Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

ஏகத்துவ சமூகத்தை ஏமாற்றிய PMGG AND NFGG இரட்டை முக இயக்கம்

-முஹம்மது நியாஸ்-

கடந்த பல மாதங்களாக, அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(PMGG – NFGG)யின் மீது சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், பத்திரிகைகள் வாயிலாக நான் பலதரப்பட்ட விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருவதை வாசகர்கள் நன்கறிவீர்கள்.

இத்தனை காலமும் இவ்வியக்கத்தினுடைய அரசியல் பயணத்தில் உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் இருந்த நான், ஏன் தற்சமயம் இவ்வாறான கடுந்தொனியிலான விமர்சனங்களை அள்ளிவீச வேண்டுமென்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கமாகும்.

PMGG – NFGG யின் மீதான விமர்சனங்களுக்கு பல்வேறுபட்ட காரணிகள் என்னிடம் இருந்தாலும் இவ்விமர்சனங்களை எதிர்நோக்குகின்ற PMGG – NFGG அமைப்பின் ஆதரவாளர்களால் சில இட்டுக்கட்டப்பட்ட காரணங்கள் என்மீது கற்பிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

01. PMGG – NFGG இயக்கத்தின் அரசியல் எதிரிகளிடம் நான் விலை போனமை.

02. PMGG – NFGG இயக்கத்தின் தவிசாளர், பொறியலாளர் அப்துர் ரஹ்மான் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வு.

இவ்விரண்டுமே PMGG – NFGGஇயக்கத்தின் மீதான எனது விமர்சனங்களுக்கு அதன் உயர்மட்ட உறுப்பினர்களாலும் ஆதரவாளர்களாலும் கண்டுபிடிக்கப்பட்ட(?) காரணங்களாகும்.

இதில் முதலாவது காரணத்தைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு அப்பட்டமான அவதூறாகும்.

காத்தான்குடியில் இதுகாலவரை அரசியல் அரங்கத்தில் அடியெடுத்து வைத்த எந்தவொரு அதிகாரவாதியிடமோ அல்லது தலைமைத்துவங்களிடமோ என்னுடைய தனிப்பட்ட சுய தேவைக்காக நான் ஒரு சதக் காசுதானும் ஊதியமாகப் பெற்றது கிடையாது. அதற்காக அவ்வதிகாரவாதிகளின் காலடிகளில் காத்து நின்ற வரலாறுகளும் எனக்கில்லை.

அவ்வாறு எந்தவொரு அதிகாரவாதிகளிடமும் கைநீட்டி, பல்லிளிக்காத ஒரே காரணத்தினால்தான் எப்பேர்ப்பட்ட மகான்கள் இச்சமூகத்திற்கு அநீதியிழைத்தாலும் அதை தைரியமாகவும், துணிவாகவும், பகிரங்கமாகவும் தட்டிக் கேட்கின்ற மனோதிடத்தை வல்ல அழ்ழாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

எனவே தங்களுடைய இயக்கத்தினுடைய தப்புத்தவறுகளை விமர்சிக்கின்றேன் என்பதற்காக என்மீது இவ்வாறானதொரு அபாண்டமான அவதூறை அள்ளி இறைப்பவர்கள் அழ்ழாஹ்வின் தண்டனையைப் பயந்துகொள்ள வேண்டும்.

மேலும் இரண்டாவது காரணியாக இங்கே குறிப்பிட்டுள்ள பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மீதான காழ்ப்புணர்வு என்கிற குற்றச்சாட்டானது, எந்தளவுக்கு உண்மைக்குப்புறம்பானது என்பதற்கு எனது அண்மைக் காலச் செயற்பாடுகளே சாட்சியங்களாக இருக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுடைய தொழில் நிறுவனமான BCAS உயர்கல்வி நிறுவனத்தைப் பற்றிய மோசமானதொரு குற்றச்சாட்டு, உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பவரால் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மீதும், அவருடைய தொழில் நிறுவனத்தின் நற்பெயர் மீதும் சேறுபூசுவதற்கான முஸ்தீபுகள் மிகவும் பரவலாகவே இடம்பெற்றன.

