BREAKING NEWS

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

அரஃபா நோன்பு வைத்தால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும்,  வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976*

ம‌க்காவுக்கு சென்ற‌ ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தே மிக‌ச்ச‌ரியான‌தாகும்.
இத‌னை ம‌றுக்கும் சில‌ர் ந‌பிக‌ளார் கால‌த்தில் அர‌பா தின‌த்தில் நோன்பு பிடிக்க‌ சாத்திய‌மில்லையே என‌ கூறுகிறார்க‌ள். இது முற்றிலும் த‌வ‌றான‌தாகும்.
1. ஹ‌ஜ் கிரியைக்கான‌ திக‌தியை ர‌சூலுல்லாஹ் ம‌க்காவில் இருந்து கொண்டு தீர்மானிக்க‌வில்லை. சுமார் 5 நாட்க‌ள் பிர‌யாண‌ம் செய்யும் தூர‌த்தில் இருந்து கொண்டே ம‌தீனாவின் த‌லைப்பிறையை வைத்தே ம‌க்காவின் ஹ‌ஜ்ஜை தீர்மானித்தார்களே த‌விர‌ ம‌க்க‌த்து காபிர்க‌ளின் பிறைத்திக‌தி என்ன‌ என‌ ர‌சூலுலாஹ் கேட்டு ம‌க்க‌த்து காபிர்க‌ளை பின்ப‌ற்றிய‌தாக‌ ஒரு ஹ‌தீதும் இல்லை.
2. ந‌பிய‌வ‌ர்க‌ள் ம‌தீனாவில் துல்ஹ‌ஜ் பிறை க‌ண்ட‌பின் ச‌ஹாபாக்க‌ளை மக்காவுக்கு அனுப்பும் போது அர‌பா நாள் அதாவ‌து பிறை 9ல் ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேர்வார்க‌ள் என்ப‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் ந‌ன்கு தெரிந்து வைத்திருப்பார்க‌ள் என்ப‌தை புரிய‌ முடியும்.
3. அர‌பா நோன்பு என்றுதான் ஹ‌தீதில் உள்ள‌தே த‌விர‌ அர‌பா என்ற‌ பெய‌ர் குறிப்பிடாம‌ல் வெறும‌னே பிறை 9 நோன்பு என‌ ஹ‌தீத் இல்லை. வ‌ருட‌ம் 364 நாட்க‌ளும் உற‌ங்கும் அர‌பா மைதான‌ம் அர‌பா தின‌த்தில் ம‌ட்டுமே விழித்திருக்கும். அர‌ப‌வில் ஹாஜிக‌ள் கூடும் தின‌ம் என்ப‌தாலேயே ஹ‌தீதில் ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா என்ற‌ பெய‌ரை பாவித்துள்ளார்க‌ள்.
4. ந‌ம‌து நாடு போன்ற‌ நாடுக‌ளில் முன்ன‌ர் அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தை அறிய‌ முடியாத்தால் யூக‌த்தின் அடிப்ப‌டையில் பிறை 9ல்நோன்பு பிடித்த‌ன‌ர். த‌ற்போது எப்போது அர‌பா தின‌ம் என்ப‌தை 8 நாட்க‌ளுக்கு முன்ன‌ரே உல‌க‌ம் முழுக்க‌ தெரிந்து விடுவ‌தால் ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடும் தின‌த்தில்தான் அர‌பா நோன்பை உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் நோற்க‌ வேண்டும் என்ப‌தே எம‌து தெளிவான‌ நிலைப்பாடாகும்.

அர‌பா நோன்பு ப‌ற்றிய‌ சில‌ அறியாமைக்க‌ருத்துக்க‌ளும் எம‌து ப‌தில்க‌ளும்.
📮 *அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான்* அரபா நோன்பு என்று *எந்தவொரு ஹதீஸும் கிடையாது.”*
ப‌தில்: அர‌பா நோன்பு ஒரு வ‌ருட‌த்துக்கான‌ ப‌ல‌ன் த‌ரும் எனும் பொருளில் முஸ்லிமில் ஹ‌தீத் வ‌ந்துள்ள‌து. இந்த‌ ஹ‌தீதில் பிறை 9 என‌ வ‌ர‌வில்லை. அர‌பா என்றே வ‌ந்த‌து. ஹ‌ஜ்ஜுடைய‌ நோன்பு என‌ ஹ‌தீதில் வ‌ந்திருந்தாலாவ‌து அர‌பா நோன்பு என்று இல்லை என‌ வாதிட‌லாம். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடும் தின‌த்துக்குத்தான் يوم عرفة அர‌பா தின‌ம் என‌ப்ப‌டும்.

📌 வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் *அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும்* என்ற ஓர் *இஸ்லாமிய அடிப்படையற்ற* கருத்து நிலவி வருகிறது.

ப‌; முற்கால‌த்தில் அதாவ‌து அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தை அறிய‌ முடியாத‌ கால‌த்தில் இதில் க‌ருத்து வேறுபாடு இருந்த‌து. இப்போது இது விட‌ய‌ம் மிக‌த்தெளிவாக‌ உள்ள‌து.

📌 இச்சிந்தனை காரணமாக *தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தில் நடக்கின்ற வணக்கவழிபாடுகள்* ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் *சவூதிக்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர்.* உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.

01> துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை *பத்து வருடங்களாக* எவ்வாறு தீர்மானித்தார்கள்?

ப‌: சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சு ம‌தீனா பிறையை வைத்து அமுல் ப‌டுத்தினார்க‌ள். கார‌ண‌ம் ஹ‌ஜ்ஜுக்கு செல்த‌ல் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. த‌டை நீங்கிய‌ போது ம‌தீனா பிறையை ம‌க்காவிலும் அமுல் ப‌டுத்தி ம‌க்காவிலும் ம‌தீனாவிலும் ஒரே நாளில் உழ்ஹிய்யா பெருநாளை ந‌டைமுறைப்ப‌டுத்தினார்க‌ள்.

📌நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் *பத்து வருடங்களாக* உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் *துல்ஹிஜ்ஜா* மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். *துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும்*. அவ்வாறாயின் *மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும்* அதன் *பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும்*. அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். *அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது*. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
ப‌. அர‌பா நோன்பு ப‌ற்றி விதைந்துரைத்த‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் அது ப‌ற்றி அல‌ட்டிக்கொள்ள‌வில்லை என்ப‌து இட்டுக்க‌ட்டாகும்.

02> *அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை* வரும்முன்னிருந்தே *ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு*?
ப‌. ஏற்க‌ன‌வே ப‌தில் உள்ள‌து..

📌நபியவர்கள் *வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள்* அக்காலப்பகுதியில் *ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை*. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் *ஒன்பதாம் தின நோன்பை* அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும் ?
ப‌. ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா தின‌ம் அல்லாத‌ துல்ஹ‌ஜ் பிறை 9 என‌ அதில் நோன்பு பிடிக்க‌வில்லை. அத்தின‌ம் ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடும் அர‌பா தின‌ம் என்ற‌ வ‌கையில் நோன்பு நோற்றார்க‌ள்.

📌 நபித்தோழர்கள் *பிறையை* அடிப்படையாக வைத்துத்தான் *ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல*
ப‌. பிறையை அடிப்ப‌டையாக‌ வைத்தே அர‌பா தினம் நிர்ண‌யிக்க‌ப்ப‌டுகிற‌து.

03> அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை *ஜாஹிலியாக்காலம்* தொட்டே காணப்பட்டது.
ப‌. ஜாஹிலிய்யா கால‌ம் ந‌ம‌க்கு மார்க்க‌ம‌ல்ல‌.

📌சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது ‘அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.’ என பதிலளிக்கிறார்கள். *இது இருவகையில் தவறாகும்*

📌எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை *அரபாதினமன்று* நான் தேடிச்சென்றேன். அச்சமயம் *அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை* கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? என்று எனக்குள் கூறிக்கொண்டேன். (அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்)
(ஆதாரம்:- *புகாரி 1664*)

📌இது *நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர்* நடந்த சம்பவமாகும். *கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும்*. ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று *கஃபாவிலேயே இருப்பார்கள்*. அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால்  
*ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்* .இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த *நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்*.    (பத்ஹுல் பாரீ 3:603 604)
ப‌. சிரிப்பு வ‌ருகிற‌து. அர‌பா என்ப‌து ஒரு ஊர். அங்கு ஹ‌ஜ் கால‌த்தில் ம‌ட்டுமே ஹாஜிக‌ள் ஒன்று கூடுவ‌ர் என்ப‌த‌ற்காக‌ ஏனைய‌ நாட்க‌ளில் யாரும் ஆடு, ஒட்ட‌க‌ம் மேய்க்க‌ அங்கு போக‌க்கூடாது என்ப‌த‌ல்ல‌. ந‌பியுள்ளாஹ் இறைவ‌னால் வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தால் அர‌பா மைதான‌த்தின் ம‌கிமை தெரிந்திருந்தால் த‌னிமை தேடி அத‌ன் ப‌க்க‌ம் சென்றிருக்க‌லாம்.

📌எனவே *அரபாவில் ஒன்று கூடும் வழமை* ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். *இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல*.
ப‌. இது பைத்திய‌க்கார‌த்த‌ன‌மான‌ க‌ருத்து. ஜாஹிலிய்யா கால‌த்திலும் க‌ஃபாவை த‌வாப் செய்யும் வ‌ழ‌க்க‌ம் உள்ள‌தால் நாம் த‌வாஃப் செய்ய‌ தேவையில்லை என்ப‌து போல் உள்ள‌து.

``` இரண்டாவது``` *ஹிஜ்ரி 8* ஆம் ஆண்டு *இதாப்* என்ற நபித்தோழரும் *9 ஆம்* ஆண்டு *அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும்* ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் *9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை*. ```மக்கா வெற்றியின்``` பின்னரே *இவ்விருவரின் ஹஜ்ஜும்* நிகழ்கிறது. அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் *9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை*. மக்கா வெற்றியின் பின்னருங் கூட *நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை* என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.

```ஏனெனில்```

04>அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் *துல்கஃதாவிலேயே* இடம்பெற்றது.
ப‌. நாம் ஏற்க‌ன‌வே சொன்னோம் ஆட்சித்த‌லைவ‌ர் ர‌சூலுல்லாஹ் என்ப‌தால் ம‌க்காவுக்கு சென்ற‌ அபூ ப‌க்க‌ர் ர‌ழி அவ‌ர்க‌ளுக்கு எப்போது அர‌பா தின‌ம் என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் துல் ஹ‌ஜ் பிறை ம‌தீனாவில் க‌ண்டபின் ஹ‌ஜ்ஜுக்காக‌ புற‌ப்ப‌ட்ட‌ ச‌ஹாபாக்க‌ளிட‌ம் சொல்லியிருக்க‌லாமே. அத்துட‌ன் ர‌சூலுல்லாஹ்விட‌ம் கேட்காம‌ல் அபூ ப‌க்க‌ர் த‌ன் இஷ்ட‌த்துக்கு ஹ‌ஜ் கிரியைக‌ளை தீர்மானிப்ப‌வ‌ர் அல்ல‌.

*ஜாஹிலீயாக்கால* மக்கள் *காலக்கணிப்பீட்டு முறையில்* பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் *சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது*. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக *3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து* ```கபீஸ்``` என்று பெயர் சூட்டியிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் *கலம்மஸ்* என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் *பிற்படுத்தியும் முற்படுத்தியும்* மாற்றம் செய்தார்கள். *இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள்*. இதனை *எச்சரித்து* சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு *குர்ஆன் வசனமும் இறங்கியது*. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
(மஜ்முஃ பதாவா 25:14)
ப‌. பெய‌ர் மாறுப‌ட்டிருப்ப‌து பிர‌ச்சினை அல்ல‌. ந‌பியின் வ‌ழிகாட்ட‌லில் ஹ‌ஜ்ஜின்போது அர‌பாவில் ஹாஜிக‌ள் ஒன்றுகூடியுள்ளார்க‌ள்.
மேலேயுள்ள‌ வாத‌ம் கூட‌ எம‌க்குத்தான் சான்று. துல் க‌ஃதாவில் ஹ‌ஜ் இட‌ம்பெற்றிருந்தால் அது எப்ப‌டி துல் ஹ‌ஜ் பிறை 9ல் நோன்பு வைப்ப‌து?  ஆக‌வே துல்க‌ஃதாவோ துல்ஹ‌ஜ்ஜோ ந‌பிய‌வ‌ர்க‌ள் வ‌ழி காட்ட‌லில் ச‌ஹாபா ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடிய‌ தின‌ம் அர‌பா தின‌மாக‌வும் அர‌பா நோன்புக்குரிய‌ தின‌மாக‌வும் ஆகிற‌து.

📌 *அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது*. நிலமை இவ்வாறிருக்க  ```எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்```?
ப‌. ப‌தில் மேலேயுள்ள‌து.

05> *சொந்த நாட்டில்* எடுக்கப்படும் தீர்மானப்படியே *துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்*.

*இமாம் இப்னு தைமியாவின்* வாதம்:-
ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில் தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் *வெளித்தோற்றத்தில் 9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு நோற்கலாமா*? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்) *ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்*
(மஜ்முஃ பதாவா 25:202)
ப‌. இமாம் இப்னு தைமிய்யா கால‌த்தில் செல்போன், வ‌ட்ச‌ப் என்ப‌ன‌ இருக்க‌வில்லை. இருந்திருந்தால் எம‌து க‌ருத்தையே சொல்லியிருப்பார்.

ஆக‌வே ஹ‌ஜ்ஜில் ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் தின‌மே அரபா தின‌மாகும்.

நாங்க‌ள் முஸ்லிம்க‌ள், எம‌து மாத‌ங்க‌ள், ஹிஜ்ரி வ‌ருட‌ங்க‌ள், நோன்பு, ஹ‌ஜ், அர‌பா தின‌ம், அர‌பா நோன்பு என‌ அனைத்து நாள் க‌ண‌க்கையும் ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையை வைத்தே தொட‌ர்கின்றோம். மக்கா அல்லாத‌ எந்த‌ ச‌ர்வ‌தேச‌ பிறையையும் நாம் ஏற்க‌வில்லை.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
President
Sri lanka Ulama Council
ம‌க்கா அர‌பாவில் ஹாஜிக‌ள் இருக்கும் போது லோஸ் ஏஞ்ச‌ல்ஸ் ம‌க்க‌ளுக்கு அதேநாளில் அர‌பா நோன்பு பிடிக்க‌ முடியாது என‌ உல‌க‌ நேர‌ங்க‌ள் தெரியாத‌ ஒருவ‌ர் ப‌திவிட்டுள்ளார்.
இதோ இன்று இப்போது ச‌வூதியில் நேர‌ம்  பின்னேர‌ம் சுமார் 4.35. அர‌பா நாளில் ஹாஜிக‌ள் இறை வ‌ண‌க்க‌த்தில் ஈடு ப‌டும் முக்கிய‌ நேர‌ம்.
அதேவேளை லோஸ் ஏஞ்ச‌ல்சில் அதே நாள் காலை 6.35.
அப்ப‌டியாயின் அங்கு இதேநேர‌த்தில் முஸ்லிம்க‌ள் ச‌ஹ‌ர் முடித்து சுப‌ஹும் தொழுது சூரிய‌ உத‌ய‌த்தையும் க‌ண்டிருப்ப‌ர்.
ஆக‌ அர‌பா நாளில் உல‌க‌ம் முழுவ‌தும் கிட்ட‌த்த‌ட்ட‌ 99 வீத‌ம் ஒரே நாளாகும் என்ப‌துட‌ன் லோஸ் ஏஞ்சல்ஸ் முஸ்லிம‌ளும் நோன்பு பிடிக்க‌ முடியும்.

அவ்வப்போது  சவூதியை விட ஒரு நாள் முன்னர் பிறை கண்டு நோன்பு நோற்ற நாடுகளும் உண்டு.
அப்படியானால் அவர்களுடைய பெருநாள் தினமும் ஹாஜிகள் அறஃபாவில் ஒன்றுகூடும் தினமும் ஒன்றாக இருக்கும் இத்தகை சூழ் நிலையில் சர்வேதசப் பிறை வாதிகள் முன்வைகும் தீர்வு யாது ?

ப‌தில். முத‌லில் ம‌க்கா பிறை த‌விர்ந்த‌ பிறையை நாம் ஏற்க‌வில்லை. தேச‌ம், ச‌ர்வ‌தேச‌ம் என‌ அனைத்திலும் வாழும் முஸ்லிம்க‌ள் ஒவ்வொரு நாளும் பல‌ த‌ட‌வைக‌ள் ம‌க்காவின் ப‌க்க‌மே திரும்புகிறார்க‌ள். அத்துட‌ன் ஹ‌ஜ், அர‌பா என்ப‌தெல்லாம் ம‌க்காவில்த்தான்.
ம‌க்காவில் எப்போது அர‌பா என்ப‌து முன்கூட்டி தெரியாத‌ கால‌த்தில் இது ஒரு குற்ற‌மாக‌ இல்லை. உதார‌ண‌மாக‌ முன்பெல்லாம் பிர‌யாண‌த்தில் போகும் போது ம‌க்கா கிப்லா எந்த‌ப்ப‌க்க‌ம் உள்ள‌து என்ப‌தை ச‌ரியாக‌ தெரியாவிட்டால் யூக‌த்தின் அடிப்ப‌டையில் கிப்லா திசையை நினைத்து தொழுதோம். இதுதான் ந‌பி வ‌ழியாக‌வும் இருந்த‌து.
ஆனால் இப்போது ம‌க்கா திசை காட்டி வ‌ந்து விட்ட‌து. கையில் உள்ள‌ போனிலும் கூட‌ ம‌க்காவின் திசையை தெரிந்து கொள்ள‌ முடியும். இந்த‌ நிலையில் எம‌து முன்னோர்க‌ள் இந்த‌ திசை காட்டியை பாவிக்க‌வில்லை என‌ கூறி யூக‌த்தின் அடிப்ப‌டையில் வேண்டுமென்றே ஒருவ‌ன் தொழுதால் அவ‌னை பார்த்து என்ன‌ சொல்வோம். அவ‌ன‌து தொழுகை கூடுமா? கூடாது.

அதே போல் த‌ற்போது ம‌க்காவில் எப்போது அர‌பா, எப்போது பெருநாள் என்ப‌தெல்லாம் 8 நாட்க‌ளுக்கு முன்ன‌ரே உல‌க‌த்தில் உள்ள‌ கிராம‌ ம‌க்க‌ளுக்கும் தெரியும். இந்த‌ நிலையில் ஹாஜிக‌ள் அர‌பாவிலிருந்து வ‌ந்து பெருநாள் கொண்டாடும் தின‌த்தில் த‌ன‌து நாட்டில் அர‌பாவில் ஹாஜிக‌ள் இருக்காத‌ சூழ் நிலையில் அர‌பா தின‌ம் என‌ முட்டாள் த‌ன‌மாக‌, முர‌ண்டு பிடித்துக்கொண்டு ஒருவ‌ர் அன்று நோன்பு வைப்ப‌து ஹ‌ராமான‌தாகும்.
ஒருவ‌ர் அர‌பா தின‌த்தில் த‌ன‌து நாட்டில் நோன்பு வைத்து விட்டு அடுத்த‌ நாள் பெருநாள் கொண்டாடாம‌ல் இருந்து அத‌ற்கு ம‌று நாள் பெருநாள் கொண்டாடுவ‌து குற்ற‌மாகாது. கார‌ண‌ம் பெருநாள் அன்று நோன்பு நோற்ப‌து ஹ‌தீதில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌ ஒருவ‌ர் பெருநாளை கொண்டாடாம‌ல் இருப்ப‌து குற்ற‌ம‌ல்ல‌. அத்துட‌ன் பெருநாள் என்ப‌து முஸ்லிம்க‌ள் தீர்மானிப்ப‌துதான் என்றும் ந‌பிய‌வ‌ர்க‌ள் சொல்லியுள்ளார்க‌ள்.
ஆக‌வே ம‌க்காவில் அர‌பா தின‌ம் என்று ந‌ன்றாக‌ தெரிந்த‌ பின்பும் நோன்பு நோற்காம‌ல் விடுவ‌து சுன்னாவை ம‌றுப்ப‌தாகும். அத்துட‌ன் ம‌க்காவில் பெருநாள் என்று தெரிந்தும் இங்கு நோன்பு நோற்ப‌து ஹ‌ராமாகும்.

ம‌க்கா பிறை என்ப‌து ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையாகும். உல‌கில் எங்கு க‌ண்டும் அப்பிறையை ம‌க்காவில் அமுல்ப‌டுத்த‌ப்ப‌டுமானால் அதை ஏற்க‌ வேண்டும்.
அத்துட‌ன் ம‌க்காவில் உள்ள‌ உம்முல் குரா க‌ல‌ண்ட‌ரையே அதிக‌ முஸ்லிம் நாடுக‌ள் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

பிறை ப‌ற்றிய‌ ந‌பிய‌வ‌ர்க‌ளின் ஹ‌தீதை இஸ்லாம் எக்கால‌த்துக்கும் உரிய‌து என்ற‌ கோண‌த்தில் பார்த்தால் ப‌ல‌ தெளிவுக‌ள் பிற‌க்கும்.
"என்னை எவ்வாறு தொழ‌ க‌ண்டீர்க‌ளோ அவ்வாறு தொழுங்க‌ள்" என‌ சொன்னார்க‌ள். இது யாரை நோக்கி சொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ம்.? ம‌தீனாவில் நேர‌டியாக‌ ர‌சூலுள்ளாஹ் தொழுவ‌தை காணும் ம‌தீனா வாழ் முஸ்லிம்க‌ளை நோக்கி ம‌ட்டுமே சொல்ல‌ப்ப‌ட்ட‌து என‌ அர்த்த‌ம் கொள்வ‌து ச‌ரியா அல்ல‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் எவ்வாறு தொழுதார்க‌ள் என்ப‌தை க‌ண்ணால் காணாத‌ நிலையிலும் காதால் கேட்டு அல்ல‌து அறிந்து கொள்ளும் உல‌க‌ளாவிய‌ முழு முஸ்லிம்க‌ளையும் நோக்கி சொல்ல‌ப்ப‌ட்ட‌தா? இந்த‌ அடிப்ப‌டையை வைத்து பிறை ச‌ம்ப‌ந்த‌மான‌ ஹ‌தீதை பாருங்க‌ள். " பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள்" என்ப‌து ந‌பிக‌ளாரின் தெளிவான‌ வார்த்தை. இதில் ம‌தீனா வாசிக‌ளே என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் விழிக்காம‌ல் பொதுவாக‌ சொன்னார்க‌ள். இத‌ன் மூல‌ம் இந்த‌ ஹ‌தீத் ம‌தீனாவாசிக‌ளையும் க‌ட்டுப்ப‌டுத்துகிற‌து, உல‌க‌ம் முடியும் வ‌ரையான‌ முழு முஸ்லிம்க‌ளையும் உள்வாங்குகிற‌து. இதுதான் ந‌பிய‌வ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளின் அதிச‌ய‌ம். அத‌ன் ப‌டி முழு உல‌க‌ங்க‌ளையும் பார்த்து " பிறை பார்த்து" பிடிக்கும்ப‌டி சொன்ன‌த‌ன் மூல‌ம் ஒவ்வொரு முஸ்லிமும் பிறை காண‌ வேண்டும் என்றோ நாட்டுக்கு நாடு பிறை காண‌ வேண்டும் என்று பொருள் அல்ல‌. அவ்வாறு ந‌பிய‌வ‌ர்க‌ளும் சொல்ல‌வில்லை.  முஸ்லிம்க‌ள் பிறை க‌ண்டால் அது முழு முஸ்லிம்க‌ளுக்கும் உரிய‌துதான் என்ப‌தை தெளிவாக‌ சொல்கிற‌து. அத்துட‌ன் அள்ளாஹ்வும் ர‌சூலுல்லாஹ் வும் காட்டித்த‌ந்த‌ உல‌க‌ முஸ்லிம்க‌ளின் த‌லைமை ம‌க்கா என்ப‌தால் ம‌க்காவில் அறிவிக்க‌ப்ப‌டும் பிறையை ஏற்ப‌த‌ன் மூல‌ம் ஒரு த‌லைமையின் கீழ் முஸ்லிம்க‌ள் க‌ட்டுப்ப‌டும் சிற‌ந்த‌ முறையை காண‌ முடியும் என்று கூறுகிறோம்.

பிறை விட‌ய‌த்தில் ச‌வூதி உல‌மாக்க‌ள் கூட‌ இன்ன‌மும் தெளிவான‌ நிலைப்பாட்டுக்கு வ‌ர‌வில்லை. அதாவ‌து ம‌க்கா பிறையைத்தான் உல‌க‌ முஸ்லிம்க‌ள் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்த்த‌ல் என்ப‌து ந‌பியுள்ளாவின் வாழ்வில் இட‌ம் பெறாத‌ பித் அத் என்ப‌தை அவ‌ர்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள்.
1. ச‌வூதி உல‌மாக்க‌ள் பெரும்பாலும் ஹ‌ம்ப‌லி ம‌த்ஹ‌பை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள். இப்னு தைமிய்யா, இப்னு அப்துல் வ‌ஹ்ஹாப் போன்ற‌ உல‌மாக்க‌ளும் பிக்ஹ் விட‌ய‌த்தில் ஹ‌ம்ப‌லி ம‌த்ஹ‌பையே பின்ப‌ற்றினார்க‌ள்.
2. பிறை விட‌ய‌த்தில் மாற்று க‌ருத்துக்க‌ளையும் ஆராயும் சூழ‌ல் இன்ன‌மும் ச‌வூதி உல‌மாக்க‌ளுக்கு வ‌ர‌வில்லை.

ஆனாலும் ச‌வூதி உல‌மாக்க‌ளிட‌ம் நான் பின்வ‌ரும் கேள்வியை முன் வைக்கிறேன்.
1. ந‌பிக‌ளார் கால‌த்தில் ம‌தீனா உட்ப‌ட‌ ப‌ல‌ தூர‌ நாடுக‌ளிலும் முஸ்லிம்க‌ள் வாழ்ந்த‌ன‌ர். அவை குட்டி ம‌ன்ன‌ர்க‌ளால் ஆள‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌னால் அந்த‌ந்த‌ ஊர்க‌ளில் பிறை பார்த்து நோன்பு பிடியுங்க‌ள், விடுங்க‌ள், ஹ‌ஜ்ஜுக்கு போங்க‌ள் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் ஏவினார்க‌ளா?
2. முஹ‌ம்ம‌து இப்னு வ‌ஹ்ஹாப் (ர‌ஹ்ம‌துல்லாஹி அலைஹி) அவ‌ர்க‌ள் வ‌ழி காட்ட‌லில் ம‌ன்ன‌ர் இப்னு சுவூத் அரேபியா முழுவ‌தையும் த‌ன‌து க‌ட்டுப்பாட்டில் கொண்டு வ‌ருமுன் அந்நாட்டில் நூற்று‌க்க‌ண‌க்கான‌ ம‌ன்ன‌ர்க‌ள் ஆட்சி செய்யும் நாடுக‌ள் இருந்த‌ன‌. இத‌ன் பிர‌கார‌ம் ஒவ்வொரு நாட்டிலும் பிறை காண‌ வேண்டும் என்ப‌த‌ற்கிண‌ங்க‌ இந்த‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ நாடுக‌ள் ஒவ்வொன்றிலும் பிறை காண‌ப்ப‌ட்டே நோன்பு ஹ‌ஜ் தீர்மானிக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
இப்போது ய‌ம‌ன் முத‌ல் க‌ட்டார் வ‌ரை சுமார் இர‌ண்டாயிர‌ம் கிலோமீட்ட‌ர் நீள‌முள்ள‌ இன்றைய‌ ச‌வூதியில் ஒரு பிறையையே வைத்து நோன்பு, ஹ‌ஜ் தீர்மானிக்க‌ப்ப‌டுகிற‌து. நூற்றுக்க‌ண‌க்கான‌ பிறைக‌ளை நீக்கி ஒரே பிறையை கொண்டு வ‌ந்த‌து எந்த‌ ஆதார‌த்தின் அடிப்ப‌டையில்? அது ஒரு த‌னி நாடு என்ற‌ வ‌கையில் அவ்வாறு ஒரு பிறை அமுல் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து என்று ப‌தில் சொல்வீர்க‌ள். அப்ப‌டியென்றால் இறைவ‌ன் நாடி ச‌வூதி வ‌ல்ல‌ர‌சாகி இந்தியா வ‌ரை ச‌வூதி நாடு விஸ்த‌ரிக்க‌ப்ப‌ட்டால் அப்போது ஒரு பிறையை இந்தியா வ‌ரையான‌ ச‌வூதி ம‌க்க‌ள் ஏற்க‌ வேண்டும் என‌ கூறுவீர்க‌ளா? நிச்ச‌ய‌ம் அப்படித்தான் சொல்வீர்க‌ள். அது எந்த‌ ஆதார‌த்தின் அடிப்ப‌டையில்?

அப்போது முடியுமாயின் இப்போது ஏன் முடியாது?

பிறையை க‌ண்டு பிடியுங்க‌ள், விடுங்க‌ள் என்ற‌ ஹ‌தீதில் உங்க‌ளுக்கு என்ப‌து வெவ்வேறு பட்ட‌ ஆட்சிக‌ளுக்கு ந‌பிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ சொல்கின்ற‌ன‌ர். அப்ப‌டியென்றால் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ம் என்ற‌ ஒரே ஆட்சி என்றில்லாம‌ல் ப‌ல்வேறு ஆட்சி இருக்க‌ வேண்டும் என‌ ந‌பியுள்ளாஹ் விரும்பினார்க‌ளா? ஒரு போதும் இல்லை.
அப்ப‌டித்தான் ஒரு ஆட்சியில் இருப்போர் ஒரு பிறையை தொட‌ர‌லாம் இஸ்லாமிய‌ ஆட்சி என்ப‌து சுல்தான்க‌ளின் கால‌த்தில் ம‌க்கா முத‌ல் இந்தியாவின் த‌னுஷ்கோடி வ‌ரை ஒரே ஆட்சிதானே இருந்த‌து. அப்ப‌டியாயின் ஏன் இப்போது ஒரே பிறையை ஏற்க‌ முடியாது? நாடுக‌ளாக‌, தேச‌ங்க‌ளாக‌ இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌த்தை  இறைவ‌ன் சொல்லி பிரித்தார்க‌ளா? ம‌னித‌ன் இட்ட‌ எல்லைக‌ள்தான் நாடுக‌ள். ஆக‌வே உல‌க‌ம் முழுவ‌தும் அள்ளாஹிவின் ஆட்சிக்குரிய‌தாகும் என‌ குர் ஆன் சொல்கிற‌து. அந்த‌ முழு உல‌க‌ம் என்ற‌ இறை தேச‌த்தின் த‌லைந‌க‌ரான‌ ம‌க்காவின் அறிவித்த‌ல் அதே விநாடி உல‌க‌ம் முழுக்க‌ கிடைக்குமாயின்  ஒரு பிறை போதும். த‌லைப்பிறை என்ப‌து முழு உல‌குக்கும் ஒன்றுதான்.

பிறை விட‌ய‌த்தில் இப்னு அப்பாஸ் (ர‌ழி) க‌ருத்தை ப‌ல‌ரும் காட்டி நாட்டுக்கொரு பிறை என்கிறார்க‌ள்.

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம்  என்னை  அனுப்பி வைத்தனர்.  நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள்.முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப் நூல்:முஸ்லிம் 1819

இப்னு அப்பாஸ் ம‌தீனாவில் வாழும் போது ம‌தீனா ஒரு நாடாக‌வும் ஷாம் இன்னொரு நாடாக‌வும் இருக்க‌வில்லை. ம‌தீனா முத‌ல் ஷாம் வ‌ரை ஒரே நாடாக‌த்தான் இருந்த‌து. இஸ்லாமிய‌ நாட்டின் ஒரு ப‌ட்டிண‌மாக‌வே ம‌தீனா இருந்த‌து. அப்ப‌டியிருந்தும் ஷாமில் க‌ண்ட‌ பிறை ப‌ற்றி சுமார் 28 நாட்க‌ள் க‌ட‌ந்த‌பின் இப்னு அப்பாசிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌ போது அத‌னை ஏற்றுக்கொள்ள‌ ம‌றுக்கிறார்.
இப்னு அப்பாஸின் இந்த‌ நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ப‌வ‌ர்க‌ள் உண்மையாள‌ர்க‌ளாக‌ இருந்தால் நாட்டுக்கொரு பிறை என்ப‌தை ஏற்காம‌ல் ஊருக்கொரு பிறை என்றுதான் சொல்ல‌ வேண்டும். அத‌ற்கு அவ‌ர்க‌ள் த‌யாரா?
அதாவ‌து இல‌ங்கையில் கிண்ணியாவில் பிறை க‌ண்டால் அது கிண்ணியாவுக்கும் அத‌னை சூழ‌வுள்ள‌ ம‌க்க‌ளுக்கும் ம‌ட்டுமே உரிய‌து. கிண்ணியா பிறையை வைத்து கொழும்பிலோ, யாழ்ப்பாண‌த்திலோ நோன்பு பிடிக்க‌ முடியாது. கார‌ண‌ம் ஒரே நாட்டுக்குள் ஒரே க‌லீபாவின் ஆட்சிக்குள் ந‌டை தூர‌த்தின் ப‌டி சில‌ நாட்க‌ள் க‌ட‌ந்த‌பின்தான் பிறை அறிவித்த‌ல் கிடைக்கும் என்ற‌ தூர‌த்தில் இருந்த‌ இப்னு அப்பாஸ் அந்த‌ பிறையை ஏற்க‌வில்லை என்ப‌த‌ன் மூல‌ம் ஊருக்கு ஒரு பிறைதானே த‌விர‌ நாட்டுக்கொரு பிறை த‌வ‌றான‌து என‌ இவ‌ர்க‌ள் ஏற்க‌ த‌யாரா?

அத‌ற்கு உட‌னே இல்லை என்பார்க‌ள். அப்ப‌டியாயின் இவ‌ர்க‌ள் இப்னு அப்பாஸின் க‌ருத்தை ம‌றுக்கிறார்க‌ள் என்றுதான் அர்த்த‌ம்.
ஒரு நாட்டில் காண‌ப்ப‌டும் பிறையை அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் ம‌ட்டும் எடுத்துக்கொள்ள‌ முடியும் என்ப‌த‌ற்கு குர் ஆனிலோ, ஹ‌தீதிலோ, ச‌ஹாபாக்க‌ளின் க‌ருத்திலோ ஆதார‌ம் த‌ர‌ முடியுமா என‌ நான் ச‌வால் விடுக்கிறேன்.

அத்துட‌ன் இப்னு அப்பாஸ் (ர‌ழி)யின் ஊருக்கொரு பிறை என்ற‌ அன்றைய‌ நிலைப்பாடு அன்றைக்கு அது ச‌ரியான‌தே என்ப‌தை நாம் ஏற்கிறோம். இன்று அது ச‌ரி வ‌ராது என்றுதான் கூறுகிறோம்.
ஏன் அன்று ச‌ரி?
அன்றிருந்த‌ கால‌ சூழ‌ல் என்ப‌து ஒரு ஊரில் பிறை தென்ப‌ட்ட பிறை க‌ண்ட‌ செய்தியை ச‌ஹ‌ர் நேர‌த்துக்குள் ம‌க்க‌ளுக்கு அறிவிப்ப‌தாயின் சுமார் ப‌த்து கிலோமீட்ட‌ர் தூர‌த்துள் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு ம‌ட்டுமே அறிவிக்க‌ முடியும்.
ந‌ம‌து நாட்டை உதார‌ண‌மாக‌ கொண்டால் க‌ல்முனையில் பிறை க‌ண்டால் வ‌ண்டில் மாட்டை க‌ட்டிக்கொண்டு அக்க‌ரைப்ப‌ற்று வ‌ரைதான் அறிவிக்க‌ முடியும். அத‌ற்க‌ப்பால் பொத்துவிலுக்கு போவ‌த‌ற்கிடையில் விடிந்து விடும். குதிரையில் போனால் இன்னும் ஒரு 5 அல்ல‌து 8 மைல் செல்ல‌ முடியும்.
இப்ப‌டிப்ப‌ட்ட‌ சூழ் நிலையில் ஒவ்வொரு கிராம‌மும் த‌த்த‌ம் கிராம‌த்தின் பிறையை வைத்து நோன்பு, ஹ‌ஜ் பெருநாள் என்ப‌தை தீர்மானிக்கும் நிலையே ச‌ரியாக‌ இருந்த‌து.
ஆனால் ஷாமில் பிறை தென்ப‌ட்ட‌ செய்தி அதே இர‌வில் ம‌தீனாவில் வாழ்ந்த‌ இப்னு அப்பாசுக்கு அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்தால் அவ‌ர் அத‌னை ம‌றுத்திருப்பாரா? நிட்ச‌ய‌ம் ம‌றுத்திருக்க‌ மாட்டார்.

ஆக‌வே அன்றிருந்த‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் என்ப‌து ஓரிர‌வில் சில‌ மைல் தூர‌ம் என்றே இருந்த‌ நிலையில் இப்னு அப்பாசின் நிலைப்பாடு ச‌ரியான‌து. எவ்வாறு ஷாமில் க‌ண்ட‌ பிறை ப‌ற்றிய‌ செய்தி இஷா நேர‌த்தில் ம‌தீனாவில் இப்னு அப்பாசுக்கு கிடைத்திருந்தால் அத‌னை அவ‌ர் ம‌றுத்திருக்க‌மாட்டாரோ அவ்வாறே ம‌க்காவின் பிறை அறிவித்தால் சில‌ ம‌ணி நேர‌த்தில் அல்ல‌ சில‌ விநாடிக‌ளிலேயே இல‌ங்கைக்கு கிடைத்து விடுகிற‌து. ஆக‌வே அத‌னை நாம் ஏற்றுக்கொள்ள‌ வேண்டும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஒரே பிறை ப‌ற்றி நாம் பேசும் போது ஒரே சூரிய‌னையும் தொட‌ர‌லாமே என‌ சில‌ர் ப‌திவிடுகிறார்க‌ள்.
உண்மையில் ஒரே சூரிய‌னைத்தான் உல‌கின் 99 வீத‌மான‌ நாடுக‌ள் தொட‌ர்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன்தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்தில் ச‌வூதியில் உதிக்கும்.
அப்ப‌டி இல்லாம‌ல் இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன் இன்னும் 24 ம‌ணிநேர‌த்தின் பின்தான் ச‌வூதியில் உதிக்குமா?
உதிக்க‌லாம் என்ற‌ முட்டாள்த‌ன‌ம்தான் ச‌வூதியில் தெரிந்த‌ த‌லைப்பிறை அடுத்த‌ நாள் 24 ம‌ணி நேர‌த்தின் பின் இல‌ங்கையில் தெரிய‌லாம் என‌க்கூறுவ‌தாகும்.
ச‌ந்திர‌ன், பிறை என்ப‌தெல்லாம் சூரிய‌னின் ஒளி கார‌ண‌மாக‌வே தெரிகிற‌து. சூரிய‌ன் ம‌றையும் போது அத‌ன் ஒளிக்கீற்று ச‌ந்திர‌னில் ப‌டுவ‌தால் அது ந‌ம‌க்கு பிறையாக‌ தெரிகிற‌து.
இந்த‌ பிறை சில‌ நாடுக‌ளில் தெரியும் சில‌ நாடுக‌ளில் தெரியாது. ஆனாலும் முழு உல‌குக்கும் த‌லைப்பிறை ஒன்றுதான்.
ஹ‌ஜ்ஜுப்பெருநாள், அர‌ஃபா என்ப‌தெல்லாம் ம‌க்காவில் இட‌ம்பெறும் ஹ‌ஜ் நிக‌ழ்வுக‌ளின் பெய‌ரால் உள்ள‌வையாகும். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடியிருந்து இறைவ‌னோடு நேர‌டி தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொண்டிருக்கும் அதே நாளில் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளும் அதே ஹாஜிக‌ளோடு ஒருமித்து நிற்க‌ வேண்டும் என்ற‌ உய‌ரிய‌ குறிக்கோள்தான் அர‌பா நாளில் நாமும் - ஹாஜிக‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் - நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தாகும்.
இன்று அரபாவில் ஹாஜிக‌ள் கூடும் போது நாளை அர‌பா தின‌ம் என‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

