( மினுவாங்கொடை நிருபர் )
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர், கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
பியகம, தெகட்டன ஆகிய பிரதேசங்களில் இவர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட கார்களில் வீடு வீடாகச் சென்று ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, பணம் மற்றும் சொத்துக்களைத் திருடியுள்ளதாகவும், இச்சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post a Comment