Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுரட்சிசபை ???

விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுரட்சிசபை! பிரதி அமைச்சர் ஹரீஸ்
-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு என தனியான உள்ளுராட்சிசபையை கோரிய போது பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது வக்குறுதியளித்ததாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ.ஹனிபா தலைமையில் 2017-08-12  ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் வாக்குறுதியை பெற்றுக்கொடுத்ததாகவும் அமைச்சர் றவூப் ஹக்கிம் தலைமையில் பலசந்தர்ப்பங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் தற்போது அதற்க்கான காலம் கணிந்துள்ளதாகவும் கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் தன்னை சிலர் பிழையாக நோக்குவதாகவும் தான் அந்த விடயத்தில் மிகுந்த இறைஅச்சத்துடன் செயற்படுவதாகவும் பள்ளிவாசலில் வைத்தே வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
இப்பிராந்தியத்தில் அதிகபட்ச மக்கள் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் பின்னிற்காது என்றும் தன்னைப்பொறுத்த மட்டில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிப்பவன் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தேவையுடைய மக்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அரசாங்க நிதியுதவியில் பல்வேறு திட்டங்களுக்காக உதவிகள் வழங்கிவைக்கப்படுவதாகவும்
நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோரின் பிரதான திட்டங்களில் ஒன்றான வசதிகுறைந்தவர்களுடைய வாழ்க்கையை மேன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றன என்றார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 180 பயனாளிகளுக்கு 2550000.00 ரூபாய்கள் பொறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்படுகின்றன குறித்த இவ் உபகரணங்கள் இவைகளைப் பெறுவோரது வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டு என்பதே தனதும் அரசாங்கத்தினதும் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுர்த்தி அமைச்சு,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஏனைய இன்னும் பல அமைச்சுகள் சேர்ந்து இவ்வாறான சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கின்றபோது அவர்கள் பிரதேச பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறார்கள் அந்ததந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடுவதா? அல்லது வாழ்வாதார உதவிகளுக்கு செலவிடுவதா? என்ற விடயங்களை நீங்களே தீர்மானிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள். நான் கூறியிருந்த விடயம் வசதிகுறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.
இலங்கை இப்போது ஒரு முன்னுதாரணமான நாடாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் எத்தனையோ அரசாங்கங்கள் இருந்தன அவைகள் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் முதன்முறையாக இப்போது இந்த அரசாங்கம் இதில் இருக்கும் அமைச்சர் பிழைவிட்டாலும் அவரை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அண்மையில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஒருவரை இராஜனாமா செய்ய வைத்துள்ளது. இது இந்த நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு செல்கின்றது என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.
கடந்தகால யுத்த சூழல் மற்றும் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக்கொள்கைகள் காரணமாக வாழ்வு நிலையுடைய உயர்வு என்பது மந்த நிலையில் இருந்தது. வறுமையைப்போக்குவது என்பது பாரிய சவாலான விடயமும் அல்ல. எங்களுடைய பக்கத்து நாடுகள் எல்லாம் இப்பொழுது செல்வத்தில் உச்சநிலையில் இருக்கின்றது. மலேசியா அதேபோன்று மாலைத்தீவு யப்பான் போன்றநாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையை ஏன் எங்களுடைய நாட்டில் ஏற்படுத்த முடியாது என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.
பொருளாதார வளர்ச்சிக்காக சுயதொழிலை ஊக்குவித்தல் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பாரிய பணியை அரசாங்கம் துவங்கியுள்ளது. இதற்காக அம்மாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கி அதனூடாக 1000000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டைக்கட்டியேழுப்புவதற்காண பணிகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நாட்டில் இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நாங்கள் இப்பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு விடயங்களில் பாரிய முன்னெடுப்புக்களை செய்து வருகின்றோம்.அதன் அடிப்படையில் கல்முனை நகர அபிவிருத்தி என்ற மகுடத்தின்கீழ் நீண்டகால பயன்பாட்டுக்கு பயன்படக்கூடியவாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் பாரிய வீதிக்கட்டமைப்புகள் ஒரே இடத்தில் நிருவாக நகரம் ஒன்றை அமைக்கும் திட்டம் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக கரைவாகுவட்டை அரச காணியில் ஐந்து ஏக்கர் நிலத்தை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கிமால் நிதி ஒதுக்கப்பட்டு அந்த காணி நிரப்பபட்டு அங்கு கட்டிட அமைப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
சாய்ந்தமருது பிரதான வீதியின் நெரிசலைக் கருத்தில்கொண்டு மாற்றுப்பாதை ஒன்றை சாய்ந்தமருது வொலிவோரியன் ஊடாக குளக்கட்டு வீதியை 70 அடிக்கு அகலமாக்கி கல்முனை பஸ் நிலையம் வரை அமைப்பதற்கும் அந்த பணிகளை ஜனவரியில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கிமால்  சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்கு 15 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அந்த அபிவிருத்தியின் அடுத்தடுத்த கட்ட வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும், சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த சிறுவர் பூங்காவுக்கு ஒருகோடி ரூபாய்களும் பௌஸி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒருகோடி ரூபாயும் மற்றும் பழைய சந்தை வீதி போன்றவற்றுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. என்றும் இன்னும் குறுக்கு வீதிகள் பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப்பிரதேசத்தில் உள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்று அரச காணிகள் அற்ற பிரச்சனைகளை. குறித்த பிரச்சினையத் தீர்ப்பதற்காக வயற்காணிகளில் சிலவற்றை சுவிகரித்து அவற்றை நிரப்பி காணிக்கச்சேரிகளை நடத்தி காணிகள் அற்றவர்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜௌபர் மற்றும் கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ.பாவா முன்னாள் கல்முனையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் மற்றும் முன்னாள் மாநகரசபையின் உறுப்பினர் ஏ.நசார்டீன் உள்ளிட்டவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.