BREAKING NEWS

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

அரஃபா நோன்பு வைத்தால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும்,  வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976*

ம‌க்காவுக்கு சென்ற‌ ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தே மிக‌ச்ச‌ரியான‌தாகும்.
இத‌னை ம‌றுக்கும் சில‌ர் ந‌பிக‌ளார் கால‌த்தில் அர‌பா தின‌த்தில் நோன்பு பிடிக்க‌ சாத்திய‌மில்லையே என‌ கூறுகிறார்க‌ள். இது முற்றிலும் த‌வ‌றான‌தாகும்.
1. ஹ‌ஜ் கிரியைக்கான‌ திக‌தியை ர‌சூலுல்லாஹ் ம‌க்காவில் இருந்து கொண்டு தீர்மானிக்க‌வில்லை. சுமார் 5 நாட்க‌ள் பிர‌யாண‌ம் செய்யும் தூர‌த்தில் இருந்து கொண்டே ம‌தீனாவின் த‌லைப்பிறையை வைத்தே ம‌க்காவின் ஹ‌ஜ்ஜை தீர்மானித்தார்களே த‌விர‌ ம‌க்க‌த்து காபிர்க‌ளின் பிறைத்திக‌தி என்ன‌ என‌ ர‌சூலுலாஹ் கேட்டு ம‌க்க‌த்து காபிர்க‌ளை பின்ப‌ற்றிய‌தாக‌ ஒரு ஹ‌தீதும் இல்லை.
2. ந‌பிய‌வ‌ர்க‌ள் ம‌தீனாவில் துல்ஹ‌ஜ் பிறை க‌ண்ட‌பின் ச‌ஹாபாக்க‌ளை மக்காவுக்கு அனுப்பும் போது அர‌பா நாள் அதாவ‌து பிறை 9ல் ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேர்வார்க‌ள் என்ப‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் ந‌ன்கு தெரிந்து வைத்திருப்பார்க‌ள் என்ப‌தை புரிய‌ முடியும்.
3. அர‌பா நோன்பு என்றுதான் ஹ‌தீதில் உள்ள‌தே த‌விர‌ அர‌பா என்ற‌ பெய‌ர் குறிப்பிடாம‌ல் வெறும‌னே பிறை 9 நோன்பு என‌ ஹ‌தீத் இல்லை. வ‌ருட‌ம் 364 நாட்க‌ளும் உற‌ங்கும் அர‌பா மைதான‌ம் அர‌பா தின‌த்தில் ம‌ட்டுமே விழித்திருக்கும். அர‌ப‌வில் ஹாஜிக‌ள் கூடும் தின‌ம் என்ப‌தாலேயே ஹ‌தீதில் ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா என்ற‌ பெய‌ரை பாவித்துள்ளார்க‌ள்.
4. ந‌ம‌து நாடு போன்ற‌ நாடுக‌ளில் முன்ன‌ர் அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தை அறிய‌ முடியாத்தால் யூக‌த்தின் அடிப்ப‌டையில் பிறை 9ல்நோன்பு பிடித்த‌ன‌ர். த‌ற்போது எப்போது அர‌பா தின‌ம் என்ப‌தை 8 நாட்க‌ளுக்கு முன்ன‌ரே உல‌க‌ம் முழுக்க‌ தெரிந்து விடுவ‌தால் ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடும் தின‌த்தில்தான் அர‌பா நோன்பை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் நோற்க‌ வேண்டும் என்ப‌தே எம‌து தெளிவான‌ நிலைப்பாடாகும்.

அர‌பா நோன்பு ப‌ற்றிய‌ சில‌ அறியாமைக்க‌ருத்துக்க‌ளும் எம‌து ப‌தில்க‌ளும்.
📮 *அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான்* அரபா நோன்பு என்று *எந்தவொரு ஹதீஸும் கிடையாது.”*
ப‌தில்: அர‌பா நோன்பு ஒரு வ‌ருட‌த்துக்கான‌ ப‌ல‌ன் த‌ரும் எனும் பொருளில் முஸ்லிமில் ஹ‌தீத் வ‌ந்துள்ள‌து. இந்த‌ ஹ‌தீதில் பிறை 9 என‌ வ‌ர‌வில்லை. அர‌பா என்றே வ‌ந்த‌து. ஹ‌ஜ்ஜுடைய‌ நோன்பு என‌ ஹ‌தீதில் வ‌ந்திருந்தாலாவ‌து அர‌பா நோன்பு என்று இல்லை என‌ வாதிட‌லாம். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடும் தின‌த்துக்குத்தான் يوم عرفة அர‌பா தின‌ம் என‌ப்ப‌டும்.

📌 வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் *அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும்* என்ற ஓர் *இஸ்லாமிய அடிப்படையற்ற* கருத்து நிலவி வருகிறது.

ப‌; முற்கால‌த்தில் அதாவ‌து அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தை அறிய‌ முடியாத‌ கால‌த்தில் இதில் க‌ருத்து வேறுபாடு இருந்த‌து. இப்போது இது விட‌ய‌ம் மிக‌த்தெளிவாக‌ உள்ள‌து.

📌 இச்சிந்தனை காரணமாக *தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தில் நடக்கின்ற வணக்கவழிபாடுகள்* ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் *சவூதிக்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர்.* உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.

01> துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை *பத்து வருடங்களாக* எவ்வாறு தீர்மானித்தார்கள்?

ப‌: சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சு ம‌தீனா பிறையை வைத்து அமுல் ப‌டுத்தினார்க‌ள். கார‌ண‌ம் ஹ‌ஜ்ஜுக்கு செல்த‌ல் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. த‌டை நீங்கிய‌ போது ம‌தீனா பிறையை ம‌க்காவிலும் அமுல் ப‌டுத்தி ம‌க்காவிலும் ம‌தீனாவிலும் ஒரே நாளில் உழ்ஹிய்யா பெருநாளை ந‌டைமுறைப்ப‌டுத்தினார்க‌ள்.

📌நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் *பத்து வருடங்களாக* உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் *துல்ஹிஜ்ஜா* மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். *துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும்*. அவ்வாறாயின் *மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும்* அதன் *பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும்*. அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். *அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது*. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
ப‌. அர‌பா நோன்பு ப‌ற்றி விதைந்துரைத்த‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் அது ப‌ற்றி அல‌ட்டிக்கொள்ள‌வில்லை என்ப‌து இட்டுக்க‌ட்டாகும்.

02> *அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை* வரும்முன்னிருந்தே *ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு*?
ப‌. ஏற்க‌ன‌வே ப‌தில் உள்ள‌து..

📌நபியவர்கள் *வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள்* அக்காலப்பகுதியில் *ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை*. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் *ஒன்பதாம் தின நோன்பை* அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும் ?
ப‌. ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா தின‌ம் அல்லாத‌ துல்ஹ‌ஜ் பிறை 9 என‌ அதில் நோன்பு பிடிக்க‌வில்லை. அத்தின‌ம் ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடும் அர‌பா தின‌ம் என்ற‌ வ‌கையில் நோன்பு நோற்றார்க‌ள்.

📌 நபித்தோழர்கள் *பிறையை* அடிப்படையாக வைத்துத்தான் *ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல*
ப‌. பிறையை அடிப்ப‌டையாக‌ வைத்தே அர‌பா தினம் நிர்ண‌யிக்க‌ப்ப‌டுகிற‌து.

03> அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை *ஜாஹிலியாக்காலம்* தொட்டே காணப்பட்டது.
ப‌. ஜாஹிலிய்யா கால‌ம் ந‌ம‌க்கு மார்க்க‌ம‌ல்ல‌.

📌சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது ‘அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.’ என பதிலளிக்கிறார்கள். *இது இருவகையில் தவறாகும்*

📌எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை *அரபாதினமன்று* நான் தேடிச்சென்றேன். அச்சமயம் *அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை* கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? என்று எனக்குள் கூறிக்கொண்டேன். (அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்)
(ஆதாரம்:- *புகாரி 1664*)

📌இது *நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர்* நடந்த சம்பவமாகும். *கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும்*. ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று *கஃபாவிலேயே இருப்பார்கள்*. அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால்  
*ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்* .இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த *நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்*.    (பத்ஹுல் பாரீ 3:603 604)
ப‌. சிரிப்பு வ‌ருகிற‌து. அர‌பா என்ப‌து ஒரு ஊர். அங்கு ஹ‌ஜ் கால‌த்தில் ம‌ட்டுமே ஹாஜிக‌ள் ஒன்று கூடுவ‌ர் என்ப‌த‌ற்காக‌ ஏனைய‌ நாட்க‌ளில் யாரும் ஆடு, ஒட்ட‌க‌ம் மேய்க்க‌ அங்கு போக‌க்கூடாது என்ப‌த‌ல்ல‌. ந‌பியுள்ளாஹ் இறைவ‌னால் வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தால் அர‌பா மைதான‌த்தின் ம‌கிமை தெரிந்திருந்தால் த‌னிமை தேடி அத‌ன் ப‌க்க‌ம் சென்றிருக்க‌லாம்.

📌எனவே *அரபாவில் ஒன்று கூடும் வழமை* ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். *இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல*.
ப‌. இது பைத்திய‌க்கார‌த்த‌ன‌மான‌ க‌ருத்து. ஜாஹிலிய்யா கால‌த்திலும் க‌ஃபாவை த‌வாப் செய்யும் வ‌ழ‌க்க‌ம் உள்ள‌தால் நாம் த‌வாஃப் செய்ய‌ தேவையில்லை என்ப‌து போல் உள்ள‌து.

``` இரண்டாவது``` *ஹிஜ்ரி 8* ஆம் ஆண்டு *இதாப்* என்ற நபித்தோழரும் *9 ஆம்* ஆண்டு *அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும்* ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் *9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை*. ```மக்கா வெற்றியின்``` பின்னரே *இவ்விருவரின் ஹஜ்ஜும்* நிகழ்கிறது. அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் *9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை*. மக்கா வெற்றியின் பின்னருங் கூட *நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை* என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.

```ஏனெனில்```

04>அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் *துல்கஃதாவிலேயே* இடம்பெற்றது.
ப‌. நாம் ஏற்க‌ன‌வே சொன்னோம் ஆட்சித்த‌லைவ‌ர் ர‌சூலுல்லாஹ் என்ப‌தால் ம‌க்காவுக்கு சென்ற‌ அபூ ப‌க்க‌ர் ர‌ழி அவ‌ர்க‌ளுக்கு எப்போது அர‌பா தின‌ம் என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் துல் ஹ‌ஜ் பிறை ம‌தீனாவில் க‌ண்டபின் ஹ‌ஜ்ஜுக்காக‌ புற‌ப்ப‌ட்ட‌ ச‌ஹாபாக்க‌ளிட‌ம் சொல்லியிருக்க‌லாமே. அத்துட‌ன் ர‌சூலுல்லாஹ்விட‌ம் கேட்காம‌ல் அபூ ப‌க்க‌ர் த‌ன் இஷ்ட‌த்துக்கு ஹ‌ஜ் கிரியைக‌ளை தீர்மானிப்ப‌வ‌ர் அல்ல‌.

*ஜாஹிலீயாக்கால* மக்கள் *காலக்கணிப்பீட்டு முறையில்* பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் *சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது*. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக *3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து* ```கபீஸ்``` என்று பெயர் சூட்டியிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் *கலம்மஸ்* என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் *பிற்படுத்தியும் முற்படுத்தியும்* மாற்றம் செய்தார்கள். *இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள்*. இதனை *எச்சரித்து* சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு *குர்ஆன் வசனமும் இறங்கியது*. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
(மஜ்முஃ பதாவா 25:14)
ப‌. பெய‌ர் மாறுப‌ட்டிருப்ப‌து பிர‌ச்சினை அல்ல‌. ந‌பியின் வ‌ழிகாட்ட‌லில் ஹ‌ஜ்ஜின்போது அர‌பாவில் ஹாஜிக‌ள் ஒன்றுகூடியுள்ளார்க‌ள்.
மேலேயுள்ள‌ வாத‌ம் கூட‌ எம‌க்குத்தான் சான்று. துல் க‌ஃதாவில் ஹ‌ஜ் இட‌ம்பெற்றிருந்தால் அது எப்ப‌டி துல் ஹ‌ஜ் பிறை 9ல் நோன்பு வைப்ப‌து?  ஆக‌வே துல்க‌ஃதாவோ துல்ஹ‌ஜ்ஜோ ந‌பிய‌வ‌ர்க‌ள் வ‌ழி காட்ட‌லில் ச‌ஹாபா ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடிய‌ தின‌ம் அர‌பா தின‌மாக‌வும் அர‌பா நோன்புக்குரிய‌ தின‌மாக‌வும் ஆகிற‌து.

📌 *அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது*. நிலமை இவ்வாறிருக்க  ```எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்```?
ப‌. ப‌தில் மேலேயுள்ள‌து.

05> *சொந்த நாட்டில்* எடுக்கப்படும் தீர்மானப்படியே *துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்*.

*இமாம் இப்னு தைமியாவின்* வாதம்:-
ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில் தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் *வெளித்தோற்றத்தில் 9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு நோற்கலாமா*? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்) *ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்*
(மஜ்முஃ பதாவா 25:202)
ப‌. இமாம் இப்னு தைமிய்யா கால‌த்தில் செல்போன், வ‌ட்ச‌ப் என்ப‌ன‌ இருக்க‌வில்லை. இருந்திருந்தால் எம‌து க‌ருத்தையே சொல்லியிருப்பார்.

ஆக‌வே ஹ‌ஜ்ஜில் ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் தின‌மே அரபா தின‌மாகும்.

