ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
சாய்ந்தமருது மக்கள் தமக்கான பிரதேச சபை வேண்டும் என கோரிக்கை விடுத்தமைக்கான காரணம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்களினால் விதைக்கப்பட்ட பிரதேச வாதம்தான் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவதன் கல்முனை மாநகர சபை முஸ்லிம்களிடமிருந்து பறி போகுமா என்ற தலைப்பில் கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கல்முனையை பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக ஏனைய ஊர்களை விட சாய்ந்தமருதே மிக அதிகம் பங்களித்துள்ளது. இதற்கு மிகப்பெரிய ஆதாரம் கடந்த மாநகர சபை தேர்தலின் போது சாய்ந்தமருதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த வேறு எந்தக்கட்சியிலும் உறுப்பினர்கள் வெற்றி பெறவில்லை. அந்தளவுக்கு சாய்ந்தமருதின் 98 வீதமான மக்கள் முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று வார்த்தைகளுக்கு ஏமாந்தனர். அப்படியும் அம்மக்கள் மு. காவினரால் வஞ்சிக்கப்பட்டனர். முறையான அபிவிருத்தியிலிருந்து ஒதுக்கப்பட்டனர். அநியாயத்தை யார் செய்தாலும் அனுமதிக்க முடியாது. எனது மகள் களவெடுத்தாலும் அவரின் கையை வெட்டுவேன் என்ற மாதலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் நாம்.
உண்மையை சொல்லப்போனால் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை அறிவிக்கப்பட்டால் கல்முனை நகரம் செயலிழந்து விடும் என ஹரீஸ் எம் பி போன்றோர் சொல்வது யதார்த்தத்துக்கு மாற்றமானதாகும். இவர்கள் இப்படி சொல்வது கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் இனி ஆட்சி செய்ய முடியாது போய்விடும் என்ற அச்சத்தில்தான்.
சாய்ந்தமருது நீங்கலாக கல்முனை மாநகருக்கான முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கி என்பது 60 வீதமே உள்ளது. சாய்ந்தமருதில் மட்டுமே மு. காவுக்கு 98 வீத வாக்குகள் உள்ளன. இந்த நிலையில் கல்முனை மாநகரிலிருந்து சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை மாநகர சபையை தமிழர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டப்படுவதும் முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையில் அழிந்து விடும் என்பதால் கல்முனை முஸ்லிம்களை தொடர்ந்தும் கொள்ளையடிக்க முடியாது என்ற அச்சமுமே இவர்களுக்கு உள்ளதன் காரணமே தவிர கல்முனையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் கொஞ்சமும் இல்லை.
இதே முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை, பிரதேச சபையாக இருந்த 1994ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தும் கல்முனை மாநகரம் முன்னேற்றமடையவில்லை. கிழக்கின் முகவெற்றிலையாக இருந்த கல்முனையை கிழக்கின் கக்கூசாக மாற்றிவிட்டார்கள் முஸ்லிம் காங்கிரசினர்.
சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனையின் ஆட்சியை தமிழர்கள் கைப்பற்றி விடுவார்கள் என சொல்லும் முஸ்லிம் காங்கிரஸ்தான் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணத்தையே ஆட்சி செய்கிறது. ஒரு மாகாணத்தை இவ்வாறு இணைந்து ஆட்சி செய்ய முடியும் என்றல் சுமார் 20 சதுர மைல் கொண்ட கல்முனையை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து ஆட்சி செய்ய முடியாதா?
அப்படியும் முடியாது என்றால் சாய்ந்தமருது பிரியும் பட்சத்தில் கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடாமல் அனைத்து முஸ்லிம் கட்சிகளுடனும் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட்டால் நிச்சயம் முஸ்லிம் ஒருவர் மேயராக முடியும். ஆனால் பதவி, பணம் என்றே சிந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் யாராவது ஒரு முஸ்லிம் மேயராக வரட்டுமே என பார்க்காமல் தமது கட்சிக்கே மேயர் பதவி வேண்டும் என அடம்பிடித்து இத்தகைய முஸ்லிம் கட்சிகளின் கூட்டுக்கு வேட்டு வைப்பார்கள் என்பதே உண்மை.
2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என உலமா கட்சி உட்பட உம்மா என்ற அமைப்பும் முயற்சி செய்த போது முதலமைச்சர் பதவி, தமது மரச்சின்னம் என்ற பிடிவாதத்தை முன் வைத்து பிளவை ஏற்படுத்தியவர்கள் முஸ்லிம் காங்கிரசினர் என்ற வரலாற்று உண்மையை நாம் மறக்க முடியாது.
உலமா கட்சியை பொறுத்தவரை கல்முனயை நான்காக பிரித்து சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கலாம் என்றே சொல்லி வருகிறது. அவ்வாறின்றி சாய்ந்தமருதுக்கு மட்டும் வழங்கினாலும் கல்முனை மாநகரில் தமிழ் முஸ்லிம் கூட்டாட்சி வரவேண்டும் என்றும் முஸ்லிம் ஒருவர் மேயராகவும் தமிழர் ஒருவர் பிரதி மேயராகவும் வரக்கூடிய வகையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை வர வேண்டும் அல்லது முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக போட்டியிட முன்வரவேண்டும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
ஆகவே கல்முனை, இரண்டாக மட்டும் பிரிக்கப்பட்டால் ஏற்படும் நஷ்டங்களுக்குரிய முழு பொறுப்பையும் பிரதேசவாதத்தை விதைத்து சாய்ந்தமருது பிரிவுக்கு வழி வகுத்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களே ஏற்க வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Comments
Post a comment