இந்த விவகாரம் சில நலன்விரும்பிகளால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட மறு நிமிடமே குறித்த விவகாரத்தின் விமர்சகரான மௌலவி முபாரக் அப்துல் மஜீதுக்கும், அவரைச்சார்ந்த நபர்களுக்கும் நன்றாக உறைக்கும் விதமாக காரசாரமான ஒரு நீண்ட அறிக்கையை மூன்று பாகங்களாக வெளியிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினதும் மற்றும் BCAS நிறுவனத்தினதும் கௌரவத்திற்கு துளியளவும் களங்கம் ஏற்பட்டு விடாத அளவுக்கு அந்த விமர்சனத்தை தவிடு பொடியாக்கினேன்.

அன்று வாய் மூடிய உலமாக்கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அதுபற்றி இன்று வரை வாய் திறக்கவேயில்லை.

இதிலிருந்து பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மீதும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் குறை கூறுகின்ற வகையில் யார் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் அவ்விமர்சனத்திலிருந்தும் அவரைப் பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகத்தான் நான் இருந்து வந்துள்ளேன் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

ஏனெனில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி என்னால் முடியுமானவரை அவதானித்திருக்கிறேன். அதில் அடுத்தவர்கள் விமர்சிக்கின்ற அளவுக்கு குற்றங்குறைகள் இல்லையென்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.

அவ்வாறு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும்கூட அதைப் பகிரங்க மக்கள் மன்றத்தில் விமர்சிப்பதற்கும் நான் தயாரில்லை, அது எனக்குத் தேவையுமில்லை.

ஆகவே, சகோ. அப்துர் ரஹ்மான் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் நான் PMGG – NFGG இயக்கத்தின் மீது விமர்சனங்களைக் கட்டவிழ்த்து வருகிறேன் என்னும் குற்றச்சாட்டானது எந்தவொரு அடிப்படையோ, ஆதாரமோ அற்றது என்பதை அவ்வியக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

காரணம்தான் என்ன?

பொதுவாகவே இந்த PMGG – NFGGயினுடைய அரசியல் பிரவேசமானது காத்தான்குடி பிரதேசத்தில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த அரசியல் கட்சிகளின் வடிவங்களை, உள்ளரங்கங்களை விடவும் வேறுபட்டது, வித்தியாசமானது.

அரசியல் அதிகாரத்திற்காக, தன்னுடைய சுயலாபத்திற்காக எப்பேர்ப்பட்ட அநீதியையும், அக்கிரமத்தையும், சமூக, மார்க்க விரோதத்தையும் எதுவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகச்சாதாரணமாக அரங்கேற்றக்கூடிய, முஸ்லிம் சமூகத்தை அந்நியர்களிடம் விற்பனை செய்யக்கூடிய பாரம்பரிய அரசியல் கலாச்சாரம் தழைத்தோங்கியிருந்த காலப்பகுதியிலேதான் இந்த PMGG – NFGG இயக்கமானது எமது பிரதேசத்தில் தோற்றம் பெற்றது.

இந்த PMGG – NFGGஇயக்கத்தின் அரசியல் களநிலவரச் செயற்பாடுகள், நடவடிக்கைகள் மீதான என்னுடைய அவதானம் 2011ம் ஆண்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.

காத்தான்குடி பிரதேசத்தில் நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதி அது. அக்காலப்பகுதியில் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா என்னும் ஏகத்துவப் பிரச்சார அமைப்பில் உயர்மட்ட நிருவாகத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது PMGG – NFGGயின் அரசியல், தேர்தல் பிரச்சார மேடைகளில் நிகழ்த்தப்பட்டு வந்த சொற்பொழிவுகள் அனைத்துமே ‘அல்குர்ஆன், நபிவழி, ஏகத்துவம், இஸ்லாமிய வழிகாட்டல்களுடன் இணைந்த அரசியல் நடவடிக்கை’ போன்ற வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டு வந்தன.