நாங்க‌ள் முஸ்லிம்க‌ள், எம‌து மாத‌ங்க‌ள், ஹிஜ்ரி வ‌ருட‌ங்க‌ள், நோன்பு, ஹ‌ஜ், அர‌பா தின‌ம், அர‌பா நோன்பு என‌ அனைத்து நாள் க‌ண‌க்கையும் ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையை வைத்தே தொட‌ர்கின்றோம். மக்கா அல்லாத‌ எந்த‌ ச‌ர்வ‌தேச‌ பிறையையும் நாம் ஏற்க‌வில்லை.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
President
Sri lanka Ulama Council
ம‌க்கா அர‌பாவில் ஹாஜிக‌ள் இருக்கும் போது லோஸ் ஏஞ்ச‌ல்ஸ் ம‌க்க‌ளுக்கு அதேநாளில் அர‌பா நோன்பு பிடிக்க‌ முடியாது என‌ உல‌க‌ நேர‌ங்க‌ள் தெரியாத‌ ஒருவ‌ர் ப‌திவிட்டுள்ளார்.
இதோ இன்று இப்போது ச‌வூதியில் நேர‌ம்  பின்னேர‌ம் சுமார் 4.35. அர‌பா நாளில் ஹாஜிக‌ள் இறை வ‌ண‌க்க‌த்தில் ஈடு ப‌டும் முக்கிய‌ நேர‌ம்.
அதேவேளை லோஸ் ஏஞ்ச‌ல்சில் அதே நாள் காலை 6.35.
அப்ப‌டியாயின் அங்கு இதேநேர‌த்தில் முஸ்லிம்க‌ள் ச‌ஹ‌ர் முடித்து சுப‌ஹும் தொழுது சூரிய‌ உத‌ய‌த்தையும் க‌ண்டிருப்ப‌ர்.
ஆக‌ அர‌பா நாளில் உல‌க‌ம் முழுவ‌தும் கிட்ட‌த்த‌ட்ட‌ 99 வீத‌ம் ஒரே நாளாகும் என்ப‌துட‌ன் லோஸ் ஏஞ்சல்ஸ் முஸ்லிம‌ளும் நோன்பு பிடிக்க‌ முடியும்.

அவ்வப்போது  சவூதியை விட ஒரு நாள் முன்னர் பிறை கண்டு நோன்பு நோற்ற நாடுகளும் உண்டு.
அப்படியானால் அவர்களுடைய பெருநாள் தினமும் ஹாஜிகள் அறஃபாவில் ஒன்றுகூடும் தினமும் ஒன்றாக இருக்கும் இத்தகை சூழ் நிலையில் சர்வேதசப் பிறை வாதிகள் முன்வைகும் தீர்வு யாது ?

ப‌தில். முத‌லில் ம‌க்கா பிறை த‌விர்ந்த‌ பிறையை நாம் ஏற்க‌வில்லை. தேச‌ம், ச‌ர்வ‌தேச‌ம் என‌ அனைத்திலும் வாழும் முஸ்லிம்க‌ள் ஒவ்வொரு நாளும் பல‌ த‌ட‌வைக‌ள் ம‌க்காவின் ப‌க்க‌மே திரும்புகிறார்க‌ள். அத்துட‌ன் ஹ‌ஜ், அர‌பா என்ப‌தெல்லாம் ம‌க்காவில்த்தான்.
ம‌க்காவில் எப்போது அர‌பா என்ப‌து முன்கூட்டி தெரியாத‌ கால‌த்தில் இது ஒரு குற்ற‌மாக‌ இல்லை. உதார‌ண‌மாக‌ முன்பெல்லாம் பிர‌யாண‌த்தில் போகும் போது ம‌க்கா கிப்லா எந்த‌ப்ப‌க்க‌ம் உள்ள‌து என்ப‌தை ச‌ரியாக‌ தெரியாவிட்டால் யூக‌த்தின் அடிப்ப‌டையில் கிப்லா திசையை நினைத்து தொழுதோம். இதுதான் ந‌பி வ‌ழியாக‌வும் இருந்த‌து.
ஆனால் இப்போது ம‌க்கா திசை காட்டி வ‌ந்து விட்ட‌து. கையில் உள்ள‌ போனிலும் கூட‌ ம‌க்காவின் திசையை தெரிந்து கொள்ள‌ முடியும். இந்த‌ நிலையில் எம‌து முன்னோர்க‌ள் இந்த‌ திசை காட்டியை பாவிக்க‌வில்லை என‌ கூறி யூக‌த்தின் அடிப்ப‌டையில் வேண்டுமென்றே ஒருவ‌ன் தொழுதால் அவ‌னை பார்த்து என்ன‌ சொல்வோம். அவ‌ன‌து தொழுகை கூடுமா? கூடாது.

அதே போல் த‌ற்போது ம‌க்காவில் எப்போது அர‌பா, எப்போது பெருநாள் என்ப‌தெல்லாம் 8 நாட்க‌ளுக்கு முன்ன‌ரே உல‌க‌த்தில் உள்ள‌ கிராம‌ ம‌க்க‌ளுக்கும் தெரியும். இந்த‌ நிலையில் ஹாஜிக‌ள் அர‌பாவிலிருந்து வ‌ந்து பெருநாள் கொண்டாடும் தின‌த்தில் த‌ன‌து நாட்டில் அர‌பாவில் ஹாஜிக‌ள் இருக்காத‌ சூழ் நிலையில் அர‌பா தின‌ம் என‌ முட்டாள் த‌ன‌மாக‌, முர‌ண்டு பிடித்துக்கொண்டு ஒருவ‌ர் அன்று நோன்பு வைப்ப‌து ஹ‌ராமான‌தாகும்.
ஒருவ‌ர் அர‌பா தின‌த்தில் த‌ன‌து நாட்டில் நோன்பு வைத்து விட்டு அடுத்த‌ நாள் பெருநாள் கொண்டாடாம‌ல் இருந்து அத‌ற்கு ம‌று நாள் பெருநாள் கொண்டாடுவ‌து குற்ற‌மாகாது. கார‌ண‌ம் பெருநாள் அன்று நோன்பு நோற்ப‌து ஹ‌தீதில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌ ஒருவ‌ர் பெருநாளை கொண்டாடாம‌ல் இருப்ப‌து குற்ற‌ம‌ல்ல‌. அத்துட‌ன் பெருநாள் என்ப‌து முஸ்லிம்க‌ள் தீர்மானிப்ப‌துதான் என்றும் ந‌பிய‌வ‌ர்க‌ள் சொல்லியுள்ளார்க‌ள்.
ஆக‌வே ம‌க்காவில் அர‌பா தின‌ம் என்று ந‌ன்றாக‌ தெரிந்த‌ பின்பும் நோன்பு நோற்காம‌ல் விடுவ‌து சுன்னாவை ம‌றுப்ப‌தாகும். அத்துட‌ன் ம‌க்காவில் பெருநாள் என்று தெரிந்தும் இங்கு நோன்பு நோற்ப‌து ஹ‌ராமாகும்.

ம‌க்கா பிறை என்ப‌து ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையாகும். உல‌கில் எங்கு க‌ண்டும் அப்பிறையை ம‌க்காவில் அமுல்ப‌டுத்த‌ப்ப‌டுமானால் அதை ஏற்க‌ வேண்டும்.
அத்துட‌ன் ம‌க்காவில் உள்ள‌ உம்முல் குரா க‌ல‌ண்ட‌ரையே அதிக‌ முஸ்லிம் நாடுக‌ள் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

