எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய்விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து அல்லது நபர்களைப் பார்த்து நான் வெட்கப் படுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் புன்னக்குடா விதீயில் நேற்று இடம்பெற்ற முதலமைச்சரின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதரா பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரவு பகலாக சமூகத்துக்ககாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதற்காக ஒரு ஐந்து சதமும் களவு செய்யாத எமது மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றர்கள். அவர்களை பார்த்தும் நான் பெருமைப் படுகின்றேன். சட்டத் தரணிகள் ஆர்வம் உள்ளவர்கள் படித்தவர்கள் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்தவர்கள் என சமூகத்துக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உழைத்து இருக்கின்றர்கள் அவர்களை பார்த்து நாங்கள் பெருமையடைகின்றோம். நாங்கள் செய்த அநியாயம் என்ன? அல்லது இந்த பதவியை எடுத்து விட்டு ஓடி ஒழி