Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

நபியவர்கள் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தார்கள்??

Zainudeen Cader
நபியவர்கள் எழுதவ வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். அதனால் முன்னைய வேதங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவைகளை வைத்துக் குர்ஆனை உருவாக்கிக் கொண்டார்கள் என்று இஸ்லாமிய எதிரிகளான மேற்கத்தேய வாதிகளும் ஓரியண்டலிஸ்ட்களும் (Orientalists) நபியவர்களைக் களங்கப்படுத்தும் நோக்குடன் வாதிடுகினறனர். முஸ்லிம்களில் சிலரும் நபியவர்களை எழுத வாசிக்கத் தெரியாத முட்டாளாக்குவதா என்னும் சிந்தனையில் அதற்குத் துணை போகின்றனர். அதனால் நபியவர்கள் எழுதவும் வாசிக்கவும்  தெரிந்திருந்தார்களா என்பது இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாகப் முஸ்லிம்களைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இப்பதிவு இடம்பெறுகிறது. இது இருபகுதிகளைக் கொண்டது. பகுதி -1 உம்மி சமூகம் என்றால் என்ன என்பது பற்றியதும் பகுதி -2 உம்மி நபி என்றால் என்ன என்பது பற்றியதுமாகும். இப்பதிவேற்றத்தின் இறுதிப் பகுதியில் ஹ¬தைபியா உடன்படிக்கை பற்றிய ஹதீஸ்களும் அலசப்படுகின்றன.
பகுதி -1 உலகத்தில் அல்லாஹ் மனித சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதற்காக அவ்வப்போது வேதங்களையும் நபிமார்களையும் அனுப்பி வைத்தான். இவ்வாறு அனுப்பப்பட்ட வேதங்களும் நபிமார்களும் அல்லாஹ்விடம் இருந்தே வந்தவைதான் என்பதை மக்களை நம்பச்செய்யும் பொருட்டு அவை அசாதாரணமானதும் காலத்தை வென்றதாகவும் இருக்க வேண்டியதாயிற்று.
இந்தவகையில் ஈஸா அலை அவர்கள் பிறந்தவுடன் தொட்டிலில் இருக்கும்போதே வேதமும் ஞானமும் பேச்சாற்றலும் வழங்கப்பட்டதன. இது இரு பிரதான விடயங்களை நிலை நாட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டவையாகும். ஒன்று, ஈஸா நபியவர்கள் முறைகேடாகப் பிறந்த குழந்தை என்னும் சமூகத்தில் காணப்பட்ட இழி நிலையைத்துடைத்து எறிவதும் மற்றது தான் நபி என்பதை நிலை நாட்டுவதுமாகும். அல்குர்ஆன் 3 : 46,    5 : 110,  19 : 29 ,   19 : 30
தொட்டிலில் இருக்கும் மழலை பேசுவதென்பது வழமைக்கு முரணான செயல். சாதாரணமாக மனித ஆற்றலால் செய்துவிட முடியாது. ஆதலால் இது இறைவனின் வேதமும் அற்புதமும் என்று மக்கள் நம்புவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

இவ்வாறே நபியவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட அனைத்துத் துதர்களுக்கும் வழங்கப்பட்ட வேதம் மற்றும் அற்புதத்தின் தன்மைகளை விடவும் நபியவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கம் தெய்வீகமானது என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்வதற்கு அல்லாஹ் அருளிய அற்புதச் சான்றுகளில் ஒன்றுதான் குர்ஆன் ஏனைய வேதங்களைப் போலல்லாது ஒலி வடிவில் இறக்கப்பட்டதும் அதைப் பெற்ற நபியவர்கள் எழுத்தறிவு அற்றவர்களாக இருந்தமையுமாகும்.
நபியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தை அல்கு்ர்ஆன் 62 : 02ன் படி எழுத வாசிக்கத் தெரியாத உம்மி சமூகமெனக் குறிப்பிடுகிறது. அதே நேரம் அந்த சமூகத்தில் எழுத்தறிவுடைய மக்களும் வாழ்ந்துள்ளனர். அவ்வாறாயின் ஏன் அந்த மக்களை மொத்தத்தில் எழுத்தறிவு அற்றவர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பது இன்று அவர்களரல் கேட்கப்படும் கேள்வியாகும். அக்கேள்விக்கான விடை மிகவும் இலகுவானதாகும். மனித வாழ்வின் நடைமுறையுடன் கூடிய அணுகுமுறையுடன் ஒருங்கிணைத்து நோக்குமிடத்து மிக இலகுவில் புரிந்து கொள்ளலாம். சில உதாரணங்களைக் கீழே நோக்குவோம்.
(1) ஒரு நாட்டில் அல்லது ஒரு பிராந்தியத்தில் வாழுகின்ற சமூகம் பல்லின மக்களைக் கொண்டதாகக் காணப்படினும் அக்குடிப் பரம்பலின் பெரும்பான்மையைக் கொண்டே அச்சமூகம் அடையாளப் படுத்தப்படுவதுதான் உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரையும் பின்பற்றப்பட்டு வருகின்ற எல்லொரும் ஏற்றுக் கொண்ட நடைமுறையாகும். உதாரணமாக நபியவர்கள் இறைத்துாதராக அனுப்பப்பட்ட சமூகம் ஜாஹிலிய்யத் சமூகம் என அழைக்கப்படுகின்றனர். ஜாஹிலிய்யத் என்றால் சமய, கலாசார, பண்பாட்டு ரீதியாக நெறிதவறி மிருக வாழ்க்கை வாழ்ந்த மக்களையே குறிக்கும். அதேநேரம் அங்கு சத்திய மார்க்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த ஹனீப் என அழைக்கப்பட்ட நன்நெறியுடைய மக்களும் வாழ்ந்தனர் இவர்கள் தொகையில் மிகக் குறைவானவர்களே. அவர்கள் துாய்மையான இஞ்சீலைக் கடைப்பிடித்து வாழ்ந்த ஒழுக்கசீலர்கள். சத்திய வேதத்தின்படி இறுதி நபியொருவர் வருவாரென எதிர்பார்த்திருந்தனர். (பார்க்க, பைபிளின் பழைய ஏற்பாட்டின் உபாகமம் அத் 18 வச 15-18, அல்குர்ஆன் அத் 61வச 06) வறக்கதிப்னு நௌபல் போன்றோர் இப்பிரிவினரைச் சேர்ந்தவரே. ஆகவே, ஜாஹிலிய்யத் சமூகத்தில் அப்படியான உத்தமர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் பெரும்பான்மையைக் கொண்டே அச்சமூகம் ஜாஹிலிய்யத் சமூகம் என அடையளப்படுத்தப் படுகிறது.