பிறை ப‌ற்றிய‌ ந‌பிய‌வ‌ர்க‌ளின் ஹ‌தீதை இஸ்லாம் எக்கால‌த்துக்கும் உரிய‌து என்ற‌ கோண‌த்தில் பார்த்தால் ப‌ல‌ தெளிவுக‌ள் பிற‌க்கும்.
"என்னை எவ்வாறு தொழ‌ க‌ண்டீர்க‌ளோ அவ்வாறு தொழுங்க‌ள்" என‌ சொன்னார்க‌ள். இது யாரை நோக்கி சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ம்.? ம‌தீனாவில் நேர‌டியாக‌ ர‌சூலுள்ளாஹ் தொழுவ‌தை காணும் ம‌தீனா வாழ் முஸ்லிம்க‌ளை நோக்கி ம‌ட்டுமே சொல்ல‌ப்ப‌ட்ட‌து என‌ அர்த்த‌ம் கொள்வ‌து ச‌ரியா அல்ல‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் எவ்வாறு தொழுதார்க‌ள் என்ப‌தை க‌ண்ணால் காணாத‌ நிலையிலும் காதால் கேட்டு அல்ல‌து அறிந்து கொள்ளும் உல‌க‌ளாவிய‌ முழு முஸ்லிம்க‌ளையும் நோக்கி சொல்ல‌ப்ப‌ட்ட‌தா? இந்த‌ அடிப்ப‌டையை வைத்து பிறை ச‌ம்ப‌ந்த‌மான‌ ஹ‌தீதை பாருங்க‌ள். " பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள்" என்ப‌து ந‌பிக‌ளாரின் தெளிவான‌ வார்த்தை. இதில் ம‌தீனா வாசிக‌ளே என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் விழிக்காம‌ல் பொதுவாக‌ சொன்னார்க‌ள். இத‌ன் மூல‌ம் இந்த‌ ஹ‌தீத் ம‌தீனாவாசிக‌ளையும் க‌ட்டுப்ப‌டுத்துகிற‌து, உல‌க‌ம் முடியும் வ‌ரையான‌ முழு முஸ்லிம்க‌ளையும் உள்வாங்குகிற‌து. இதுதான் ந‌பிய‌வ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளின் அதிச‌ய‌ம். அத‌ன் ப‌டி முழு உல‌க‌ங்க‌ளையும் பார்த்து " பிறை பார்த்து" பிடிக்கும்ப‌டி சொன்ன‌த‌ன் மூல‌ம் ஒவ்வொரு முஸ்லிமும் பிறை காண‌ வேண்டும் என்றோ நாட்டுக்கு நாடு பிறை காண‌ வேண்டும் என்று பொருள் அல்ல‌. அவ்வாறு ந‌பிய‌வ‌ர்க‌ளும் சொல்ல‌வில்லை.  முஸ்லிம்க‌ள் பிறை க‌ண்டால் அது முழு முஸ்லிம்க‌ளுக்கும் உரிய‌துதான் என்ப‌தை தெளிவாக‌ சொல்கிற‌து. அத்துட‌ன் அள்ளாஹ்வும் ர‌சூலுல்லாஹ் வும் காட்டித்த‌ந்த‌ உல‌க‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமை ம‌க்கா என்ப‌தால் ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையை ஏற்ப‌த‌ன் மூல‌ம் ஒரு த‌லைமையின் கீழ் முஸ்லிம்க‌ள் க‌ட்டுப்ப‌டும் சிற‌ந்த‌ முறையை காண‌ முடியும் என்று கூறுகிறோம்.

பிறை விட‌ய‌த்தில் ச‌வூதி உல‌மாக்க‌ள் கூட‌ இன்ன‌மும் தெளிவான‌ நிலைப்பாட்டுக்கு வ‌ர‌வில்லை. அதாவ‌து ம‌க்கா பிறையைத்தான் உல‌க‌ முஸ்லிம்க‌ள் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்த்த‌ல் என்ப‌து ந‌பியுள்ளாவின் வாழ்வில் இட‌ம் பெறாத‌ பித் அத் என்ப‌தை அவ‌ர்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள்.
1. ச‌வூதி உல‌மாக்க‌ள் பெரும்பாலும் ஹ‌ம்ப‌லி ம‌த்ஹ‌பை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள். இப்னு தைமிய்யா, இப்னு அப்துல் வ‌ஹ்ஹாப் போன்ற‌ உல‌மாக்க‌ளும் பிக்ஹ் விட‌ய‌த்தில் ஹ‌ம்ப‌லி ம‌த்ஹ‌பையே பின்ப‌ற்றினார்க‌ள்.
2. பிறை விட‌ய‌த்தில் மாற்று க‌ருத்துக்க‌ளையும் ஆராயும் சூழ‌ல் இன்ன‌மும் ச‌வூதி உல‌மாக்க‌ளுக்கு வ‌ர‌வில்லை.

ஆனாலும் ச‌வூதி உல‌மாக்க‌ளிட‌ம் நான் பின்வ‌ரும் கேள்வியை முன் வைக்கிறேன்.
1. ந‌பிக‌ளார் கால‌த்தில் ம‌தீனா உட்ப‌ட‌ ப‌ல‌ தூர‌ நாடுக‌ளிலும் முஸ்லிம்க‌ள் வாழ்ந்த‌ன‌ர். அவை குட்டி ம‌ன்ன‌ர்க‌ளால் ஆள‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌னால் அந்த‌ந்த‌ ஊர்க‌ளில் பிறை பார்த்து நோன்பு பிடியுங்க‌ள், விடுங்க‌ள், ஹ‌ஜ்ஜுக்கு போங்க‌ள் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் ஏவினார்க‌ளா?
2. முஹ‌ம்ம‌து இப்னு வ‌ஹ்ஹாப் (ர‌ஹ்ம‌துல்லாஹி அலைஹி) அவ‌ர்க‌ள் வ‌ழி காட்ட‌லில் ம‌ன்ன‌ர் இப்னு சுவூத் அரேபியா முழுவ‌தையும் த‌ன‌து க‌ட்டுப்பாட்டில் கொண்டு வ‌ருமுன் அந்நாட்டில் நூற்று‌க்க‌ண‌க்கான‌ ம‌ன்ன‌ர்க‌ள் ஆட்சி செய்யும் நாடுக‌ள் இருந்த‌ன‌. இத‌ன் பிர‌கார‌ம் ஒவ்வொரு நாட்டிலும் பிறை காண‌ வேண்டும் என்ப‌த‌ற்கிண‌ங்க‌ இந்த‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ நாடுக‌ள் ஒவ்வொன்றிலும் பிறை காண‌ப்ப‌ட்டே நோன்பு ஹ‌ஜ் தீர்மானிக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
இப்போது ய‌ம‌ன் முத‌ல் க‌ட்டார் வ‌ரை சுமார் இர‌ண்டாயிர‌ம் கிலோமீட்ட‌ர் நீள‌முள்ள‌ இன்றைய‌ ச‌வூதியில் ஒரு பிறையையே வைத்து நோன்பு, ஹ‌ஜ் தீர்மானிக்க‌ப்ப‌டுகிற‌து. நூற்றுக்க‌ண‌க்கான‌ பிறைக‌ளை நீக்கி ஒரே பிறையை கொண்டு வ‌ந்த‌து எந்த‌ ஆதார‌த்தின் அடிப்ப‌டையில்? அது ஒரு த‌னி நாடு என்ற‌ வ‌கையில் அவ்வாறு ஒரு பிறை அமுல் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து என்று ப‌தில் சொல்வீர்க‌ள். அப்ப‌டியென்றால் இறைவ‌ன் நாடி ச‌வூதி வ‌ல்ல‌ர‌சாகி இந்தியா வ‌ரை ச‌வூதி நாடு விஸ்த‌ரிக்க‌ப்ப‌ட்டால் அப்போது ஒரு பிறையை இந்தியா வ‌ரையான‌ ச‌வூதி ம‌க்க‌ள் ஏற்க‌ வேண்டும் என‌ கூறுவீர்க‌ளா? நிச்ச‌ய‌ம் அப்படித்தான் சொல்வீர்க‌ள். அது எந்த‌ ஆதார‌த்தின் அடிப்ப‌டையில்?

அப்போது முடியுமாயின் இப்போது ஏன் முடியாது?

பிறையை க‌ண்டு பிடியுங்க‌ள், விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீதில் உங்க‌ளுக்கு என்ப‌து வெவ்வேறு பட்ட‌ ஆட்சிக‌ளுக்கு ந‌பிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ சொல்கின்ற‌ன‌ர். அப்ப‌டியென்றால் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ம் என்ற‌ ஒரே ஆட்சி என்றில்லாம‌ல் ப‌ல்வேறு ஆட்சி இருக்க‌ வேண்டும் என‌ ந‌பியுள்ளாஹ் விரும்பினார்க‌ளா? ஒரு போதும் இல்லை.
அப்ப‌டித்தான் ஒரு ஆட்சியில் இருப்போர் ஒரு பிறையை தொட‌ர‌லாம் இஸ்லாமிய‌ ஆட்சி என்ப‌து சுல்தான்க‌ளின் கால‌த்தில் ம‌க்கா முத‌ல் இந்தியாவின் த‌னுஷ்கோடி வ‌ரை ஒரே ஆட்சிதானே இருந்த‌து. அப்ப‌டியாயின் ஏன் இப்போது ஒரே பிறையை ஏற்க‌ முடியாது? நாடுக‌ளாக‌, தேச‌ங்க‌ளாக‌ இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌த்தை  இறைவ‌ன் சொல்லி பிரித்தார்க‌ளா? ம‌னித‌ன் இட்ட‌ எல்லைக‌ள்தான் நாடுக‌ள். ஆக‌வே உல‌க‌ம் முழுவ‌தும் அள்ளாஹிவின் ஆட்சிக்குரிய‌தாகும் என‌ குர் ஆன் சொல்கிற‌து. அந்த‌ முழு உல‌க‌ம் என்ற‌ இறை தேச‌த்தின் த‌லைந‌க‌ரான‌ ம‌க்காவின் அறிவித்த‌ல் அதே விநாடி உல‌க‌ம் முழுக்க‌ கிடைக்குமாயின்  ஒரு பிறை போதும். த‌லைப்பிறை என்ப‌து முழு உல‌குக்கும் ஒன்றுதான்.

பிறை விட‌ய‌த்தில் இப்னு அப்பாஸ் (ர‌ழி) க‌ருத்தை ப‌ல‌ரும் காட்டி நாட்டுக்கொரு பிறை என்கிறார்க‌ள்.

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம்  என்னை  அனுப்பி வைத்தனர்.  நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள்.முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப் நூல்:முஸ்லிம் 1819

இப்னு அப்பாஸ் ம‌தீனாவில் வாழும் போது ம‌தீனா ஒரு நாடாக‌வும் ஷாம் இன்னொரு நாடாக‌வும் இருக்க‌வில்லை. ம‌தீனா முத‌ல் ஷாம் வ‌ரை ஒரே நாடாக‌த்தான் இருந்த‌து. இஸ்லாமிய‌ நாட்டின் ஒரு ப‌ட்டிண‌மாக‌வே ம‌தீனா இருந்த‌து. அப்ப‌டியிருந்தும் ஷாமில் க‌ண்ட‌ பிறை ப‌ற்றி சுமார் 28 நாட்க‌ள் க‌ட‌ந்த‌பின் இப்னு அப்பாசிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌ போது அத‌னை ஏற்றுக்கொள்ள‌ ம‌றுக்கிறார்.
இப்னு அப்பாஸின் இந்த‌ நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ப‌வ‌ர்க‌ள் உண்மையாள‌ர்க‌ளாக‌ இருந்தால் நாட்டுக்கொரு பிறை என்ப‌தை ஏற்காம‌ல் ஊருக்கொரு பிறை என்றுதான் சொல்ல‌ வேண்டும். அத‌ற்கு அவ‌ர்க‌ள் த‌யாரா?
அதாவ‌து இல‌ங்கையில் கிண்ணியாவில் பிறை க‌ண்டால் அது கிண்ணியாவுக்கும் அத‌னை சூழ‌வுள்ள‌ ம‌க்க‌ளுக்கும் ம‌ட்டுமே உரிய‌து. கிண்ணியா பிறையை வைத்து கொழும்பிலோ, யாழ்ப்பாண‌த்திலோ நோன்பு பிடிக்க‌ முடியாது. கார‌ண‌ம் ஒரே நாட்டுக்குள் ஒரே க‌லீபாவின் ஆட்சிக்குள் ந‌டை தூர‌த்தின் ப‌டி சில‌ நாட்க‌ள் க‌ட‌ந்த‌பின்தான் பிறை அறிவித்த‌ல் கிடைக்கும் என்ற‌ தூர‌த்தில் இருந்த‌ இப்னு அப்பாஸ் அந்த‌ பிறையை ஏற்க‌வில்லை என்ப‌த‌ன் மூல‌ம் ஊருக்கு ஒரு பிறைதானே த‌விர‌ நாட்டுக்கொரு பிறை த‌வ‌றான‌து என‌ இவ‌ர்க‌ள் ஏற்க‌ த‌யாரா?

அத‌ற்கு உட‌னே இல்லை என்பார்க‌ள். அப்ப‌டியாயின் இவ‌ர்க‌ள் இப்னு அப்பாஸின் க‌ருத்தை ம‌றுக்கிறார்க‌ள் என்றுதான் அர்த்த‌ம்.
ஒரு நாட்டில் காண‌ப்ப‌டும் பிறையை அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் ம‌ட்டும் எடுத்துக்கொள்ள‌ முடியும் என்ப‌த‌ற்கு குர் ஆனிலோ, ஹ‌தீதிலோ, ச‌ஹாபாக்க‌ளின் க‌ருத்திலோ ஆதார‌ம் த‌ர‌ முடியுமா என‌ நான் ச‌வால் விடுக்கிறேன்.

அத்துட‌ன் இப்னு அப்பாஸ் (ர‌ழி)யின் ஊருக்கொரு பிறை என்ற‌ அன்றைய‌ நிலைப்பாடு அன்றைக்கு அது ச‌ரியான‌தே என்ப‌தை நாம் ஏற்கிறோம். இன்று அது ச‌ரி வ‌ராது என்றுதான் கூறுகிறோம்.
ஏன் அன்று ச‌ரி?
அன்றிருந்த‌ கால‌ சூழ‌ல் என்ப‌து ஒரு ஊரில் பிறை தென்ப‌ட்ட பிறை க‌ண்ட‌ செய்தியை ச‌ஹ‌ர் நேர‌த்துக்குள் ம‌க்க‌ளுக்கு அறிவிப்ப‌தாயின் சுமார் ப‌த்து கிலோமீட்ட‌ர் தூர‌த்துள் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு ம‌ட்டுமே அறிவிக்க‌ முடியும்.
ந‌ம‌து நாட்டை உதார‌ண‌மாக‌ கொண்டால் க‌ல்முனையில் பிறை க‌ண்டால் வ‌ண்டில் மாட்டை க‌ட்டிக்கொண்டு அக்க‌ரைப்ப‌ற்று வ‌ரைதான் அறிவிக்க‌ முடியும். அத‌ற்க‌ப்பால் பொத்துவிலுக்கு போவ‌த‌ற்கிடையில் விடிந்து விடும். குதிரையில் போனால் இன்னும் ஒரு 5 அல்ல‌து 8 மைல் செல்ல‌ முடியும்.
இப்ப‌டிப்ப‌ட்ட‌ சூழ் நிலையில் ஒவ்வொரு கிராம‌மும் த‌த்த‌ம் கிராம‌த்தின் பிறையை வைத்து நோன்பு, ஹ‌ஜ் பெருநாள் என்ப‌தை தீர்மானிக்கும் நிலையே ச‌ரியாக‌ இருந்த‌து.
ஆனால் ஷாமில் பிறை தென்ப‌ட்ட‌ செய்தி அதே இர‌வில் ம‌தீனாவில் வாழ்ந்த‌ இப்னு அப்பாசுக்கு அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்தால் அவ‌ர் அத‌னை ம‌றுத்திருப்பாரா? நிட்ச‌ய‌ம் ம‌றுத்திருக்க‌ மாட்டார்.

ஆக‌வே அன்றிருந்த‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் என்ப‌து ஓரிர‌வில் சில‌ மைல் தூர‌ம் என்றே இருந்த‌ நிலையில் இப்னு அப்பாசின் நிலைப்பாடு ச‌ரியான‌து. எவ்வாறு ஷாமில் க‌ண்ட‌ பிறை ப‌ற்றிய‌ செய்தி இஷா நேர‌த்தில் ம‌தீனாவில் இப்னு அப்பாசுக்கு கிடைத்திருந்தால் அத‌னை அவ‌ர் ம‌றுத்திருக்க‌மாட்டாரோ அவ்வாறே ம‌க்காவின் பிறை அறிவித்தால் சில‌ ம‌ணி நேர‌த்தில் அல்ல‌ சில‌ விநாடிக‌ளிலேயே இல‌ங்கைக்கு கிடைத்து விடுகிற‌து. ஆக‌வே அத‌னை நாம் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஒரே பிறை ப‌ற்றி நாம் பேசும் போது ஒரே சூரிய‌னையும் தொட‌ர‌லாமே என‌ சில‌ர் ப‌திவிடுகிறார்க‌ள்.
உண்மையில் ஒரே சூரிய‌னைத்தான் உல‌கின் 99 வீத‌மான‌ நாடுக‌ள் தொட‌ர்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன்தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்தில் ச‌வூதியில் உதிக்கும்.
அப்ப‌டி இல்லாம‌ல் இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன் இன்னும் 24 ம‌ணிநேர‌த்தின் பின்தான் ச‌வூதியில் உதிக்குமா?
உதிக்க‌லாம் என்ற‌ முட்டாள்த‌ன‌ம்தான் ச‌வூதியில் தெரிந்த‌ த‌லைப்பிறை அடுத்த‌ நாள் 24 ம‌ணி நேர‌த்தின் பின் இல‌ங்கையில் தெரிய‌லாம் என‌க்கூறுவ‌தாகும்.
ச‌ந்திர‌ன், பிறை என்ப‌தெல்லாம் சூரிய‌னின் ஒளி கார‌ண‌மாக‌வே தெரிகிற‌து. சூரிய‌ன் ம‌றையும் போது அத‌ன் ஒளிக்கீற்று ச‌ந்திர‌னில் ப‌டுவ‌தால் அது ந‌ம‌க்கு பிறையாக‌ தெரிகிற‌து.
இந்த‌ பிறை சில‌ நாடுக‌ளில் தெரியும் சில‌ நாடுக‌ளில் தெரியாது. ஆனாலும் முழு உல‌குக்கும் த‌லைப்பிறை ஒன்றுதான்.
ஹ‌ஜ்ஜுப்பெருநாள், அர‌ஃபா என்ப‌தெல்லாம் ம‌க்காவில் இட‌ம்பெறும் ஹ‌ஜ் நிக‌ழ்வுக‌ளின் பெய‌ரால் உள்ள‌வையாகும். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடியிருந்து இறைவ‌னோடு நேர‌டி தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொண்டிருக்கும் அதே நாளில் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளும் அதே ஹாஜிக‌ளோடு ஒருமித்து நிற்க‌ வேண்டும் என்ற‌ உய‌ரிய‌ குறிக்கோள்தான் அர‌பா நாளில் நாமும் - ஹாஜிக‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் - நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தாகும்.
இன்று அரபாவில் ஹாஜிக‌ள் கூடும் போது நாளை அர‌பா தின‌ம் என‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

ஒரே பிறை ப‌ற்றி நாம் பேசும் போது ஒரே சூரிய‌னையும் தொட‌ர‌லாமே என‌ சில‌ர் ப‌திவிடுகிறார்க‌ள்.
உண்மையில் ஒரே சூரிய‌னைத்தான் உல‌கின் 99 வீத‌மான‌ நாடுக‌ள் தொட‌ர்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன்தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்தில் ச‌வூதியில் உதிக்கும்.
அப்ப‌டி இல்லாம‌ல் இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன் இன்னும் 24 ம‌ணிநேர‌த்தின் பின்தான் ச‌வூதியில் உதிக்குமா?
உதிக்க‌லாம் என்ற‌ முட்டாள்த‌ன‌ம்தான் ச‌வூதியில் தெரிந்த‌ த‌லைப்பிறை அடுத்த‌ நாள் 24 ம‌ணி நேர‌த்தின் பின் இல‌ங்கையில் தெரிய‌லாம் என‌க்கூறுவ‌தாகும்.
ச‌ந்திர‌ன், பிறை என்ப‌தெல்லாம் சூரிய‌னின் ஒளி கார‌ண‌மாக‌வே தெரிகிற‌து. சூரிய‌ன் ம‌றையும் போது அத‌ன் ஒளிக்கீற்று ச‌ந்திர‌னில் ப‌டுவ‌தால் அது ந‌ம‌க்கு பிறையாக‌ தெரிகிற‌து.
இந்த‌ பிறை சில‌ நாடுக‌ளில் தெரியும் சில‌ நாடுக‌ளில் தெரியாது. ஆனாலும் முழு உல‌குக்கும் த‌லைப்பிறை ஒன்றுதான்.
ஹ‌ஜ்ஜுப்பெருநாள், அர‌ஃபா என்ப‌தெல்லாம் ம‌க்காவில் இட‌ம்பெறும் ஹ‌ஜ் நிக‌ழ்வுக‌ளின் பெய‌ரால் உள்ள‌வையாகும். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடியிருந்து இறைவ‌னோடு நேர‌டி தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொண்டிருக்கும் அதே நாளில் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளும் அதே ஹாஜிக‌ளோடு ஒருமித்து நிற்க‌ வேண்டும் என்ற‌ உய‌ரிய‌ குறிக்கோள்தான் அர‌பா நாளில் நாமும் - ஹாஜிக‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் - நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தாகும்.
இன்று அரபாவில் ஹாஜிக‌ள் கூடும் போது நாளை அர‌பா தின‌ம் என‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

அர‌பா நோன்பு ப‌ற்றிய‌ ர‌சூலுள்ளாவின் ஹ‌தீதில் அர‌பா நாள் நோன்பு என்றுதான் தெளிவாக‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌ துல்ஹ‌ஜ் 9ம் நாள் முஸ்லிம்க‌ள் நோன்பு நோற்க‌ வேண்டும் என‌ சொல்ல‌வில்லை. இன்று அர‌பா நாள் இல்லை என‌ ஒரு முஸ்லிம் ம‌றுக்க‌ முடியுமா

ا

لقول في تأويل قوله تعالى ( فمن شهد منكم الشهر فليصمه )

قال أبو جعفر : اختلف أهل التأويل في معنى " شهود الشهر " .

فقال بعضهم : هو مقام المقيم في داره . قالوا : فمن دخل عليه شهر رمضان وهو مقيم في داره فعليه صوم الشهر كله ، غاب بعد فسافر ، أو أقام فلم يبرح .

ذكر من قال ذلك :

2824 - حدثني محمد بن حميد ومحمد بن عيسى الدامغاني قالا حدثنا ابن المبارك ، عن الحسن بن يحيى ، عن الضحاك ، عن ابن عباس في قوله : " فمن شهد منكم الشهر فليصمه " ، قال : هو إهلاله بالدار . يريد : إذا هل وهو مقيم .

2825 - حدثني يعقوب بن إبراهيم قال : حدثنا هشيم قال : أخبرنا حصين ، عمن حدثه عن ابن عباس أنه قال . في قوله : " فمن شهد منكم الشهر فليصمه " ، فإذا شهده وهو مقيم فعليه الصوم ، أقام أو سافر . وإن شهده وهو في سفر ، فإن شاء صام وإن شاء أفطر .

2826 - حدثني يعقوب قال : حدثنا ابن علية ، عن أيوب ، عن محمد عن عبيدة - في الرجل يدركه رمضان ثم يسافر - قال : إذا شهدت أوله فصم آخره ، ألا تراه يقول : " فمن شهد منكم الشهر فليصمه " ؟

2827 - حدثني يعقوب قال : حدثنا ابن علية ، عن هشام القردوسي عن محمد بن سيرين قال : سألت عبيدة : عن رجل أدرك رمضان وهو مقيم؟ قال : من صام أول الشهر فليصم آخره ، ألا تراه يقول : فمن شهد منكم الشهر فليصمه "؟ . [ ص: 450 ]

2828 - حدثني موسى قال : حدثنا عمرو قال : حدثنا أسباط عن السدي : أما " من شهد منكم الشهر فليصمه " ، فمن دخل عليه رمضان وهو مقيم في أهله فليصمه ، وإن خرج فيه فليصمه ، فإنه دخل عليه وهو في أهله .

2829 - حدثني المثنى قال : حدثنا حجاج قال : حدثنا حماد قال : أخبرنا قتادة ، عن محمد بن سيرين ، عن عبيدة السلماني عن علي - فيما يحسب حماد - قال : من أدرك رمضان وهو مقيم لم يخرج ، فقد لزمه الصوم ، لأن الله يقول : " فمن شهد منكم الشهر فليصمه " .
مبارك عبد المجيد
ما حكم صيام يوم عرفة والإكثار من النوافل فيه؟

الإجابــة

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعـد:

فقد روى مسلم وغيره أن النبي صلى الله عليه وسلم قال: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. والحديث يدل بظاهره على أن صيام يوم عرفة يكفر ذنوب سنتين.

ويستحب الإكثار من الأعمال الصالحة من صلاة نفل وصيام وصدقة وذكر وغيرها في أيام عشر ذي الحجة عموماً، وفي يوم عرفة على وجه الخصوص، ففي الحديث قال صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله، فلم يرجع من ذلك بشيء. رواه البخاري

த‌ற்போது இல‌ங்கையில் நேர‌ம் 2.30. ம‌க்காவில் ப‌க‌ல் 12.00 ம‌ணி. ஹாஜிக‌ள் அர‌பாவுக்கு ளுஹ‌ர் தொழுகைக்கு முன் சென்று ம‌ஃரிபுக்கு பின்ன‌ரே வெளியேறுவார்க‌ள். இன்றைய‌ அர‌பா நாளில் உல‌கில் உள்ள‌ நாடுக‌ளில் ஒரே தின‌ம் என்ப‌தை கீழே காண‌லாம். அத‌ன் மூல‌ம் அர‌பா நாளில் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளும் நோன்பு பிடுக்க‌லாம் என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌த்தை 1400 வ‌ருட‌ங்க‌ள் முன்பே ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா தின‌ நோன்பை பிடியுங்க‌ள் என‌ அழ‌காக‌ சொல்லிவிட்டார்க‌ள்.
அந்நிய‌வ‌ர்க‌ளிட‌ம் இப்ப‌டி பெருநாள் குழ‌ப்ப‌ம் இல்லையே ஏன் ந‌ம‌க்குள் ம‌ட்டும் இப்ப‌டி என‌ ஒரு ச‌கோத‌ர‌ர் அங்க‌லாய்த்துள்ளார். இதுதான் ந‌ம‌க்குள்ளும் எழும் கேள்வியாகும்.
இஸ்லாம் ஒற்றுமை உருவாக்கும் மார்க்க‌மாகும். பிள‌வுக்ளையும் வேற்றுமைக‌ளையும் த‌டுக்கும் மாற்ற‌மாகும். அத்த‌கைய‌ மார்க்க‌ம் நாட்டுக்கொரு பெருநாள் என்று பிள‌வை ஏற்ப‌டுத்தியிருக்குமா? இல்ல‌வே இல்லை.
இந்துக்க‌ளை பாருங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு தீபாவ‌ளி பெருநாள் என்றால் இல‌ங்கை இந்துக்க‌ளுக்கும் அதேநாள்தான் தீபாவ‌ளி, இந்திய‌ த‌மிழ் நாடு வ‌ட இந்தியா, ம‌லேசியா, இந்தோனேடியா என‌ அனைத்து நாடுக‌ளிலும் ஒரே நாளில்த்தான் தீபாவ‌ளி கொண்டாடுகிறார்க‌ள்.  அதென்ன‌ உங்க‌ ஊர் நேர‌ம் வேறு எங்க‌ நாட்டு நேர‌ம் வேறு என‌ எவ‌ராவ‌து முட்டாள்த்த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ளா?
பௌத்த‌ர்க‌ளை பாருங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ஒரே தின‌த்தில்த்தான் ச‌ந்திர‌ பூர‌ணை வ‌ருகிற‌து. இல‌ங்கை முத‌ல் ஜ‌ப்பான் வ‌ரை ஒரே நாளில்தான் பூர‌ணை. ஜ‌ப்பானில் நேற்று பூர‌ணை, இல‌ங்கையில் இன்று பூர‌ணை என‌ உள்ள‌தா ? இல்லை. அதே நேரம் ஜ‌ப்பானில் பூர‌ணை இர‌வு ஆகி ப‌ல‌ ம‌ணி நேர‌ங்க‌ளின் பின்தான் இல‌ங்கையில் பூர‌ணை தெரிகிற‌து.
ச‌ந்திர‌ன் நாட்டுக்கு நாடு வித்தியாச‌ப்ப‌டும் என‌ எவ‌ராவ‌து ச‌ண்டை பிடிக்கிறார்க‌ளா? இல்லை.
கிறிஸ்த‌வ‌ர்க‌ளை பாருங்க‌ள். கிறிஸ்ம‌ஸ் டிச‌ம்ப‌ர் 25 என்றால் அன்றைய‌ தின‌த்தில் உல‌க‌ம் முழுவ‌தும் கிறிஸ்ம‌ஸ் தின‌ம்தான்.
முஸ்லிம்க‌ளுக்கிடையில் ம‌ட்டும் ஏன் இத்த‌னை பெருநாள் பிள‌வுக‌ள். இத‌னை குர் ஆன் ஏற்ப‌டுத்திய‌தா? இல்லை. ஊருக்கொரு பெருநாளை எடுங்க‌ள் என‌ முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்னார்க‌ளா? இல்லை.

அப்ப‌டியிருந்தும் என்ன‌ கார‌ண‌ம்?
மார்க்க‌ம் ப‌ற்றி அறியாத‌வ‌ன், தேடுத‌ல் இல்லாத‌வ‌னெல்லாம் முஸ்லிம் ச‌மூக‌த்தில் இது ப‌ற்றி பேச‌ ஆர‌ம்பித்த‌துதான் முத‌ன்மை கார‌ண‌ம்.  மார்க்க‌த்தை ப‌ற்றி ப‌டித்த‌வ‌ர்க‌ள், குர் ஆன், ந‌பிக‌ளார் ஹ‌தீஸ் தெரிந்த‌வ‌ர்க‌ள் பேசும்போது குறுக்கே வ‌ந்து முட்டாள்த‌ன‌மாக‌ க‌ருத்துக்கூறுவோர் முஸ்லிம் ச‌மூக‌த்தில் ம‌ட்டுமே உண்டு.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் இது ப‌ற்றிய‌ க‌ருத்தாட‌ல்க‌ளை செய்வ‌த‌ற்கு குர் ஆன் ஹதீத் க‌ற்ற‌ உல‌மாக்க‌ள் நேர‌டியாக‌ வ‌ருவ‌துமில்லை. மாறாக‌ த‌த்த‌ம‌து ப‌ள்ளிக‌ளில் ஜ‌மாஅத்துக்க‌ளில் உள்ளோர் ம‌த்தியில் ம‌ட்டும் த‌லைக‌ளை க‌ழுவிக்கொண்டிருக்கிறார்க‌ள்.
அள்ளாஹ் குர் ஆனில் மிக‌த்தெளிவாக‌ கூறுகிறான்.

 “إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون” (الأنبياء 92) “

இது உங்க‌ளின் ஒரே ச‌மூக‌ம் என‌ கூறுகிறான். அது ம‌ட்டும‌ல்லாம‌ல் பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் முழு முஸ்லிம் உம்ம‌த்துக்கும் சொல்லிவிட்டார்க‌ள். ஆனால் நீ இந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ன். அத‌னால் நீ க‌ண்ட‌ பிறையை ஏற்க‌ மாட்டேன் என் முஸ்லிம்க‌ள் பிரிவினை பேசுகிறார்க‌ள்.

கிர‌க‌ண‌ம் உல‌கில் எங்கு ஏற்ப‌ட்டாலும் இங்கும் தொழ‌ முடியுமா என‌ சில‌ர் கேட்கிறார்க‌ள். நோன்பு, ஹ‌ஜ், அர‌பா போன்ற‌ விட‌ய‌ங்க‌ளுக்கு நாம் ம‌க்கா பிறையை வ‌லியுறுத்தும்போது தொழுகையை கொண்டு வ‌ந்து எம்மிட‌ம் இக்கேள்வியை கேட்ப‌து பொருத்த‌ம‌ற்ற‌து. நாம் பிறையின் ப‌டியான‌ நாட்க‌ள் ப‌ற்றியே பேசுகின்றோமே த‌விர‌ ச‌ந்திர‌னை வைத்தான‌ நேர‌த்தை அல்ல‌ என்ப‌தை முத‌லில் இத்த‌கைய‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்.
அடுத்த‌து கிர‌க‌ண‌த்தொழுகை என்றால் என்ன‌ என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் ஹ‌தீத் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ வேண்டும். கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டுவ‌தை க‌ண்டால் ம‌ட்டுமே அது நீங்கும் வ‌ரை நாம் தொழ‌ வேண்டும் என்றே ஏவ‌ப்ப‌ட்டுள்ளோம். கிர‌க‌ண‌ம் கூட‌ சில‌ வேளை முழு உல‌கிலும் தெரியும். சில‌ வேளை கிர‌க‌ண‌ம் ஏற்ப‌ட்டிருப்ப‌தாக‌ விஞ்ஞான‌ம் அறிவித்த‌ போதும் உல‌கில் உள்ள‌வ‌ர்க‌ளால் காண‌ முடியாது போகும். சில‌ வேளை ஒரு நாட்டில் உள்ள‌ அனைவ‌ராலும் காண‌ முடியாது நாட்டின் ஒரு ப‌குதியில் உள்ளோரால் ம‌ட்டுமே காண‌ முடியும். உதார‌ண‌மாக‌ க‌ல்முனையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு கிர‌க‌ண‌ம் காட்சிய‌ளிக்கும் என்றால் யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு காட்சிய‌ளிக்காத‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் உண்டு.
இந்த‌ நிலையில் க‌ல்முனை ம‌க்க‌ள் ம‌ட்டும்தான் கிர‌க‌ண‌த்தொழுகை தொழ‌ வேண்டுமே த‌விர‌ யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் மீது க‌ட‌மை அல்ல‌.

ஆக‌ கிர‌க‌ண‌த்தொழுகையை வைத்து ம‌க்கா பிறையை ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் கிண்ணியாவில் க‌ண்ட‌ பிறையை வைத்து யாழ்ப்பாண‌ முஸ்லிம்க‌ள் நோன்பு பிடிக்க‌ சொல்ல‌லாமா? அதாவ‌து கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டுவ‌தை காணும் ம‌க்க‌ள் மீது ம‌ட்டுமே அது க‌ட‌மை என்ப‌தால் பிறை காண‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக்கு ம‌ட்டுமே நோன்பு க‌ட‌மை என‌ சொல்வார்க‌ளா? இல்லை.
ஆக‌வே நோன்பு, ஹ‌ஜ் போன்ற‌வ‌ற்றுக்கு ம‌க்கா பிறை என்ப‌த‌ற்கும் கிர‌க‌ண‌த்தொழுகை என்ப‌த‌ற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை.

وفي آخر حياة النبي صلى الله عليه وسلم ومع اقتراب موسم الحج أمر أبا بكر أن يحج بالناس، فيكون أميراً عليهم، وقائداً لهم، وكان ذلك في السنة التاسعة من الهجرة النبوية على صاحبها أفضل الصلاة والسلام.
قال ابن إسحاق: ثم أقام رسول الله صلى الله عليه وسلم بقية شهر رمضان وشوالا وذا القعدة ثم بعث أبا بكر أميرا على الحج من سنة تسع ليقيم للمسلمين حجهم والناس من أهل الشرك على منازلهم من حجهم، فخرج أبو بكر رضي الله عنه ومن معه من المسلمين

ஆக‌வே உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமை வேண்டும். ஒரே நாளில் அனைவ‌ரும் நோன்பு ம‌ற்றும் பெருநாள் எடுக்கும் நிலை வ‌ர‌ வேண்டும். நாடுக‌ள், தேச‌ங்க‌ள் என்ப‌தெல்லாம் நாம் இட்ட‌ எல்லைக‌ளே த‌விர‌ இஸ்லாம் இட்ட‌ எல்லைக‌ள் அல்ல‌ என்ப‌தை  இந்த‌ பெருநாளில் புரிந்து செய‌ற்ப‌ட‌ இறைவ‌ன் ந‌ல்ல‌றிவை த‌ருவானாக‌.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர்.
முஸ்லிம் உல‌மா க‌ட்சி
ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌வுன்சில்


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar