BREAKING NEWS

கல்முனைப் பட்டினசபையை தனித்து மாநகர சபையாக ஆக்கி ஏனைய மூன்று கிராமசபைகளையயும் பிரித்துக் கொடுங்கள்

அல்லாஹ்வின் திருநாமத்தால்
கல்முனை மாநகரம்.
Naseer kalmumai-------------------------------

உலக வரைபடத்தை வரைந்த தொலமி அதில் இலங்கையை குறிப்பிட்டுள்ளார். அந்த இலங்கையில் கல்முனை குறிப்பிடப்பட்டுள்ளது. 1806ம் ஆண்டின் இலங்கை படத்தில் பக்கீர்சேனை என்ற ஊரே குறிப்படப்பட்டுள்ளது. இது காரைதீவு ஏ.பி.சி. கட்டிடத்திற்கு வடக்கே இருக்கின்றது. இதில் காரைதீவு, கல்முனை, சாநய்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை என எந்த ஊரும் குறிப்படப்படவில்லை.   பக்கீர்சேனையில் சுமார் 900 வருட்களுக்குமுன் 14,000 பேர்வரை வாழ்ந்துள்ளார்கள்.

தரைவழிப்பாதை பாவனைக்கு முன் மட்டக்களப்பு புலியன் தீவு வழியாக சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை வரை நீர் வழிப்பாதையே பாவனையில் இருந்தது. 03.04.1886ல் நில அளவை கார்யாலய பட இல:1210ல் ரிRELIMANRY ரிLAN OR 19 ALLOTMENTS OR LAND SITUATED IN THE VILLAGES KALMUNAI AND CHANHAMARUTH OF KARAIVAKU ரிATTU IN THE DISTRIT OF BATTICALOA EASTERN ரிROVINCE. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனைக்குடி என்று கல்முனைக்கு முந்தியது “சாஞ்சமரது” என்றும் குறிப்பிடப்படவில்லை. தனது பூர்வீகம் தொரியாதவர்கள் வரலாறு சொல்ல வருவதுதான் மடத்தனத்தை தோற்று விக்கின்றது. கரைவாகு என அழைக்கப்பட்ட நமது பிரதேசம்.

கரைவாகு மத்தி
--------------------------
வடக்கு: நற்பிட்டிமுனையிலிருந்து கடற்கரைவரை செல்லும்   தாளவட்டுவான் வீதி.
கிழக்கு:  வங்காள விரிகுடா
தெற்கு:  சாய்ந்தமருது கிராமம்
மேற்கு:  நற்பிட்டிமுனை கிராமம்

எனும் எல்லைகளைக்கொண்டு 1897-02-19ம் திகதி கல்முனை சனிட்டரி போட் எனும் சுகாதார சபை  அந்தஸ்தை பெற்றது. 1892ம் ஆண்டின் 18ம் இலக்க “சிறிய பட்டினங்கள்” சுகாதார சபை சட்டத்தின் 2வது பிரிவின்கீழ் குடியேற்ற செயலாளர்; நோயல் வேக்கர்; என்பவரால் இப்பிரகடனம் வெளியிடப்பட்டது. 1920ம் ஆண்டு உள்ளுர் அதிகார சபையாக Local Board ஆக தரம் உயர்த்தப்பட்டது. 1946ம் ஆண்டு கல்முனை பட்டின சபையாக தரமுயர்த்தப்பட்டது. சனிடரி போட் காலத்தின் எல்லைகளே பட்டினசபையின் எல்லையாக பிரகடனப்படுத்தப்பட்டு ஏழு வட்டாரங்களாக (Wards) பிரிக்கப்பட்டு தேர்தல்மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு  உள்ளுராட்சி நிர்வாகம் செய்யப்பட்டது.

கல்முனை பட்டினத்தின் ஏழு வட்டாரங்களும், 1ம், 2ம் வட்டாரங்கள் தமிழ் வட்டாரங்களாகவும், 3ம் வட்டாரம் 65% முஸ்லிம்களும், 35% தமிழர்கள் உள்ள வட்டாரமாகவும்,  4ம், 5ம், 6ம், 7ம் வட்டாரங்கள் முஸ்லிம் வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டன.

இதேபோன்று கரைவாகு தெற்கு என சாஞ்சமருது கிரமசபையும் கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, என கரைவாகு எனும் பிரதேசம் நான்காக பிரிக்கப்பட்டு உள்ளுராட்சி நிர்வாகம் 1987வரை நடந்தது.