(2) அல்லாஹ் மனித சமுதாயத்தின் முதல் மனிதரைப் படைத்து அனைத்து மலக்குகளையும் ஆதம் அலை அவர்களுக்கு சுஜ¬து செய்யும்படி கட்டளையிட்டான். மலக்குகள் அனைவருமே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து சுஜ¬து செய்தனர். ஆனால் இப்லீஸ் மாத்திரம் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய மறுத்துவிட்டான். ஆதமுக்குப் பணிந்து சுஜ¬து செய்வது தனக்கு இழிவு என்பதாககக் கருதினான்.. (அல்குர்ஆன்  2 : 34,      15 : 30 - 31 ,    17 : 61,     20 : 116,  ,   38 : 73-74.)  இவ்வாறு அடிபணிய மறுத்ததன்விளைவு அவன் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டுக் காபிராகி நிரந்தர நரகவாதியானதுடன் மற்றவர்களையும் வழிகெடுப்பவனாகவும்  மாறிவிட்டான். (அல்குர்ஆன்  15 : 34 - 35,      17 : 63 ,    38 : 77 – 78 ,  ,    38 : 85.)  மலக்கு மார்களுடன் இருந்தபோதிலும் இப்லீஸ் ஜின் இனத்தைச் சேர்ந்தவன். (அல்குர்ஆன் 7:12, 18 : 50) ஆதமுக்கு சுஜ¬து செய்யுமாறு நாம் மலக்குகளுக்குக் கட்டளையிட்டோம் என்றுதான் குர்ஆன் கூறுகிறது.  ஆகவே மலக்குகளை நோக்கித்தானே ஆதமுக்கு அடிபணியும்படி கட்டளையிட்டாய் எனக்கு அக்கட்டளை எப்படிப் பொருந்தும்? என்னை ஏன் சபித்தாய்? ஏன் நரகவாதியாக்கினாய் என்று இப்லீஸ் ஏன் அல்லாஹ்விடம் கேட்கவில்லை? இப்லீஸ் சிறுபான்மை இனமாக ஜின்கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தன். அவன் பெரும்பான்மை மலக்குகளுடனேயே இருந்தான். அங்கிருந்த எல்லோரையும் நோக்கிக் கட்டளை பிறப்பிப்பதாயின் பெரும்பான்மையினரை நோக்குவது சமூக நடைமுறைவிடயமாகும் என்பது இப்லீசுக்குக்கூடத் தெரிந்த விடயமாகும். அதனால்தான் அவன் அல்லாஹ்விடம் வாதிடவில்லை. அல்லாஹ்வும் நீதியானவன் யாருக்கும் அநீதியிழைக்கமாட்டான்.

(3) மற்றுமொரு உதாரணம், ஹ¬தைபியாவுக்குப் பின்னர் நபியவர்கள் தனது பிரச்சாரப் பணியை அரேபியாவுக்கு வெளியிலும் விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்துக் கடிதங்களை அனுப்பினார்கள். இதன்படி உரோமநாட்டு மன்னர் (சீஸர்) கைஸருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தைக் கொண்டுசென்றவர் திஹ்யதுல்கல்பி என்னும் நபித்தோழர். நபியவர்களின் கடிதம் உரோம நாட்டு சக்கரவர்த்தியைச் சென்றடைந்ததும் அப்போது வர்த்தகநோக்காகச் சென்றிருந்த அபுசுப்யான் ரழி அழைத்து வரவழைக்கப்பட்டு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் நபியவர்களைப் பற்றி அபுசுப்யானிடம் தகவலறியும் விசாரணை நடைபெற்றது. அப்போது அபுசுப்யான் றழி இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. மன்னர் பலகேள்விகள் கேட்டார் அவைகளுள் ஒரு கேள்வி,  இந்த முஹம்மதைப் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடையவர்களா அல்லது சமூகத்தில் கணக்கெடுக்கப்படாதவர்களா? என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அபுசுப்யான் றழி சமூகத்தில் கணக்கெடுக்கப்படாதவர்கள் என்று கூறினார்கள். ஆனால் நபியவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஹதீஜா நாயகி, அபுபக்கர், உஸ்மான், சஹ்திப்னு முஆத், அப்துர்ரