கல்லொழுவை அல் அமான் வித்தியாலய பரிசளிப்பு விழா( மினுவாங்கொடை நிருபர் ) 

மினுவாங்கொடை -  கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா  வைபவம், (15) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, வித்தியாலய மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில்  இடம்பெறவுள்ளது.
    மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவங்ச பிரதம அதிதியாகக்  கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்,
 பாராளுமன்ற உறுப்பினர்களான எட்வர்ட் குணசேகர,  பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஷாபி ரஹீம், எம்.எஸ்.எம். சகாவுல்லா, லயனல் ஜயசிங்க, சமிந்த டி. சில்வா ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.    மினுவாங்கொடை ஸ்ரீல.சு.க. அமைப்பாளர்  ருவன் ரணதுங்க, மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே. மல்லவாரச்சி, மினுவாங்கொடை பிரிவுக் கல்விப் பணிப்பாளர் சோபா வீரவர்தன, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ்  ஏ.எச்.எம். முனாஸ் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்