( ஐ. ஏ. காதிர் கான் )
பியகம சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 97 பேருக்கு எதிராக, மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு, 4 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா அபராதத் தொகை அரசுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக, பியகம சுகாதார வைத்திய அதிகாரி குமாரி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதவிர, டெங்கு தொற்றுவதற்கு ஏதுவாக சுற்றுச் சூழலை வைத்திருந்த மேலும் 89 பேருக்கு இறுதி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பியகம சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையிலும் 2411 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment