ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முஸ்லிம்கள் அணிகின்ற பர்தாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் கழற்றுவார்கள் என்று முழு நாட்டிலும் முஸ்லிம்கள் மத்தியில் பொய்ப்பிரசாரம் செய்தே நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்தப் பொல்லாத ஆட்சியை பதவிக்குக் கொண்டுவந்தார்கள் ஆனால், இன்று உண்மையிலே முஸ்லிம்களுடைய ஆடை அணிகலனான பர்தாவை கழற்றுவது மைத்திரி - ரணில் அரசாங்கம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை (10) கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இலங்கையில் ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் பர்தா அணிந்து வந்த மாணவிகளுடைய பர்தாவைக் கழற்றி விட்டு பரீட்சை எழுதுமாறு கல்வி அதிகாரிகள் பணித்திருப்பதாக மத்திய மாகாணத்திலிருந்து வருகின்ற செய்தி இதனை ஊர்ஜிதம் செய்கின்றது.
எனவே முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இன்று முஸ்லிம்களுடைய பர்தாவை கழற்றுவதும் நீக்குவதும் இந்த அரசாங்கமே என்பதைத்தான் இந்த சம்பவம் நன்றாக நிரூபிக்கின்றது.
எனவே பள்ளிவாசல்ளை உடைப்பார்கள், பர்தாவைக் கழற்றுவார்கள் என்று பொய்ப்பிரசாரம் செய்து முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்ற மைத்திரி - ரணில் அரசாங்கம் உடனடியாக கவனமெடுத்து இப்போது நடைபெறுகின்ற பரீட்சைக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தவை அணிந்து சென்று பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
மேலும் கல்வி அமைச்சரும் ஏனோ - தானோ நிலையில் இருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ற முறை கூட கொழும்பு முகத்துவாரத்தில் உள்ள ஒரு பாடசாலை பர்தாவை கழற்றுமாறு மாணவிகளிடம் பணிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்ட உடனே அது குறித்து அரசாங்க உயர் மட்டத்திற்கு அறிவித்தோம். ஆனால், ஒன்றும் நடைபெறவில்லை.
ஆகவே, இன்று இந்த நாட்டிலே முஸ்லிம்களுடைய பாரம்பரியங்களை அழிப்பதற்கு மிகவும் மும்முரமாக நின்று செயலில் இறங்குகின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றேன் - என்றும் தெரிவித்தார்.
(எம்.எஸ்.எம்ஸாகிர்)
Comments
Post a comment