ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம்

மியான்மரில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே வெடித்துள்ள இனமோதலில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில் மியான்மரை விட்டு ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிருக்கு பயந்து கிட்டதட்ட 9000 ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் மியான்மரை விட்டு தப்பியோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டு மக்களை பாதுகாக்கும் படி ஆங் சான் சூ கீ தலைமயைிலான மியான்மர் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்