වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவதற்கு முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவதற்கு முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட ரீதியிலான பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நடை பெற்றது. அச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எமது ஏனைய சகோதரக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தயாராக உள்ளது. எனவே ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சகல கட்சிகளும் எம்முடன் இணைந்து கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எமக்குமிடையில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆகவே அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தயாராக உள்ளோம். அது தவிர ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பலர் எம்முடன் இணைந்து போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறானவர்களுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அரசாங்கம் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றில் முன்வைத்துள்ள சட்டமூலத் தினால், இதுவரை காலமும் அரச சேவை யில் உள்ளவர்கள் அனுபவித்த அரசியல் உரித்தை இல்லாது செய்யும் சூழ்ச்சி உள்ளது. 1956 ஆம் ஆண்டு காலத்தில் அரச சேவையாளர்களுக்காகப் பெற்றுக் கொடுக்கப்பட்ட குறித்த அரசியல் உரிமை இல்லாது செய்யப்படுவதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால தாமதத்திற்கு எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என அரசாங்கம் தெரிவித்து வந்தது. எனினும் அது சம்பந்தமாக தொடர்ந்து என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும் காலம் தாமதித்து சரிசெய்யப்பட்டதாகத் தெரிவித்து வெளி யிடப்பட்ட எல்லை நிர்ணயமும் எமது ஆட்சியில் தயார்செய்யப்பட்ட எல்லை நிர்ணயமாகவே அமைந்துள்ளது என்றார்.
Comments
Post a comment