ஒரே பிறை ப‌ற்றி நாம் பேசும் போது ஒரே சூரிய‌னையும் தொட‌ர‌லாமே என‌ சில‌ர் ப‌திவிடுகிறார்க‌ள்.
உண்மையில் ஒரே சூரிய‌னைத்தான் உல‌கின் 99 வீத‌மான‌ நாடுக‌ள் தொட‌ர்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன்தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்தில் ச‌வூதியில் உதிக்கும்.
அப்ப‌டி இல்லாம‌ல் இன்று காலை இல‌ங்கையில் உதிக்கும் சூரிய‌ன் இன்னும் 24 ம‌ணிநேர‌த்தின் பின்தான் ச‌வூதியில் உதிக்குமா?
உதிக்க‌லாம் என்ற‌ முட்டாள்த‌ன‌ம்தான் ச‌வூதியில் தெரிந்த‌ த‌லைப்பிறை அடுத்த‌ நாள் 24 ம‌ணி நேர‌த்தின் பின் இல‌ங்கையில் தெரிய‌லாம் என‌க்கூறுவ‌தாகும்.
ச‌ந்திர‌ன், பிறை என்ப‌தெல்லாம் சூரிய‌னின் ஒளி கார‌ண‌மாக‌வே தெரிகிற‌து. சூரிய‌ன் ம‌றையும் போது அத‌ன் ஒளிக்கீற்று ச‌ந்திர‌னில் ப‌டுவ‌தால் அது ந‌ம‌க்கு பிறையாக‌ தெரிகிற‌து.
இந்த‌ பிறை சில‌ நாடுக‌ளில் தெரியும் சில‌ நாடுக‌ளில் தெரியாது. ஆனாலும் முழு உல‌குக்கும் த‌லைப்பிறை ஒன்றுதான்.
ஹ‌ஜ்ஜுப்பெருநாள், அர‌ஃபா என்ப‌தெல்லாம் ம‌க்காவில் இட‌ம்பெறும் ஹ‌ஜ் நிக‌ழ்வுக‌ளின் பெய‌ரால் உள்ள‌வையாகும். அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடியிருந்து இறைவ‌னோடு நேர‌டி தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொண்டிருக்கும் அதே நாளில் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளும் அதே ஹாஜிக‌ளோடு ஒருமித்து நிற்க‌ வேண்டும் என்ற‌ உய‌ரிய‌ குறிக்கோள்தான் அர‌பா நாளில் நாமும் - ஹாஜிக‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் - நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தாகும்.
இன்று அரபாவில் ஹாஜிக‌ள் கூடும் போது நாளை அர‌பா தின‌ம் என‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

அர‌பா நோன்பு ப‌ற்றிய‌ ர‌சூலுள்ளாவின் ஹ‌தீதில் அர‌பா நாள் நோன்பு என்றுதான் தெளிவாக‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌தே த‌விர‌ துல்ஹ‌ஜ் 9ம் நாள் முஸ்லிம்க‌ள் நோன்பு நோற்க‌ வேண்டும் என‌ சொல்ல‌வில்லை. இன்று அர‌பா நாள் இல்லை என‌ ஒரு முஸ்லிம் ம‌றுக்க‌ முடியுமா

ا

لقول في تأويل قوله تعالى ( فمن شهد منكم الشهر فليصمه )

قال أبو جعفر : اختلف أهل التأويل في معنى " شهود الشهر " .

فقال بعضهم : هو مقام المقيم في داره . قالوا : فمن دخل عليه شهر رمضان وهو مقيم في داره فعليه صوم الشهر كله ، غاب بعد فسافر ، أو أقام فلم يبرح .

ذكر من قال ذلك :

2824 - حدثني محمد بن حميد ومحمد بن عيسى الدامغاني قالا حدثنا ابن المبارك ، عن الحسن بن يحيى ، عن الضحاك ، عن ابن عباس في قوله : " فمن شهد منكم الشهر فليصمه " ، قال : هو إهلاله بالدار . يريد : إذا هل وهو مقيم .

2825 - حدثني يعقوب بن إبراهيم قال : حدثنا هشيم قال : أخبرنا حصين ، عمن حدثه عن ابن عباس أنه قال . في قوله : " فمن شهد منكم الشهر فليصمه " ، فإذا شهده وهو مقيم فعليه الصوم ، أقام أو سافر . وإن شهده وهو في سفر ، فإن شاء صام وإن شاء أفطر .

2826 - حدثني يعقوب قال : حدثنا ابن علية ، عن أيوب ، عن محمد عن عبيدة - في الرجل يدركه رمضان ثم يسافر - قال : إذا شهدت أوله فصم آخره ، ألا تراه يقول : " فمن شهد منكم الشهر فليصمه " ؟

2827 - حدثني يعقوب قال : حدثنا ابن علية ، عن هشام القردوسي عن محمد بن سيرين قال : سألت عبيدة : عن رجل أدرك رمضان وهو مقيم؟ قال : من صام أول الشهر فليصم آخره ، ألا تراه يقول : فمن شهد منكم الشهر فليصمه "؟ . [ ص: 450 ]

2828 - حدثني موسى قال : حدثنا عمرو قال : حدثنا أسباط عن السدي : أما " من شهد منكم الشهر فليصمه " ، فمن دخل عليه رمضان وهو مقيم في أهله فليصمه ، وإن خرج فيه فليصمه ، فإنه دخل عليه وهو في أهله .

2829 - حدثني المثنى قال : حدثنا حجاج قال : حدثنا حماد قال : أخبرنا قتادة ، عن محمد بن سيرين ، عن عبيدة السلماني عن علي - فيما يحسب حماد - قال : من أدرك رمضان وهو مقيم لم يخرج ، فقد لزمه الصوم ، لأن الله يقول : " فمن شهد منكم الشهر فليصمه " .
مبارك عبد المجيد
ما حكم صيام يوم عرفة والإكثار من النوافل فيه؟

الإجابــة

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعـد:

فقد روى مسلم وغيره أن النبي صلى الله عليه وسلم قال: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. والحديث يدل بظاهره على أن صيام يوم عرفة يكفر ذنوب سنتين.

ويستحب الإكثار من الأعمال الصالحة من صلاة نفل وصيام وصدقة وذكر وغيرها في أيام عشر ذي الحجة عموماً، وفي يوم عرفة على وجه الخصوص، ففي الحديث قال صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله، فلم يرجع من ذلك بشيء. رواه البخاري

த‌ற்போது இல‌ங்கையில் நேர‌ம் 2.30. ம‌க்காவில் ப‌க‌ல் 12.00 ம‌ணி. ஹாஜிக‌ள் அர‌பாவுக்கு ளுஹ‌ர் தொழுகைக்கு முன் சென்று ம‌ஃரிபுக்கு பின்ன‌ரே வெளியேறுவார்க‌ள். இன்றைய‌ அர‌பா நாளில் உல‌கில் உள்ள‌ நாடுக‌ளில் ஒரே தின‌ம் என்ப‌தை கீழே காண‌லாம். அத‌ன் மூல‌ம் அர‌பா நாளில் முழு உல‌க‌ முஸ்லிம்க‌ளும் நோன்பு பிடுக்க‌லாம் என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌த்தை 1400 வ‌ருட‌ங்க‌ள் முன்பே ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பா தின‌ நோன்பை பிடியுங்க‌ள் என‌ அழ‌காக‌ சொல்லிவிட்டார்க‌ள்.
அந்நிய‌வ‌ர்க‌ளிட‌ம் இப்ப‌டி பெருநாள் குழ‌ப்ப‌ம் இல்லையே ஏன் ந‌ம‌க்குள் ம‌ட்டும் இப்ப‌டி என‌ ஒரு ச‌கோத‌ர‌ர் அங்க‌லாய்த்துள்ளார். இதுதான் ந‌ம‌க்குள்ளும் எழும் கேள்வியாகும்.
இஸ்லாம் ஒற்றுமை உருவாக்கும் மார்க்க‌மாகும். பிள‌வுக்ளையும் வேற்றுமைக‌ளையும் த‌டுக்கும் மாற்ற‌மாகும். அத்த‌கைய‌ மார்க்க‌ம் நாட்டுக்கொரு பெருநாள் என்று பிள‌வை ஏற்ப‌டுத்தியிருக்குமா? இல்ல‌வே இல்லை.
இந்துக்க‌ளை பாருங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு தீபாவ‌ளி பெருநாள் என்றால் இல‌ங்கை இந்துக்க‌ளுக்கும் அதேநாள்தான் தீபாவ‌ளி, இந்திய‌ த‌மிழ் நாடு வ‌ட இந்தியா, ம‌லேசியா, இந்தோனேடியா என‌ அனைத்து நாடுக‌ளிலும் ஒரே நாளில்த்தான் தீபாவ‌ளி கொண்டாடுகிறார்க‌ள்.  அதென்ன‌ உங்க‌ ஊர் நேர‌ம் வேறு எங்க‌ நாட்டு நேர‌ம் வேறு என‌ எவ‌ராவ‌து முட்டாள்த்த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ளா?
பௌத்த‌ர்க‌ளை பாருங்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ஒரே தின‌த்தில்த்தான் ச‌ந்திர‌ பூர‌ணை வ‌ருகிற‌து. இல‌ங்கை முத‌ல் ஜ‌ப்பான் வ‌ரை ஒரே நாளில்தான் பூர‌ணை. ஜ‌ப்பானில் நேற்று பூர‌ணை, இல‌ங்கையில் இன்று பூர‌ணை என‌ உள்ள‌தா ? இல்லை. அதே நேரம் ஜ‌ப்பானில் பூர‌ணை இர‌வு ஆகி ப‌ல‌ ம‌ணி நேர‌ங்க‌ளின் பின்தான் இல‌ங்கையில் பூர‌ணை தெரிகிற‌து.
ச‌ந்திர‌ன் நாட்டுக்கு நாடு வித்தியாச‌ப்ப‌டும் என‌ எவ‌ராவ‌து ச‌ண்டை பிடிக்கிறார்க‌ளா? இல்லை.
கிறிஸ்த‌வ‌ர்க‌ளை பாருங்க‌ள். கிறிஸ்ம‌ஸ் டிச‌ம்ப‌ர் 25 என்றால் அன்றைய‌ தின‌த்தில் உல‌க‌ம் முழுவ‌தும் கிறிஸ்ம‌ஸ் தின‌ம்தான்.
முஸ்லிம்க‌ளுக்கிடையில் ம‌ட்டும் ஏன் இத்த‌னை பெருநாள் பிள‌வுக‌ள். இத‌னை குர் ஆன் ஏற்ப‌டுத்திய‌தா? இல்லை. ஊருக்கொரு பெருநாளை எடுங்க‌ள் என‌ முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்னார்க‌ளா? இல்லை.

அப்ப‌டியிருந்தும் என்ன‌ கார‌ண‌ம்?
மார்க்க‌ம் ப‌ற்றி அறியாத‌வ‌ன், தேடுத‌ல் இல்லாத‌வ‌னெல்லாம் முஸ்லிம் ச‌மூக‌த்தில் இது ப‌ற்றி பேச‌ ஆர‌ம்பித்த‌துதான் முத‌ன்மை கார‌ண‌ம்.  மார்க்க‌த்தை ப‌ற்றி ப‌டித்த‌வ‌ர்க‌ள், குர் ஆன், ந‌பிக‌ளார் ஹ‌தீஸ் தெரிந்த‌வ‌ர்க‌ள் பேசும்போது குறுக்கே வ‌ந்து முட்டாள்த‌ன‌மாக‌ க‌ருத்துக்கூறுவோர் முஸ்லிம் ச‌மூக‌த்தில் ம‌ட்டுமே உண்டு.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் இது ப‌ற்றிய‌ க‌ருத்தாட‌ல்க‌ளை செய்வ‌த‌ற்கு குர் ஆன் ஹதீத் க‌ற்ற‌ உல‌மாக்க‌ள் நேர‌டியாக‌ வ‌ருவ‌துமில்லை. மாறாக‌ த‌த்த‌ம‌து ப‌ள்ளிக‌ளில் ஜ‌மாஅத்துக்க‌ளில் உள்ளோர் ம‌த்தியில் ம‌ட்டும் த‌லைக‌ளை க‌ழுவிக்கொண்டிருக்கிறார்க‌ள்.
அள்ளாஹ் குர் ஆனில் மிக‌த்தெளிவாக‌ கூறுகிறான்.

 “إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون” (الأنبياء 92) “

இது உங்க‌ளின் ஒரே ச‌மூக‌ம் என‌ கூறுகிறான். அது ம‌ட்டும‌ல்லாம‌ல் பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் விடுங்க‌ள் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் முழு முஸ்லிம் உம்ம‌த்துக்கும் சொல்லிவிட்டார்க‌ள். ஆனால் நீ இந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ன். அத‌னால் நீ க‌ண்ட‌ பிறையை ஏற்க‌ மாட்டேன் என் முஸ்லிம்க‌ள் பிரிவினை பேசுகிறார்க‌ள்.

கிர‌க‌ண‌ம் உல‌கில் எங்கு ஏற்ப‌ட்டாலும் இங்கும் தொழ‌ முடியுமா என‌ சில‌ர் கேட்கிறார்க‌ள். நோன்பு, ஹ‌ஜ், அர‌பா போன்ற‌ விட‌ய‌ங்க‌ளுக்கு நாம் ம‌க்கா பிறையை வ‌லியுறுத்தும்போது தொழுகையை கொண்டு வ‌ந்து எம்மிட‌ம் இக்கேள்வியை கேட்ப‌து பொருத்த‌ம‌ற்ற‌து. நாம் பிறையின் ப‌டியான‌ நாட்க‌ள் ப‌ற்றியே பேசுகின்றோமே த‌விர‌ ச‌ந்திர‌னை வைத்தான‌ நேர‌த்தை அல்ல‌ என்ப‌தை முத‌லில் இத்த‌கைய‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்.
அடுத்த‌து கிர‌க‌ண‌த்தொழுகை என்றால் என்ன‌ என்ப‌தை ந‌பிய‌வ‌ர்க‌ள் ஹ‌தீத் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ வேண்டும். கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டுவ‌தை க‌ண்டால் ம‌ட்டுமே அது நீங்கும் வ‌ரை நாம் தொழ‌ வேண்டும் என்றே ஏவ‌ப்ப‌ட்டுள்ளோம். கிர‌க‌ண‌ம் கூட‌ சில‌ வேளை முழு உல‌கிலும் தெரியும். சில‌ வேளை கிர‌க‌ண‌ம் ஏற்ப‌ட்டிருப்ப‌தாக‌ விஞ்ஞான‌ம் அறிவித்த‌ போதும் உல‌கில் உள்ள‌வ‌ர்க‌ளால் காண‌ முடியாது போகும். சில‌ வேளை ஒரு நாட்டில் உள்ள‌ அனைவ‌ராலும் காண‌ முடியாது நாட்டின் ஒரு ப‌குதியில் உள்ளோரால் ம‌ட்டுமே காண‌ முடியும். உதார‌ண‌மாக‌ க‌ல்முனையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு கிர‌க‌ண‌ம் காட்சிய‌ளிக்கும் என்றால் யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு காட்சிய‌ளிக்காத‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் உண்டு.
இந்த‌ நிலையில் க‌ல்முனை ம‌க்க‌ள் ம‌ட்டும்தான் கிர‌க‌ண‌த்தொழுகை தொழ‌ வேண்டுமே த‌விர‌ யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் மீது க‌ட‌மை அல்ல‌.

ஆக‌ கிர‌க‌ண‌த்தொழுகையை வைத்து ம‌க்கா பிறையை ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் கிண்ணியாவில் க‌ண்ட‌ பிறையை வைத்து யாழ்ப்பாண‌ முஸ்லிம்க‌ள் நோன்பு பிடிக்க‌ சொல்ல‌லாமா? அதாவ‌து கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டுவ‌தை காணும் ம‌க்க‌ள் மீது ம‌ட்டுமே அது க‌ட‌மை என்ப‌தால் பிறை காண‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக்கு ம‌ட்டுமே நோன்பு க‌ட‌மை என‌ சொல்வார்க‌ளா? இல்லை.
ஆக‌வே நோன்பு, ஹ‌ஜ் போன்ற‌வ‌ற்றுக்கு ம‌க்கா பிறை என்ப‌த‌ற்கும் கிர‌க‌ண‌த்தொழுகை என்ப‌த‌ற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை.

وفي آخر حياة النبي صلى الله عليه وسلم ومع اقتراب موسم الحج أمر أبا بكر أن يحج بالناس، فيكون أميراً عليهم، وقائداً لهم، وكان ذلك في السنة التاسعة من الهجرة النبوية على صاحبها أفضل الصلاة والسلام.
قال ابن إسحاق: ثم أقام رسول الله صلى الله عليه وسلم بقية شهر رمضان وشوالا وذا القعدة ثم بعث أبا بكر أميرا على الحج من سنة تسع ليقيم للمسلمين حجهم والناس من أهل الشرك على منازلهم من حجهم، فخرج أبو بكر رضي الله عنه ومن معه من المسلمين

ஆக‌வே உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமை வேண்டும். ஒரே நாளில் அனைவ‌ரும் நோன்பு ம‌ற்றும் பெருநாள் எடுக்கும் நிலை வ‌ர‌ வேண்டும். நாடுக‌ள், தேச‌ங்க‌ள் என்ப‌தெல்லாம் நாம் இட்ட‌ எல்லைக‌ளே த‌விர‌ இஸ்லாம் இட்ட‌ எல்லைக‌ள் அல்ல‌ என்ப‌தை  இந்த‌ பெருநாளில் புரிந்து செய‌ற்ப‌ட‌ இறைவ‌ன் ந‌ல்ல‌றிவை த‌ருவானாக‌.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர்.
முஸ்லிம் உல‌மா க‌ட்சி
ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌வுன்சில்


ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம்

மியான்மரில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே வெடித்துள்ள இனமோதலில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில் மியான்மரை விட்டு ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிருக்கு பயந்து கிட்டதட்ட 9000 ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் மியான்மரை விட்டு தப்பியோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டு மக்களை பாதுகாக்கும் படி ஆங் சான் சூ கீ தலைமயைிலான மியான்மர் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது

அஸ்வர் எனும் ஆளுமை

அஸ்வர் எனும் ஆளுமை முகம் எம் மனங்களை விட்டு அகலாது...
-அப்துல் காதர் மசூர் மௌலானா-
-எம்.வை.அமீர்,எஸ்.ஜனூஸ்-
முன்னாள் இராஜாங்க அமைச்சரும்இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள்காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன். என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு சிரேஷ்ட முஸ்லிம் தலைவரை எமது சமூகம் இழந்து நிற்கிறது. மர்ஹூம் அஸ்வர் இலங்கையின் இரு பெரும் தேசியக் கட்சிகளில் இடம் பிடித்து அங்கெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்ததை எவரும் எளிதில் மறந்து விட முடியாது.
அன்னார் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் எமது சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவைகள் என்றும் அழியாதவை. மர்ஹூம் அஸ்வர் அவர்களின் அரசியல் வெற்றிடம் யாராலும் நிரப்பப்பட முடியாது. முஸ்லிம்களுக்கு நாட்டில் பிரச்சினைகள் வந்த காலப் பகுதிகளில் நாடாளுமன்றத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் அவைகள் பற்றிபேசாமல் இருந்ததில்லை.
இலங்கை பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்த முஸ்லீம் தலைவர்களில் மிக அதிகமான தடவைகள் சமூகம் பற்றி மன்றில் உரையாற்றிய பெருமை மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களை சாரும். அதற்கு பாராளுமன்ற ஹன்சாட் எனும் ஆவணம் சான்று பகரும்.
தன்னுடைய முதுமையையும் கருத்தில் கொள்ளாது இறுதிக் காலங்களிலும் சமூகத்தின் விடிவுக்காய் சதா உழைத்த மர்ஹும் ஏ. எச்.எம். அஸ்வர் எனும் நாமம் என்றும் மக்கள் மனங்களில் இருந்து அகலாது என்பது திண்ணம்.
அன்னாரின் நற் கருமங்களை இதயத்தில் பொருந்தி மாட்சிமை மிகு மறுமை வாழ்வுக்காய் பிரார்த்திப்பதே நாம் அவருக்குச் செய்யும் உன்னதமான நன்றிக்கடனாகும். யா அல்லாஹ்எம்மை விட்டு பிரிந்திருக்கும் அஸ்வர் எனும் உனது உன்னத அடியானின் அனைத்து நற் கருமங்களையும் ஏற்று உன்னிடத்தில் மேலான அங்கீகாரத்தை வழங்குவாயாக. ஆமீன்...

வரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம்.


அமைச்சர் றிஷாட் அனுதாபம்
அமைச்சின் ஊடகப்பிரிவு.  
 
சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியல் வானிலே ஒரு தாரகையை இழந்து விட்டோம். இன, மத பிரதேச வாதங்களுக்கப்பால் நின்று மக்கள் பணி செய்த மாமனிதர் அஸ்வர்.
பாராளுமன்ற உறுப்பினராய், அமைச்சராய், ஆலோசகராய், ஒம்புட்ஸ்மனாய் இருந்து அரசியல் மற்றும் சமூகப் பணி செய்த பெரு மகன் அவர்.
ஐக்கிய தேசிய கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் பணியாற்றி மக்கள் மனதை வென்றவர். முஸ்லிம் சமூகத் தலைவர்களான டாக்டர்.டீ.பீ. ஜாயா, டாக்டர் எம்.சி. எம். கலீல், கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் ஆகியோருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1989 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்தில் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரானார். 1994 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு ஆகியவற்றிலும் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். முஸ்லிம் சமய கலாச்சார இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இவர் ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. வாழ்வோரை வாழ்த்தினார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு தென்னிலங்கைக்கு வந்த முஸ்லிம் அகதிகளுக்கு இவர் செய்த உதவிகள் அளவிட முடியாதவை.
மும்மொழி ஆற்றல் படைத்த மர்ஹ_ம் அஸ்வர் சிறந்த நாவன்மை மிக்கவர். நல்ல மொழிபெயர்ப்பாளர், அருமையான கிரிகெட் வர்ணனையாளர், சிறந்த எழுத்தாளர். கவிஞரும் கூட. இவ்வாறு பல்துறைகளிலும் பரிமாணத்தைக் கொண்ட மர்ஹூம் அஸ்வர் முஸ்லிம் சமூகத்தின் ஒரு வரலாற்று பொக்கிஷமாக விளங்கியவர்.
முன்னாள் சபா நாயகர் மர்ஹூம் பாக்கீர் மாக்காரின் அந்தரங்க செயலாளராக பணியாற்றியவர். அகில இலங்ககை முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகளின் சம்மேளனத்தை கட்டியெழுப்புவதில் பாக்கீர் மாக்காருடன் இணைந்து அரும்பணியாற்றியவர். மர்ஹ_ம் எஸ்.எல்.எம். சாபி மரைக்காரின் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் கல்வி பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் அளவிட முடியாதவை. முஸ்லிம் மீடியா போரத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்தவர்.
மர்ஹூம்
அஸ்வர் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியலை தொடர்ந்தார். அரசியல் மட்டுமன்றி இலக்கிய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். முதன் முதலில் அரபா மைதானத்தில் இருந்து சிங்கள மொழி மூலம் நேர் முக வர்ணனை செய்த பெருமை இவரையே சாரும். தினகரனின் மகரகம செய்தியாளராகவே இவரது எழுத்துப்பணி ஆரம்பமாகியது.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்;கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.      

හජ්ජි අවුරුදු වෙනුවෙන් මුස්ලිම් පාසල්වලට නිවාඩු( මිනුවන්ගොඩ - අයි.ඒ. කාදිර් ඛාන් )


   දිවයිනේ සියළුම රජයේ මුස්ලිම් පාසල්වල තෙවැනි වාරය, සැප්තැම්බර් මස 11වැනි සඳුදා ආරම්භ කිරීමට නියමිත බව, අධ්‍යාපන අමාත්‍යංශය පවසයි.

   සැප්තැම්බර් මස 02 වැනි දාට  (සෙනසුරාදා) යෙදෙන හජ්ජි අවුරුදු  උත්සවය හේතුවෙන්, එම නිවාඩු දිනය සංශෝධනයක් කර ඇති බව, අධ්‍යාපන අමාත්‍යංශයේ මුස්ලිම් පාසල් සංවර්ධන ශාඛාවේ අධ්‍යක්ෂ ඉසඩ්. තාජුදීන් මහතා පැවසීය.

   ඒ අනුව, සියළුම මුස්ලිම් පාසල්වල ට දෙවැනි පාසල් වාරයේ දෙවැනි අදියර සඳහා, 18 වැනි දා සිට ලබා දීමට තිබූ නිවාඩුව අවලංගු වන අතර, ඒ වෙනුවට මේ මස 31 වැනි දා සිට සැප්තැම්බර් මස 08 වැනි දා දක්වා නිවාඩු ලබා දීමට අමාත්‍යංශය තීරණය කර ඇති බවත් ඔහු කීවේය.

   දිවයිනේ සියළුම මුස්ලිම් පාසල්වල ට දෙවැනි පාසල් වාරයේ අදියර දෙකක් යටතේ නිවාඩු ලබාදීම සිදු වන අතර, එහි පළමු අදියර, පසුගිය මැයි මස 27 වැනි දා සිට ජූනි මස 27 වැනි දා දක්වා, රමලාන් (නෝන්බි) උපවාස මාසය වෙනුවෙන්, අධ්‍යාපන අමාත්‍යංශය විසින් නිවාඩු ලබා දී තිබුණි.

   එහෙත්, සෑම වසරේම මුස්ලිම් පාසල් පවත්වන දින ග‍ණන හා සිංහල - දමිළ පාසල් පවත්වන දින ගණන අතර කිසිම වෙනසක් නැති බවත්, එම මහතා වැඩි දුරටත් විශේෂයෙන් සඳහන් කළේය.


( අයි. ඒ. කාදිර් ඛාන් )

ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து த‌வ‌றா?

ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து த‌வ‌றா?

ஜ‌ன‌நாய‌க‌ம் இணைவைப்பு, குப்ர் என்றும் அத்த‌கைய‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து கூடாது என்று இன்றைய‌ வாலிப‌ர்க‌ள் ப‌ல‌ர் இஸ்லாம‌ ப‌ற்றி ச‌ரியாக‌ அறியாம‌ல் முக‌நூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நான் அவ்வ‌ப்போது வ‌ழ‌ங்கிய‌ ப‌திலை இங்கு தொகுத்து த‌ருகிறேன்.
ஜ‌ன‌நாய‌க‌ம் இஸ்லாத்துக்கு முர‌ண் என்றால் உல‌கால் ஏற்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ கோட்பாடு அதாவ‌து அனைத்து ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ளுக்கும் ஒன்று என்ற‌ ஜ‌ன‌நாய‌க‌ கோட்பாடு உண்டா?
இல்லை என்ப‌தே என‌து வாத‌ம். ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால் முன்ன‌ரும் நான் சொல்லியுள்ளேன் ச‌ன‌ம் நாய‌க‌மாக‌ இருப்ப‌து ம‌ட்டுமே ஜ‌ன‌ நாய‌க‌ம். அதாவ‌து ம‌க்க‌ளை ம‌க்க‌ள் ஆள்வ‌து. இதும‌ட்டும்தான் ஜ‌ன‌நாய‌க‌ம். ம‌ற்ற‌ப‌டி இதுதான் ஜ‌ன‌நாய‌க‌ம் என‌ அனைத்து ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ளும் ஏற்றுக்கொண்ட‌ எழுத்திலான‌ கோட்பாடு ஒன்றில்லை.
ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ள் என‌ சொல்லிக்கொள்ளும் நாடுக‌ள் ஒவ்வொன்றும் த‌த்த‌ம் இஷ்ட‌ம் போல் ச‌ட்ட‌ங்க‌ளை இய‌ற்றிக்கொண்டுள்ள‌த‌ன் மூல‌ம் இதுதான் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ கோட்பாடு இல்லை.
ஆக‌வே வெறும‌னே பெய‌ர‌ள‌வில் உள்ள‌, ய‌தார்த்த‌த்தில் இதுதான் என்ற‌ இல்லாத‌ கோட்பாடு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.
ம‌த‌ங்க‌ளை பொறுத்த‌வ‌ரை ஜ‌ன‌நாய‌க‌ம் இஸ்லாத்தின் கோட்பாட்டையே கொண்டுள்ள‌து. அது ல‌க்கும் தீனுக்கும் வ‌லிய‌ தீன் என்ப‌தாகும். அதாவ‌து அவ‌ர‌வ‌ர் மார்க்க‌ம் அவ‌ர‌வ‌ருக்கு என்ப‌தாகும். இத‌னை ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ள் ச‌ரியாக‌ க‌டைப்பிடிக்கின்றதா என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆனாலும் கோட்பாட்டில் உள்ள‌து. ஜ‌ன‌நாய‌க‌த்தில் உள்ள‌ அநேக‌ ச‌ட்ட‌ங்க‌ள் இஸ்லாத்தில் இருந்து பெற‌ப்ப‌ட்ட‌தாகும்.

ச‌ட்ட‌மிய‌ற்றும் அதிகார‌ம் இறைவ‌னுக்கு ம‌ட்டுமே என‌ சொல்வ‌து இறைவ‌ன் மீது இட்டுக்க‌ட்டாகும். உம‌ர் ர‌ழி ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தினார். இன்று பாஸ்போட், விசா, போக்குவ‌ர‌த்து ச‌ட்டம் எல்லாம் இறைவ‌ன் சொன்ன‌ ச‌ட்ட‌ம‌ல்ல‌. இந்த‌ முக‌நூலில் நுழைவ‌து என்றால் இன்ன‌ இன்ன‌ ச‌ட்ட‌ம் என‌ ஏற்றுக்கொண்ட‌ பின்தான் நுழைய முடியும். இப்ப‌டியெல்லாம் ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ஓகே சொல்லி முக‌நூலில் நுழைந்து விட்டு ம‌னித‌ன் ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌க்கூடாது என சில‌ வாலிப‌ர்க‌ள் உள‌றுவ‌து ம‌கா ம‌ட‌மை.
இறைவ‌ன் இய‌ற்றிய‌ ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ ம‌னித‌ன் ச‌ட்ட‌ம் இய‌ற்றுவ‌தே த‌வ‌று.

ந‌பி யூசுப் அவ‌ர்க‌ள் அர‌ச‌ரின் அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது ஒரு முஸ்லிமாக‌வும் இறைவ‌ன் புற‌த்திலிருந்து வ‌ழிகாட்ட‌ல் பெறுப‌வ‌ருமாக‌வே இருந்தார் என்றே க‌ருத‌ வேண்டியுள்ள‌து. கார‌ண‌ம் அவ‌ர் க‌ன‌வுக்கு ப‌லாப‌லன் சொல்லும் அறிவு த‌ன‌க்கு இறுப்ப‌தாக‌ த‌ன‌து சிறைத்தோழ‌ர்க‌ளிட‌ம் சொன்னாரே த‌விர த‌ன‌க்கு வ‌ஹி மூல‌ம் அத‌ன் பொருள் அறிய‌க்கிடைப்ப‌தாக‌ சொல்ல‌வில்லை.
ஆக‌வே அவ‌ர் ந‌பியாக‌ இல்லாத‌ நிலையில் ம‌ன்ன‌ரின் மாளிகையில் ந‌பி மூசா போன்று இருந்தார் என்ப‌தையே புரிந்து கொள்கிறோம்.
என‌வே எகிப்திய‌ ம‌ன்ன‌ர் முஸ்லிம் அல்லாத‌வ‌ராக‌வே இருப்ப‌த‌ற்கு சாத்திய‌முள்ள‌து.
அத்துட‌ன் ஒரு முஸ்லிம் காபிரான‌ ஆட்சிக்கு த‌ன‌க்கோ ச‌மூக‌த்துக்கோ பாத‌க‌ம் இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் ஒத்துழைக்க‌லாம் என்ப‌த‌ற்கு மூசா ந‌பியின் வாழ்க்கையும் மிக‌ப்பெரிய‌ ஆதார‌மாகும்.

யூசுப் ந‌பி, மூசா ந‌பி, இப்ராஹீம் ந‌பி ம‌ற்றும் முஹ‌ம்ம‌து ந‌பி உட்ப‌ட‌ அனைத்து ந‌பிமாரும் அகீதா என்ற‌ இஸ்லாமிய‌ அடிப்ப‌டைக்கொள்கையில் ஒத்த‌ க‌ருத்துள்ள‌வ‌ர்க‌ளாக‌வே இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ஷ‌ரீய‌த் எனும் சிவில் ம‌ற்றும் குற்ற‌விய‌ல் ச‌ட்ட‌ங்க‌ளில்தான் சில‌ வேற்றுமைக‌ள் இருந்த‌ன‌.
ஒரு காபிரான‌ ஆட்சியில் முஸ்லிம் ப‌ங்கு வ‌கிக்க‌லாமா என்ப‌து ஷ‌ரீயா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஒன்று அல்ல‌. அது கொள்கை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஒன்று. அதாவ‌து ஆட்சியுரிமை அள்ளாஹ்வுக்கு ம‌ட்டுமே உரிய‌து என்ப‌து கொள்கை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து.

ஒரு முஸ்லிம் இறைவ‌னின் ஆட்சி அதிகார‌த்தை பூமியில் கொண்டு வ‌ர‌ ப‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன். ஆனால் அக்கொள்கைக்காக‌ அவ‌ன் எவ்வாறு ப‌ய‌ணிக்க‌ வேண்டும் என்ப‌துதான் ஷ‌ரீய‌த் காட்டும் வ‌ழிமுறை.
ஒரு முஸ்லிம் காபிரின் ஆட்சியில் ஆட்சியாள‌ருட‌ன் இருக்க‌லாம் என்ப‌து கொள்கை சார்ந்த‌து. மூசா ந‌பிய‌வ‌ர்க‌ளை பிர் அவ்னின் சாப்பாட்டை சாப்பிட்டு அவ‌ரை அங்கு இறைவ‌ன் வாழ‌வைத்த‌த‌ன் மூல‌ம் ஆட்சி அதிகார‌ம் கிடைக்கும் வரை அவ்வாறு வாழ‌லாம் என்ப‌தை இறைவ‌ன் ந‌ம‌க்கு க‌ற்றுத்த‌ருகிறான்.

 அதே போல் மூசா ந‌பியும் பின்ன‌ர் ஆட்சி அதிகார‌த்தை கையிலெடுத்து இறையாட்சியை நிலை நாட்டுகிறார்.
அதே போல் யூசுப் ந‌பியும் குப்ர் ஆட்சியில் ப‌ங்கெடுத்து தான் ந‌ல்ல‌வ‌ன் என்றும் அறிவும் ஆற்ற‌லுமிக்க‌வ‌ர் என்ப‌தையும் நிரூபிக்கிறார். அவ‌ர் தேசிய‌ ப‌ட்டியல் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் போல் ம‌ன்ன‌ரின் சொந்த‌ விருப்ப‌த்தின் பேரில் அமைச்ச‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌டுகிறார். பின்ன‌ர் அவ‌ருக்கு இறைவ‌ன் ஆட்சிய‌திகார‌த்தை கொடுக்கிறான்.

இதே போல் முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளும் காபிர்க‌ளின் க‌ண்காணிப்பில் வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகிறார்க‌ள். அப்துல் முத்த‌லிப், அபூ தாலிப் போன்றோர் முஸ்லிம்க‌ளான‌ அதிகார‌மிக்க‌வ‌ர்க‌ள் அல்ல‌.  ந‌பித்துவ‌ம் கிடைக்க‌ப்பெற்ற‌ பிற‌கும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ம‌க்கத்து குப்ர் ஆட்சியின் கீழ்தான் மார்க்க‌ போத‌னைக‌ளை முன்னெடுத்தார்க‌ள். ம‌தீனாவுக்கு வ‌ந்த‌பின்ன‌ரே அவ‌ர்க‌ள் ஆட்சியாள‌ராக‌ மாறின‌ர். இத்த‌னைக்கும் ந‌பியுள்ளாஹ் ம‌க்காவின் குப்ர் ஆட்சியில் வாழும் போது அந்த‌ ஆட்சிக்கெதிராக‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் ஆயுத‌ம் தூக்கி போராட‌வில்லை. மாறாக‌ இன்றைய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் போல் த‌ம‌து க‌ருத்துச்சுத‌ந்திர‌த்தை முழுமையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தினார்க‌ள். அத‌ற்கும் இட‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டும் சூழ்நிலை வ‌ந்த‌ போதும் அடைந்தால் ஆட்சி இல்லையேல் ம‌ர‌ண‌ம் என‌ அவ‌ர்க‌ள் ச‌ண்டைக்கு கிள‌ம்ப‌வில்லை. ச‌த்த‌மே இல்லாம‌ல் குப்ர் ஆட்சியை விட்டு வெளியேறினார்க‌ள். இவைதான் முஹ‌ம்ம‌து ந‌பியின் உஸ்வ‌துன் ஹ‌ச‌னா என்ற‌ அழ‌கிய‌ வ‌ழிமுறைக‌ளில் உள்ள‌வை.

ந‌பி யூசுப் அலைஹிஸ்ஸ‌லாம் முஸ்லிம் அல்லாத‌ ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌து என்ப‌து ந‌ம‌க்கு மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாகும். அதாவ‌து காபிரின் ஆட்சியிலும் நாம் ப‌த‌வி வ‌கிக்க‌லாம் என்ப‌தை காட்டுகிற‌து.
இத‌னை ம‌றுக்கும் சில‌ர் முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் இறுதி ந‌பி என்ப‌தால் அன்னார் த‌ந்த‌ ச‌ட்ட‌த்தையே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டும் என்ப‌தால் யூசுப் ந‌பியின் இந்த‌ வ‌ழி காட்ட‌லை பின்ப‌ற்ற‌க்கூடாது என்கின்ற‌ன‌ர். இது ஏற்புடைய‌ க‌ருத்து அல்ல‌.

ஏனென்றால் ந‌பிமார்க‌ள் அனைவ‌ரும் ஒரே கொள்கையின் அடிப்ப‌டையில்தான் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர். கால‌ சூழ‌லுக்கேற்ப‌ சில‌ ச‌ட்ட‌ங்க‌ள் ம‌ட்டும் மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவ்வாறு ஏதாவ‌து ச‌ட்ட‌ம் முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளால் மாற்ற‌ப்ப‌ட்டிருந்தால் அத‌னை நாம் பின்ப‌ற்ற‌ வேண்டும், முன்னுள்ள‌ ந‌பிமாரை அதே விட‌ய‌த்தில் பின் ப‌ற்ற‌ முடியாது. ஒரு முஸ்லிம் அல்லாத‌ அர‌சில் ப‌ங்காளியாக‌ ஒரு முஸ்லிம் இருப்ப‌து கூடாது என‌ நேர‌டியாக‌ த‌டை போடும் குர் ஆன் வ‌ச‌ன‌மோ, ஹ‌தீதோ இல்லாத‌ நிலையில் முன்னுள்ள‌ ந‌பியான‌ யூசுப் ந‌பியை ஆதார‌ம் காட்டுவ‌தில் த‌வ‌றில்லை.
முஹ‌ம்ம‌து ந‌பி صلى கூட‌ ப‌ல‌ த‌ட‌வைக‌ள் انا في ملة ابراهيم  நான் இப்ராஹீம் ந‌பியின் வ‌ழியில் இருக்கிறேன் என‌ சொல்லியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ மார்க்க‌ம் என்ப‌து அன்னாருக்கு ப‌ல‌ த‌லைமுறைக‌ளுக்க‌ப்பால் வாழ்ந்த‌ ந‌பி இப்ராகீமின் மார்க்க‌ வ‌ழி காட்ட‌ல் என்ப‌தை புரிகிறோம். ந‌பிமார்க‌ள் அனைவ‌ருமே ஒரே வ‌ழி முறையைத்தான் - சில‌ வித்தியாச‌ங்க‌ளுட‌ன்- போதித்தார்க‌ள்.

ஆக‌வே ந‌பி யூசுப்பின் வ‌ழி காட்ட‌ல் முஹ‌ம்ம‌து ந‌பியின் நேர‌டி க‌ருத்துக்கு மாற்ற‌மாக‌ இருப்பின் ம‌ட்டுமே அத‌னை நாம் பின்ப‌ற்ற‌ முடியாது.
அந்த‌ வ‌கையில் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத‌ ஆட்சியில் ப‌ங்கு வ‌கிக்க‌லாம்.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி
Sri Lanka Ulama council

முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது?

ஒருமாதத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடிய முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது?

கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்கள் ஒரு கூட்டத்திலே உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார். தான் செய்த சேவைகளையும், தான் கொடுத்த தொழில் வாய்ப்புகளையும், தான் அமைத்த வீதிகளையும் சொல்லிக்காட்டி பெருமைபேசுகின்றார். இதைப்போல் யாராலும் செய்யமுடியுமா என்று யாரையோ ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு சவால் விட்டு பேசுகின்றார்.

அதுமட்டுமல்ல நான் தூங்காமல் இரவு பகல் என்றும் பாராமல் சேவை செய்கிறேன், எனது வாகனம் ஒரு மாதத்துக்கு பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. அதற்கப்பால் எலிக்கெப்டரிலும் ஓடுகின்றேன். யாருக்காக ஓடுகின்றேன் மக்களுக்காக ஓடுகின்றேன் என்கிறார்.

அதேநேரம் என்னைத் தொடர்வு கொள்பவர்கள் இரவு பணிரெண்டு மணிக்குபிறகும், சுபஹுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் எத்தனைபேர் என்னைத் தொடர்வு கொண்டு பேசுகின்றார்கள் தெறியுமா என்று வேறு சவால் விட்டு பேசுகின்றார். இந்த பேச்சைக் கேட்க்கும் போது அம்பாரை மாவட்ட மக்களுக்கு புல்லரிக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் நீங்கள் முதலமைச்சராக இருப்பதற்கு எங்களூர் மக்களும் காரணமல்லவா?

முதலமைச்சர் அவர்களே...! இந்த சேவைகளில் எத்தனை சேவைகளை அம்பாரை மாவட்டத்துக்கு குறிப்பாக கல்முனைக்கு செய்துள்ளீர்கள் என்று கூறமுடியுமா?

எத்தனை பேருக்கு தொழில்வாய்ப்புக்களை அம்பாரை மாவட்டத்துக்கு அல்லது கல்முனைக்கு வழங்கியுள்ளீர்கள் என்று கூறமுடியுமா?

உங்கள் வாகனம் மாதத்துக்கு பத்தாயிரம் கிலோமீட்டர் ஓடுவதாக சொல்கின்றீர்கள், அப்படியென்றால் கல்முனை பக்கம் எத்தனை தரம் வந்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா?

நீங்கள் ஆட்சிக்கட்டிலில் இருப்பதற்கு முக்கியமாக வாக்களித்தவர்கள் இந்த பகுதி மக்கள் அல்லவா? உங்கள் ஊருக்கும் சேவை செய்யவேண்டும் அதில் தப்பில்லை, இருந்தாலும் எங்களூருக்கு உங்களால் செய்யப்பட்ட சேவைகளை சொல்லமுடியுமா?

கல்முனைக்கு கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருந்து சேவை செய்த இடம் என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள், ஆனால் இன்று அந்த மக்கள் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையாவது அறிந்துள்ளீர்களா?

கல்முனை மக்கள் வாக்களித்து கண்டிக்கு சேவை செய்ய கெபினட் அமைச்சரை அனுப்பியுள்ளார்கள்.
அதே நேரம் கிழக்கு மாகாண முதலமைச்சரான உங்களையும் மற்ற ஊர்களுக்கு சேவை செய்ய அனுப்பியுள்ளார்கள். ஆனால் எங்களூர் மக்கள் மட்டும் வாயிலே விரலை வைத்து சூப்பிக்கொண்டுள்ளார்கள்.

ஆனால் நீங்களோ... நீங்கள் செய்த சேவைகளை பற்றி மேடைகளிலே முழங்குகின்றீர்கள், அதனைப் பார்த்து நாங்கள் அழுவதா சிரிப்பதா அல்லது எங்கள் தலைவிதி இதுதான் என்று போர்த்திக்கு கொண்டு படுப்பதா என்று தெறியாமல் நிற்கிறோம்.

இதற்குள் நான் அல்லாஹுவுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறிக்கொள்கின்றீர்கள், உங்களை அல்லாஹ் கியாமத் நாளில் விசாரிக்கும் போது நாங்களும் அங்கே நிற்போம் முதலமைச்சரே..! பார்த்து பேசுங்கள் எங்களுக்கும் வயிற்றெரிச்சல் என்ற ஒன்று உள்ளது என்பதை மறந்து பேசாதீர்கள், மறுமை நாள் உண்மை என்பதை நீங்களும் உங்கள் தலைவரும் மறந்து விடாதீர்கள். சதிகாரர்களுக் கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.( அல்லாஹ் போதுமானவன்.)

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..

பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை, மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டழுத ராம்

பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை, மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டழுத ராம்

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்குக்கு 10  ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 


தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில், ராம் ரஹீம்சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, ராம் ரஹீம்சிங் ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பையடுத்து அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. மேலும், ராம் ரஹீமுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஜக்தீப் சிங், சிறையில் வைத்தே அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, நீதிபதி ஜக்தீப் சிங்கை ஹெலிகாப்டரில் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஹரியானா மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தநிலையில், ஹெலிகாப்டர் மூலம் சோனாரியா சிறைக்கு வந்த நீதிபதி ஜக்தீப் சிங், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்பாக, இருதரப்பினரும் இறுதிவாதத்தை முன்வைக்க தலா 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தார். ராம் ரஹீம் சிங்குக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ராம் ரஹீம் தரப்பில், அவர் மக்களின் நன்மைக்காக உழைத்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு நீதிபதி தண்டனை விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜக்தீப் சிங் உத்தரவிட்டார். இறுதி வாதத்தின்போது நீதிபதி முன்பாக சாமியார் ராம்ரஹீம் சிங், தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுதார். 
அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் தானும் ஏமாந்து அப்பாவி ம‌லைய‌க‌ த‌மிழ் ம‌க்க‌ளையும் ஏமாற்றியுள்ளார்

நுவ‌ரேலியாவில் புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளை உருவாக்கும் விட‌ய‌த்தில் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளைப்போல் அவ‌ரும் ஏமாந்துள்ளார் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளை உருவாக்க‌ முடியாது என‌ பிர‌த‌ம‌ர் அமைச்ச‌ர‌வை கூட்ட‌த்தின் போது சொன்ன‌ போது கூட்ட‌த்திலிருந்து ம‌னோக‌ணேச‌ன் வெளியேறிய‌தும் பிர‌த‌ம‌ர், அமைச்ச‌ர் திகாம்ப‌ர‌த்தை அழைத்து பிர‌தேச‌ ச‌பை ம‌ஹ‌ஜ‌ரை அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம்  கொடுக்க‌ சொன்ன‌தாக‌வும் இது பெரிய‌ வெற்றி என‌ ம‌னோ க‌ணேச‌ன் ப‌திவிட்டிருப்ப‌து சிரிப்பை த‌ருகிற‌து.

உண்மையில் ம‌னோ க‌ணேச‌ன் பிர‌த‌ம‌ருட‌ன் முர‌ண்ப‌ட்ட‌தால் மேற்ப‌டி ம‌க‌ஜ‌ரை த‌ன்னிட‌ம் த‌ரும்ப‌டி பிர‌த‌ம‌ர் ர‌ணில் சொல்லியிருக்க‌ வேண்டும். அத‌னை தானே பொறுப்பேற்று அமைச்ச‌ர் ம‌னோ முன்பாக‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் கொடுத்திருந்தால் அதில் உண்மையும் அமைச்ச‌ர் ம‌னோவுக்கான‌ ம‌ரியாதையும் இருந்திருக்கும். ஆனால் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பை மக‌ஜ‌ர் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் சாதாரண‌ ம‌க்க‌ளாலும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து போல்  இதுவும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஒரு அமைச்ச‌ர் இன்னொரு அமைச்ச‌ரிட‌ம் ம‌க‌ஜ‌ர் கொடுப்ப‌து வெற்றியா?  ஒரு எதிர்க்க‌ட்சி எம். பி அமைச்ச‌ரிட‌ம் ம‌க‌ஜ‌ர் கொடுத்தால் கூட‌ அது சாதார‌ண‌ நிக‌ழ்வுதான்.

அத்துட‌ன் புதிய‌ தேர்த‌ல் திருத்த‌ ச‌ட்ட‌ப்ப‌டி உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ள் ந‌டைபெறும்வ‌ரை புதிய‌ ச‌பைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட‌ மாட்டாது என‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா திட்ட‌மாக‌ தெரிவித்துள்ளார். இது அமைச்ச‌ர‌வையில் உள்ள‌ அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌னுக்கு தெரியாதா அல்ல‌து தெரிந்து கொண்டே ந‌ம‌து ஹ‌க்கீம் போன்று இவ‌ரும் ஏமாந்தாரா? அல்ல‌து தெரிந்து கொண்டே த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றுகிறாரா?

ஆக‌ மொத்த‌த்தில் இது விட‌ய‌த்தில் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் தானும் ஏமாந்து அப்பாவி ம‌லைய‌க‌ த‌மிழ் ம‌க்க‌ளையும் ஏமாற்றியுள்ளார் என்ப‌தே உண்மை.
- உல‌மா க‌ட்சி

பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அழைப்பு

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில்  ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு  அழைப்பு விடுப்­ப­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மாவட்ட ரீதி­யி­லான பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள கட்சி காரி­யா­ல­யத்தில் நடை ­பெற்­றது. அச்­சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி எமது ஏனைய சகோ­தரக் கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு தயா­ராக உள்­ளது. எனவே ஐக்­கிய தேசியக் கட்சி தவிர்ந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட சகல கட்­சி­களும் எம்­முடன் இணைந்து கூட்­ட­ணி­யாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு அழைப்பு விடுக்­கிறேன்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் எமக்­கு­மி­டையில் எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை. ஆகவே அக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு தயா­ராக உள்ளோம். அது தவிர ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லுள்ள பலர் எம்­முடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்­க­ளுடன் தற்­போ­தைக்கு பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

அர­சாங்கம் தேர்தல் தொடர்பில் பாரா­ளு­மன்றில் முன்­வைத்­துள்ள சட்­ட­மூலத்­ தினால், இது­வரை காலமும் அரச சேவை யில் உள்­ள­வர்கள் அனு­ப­வித்த அர­சியல் உரித்தை இல்­லாது செய்யும் சூழ்ச்சி உள்­ளது. 1956 ஆம் ஆண்டு காலத்தில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­காகப் பெற்றுக் கொடுக்­கப்­பட்ட குறித்த அர­சியல் உரிமை இல்­லாது செய்­யப்­ப­டு­வ­தை­யிட்டு கவ­லை­ய­டைய வேண்­டி­யுள்­ளது.  

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் கால தாம­தத்­திற்கு எல்லை நிர்­ண­யத்தில் ஏற்­பட்ட சிக்­கலே காரணம் என அர­சாங்கம் தெரி­வித்து வந்­தது. எனினும் அது சம்­பந்­த­மாக தொடர்ந்து என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும் காலம் தாமதித்து சரிசெய்யப்பட்டதாகத் தெரிவித்து வெளி யிடப்பட்ட எல்லை நிர்ணயமும் எமது ஆட்சியில் தயார்செய்யப்பட்ட எல்லை நிர்ணயமாகவே அமைந்துள்ளது என்றார்.

உள்ளூராட்சி தேர்த‌லுக்கு முன் சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பை இல்லை.எதிர் வ‌ரும் உள்ளூராட்சி தேர்த‌லுக்கு முன்பாக‌ புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள் உருவாக்க‌ப்ப‌டுமா என‌ அல்ஜ‌ஸீறா ல‌ங்கா இணைய‌த்த‌ள‌ ஆசிரிய‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா அவ‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ப்ப‌ட்ட‌து.
உள்ளூராட்சி மாகாண‌ ச‌பை அமைச்சில் ந‌டைபெற்ற‌ ஊட‌க‌ மாநாட்டின் போதே இவ்வாறு கேட்க‌ப்ப‌ட்ட‌து.
இத‌ற்கு ப‌தில‌ளித்த‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா அவ‌ர்க‌ள் த‌ற்போது முன் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உள்ளூராட்சி திருத்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கு இட‌மில்லை என‌ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌ட‌த்தாம‌ல் தாம‌திக்கும் சூழ்ச்சி


உட‌ன‌டியாக‌ உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌டாத்த‌ வேண்டும் என‌ சொல்லும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌ புதிய‌ வ‌ட்டார‌ முறைப்ப‌டியே தேர்த‌லை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ப‌திலும் பிடியாக‌ இருப்ப‌த‌ன் மூல‌ம் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌ட‌த்தாம‌ல் தாம‌திக்கும் சூழ்ச்சியாக‌வே தெரிகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,
உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌டாத்த‌ வேண்டும் என‌ அர்சுக்கு அக்க‌றை இருந்திருந்தால் அத‌னை எப்போதோ ப‌ழைய‌ முறைப்ப‌டி ந‌டாத்தியிருக்க‌ முடியும். ஆனால் அத‌னை இழுத்த‌டிப்ப‌த‌ற்காக‌ வ‌ட்டார‌ எல்லை பிர‌ச்சினை, ஆணைக்குழு ஒத்துவ‌ராமை என்று ப‌ல‌ த‌ந்திர‌ங்க‌ளை சொல்லி தேர்த‌லை இழுத்த‌டித்த‌மை ம‌க்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌ல் ம‌ட்டும‌ல்ல‌ ந‌ல்லாட்சி த‌த்துவ‌த்துக்கும் மாற்ற‌மாகும்.

இவ்வாறு தேர்த‌ல்க‌ளை இழுத்த‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ப்போது சிறுபான்மை க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளான‌ ம‌னோ க‌ணேச‌ன், ர‌வூப் ஹ‌க்கீம் போன்றோரும் அர‌சுக்கு துணை போயின‌ர். புதிய‌ தேர்த‌ல் முறை சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு அநீதி என்று சொல்லிக்கொண்டே அந்த‌ முறையை முன்னெடுக்கும் ஐ தே க‌ அர‌சுக்கும் முண்டு கொடுத்த‌ன‌ர்.  இத்த‌கைய‌ முறைக்கு அனும‌திக்க‌ மாட்டோம் என‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளில் வீறாப்பு பேசிவிட்டு அர‌சாங்க‌த்தின் முன்பு பெட்டிப்பாம்பாய் அட‌ங்கிப்போனார்க‌ள்.

ம‌ஹிந்த‌ அர‌சு மோச‌மாக‌ இருந்த‌து என‌ சொல்லிக்கொண்டே ம‌ஹிந்த‌ அர‌சால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ புதிய‌ தேர்த‌ல் முறையை ஐ தே க‌ அர‌சு தூக்கிப்பிடித்துக்கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் ம‌ஹிந்த‌ அர‌சு ச‌ரியாக‌த்தான் இவ்ற்றை செய்துள்ள‌து என‌ சொல்ல‌ வ‌ருகின்ற‌தா?

உண்மையில் உள்ளூராட்சி தேர்த‌லை ந‌டாத்த‌ வேண்டும் என‌ அர‌சுக்கு அக்க‌றை இருந்தால் புதிய‌ முறையை ர‌த்து செய்துவிட்டு ப‌ழைய‌ முறையில் தேர்த‌லை மிக‌ இல‌குவாக‌ ந‌டாத்த‌ முடியும். ஆனால் தேர்த‌ல் ந‌ட‌த்தினால் ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி நாட‌ளாவிய‌ ரீதியில் பாரிய‌ தோல்வியை அடையும் என்ற‌ உண்மையின் கார‌ண‌மாக‌வே அர‌சாங்க‌ம் போலித்த‌ன‌மான‌ கார‌ண‌ங்க‌ளைச்சொல்லி இழுத்த‌டிக்கிற‌து. அப்ப‌டியொரு அச்ச‌ம் இல்லை என்றால் பழைய‌ விகிதாசார‌ அடிப‌டையில் தேர்த‌லை உட‌ன‌டியாக‌ ந‌டாத்த‌ த‌யார் என‌ பிர‌த‌ம‌ர் அறிவிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்க!


+++++++++++++++++++++++++++++++++++++++++++

கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து நெடுஞ்சாலை 
அமைக்குமாறும் சபையில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 

(ஆர்.ஹஸன்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நெடுஞ்சாலை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது போன்று கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து கல்முனை வரை அல்லது பொத்துவில் வரை நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை மற்றும் விளையாட்டு சட்டத்தின் கீழ் ஓழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
“யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோசமான நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பரிபூரணப்படுத்தப்படவில்லை. 
யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பின்தங்கியுள்ளோம். நெடுஞ்சாலைகள் அமைப்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளத. 
இவ்வாறு வீதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் போது மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாள்களை அதிகம் கொண்டுவர முடியும்.  
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் மோசமான நிலையில் பின்தங்கியுள்ளது. முதலீட்டாளர்களை அங்கு அழைத்து செல்ல முன்னர் நெடுஞ்சாலைகள் இருக்கின்றனவா? என்று கேட்கின்றனர். 
பெருந்தெருக்கள் இல்லாமையால் முதலீட்டாளர்களை கொண்டு செல்ல முடியாதுள்ளது. நெடுஞ்சாலைகளை கல்முனைவரை அல்லது பொத்துவில் வரை நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். ஹபரணை தொடக்கம் மட்டக்களப்பு வரையில் உள்ள பிரதான வீதி நான்கு தடங்களைக் கொண்ட வீதியாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
இதனூடாக அம்பாறை மாவட்டத்தில் தொழில்துறைகளை அதிகரிக்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு மைதானங்களை புனரமைக்க வேண்டும்” - என்றார்.

ஜனவரி முதல் ஜூலை வரை ரூபா 46.7 மில்லியன் அபராதம் அறவீடு( மினுவாங்கொடை நிருபர் )

   கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப் பகுதியில், கம்பஹா மற்றும் கொழும்பு  மாவட்டங்களில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நியதிகளை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 46.7 மில்லியன் ரூபாவை அபராதமாக அறவிட முடிந்ததாக, அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். 
   கம்பஹாவில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், 1.5 கோடி ரூபா பெறுமதியான காலாவதியான 50 ஆயிரம் கிலோ வெள்ளைப்பூடுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
   கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 17,500 கிலோ கிறாம் வெள்ளைப்பச்சை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோ சம்பா அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு,  அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம்  அபராதம்  அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
   இது தவிர, கெந்தகம் கலக்கப்பட்ட 2.5 மில்லியன் பெறுமதியான 4,625 கிலோ கிராம் கொத்தமல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   இதுதவிர, கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள், கட்டுப்பாட்டு விலைகளை மீறி பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களைப் புரிந்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு, அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
   கடந்த 2015 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளோடு ஒப்பிடும்போது, இந்த வருடத்திலேயே, நியதிகளை மீறி செயற்பட்ட ஆகக்கூடுதலான வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது 33 வீதமாக இம்முறை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா

பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் 
பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்”

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி 


(ஆர்.ஹஸன்)

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசியல் ரீதியாக உளத்தூய்மையுடன் போராடியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது கோரிக்கையை ஏற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
அளுத்கம கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க கோரும் அமைச்சரவைப் பத்திரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் தயார் செய்யப்பட்டு அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோரிக்கை அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014.06.15-2014.06.16 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அவ்வப்போது பேசப்பட்டாலும் தெளிவான முயற்சிகள் எதுவும் முஸ்லிம் தரப்பால் செய்யப்படவில்லை. 
இந்நிலையில், ஆயிரம் நாட்களைக் கடந்தும் கலவரத்தில் மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கோ, காயமடைந்தவர்களுக்கோ இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. பின்னர், இவ்விடயம் சம்பந்தமாக நான் அதிக கவனம் செலுத்தி தகவல்களைத் திரட்டி நாடாளுமன்றத்தில் காராசாரமான உரையொன்றை கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆற்றியிருந்தேன். 
இதன்போது, ஆர்.ஆர்.டி. அமைப்பின் அறிக்கையொன்றை கோடிட்டுக்காட்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாமை குறித்தும் எனது கண்டனத்தை வெளியிட்டிருந்தேன். 
அளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றக்கொடுக்கவும், அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் உயரிய சபையில் நான் ஆற்றிய காரசாரமான உரை அரச மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியிருந்தார். அப்போது, இழப்பீடு சம்பந்தமான அறிக்கையொன்றை தயார் செய்து அதற்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார். 
அதன் பின்னர் ‘REPPIA’ பணிப்பாளர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசினால் அமைச்சரவைப் பத்திரம் ஜுலை 24ஆம் திகதி தயார் செய்யப்பட்டு, அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இதனை சிலர் நாங்கள் தான் முன்னெடுத்தோம் என்ற தோரணையில் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இம்மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க நான் எந்தளவு பங்களிப்பு செய்துள்ளேன் என்பது சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியும். குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு நான் மும்மொழிந்திருந்த மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் என்ற தொகை அதிகமானது என்றும் இந்த சம்பவத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் மேலும் பல சம்பவங்களுக்கும் இழப்பீடுகள் வழங்க வேண்டி வரும் என்ற வகையில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ராஜித சேனரத்ன, தயாசிறி ஜயசேகர, அநுர பிரயதர்ஷன யாப்பா உள்ளிட்ட சிலர் ஆதரவாக பேசியுள்ளனர். 
இதேவேளை, அளுத்கம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தகவல்கள் திரட்டப்பட்டு பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை சீர்குழைத்து, வலுவிழக்கச் செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. 
அதில், “அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக்கெர்டுப்பதற்கு முஸ்லிம் எம்.பிக்களால் முடியாது போயுள்ளதாகவும் அதற்காக முயற்சிகளை அவர்கள் செய்வதில்லை” என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. – என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம்.


அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

ஊடகப்பிரிவு

100நாள் நல்லாட்சியில்  நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்றிரவு (22.08.2017) அமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் வழியாக இடம்பெற்ற மக்கள் குரல் நேரடி கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகம்  பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகாரவுடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். தம்புள்ளை பள்ளிக்கான காணியையும், பாதிக்கப்பட்ட 16குடும்பங்களுக்கான காணியையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் காணிக்கு 20பேர்ச் தருவதாக தெரிவிக்கப்பட்ட போதும, பள்ளி நிர்வாகம் அதன் அளவு பிரமாணத்தை அதிகரித்து தரவேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்ததும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபா 20லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 5லட்சமும் வழங்குவதற்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்;பித்திருந்தார். 
பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரப்பட்ட தொகை அதிகம் எனவும், அவ்வாறு வழங்கினால் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ஏனையோர்களுக்கும் இவ்வாறான தொகையை வழங்கவேண்டி நேரிடும் எனவும் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர். எனினும், இந்த விவகாரத்தை மனிதாபிமானரீதியிலும் விஷேடமாகவும் கருத்திற்கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பல அமைச்சர்கள் விளக்கினர். 

அமைச்சர்களான ராஜித, மங்கள, றவூப் ஹக்கீம் கபீர் காசிம், தயாசிறீஜயசேகர, அனுரபிரியதர்சனயாப்பா, ஹலீம், நான் உட்பட இந்த பத்திரத்தை ஏகமனதாக அங்கீகரிக்கவேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினோம். மிகவிரைவில்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க வழி பிறக்குமென  அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச சபை கிடைக்காது'ஜனாதிபதியின் இல்லத்தில் 21-08-2017 இரவு நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ரணில் கூறிய முக்கிய விடயம்,

"உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்று பிரதமர் ரணில் கூறினார். நாடு முழுக்க புதிய சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது"
 என அவர் கூறினார்.
இத‌ன் மூல‌ம் இப்போதைக்கு சாய்ந்த‌ம‌ருது ம‌ற்றும் நுவ‌ரேலியா மாவ‌ட்ட‌த்தின் சில‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ மாட்டாது.

பிரச்சினைக்கு தீர்வு சாய்ந்த மருதைப் பிரிப்பதல்ல

சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும் இல்லை .

தற்போது மாநகர சபை என்ற பெரும் அந்தஸ்த்தில் அடங்கி உள்ள சாய்ந்தமருது தனியாகப் பிரிக்கப் படுமானால் அதன் விளைவாக   எதிர் கால பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய எதிர் கால தூர நோக்குள்ள ஆரோக்கியமான சிந்தனை  அல்ல என்றே கூற வேண்டும் 

நான் இங்கு கூறிக் கொள்வது மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?" என்பதே 

தற்போது மாநகர சபை அந்தஸ்தில் உள்ள சாய்ந்தமருத்துக்கு என்ன வகையான பிரச்சினைகள்  என முதலில்  அலசப் படவேண்டும் ,அலசப் பட்டு அவைகளை தீர்ப்பதுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றி குறு கிய சிந்தனையோடு பிரித்தெடுப்பது புத்திசாலித் தனமன்று. தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வழி தேட வேண்டுமே அன்றி பிரித்தாழ வேண்டும் என்ற கோஷம் அடியோடு அகற்றப் படவேண்டும் 

சாய்ந்தமருதை பிரித்தெடுப்பதன் மூலம் கல்முனைக்குடிமருதமுனை போன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் வலு இழந்து அனாதைகளாகப்படும் அத்துடன் கல்முனை என்று புகழ் பெற்ற நகரம் முஸ்லிம்களின் கையை விட்டும் சோரம் போகும்.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டு மென்பதில் உங்களை விட கல்முனைத் தமிழர்கள் வேகமாக இருக்கிறார்கள், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட்டால் அதனை காரணங்காட்டி கடற்கரைப் பள்ளி றோட்டுக்கு மேலுள்ள கல்முனை நகரம் உள்ளிட்ட பிரதேசங்கனை உள்ளடக்கி அவர்களுக்கு தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் மட்டுமல்ல கல்முனை எனும் பெயரும் கூட அவர்களுக்கு மட்டும்தான சொந்தம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சாய்ந்தமருதும் பிரிக்கப்பட்டால் கல்முனை முஸ்லிம்களின் முழுப் பொருளாதாரமும் உள்ளடங்கிய கல்முனை செயலகம் மற்றும் பிரதேச சபையை அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம் என தமிழர்கள் நம்புகிறார்கள்

ஆகவே பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை பேசாமல் தீர்மானிப்பது தவறு, அது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதை நாம் உணர வேண்டும்.

 சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்க மறுக்கும்। சித்தம் தெளிந்தவனின் அறிவு சிந்தித்துக் கொண்டே இருக்கும். ஆகவே  நீங்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து அருமையான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே எனது அவா 

எனவே பிரச்சினைக்கு தீர்வு காண சாய்ந்த மருதைப்  பிரிப்பதல்ல விடை அதை எப்படி தீர்த்து வைக்க முடியும் என்று சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் சாய்ந்தமருது நகரசபையோ அல்லது  பிரதேச சபையோ தேவை இல்லை.சாய்ந்தமருது , கல்முனை மாநகர சபையை விட்டுப் பிரியாது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர்  மொஹிடீன் பாவா தனது கருத்தை வெளியிட்டார்
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar