நாளைக்கூட மேலதிமாக வழங்க முடியாது. கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளினும் கால எல்லை நிறைவடைந்ததும் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படும்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு பாதகமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை ஆய்வு செய்யாமல் தமது சொந்த இலாபத்துக்காக ஆதரவு வழங்கிய கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும். – என்றார்.
Comments
Post a comment