அரசியலென்பது ஒரு சாக்கடை எனும் கோஷம் வலுப்பெற்றிருந்த அதேநேரம், மௌலவிமார்கள் அரசியலில் பிரவேசிப்பதும் பெரும்பாவம் என்றவாறான ஓர் வடிவம் சமூகத்தில் உருவாகியிருந்தபோதுதான் அஷ்ஷெய்ஹ் MBM. பிர்தௌஸ் நளீமியுடைய மேடைப் பேச்சுக்கள் என்னையும், என்னைப்போன்ற ஏகத்துவவாதிகளையும் வெகுவாகக் கவர்ந்தன.

அரசியல்வாதிகளின் கண்ணசைவுகளுக்காக சோரம் போய்த் திரிந்த நம் உலமாக்களையே பார்த்துப் பார்த்துப் பழகிப்போன எமக்கு, அரசியல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக ஏறி நின்று சத்திய மார்க்கத்தை ஓங்கியொலித்த பிர்தௌஸ் நளீமியின் துணிச்சலான கருத்துக்கள், மேற்கோள்கள் யாவும் எனதுள்ளத்தில் மிகவும் தாக்கம் செலுத்தின.

பொதுவாகவே ஏகத்துவ சமூகமும், நளீமிக்களும் எந்தவொரு மையப்புள்ளியிலும் இணைவதில்லை. அதே போன்று கடந்த காலங்களிலும் பிர்தௌஸ் நளீமியுடைய வகையறாக்களால் ஏகத்துவ சமூகம் பல்வேறு அழுத்தங்களையும் அவமானங்களையும் சந்தித்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் 2010ம் ஆண்டு காலப் பகுதியில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசலில் பிர்தௌஸ் நளீமி நடாத்தி வந்த பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் கலந்து கொண்ட என்னுடைய மனைவி, மார்க்கரீதியான ஒரு சந்தேகத்தை அவரிடம் வினவியபோது, ஒரு ஏகத்துவவாதி என்ற ஒரே காரணத்திற்காக எனது மனைவியை பிர்தௌஸ் நளீமி அங்கு காரசாரமான வார்த்தைகளால் பகிரங்கமாகவே அவமதித்த வரலாறுகளும் இல்லாமல் இல்லை.

இருந்தபோதிலும் இவ்வாறான தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுப்பிரச்சினைகளாக்கி அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படவிருக்கின்ற அரசியல்ரீதியான நல்லதோர் விடிவைத் தடுத்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்துடன் பிர்தௌஸ் நளீமியுடைய அந்த இழிசெயலைக்கூட மனதார மறந்து விட்டு ஓரணியில் நாம் ஒன்றிணைந்தோம்.

அரசியல் ரீதியாக, இஸ்லாமிய மார்க்கத்தை ஒட்டிய ஒரு விடிவுகாலம் இப்பிரதேசத்தில் பிறக்க வேண்டும், அதற்காக நாம் இவ்வாறான ஒரு இஸ்லாமிய வழிகாட்டல்களுடன் இணைந்த இயக்கத்திற்கே நமது ஆதரவை வழங்க வேண்டும் என்று இவ்வூரிலுள்ள ஏகத்துவவாதிகள் யாவரும் அப்போது தைரியமாக முன்வந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களையும் போலவே அப்போதைய PMGG இயக்கமும் தாருல் அதர் அமைப்பின் நிருவாகத்தைச் சந்திப்பதற்காக ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சமூகமளித்தது. ஷூரா சபையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து பேர் வரை அச்சந்திப்புக்கு வருகை தந்தனர்.

அச்சந்திப்பில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் நிருவாகத்தின் சார்பில் நானும் கலந்து கொண்டேன். எந்தவொரு கட்சிக்கும், வேட்பாளருக்கும் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக ஆதரவு தெரிவிப்பதில்லையென்பது தாருல் அதருடைய
அப்போதைய நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் சந்திப்புக்காக வருகை தருகின்ற பிரமுகர்களிடம் சமூகப்பொறுப்பு, தலைமைத்துவத்தின் அமானிதம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய மார்க்கம் காட்டுகின்ற கடும்போக்கை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுவோம்.

இதன் அடிப்படையில் தாருல் அதர் அத்தஅவிய்யாவின் சிரேஷ்ட பிரச்சாரகர் மௌலவி BM. அஸ்பர்(பலாஹி), தேர்தல் ஆதரவைக் கோரி வருகை தந்திருந்த PMGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளடங்கலாக அமைப்பின் ஷூரா சபை உறுப்பினர்களிடம் தலைமைப்பொறுப்பு தொடர்பிலான இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டல்கள் மற்றும் அப்பொறுப்பில் இருந்து தவறுபவர்களுக்கு மறுமையில் கிடைக்கின்ற தண்டனைகள் பற்றி விளக்கமளித்தார்.

இந்த விளக்கங்களைக் கேட்ட பொறியலாளர் அப்துர் ரஹ்மான் அந்த இடத்தில் ஒரு வார்த்தையைக் கூறினார். அதாவது ‘இஸ்லாமிய மார்க்கத்தில் சமூகப்பொறுப்புக்கள் தொடர்பில் இந்தளவுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. நான் அரசியலில் காலெடுத்து வைத்ததற்காக இப்போது யோசிக்கிறேன்’ என்று அவர் கூறினார்.

நானும் தாருல் அதர் அமைப்பின் நிருவாகத்தில் பணியாற்றிய காலத்தில் பிரதேசத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுடனும் உரையாடியிருக்கிறேன். தலைமைத்துவப் பொறுப்புக்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இந்தளவுக்கு அதை ஒரு உணர்வுபூர்வமாகச் சிந்தித்து இறையச்சத்துடன் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திய முதலாவது அரசியல்வாதியாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மானைத்தான் நான் பார்த்தேன்.

‘அழ்ழாஹ்வுடைய திருவசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் முஃமின்களுடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுக்கமடையும்’ என்ற திருமறை வாசகத்தின் யதார்த்தத்தை நான் பொறியலாளர் அப்துர் ரஹ்மானுடைய அந்த வார்த்தைகளில் நேரடியாகவே கண்ணுற்றேன்.

இதன்காரணமாக சகோ. அப்துர் ரஹ்மானுடைய அரசியல் நடவடிக்கைகளில் எனக்கு மாத்திரமல்ல, பிரதேசத்திலுள்ள கணிசமான ஏகத்துவவாதிகளுக்கு பலத்த நம்பிக்கை ஏற்பட்டது. எந்தளவுக்கென்றால், 2011ஆம் ஆண்டு நகரசபைத் தேர்தலில் தாருல் அதர் அமைப்பு ஒட்டுமொத்தமாக PMGGக்கே தன் ஆதரவை வழங்கவுள்ளது என்றதொரு வடிவம் காத்தான்குடிப் பிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்டு, அதன்மூலம் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் பலத்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட வரலாறுகளையும் என்னால் மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இவ்வாறு காத்தான்குடிப் பிரதேசத்தின் பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தின் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தபோதிலும் கூட ஏகத்துவ சமூகம் தனது பலமானதொரு வாக்குப்பலத்தை அள்ளி வழங்கியதன் பிரதிபலனாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகரசபை தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி ஆசனங்களை PMGG இயக்கம் தனதாக்கிக்கொண்டது.

இந்த வெற்றியை, PMGG என்ற இயக்கத்தினுடைய வெற்றியாக இல்லாமல் காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தினுடைய அரசியல் அத்திவாரமாகவே என்னைப்போன்ற ஏகத்துவவாதிகள் கருதினார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து விழ ஆரம்பித்தது. (இன்ஷா அழ்ழாஹ், தொடரும்)

Advertisements

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.