1987ல் முதன் முதலாக பிரதேசசபைச் சட்டத்தின்கீழ் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்தியப்படையின் வருகை ஆகியவை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இரத்தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்முனை பட்டினசபை எல்லையுடன், கல்முனைத் தொகுதியின் எல்லைக்குட்பட்ட மூன்று கிராமசபைகளும் ஒன்றிணைக்கப்பட்டு பிரதேசசபை நிர்வாகத்தின்கீழ் 1994ல் பிரதேசசபை தேர்தல் நடைபெறும்வரை விசேட ஆணையாளார்களால் நிர்வகிக்கப்பட்டது.

இவ்வாறு இணைக்கப்பட்ட நான்கு சபைகளிலும் கல்முனைப்பட்டினசபையே அதிகூடிய வருமானம் பெறும் சபையாக இருந்தது. வழம்கொளிக்கும் கல்முனைப் பட்டினத்துடன் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய வருமானம் குறைந்த கிரமசபைகளையும் இணைத்து ஒரே பிரதேசசபை என நிர்வாகத்தை அமைத்து உதவ மர்ஹூம் ஏ.ஆர். மன்சுர் முன்வந்தார். அதை பிரதேச சிந்தனை இல்லாது வாழ்ந்த நமது சகல மக்கழும் விரும்பினர். அதன்மூலம் கல்முனை பட்டினத்தின் வருமானம் சகலருக்கும் இன, பிரதேச பாகுபாடின்றி பங்கீடு செய்யப்பட்டது.

2000ஆம் ஆண்டு கல்முனை பிரதேசசபை மர்ஹூம் அஸ்ரப் அவர்களால் நகரசபையாக தரம் உயளர்த்தப்பட்டது. அப்போது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலராக கடமைசெய்த மர்ஹூம் ஏ, எல், எம். பழீல் அவர்களால் 1151 ஆம் இலக்கம் -2000 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 22 ஆந் திகதி வெள்ளிக்கிழமை நகரசபை கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 44(1), 44(20, 45, 46 ஆகிய பிரிவுகளின் கீழ் வட-கிழக்குமாகாணம், அம்பாரை மாவட்டம், கல்முனை நகர சபைக்கு உரித்தக்கப்பட்ட தத்துவங்களைக் கொண்டு கல்முனை பட்டினத்திற்குட்பட்ட தெற்கே ஸாஹிறா வீதி முதல் வடக்கே  தாளவெட்டுவான் வீதி வரை உள்ள 200 வீதிகள் அந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நகரசபையாக பிரிக்கப்படும்போதும், மாநகரசபையாக்கப்பட்ட போதும் சாய்ந்தமருது மக்கள் சாய்ந்தமருதின்  1987க்கு முற்பட்ட கிரதமசபையை தனி பிரதேச சபையாக கேட்டுப் பெற்றிருக்கலாம். அதை அவர்கள் தவறிவிட்டார்கள். கல்முனை மாநககர சபைக்கு முதல் மேயராக அஸ்மீர் பின் ஹரீஸ், மர்ஹூம் மசுர் மௌலானா ஆகியோர் இருந்தகாலங்களில் எந்த பிரச்சினையும் எளவில்லை. முன்னாள் மேயர்களான சிறாஸ், நிசாம் காரியப்பர் அவர்களது காலம் முதல் சாநய்தமருது மக்களது தனி உள்ளுராட்சிசபை கோசம் உரத்து பேசப்படத் துவங்கியது. அதற்கான காரணம்:

01. கல்முனைப் பட்டினத்தில் ஒரு நல்ல மலசலகூட வசதி கூட இல்லாமல் அபிவிருத்தி குன்றி காணப்படும் கல்முனை மாநகரை நம்பி தாங்களும் அபிவிருத்தி குன்றி வாழ்வதா என்ற நிலை.

02. வெற்றி பெற்ற சாநய்தமருதை சேர்ந்த சிறாஸ் மீராசாயிபு அவர்களது பதவி இடையில் பறிக்கப்பட்டது. இதில் கல்முனைவாழ் மக்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. பிரதேச வாதத்தை ஊக்குவித்து ஒரு ஊருக்குள் பல குழுக்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஹக்கீமின் பிரித்தாழும் நயவஞ்சகத்தின் காரணமாக மேயரை பறிகொடுத்து அவமானபட்டது.

03. மயோன் முஸ்தபாவவுக்கு பாராளுமன்ற பிரதிநிதி கிடைக்கப் பெற்றதாக பட்டாசு சுட்டு பின் அவமானப்பட்டதன்பின் தங்களது ஊருக்கு பா.உ.கிடைக்காது என்பதாலலும்,  கிடைத்த மேயரும் பறிக்கப்பட்தாலும் ஏற்பட்ட ஏமாற்றம்.

மேற்படி இன்னும் பலகாரணங்களால் சாய்ந்தமருது மக்கள் கல்முனை மாநகரிலிருந்து பிரரிந்து தனி உள்ளுர் அதிகார சபை பெற்றுகொள்ள முயற்சிப்பது, தங்களது சிறிய வருமானத்துக்குள் என்றாலும் “எலிவளை என்றாலும் தனி வளை “ என்றாற்போல பிரிந்து செல்ல முற்பட்டது ஒரு நியாயமான தீக்கதரிசனமான முடிவாகும்.

அதை அவர்கள் மு.கா.வின் அபிவிருத்தி என்பது முயல்கொம்பு எனும் அரசியலுக்குள் கிடந்து அசிங்கப்படாமல் எப்போவோ பிரிந்து சென்றிருக்க வேண்டும். நிசாம்காரியப்பருக்கு பறித்துத் தாருங்கள் என்றும், சாய்ந்தமருதுக்கு பிரதேசபை கொடுக்கக் கூடாது என்றும் எந்த ஒரு கல்முனை மகனும் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. பிரதேச சிந்தனை கொண்ட ஒருசில சாய்ந்தமருது அரசில் வாதிகளது பிழையான பிரச்சாரத்தின் மூலம் ஒற்றுமையை குலைத்து அரசியல் குளிர்காயும் சதியாகும்.

கல்முனை மக்களாகிய நாங்கள் மு.கா, அ.இ.ம.கா. தலைவர்களிடமும்,  உள்ளுராட்சி அமைச்சரிடமும் கேட்பதெல்லாம் கல்முனை மாநகரசபைக்குள் வாழும் கல்முனை மக்களிடம் அன்று எங்களது விருப்ப வெறுப்புகளை கேட்காமல் இணைக்கப்பட்ட கரைவாகு தெற்கு கிராமசபையை பிரிக்கும் போது அதன் சாதக பாதக்களை ஏன் எங்களிடம் கேட்காமல் எங்கது மண்வாசைன தரியாத நீங்கள் எப்படி தீர்மானம் எடுப்பீர்கள் என்பதும், சாய்ந்தமருது மக்களது நியாயபூர்வமான தனி உள்ளுராட்சி சபை கோரரிக்கையை நிறைவேற்றும்போது 1987க்கு முன்பு இருந்ததைபோல எங்களது கல்முனைப் பட்டினசபையை தனித்து மாநகர சபையாக ஆக்கி ஏனைய மூன்று கிராமசபைகளையயும் பிரித்துக் கொடுங்கள் என்பதே.

கல்முனை மக்களாகிய நாங்கள் முன்வைத்திருக்கும் இக்கோரரிக்கை சாய்ந்தமருது மக்களது கோரரிக்கைக்கு எதிரானது என யாரும் கருதினால் மடத்தனத்திற்கு மருந்து கிடையாது என்றே கூறவேண்டும்.

1989ல் கல்முனை டீ.எஸ். காரியாலயத்தை தமிழ் பயங்கரவாதிகள் ஆயுதமுனையில் சட்டவிரோதமாக வேறாக பிரித்தபோது அன்றைய மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த சாய்ந்தமருதை சேர்ந்த நிஜாமுதீன்,  எம்.எம். ஆதம்பாவா, மஜீது ஆகியோரே கல்முனை பிரதேச செயலத்தில் இருந்த கோவைகளை பங்கிட்டுக் கொடுத்தவர்கள். சாய்ந்தமருது, கல்மனை அகிய ஊர்களது ஒற்றுமையை கருதி இந்த துரோகிகளுக் கெதிராக நாங்கள் எதுவவும் செய்யவில்லை. இப்பேற்பட்ட பெருந்தன்மையுடைய கல்முனை மக்களாகிய நாங்கள் ஒருபோதும் சாநய்தமருது பிரிந்து செல்வதற்கு எதிரானவர்களல்லர்.

கல்முனை பட்டினத்தை தனித்து மாநகரசபையாக எடுக்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை. இனிவரும் காலங்களில் எங்களது வருமானம் எங்களுக்கே செலவிடப்பட வேண்டும். கரைவாகு வடக்கிற்கும், மேற்கிற்கும் மாநாரசபை அறவிடும் வாரியில் சலுகை, எங்களுக்கு முழுமையான வரி. எங்கள் வருமானத்தில் மற்றவர்கள் குளிர்காயும் மடத்தனத்தை இனிமேலும் அங்கிகாரிக்க மாட்டோம்.

வாழ்க கல்முனை பட்டினம்
பிரிந்து செல்க கரைவாகு தெற்கு, வடக்கு, மேற்கு கிராமசபைகள்.

அல்லாஹூ அக்பர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar