Skip to main content

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவப் பிரச்சினை

மிக முக்கியமான கட்டுரை, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வாசித்துப் பாருங்கள்..

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவப் பிரச்சினை
------------------------------------------------------------------------------------------
இலங்கை முஸ்லிம் சமூகம் இன்றைய காலகட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத அளவில் அரசியல் மற்றும் சமய ரீதியிலான தலைமைத்துவ பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. முஸ்லிம் சமூகம் கொந்தளிக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதற்குத் தேவையான தலைமைத்துவ வழிகாட்டல்கள் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் பல நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே அதற்கு முகம் கொடுக்கத் தேவையான தலைமைத்தும் இன்றி முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது.

1930களில் மிகவும் கண்ணியமாக நோக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் சமூகத்துக்காக குரல் கொடுத்துச் செயற்பட்டதோடு பெரும்பான்மை இனத்தோடு சிறந்த உறவுகளைப் பேணி தமது சமூகத்துக்கான உரிமைகளையும் வென்றெடுத்தனர். அப்போது ஏற்பட்ட அரசியல் மறுமலர்ச்சிக்குப் பின் இனவாத அரசியல் 1948 சுதந்திரத்துக்குப் பின் தலைதூக்கியதால் நிலைமைகளில் மிக மோசமான மாற்றங்களே காணப்பட்டன.

ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாலும் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலும் சிங்கள பெரும்பான்மை இனத்தை ஊக்குவித்து வாக்குகளை சூறையாடும் நிலை தொடர்ந்து நீடித்தது. இது நாடு முழுவதும் பலத்த எதிர்வினை தாக்கத்தை உருவாக்கியது. எவ்வாறேனும் இந்த இரண்டு கட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் காணப்பட்டனர். இதன் விளைவாக கட்சித் தலைவர்களுக்கு இடையில் பேரினவாத போக்கு மேலோங்கி வந்த நிலையிலும் கூட, முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது சில தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையிலும் முஸ்லிம் தலைவர்கள் ஒருவாறாக நிலைமைகளை சமாளித்து வந்தனர்.

ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இந்த நிலைமை மிக மோசமான கட்டத்துக்கு வந்தது. தமிழ் ஆயுதபாணிகளுக்கு எதிராக அவர் இஸ்ரேலை களமிறக்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தலைமைகளை ‘விரும்பினால் அரசில் இருக்கலாம் இல்லையேல் விலகிச் செல்லலாம்’ என்று அவர் எடுத்தெறிந்தார்.
முஸ்லிம் சமூகம் இதனால் விரக்தி அடைந்து அதிர்ந்து போனது. தமது அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கவும் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் தமக்கென ஒரு குரல் தேவை என்ற அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர். அவ்வாறு இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை எம்.எச்.எம்.அஷ்ரப் மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் கட்சிக்கு கட்சி தாவிக் கொண்டிருந்த அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியை உருவாக்கினார்.

இதை ஒரு தேசியக் கட்சியாக அமைக்க வேண்டாம் என்றும் கிழக்கிற்கு மட்டும் மட்டுப் படுத்திக் கொள்ளுமாறும் அன்றைய சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் அவரை எச்சரித்தனர். 1970களின் பிற்பகுதியில் ஸ்ரீ.ல.சு.க வைச் சேர்ந்த ஹலீம் இஷாக் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் காலிமுகத் திடலில் வைத்து சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவருக்கு ஆலோசனை வழங்கியமை எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இதை நாடு தழுவிய ஒரு அரசியல் கட்சியாக மாற்றி தெற்கில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் மீது ஆத்திரமடைய வழிவகுக்க வேண்டாம் என்பது தான் அவரின் எச்சரிக்கையாக இருந்தது.
ஆனால் இவ்வாறான தீர்க்கதரிசனமான ஆலோசனைகளுக்கு செவி மடுக்க அஷ்ரபுக்கு அப்போது நேரம் இருக்கவில்லை. கல்முனையை தளமாகக் கொண்டு அவர் தனது கட்சியைத் தொடங்கினார். பேரினவாத போக்கினால் விரக்தி அடைந்திருந்த முஸ்லிம்கள் தமது உரிமைகளும் கௌரவமும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கைளில் ஸ்ரீ.ல.மு.கா வை ஆதரித்தனர். கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்தக் கட்சி அரசாங்கங்களை உருவாக்குவதில் தீர்க்கமான பங்களிப்பை வழங்கியது. ஆனால் அவரின் சந்தர்ப்பவாத அரசியல் சில சிங்கள தரப்பை கோபமூட்டி ஹலீம் இஷாக்கின் அச்சத்தை நியாயப்படுத்தியது.

ஸ்ரீ.ல.மு.கா தொடங்கப்பட்டது முதலே அது தனிமனித காட்சியாகத் தான் இருந்தது. ஒரு சில வருடங்களில் வித்தியாசமான அரசியல் கட்சிகளோடு அவர் அடுத்தடுத்து மேற்கொண்ட உறவுகள் காரணமாக எதிர்வு கூற முடியாத ஒரு தலைவர் என்ற நிலையை அவர் ஏற்படுத்தினார். இதன் விளைவாக அவர் பல ஊழல் குற்றச்சாட்டுக்களும் தார்மிக ரீதியான தரக்குறைவுக்கும் ஆளானார். அவரை ஆதரித்த பலர் அவரிடமிருந்து விலகிச் சென்றதோடு கட்சியில் இருந்தும் தம்மை தூரப்படுத்திக் கொண்டனர்.
இதனிடையே அவரின் எதிர்பாராத மரணம் அந்தக் கட்சிக்குள் பாரிய தலைமைத்துவ விரிசலை தோற்றுவித்தது.

அஷ்ரப்பின் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளால் விரக்தி அடைந்த சிங்கள தலைமைகள் இந்த சந்தர்ப்பத்தை தமது சொந்த நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற பொருத்தமாகப் பயன்படுத்திக் கொண்டன. அவர்கள் ஒரு பிரிவினரை அரவணைத்து அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து இந்தப் பிளவை மேலும் விரிவாக்கினர்.
இந்தப் பிளவு தொடர்ந்து நீடித்தது. இஸ்லாத்தையும் ஐக்கியத்தையும் சுலோகங்களாகக் கொண்டு வந்த கட்சி அரை டசன்களுக்கும் மேற்பட்ட சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டது. இது சமூகத்துக்குள் பாரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஸ்ரீ.ல.மு.கா இலிருந்து பிளவு பட்ட சகலருமே சிங்கள தலைமைகளுக்கு சாமரம் வீசி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர்.
உதாரணத்துக்கு மு.காவின் பிரதான பிரிவும் அதிலிருந்து பிரிந்த வந்த பிரிவும் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பல அநீதிகள் இழைக்கப்பட்ட வேளையிலும் கூட இருதரப்பும் அவருடன் ஒட்டி உறவாடிக் கொண்டு தான் இருந்தன. கடைசிக் கட்டத்தில் இந்த இரு தரப்புமே மைத்திரிபால சிறிசேனவுடனும் இணைந்து கொண்டனர். சமூகம் இவர்களைப் புறக்கணித்துவிட்டு மைத்திரியை ஆதரிக்க முடிவு செய்து விட்டது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பின்னரே இவர்கள் இணைந்து கொண்டனர்.
2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு உடன்படிக்கையின் பின்னரே இவர்கள் இணைந்து கொண்டதாகவும், அந்த உடன்படிக்கையின் படி இவர்களின் வாய்கள் மூடப்பட்டும் கரங்களும் கால்களும் கட்டப்பட்டும் உள்ளதாக சில வதந்திகள் கூட உலா வருகின்றன. அதனால்தானோ என்னவோ கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பாரதூரமான பிரச்சினை பற்றியும் இவர்கள் வாய் திறக்காமல் உள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தபோதும், ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செயிட் றாத் அல் ஹஸேன் வந்தபோதும் முஸ்லிம் தலைமைகள் காணாமல் போயிருந்தனர். எந்தளவுக்கு அவர்கள் முஸ்லிம் சமூகத்தை நற்றாற்றில் விட்டுள்ளனர் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் முஸ்லிம்களின் பரம்பரை எதிரியான இஸ்ரேலின பிரசன்னம் முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையில் அண்மைக் காலங்களில் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவர்களின் உலகளாவிய பிரசாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கை முஸ்லிம்களுக்கும் பாரிய இடைஞ்சல்களை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது அறிந்து வைத்துள்ளனரா? அதுபற்றி எப்போதாவது எங்காவது குரல் கொடுத்துள்ளனரா? பிரதம மந்திரியுடன் அவர்கள் இதுபற்றி பேசி உள்ளனரா?
ஓற்றுமை பற்றி பேசும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய வெட்கக் கேடான நிலை இதுதான். ஒற்றுமை பற்றி பேசும் இவர்கள் எதில் ஒற்றுமை பட வேண்டும் என்பது தெரியுமா? உத்தேச புதிய அரசியல் யாப்பு பற்றி பேசப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் அதில் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்கக் கூடிய எந்தவொரு கூட்டு யோசனையும் இதுவரை முன் வைக்கப்படவில்லை. இது அவர்கள் சமூகத்துக்கு செய்துள்ள மாபெரும் துரோகம். கடந்த பல தசாப்தங்களாக அவர்கள் இதைத்தான் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
இவ்வாறானதோர் பின்னணியில் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள ஒரே தெரிவு ஆக்கபூர்வமான ஒரு சக்தியாக சிவில் சமூகத்தை ஒருங்கிணைப்பதாகும். அதன் மூலம் இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைத் தடுத்து பெரும்பான்மை சமூகத்துடனான உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தலாம்.

அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளைப் போலவே அகில இலங்கை ஜம்மஜய்யத்துல் உலமா சபையின் செயற்பாடுகளும் அமைந்துள்ளமை மிகவும் கவலைக்கு உரியதாகும். பெரும்பான்மை சமூகத்தில் ஒரு சிலரே இனவாதத்தை கக்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் அநேகமானவர்களுடன் காலாகாலமாக இருந்து வந்த நல்லுறவைப் பேணுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க உலமா சபையும் தவறிவிட்டது. சிங்கள இனவாத சக்திகளால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட சவால்கள் ஒன்றில் உலமா சபையால் அலட்சியமாக விடப்பட்டது அல்லது முறையாகக் கையாளப்படவில்லை.
இதனால் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் உலமா சபை மீதுள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர். இதனால் சமூக வலைதலங்களில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் அதன் மீது சுமத்தபட்டு வருகின்றன.
உலமா சபை முற்று முழுதாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தும் சமூகத்தின் சில பிரிவுகளில் இருந்து முன் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இன மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட இனவாத சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற வேளையில் காலத்துக்கு ஏற்றவாறு சமூகத்தை வழிநடத்த கூடிய விதத்தில் உலமா சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே பலரதும் கருத்தாகும்.
பல விடயங்களில் உலமா சபை விட்ட தவறுகள் காரணமாக கிழக்கு மாகாண உலமாக்கள் தமக்கென தனியானதோர் அமைப்பை உருவாக்கும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு பல விடயங்களில் அறிவூட்டவும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கவும் அறிவுறுத்தவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த சமூகத்தினதும் எதிர்ப்பார்ப்பாகும். தேசிய கல்வியோடு இணைந்ததாக இஸ்லாமிய கல்விக்கான பாடத்திட்டம் தொடர்பான தேவை நீண்டகாலமாக சமூகத்தில் காணப்படுகின்றது. ஆனால் தொடர்ச்சியாக இத்தகைய சமூகத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
சமூக ரீதியான உலமா சபையின் பொறுப்பு நீண்டகாலமாக தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது.
உலமா சபையின் தலைமைத்துவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. எனவே சமூகத்தை சரியான தடத்தில் வழி நடத்தக்கூடிய தலைமைத்துவத்தின் தேவை அங்கு எழுந்துள்ளது.

2016 பெப்ரவரி 12ல் லண்டனில் இருந்து செயற்படும் கொழும்பு டெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ள தகவலில் ‘முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் அடிப்படைவாதம் ஊடுறுவி வருகின்றது’ எனும் தலைப்பிலான கட்டுரையில் ‘கறுப்புத் துணியால் அல்லது புர்காவால் முகத்தை மூடும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. இவை தீவிரவாதத்தின் அடையாளச் சின்னங்களாகவே நோக்கப்படுகின்றன’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சியை மேற்கொள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையும் ஆதாரமும் அற்றவை. மேலும் கறுப்புத் துணி என்று பாதுகாப்பு அமைச்சர் எதைக் குறிப்பிடுகின்றார் என்பதற்கும் மேலதிக விளக்கம் தேவையாக உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் நீண்ட காலமாக இந்தப் பழக்கம் உள்ளது அவற்றைப் பின்பற்றி எமது பெண்களும் அவ்வாறு அணிவதை மட்டும் எப்படி தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்த முடியும்?
மானுடவியல் மற்றும் சமூக ஊடகங்கள் பற்றிய ஆய்வாளர் சன்ன அபீதா தஹநாயக்க இது பற்றி குறிப்பிடுகையில்:
“சிங்கள இனவாதத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கான எதிர்ப்பு அங்கிருந்தே கிளம்புகின்றது. தமிழ் பிரிவினைவாதம் பற்றி சமூக ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதற்கு எதிரான குரல் அங்கிருந்தே முதலில் உருவாகி பின்னர் அவர்கள் சிங்கள் இனவாதிகளுடன் அல்லது மிதவாதிகளுடன் இணைந்து கொள்கின்றனர். ஆனால் இதில் முஸ்லிம்களின் மௌனம் தான் சிந்திக்க வைக்கின்றது. முஸ்லிம்கள் ஒருபோதும் இதற்கு எதிராகப் பேசுவதில்லை. இது ஒரு புறத்தில் கவலை அளிக்கின்றது. இன்னொரு புறத்தில் எச்சரிக்கை விடுப்பதாகவும் உள்ளது”

இவ்வாறான நிலையில் தேசிய நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உலமா சபையைச் சார்ந்ததாகவே உள்ளது. முஸ்லிம்கள் தொடர்பான தவறான எண்ணங்களையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் பிரசாரங்களை அவ்வப்போது முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதும் இவர்களது கடமையாகும்.
ஆனால் துரதிஷ்டவசமாக உலமா சபை இவை எதிலுமே கவனம் செலுத்தாமல் உள்ளது. சரியான நேரத்தில் சரியான முறையில் தொழில்சார் பண்புகளுடனும் சமயப் பொறுப்புடனும் சமயத் தலைவர்கள் சமூகத்தை வழிநடத்தத் தவறுவதானது, முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தேவையான நேரத்தில் தமது கடமைகளில் இருந்து விலகிச் செல்வதற்கு ஒப்பானதாகும். இவை இரண்டும் சமூகத்தில் ஒரே விதமான விளைவுகளையே ஏற்படுத்தும். உலமா சபை சரியான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு சேவை செய்யக் கூடிய வகையில் மறுசீரமைக்கப்படாவிட்டால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.
நன்றி Latheef Farook

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய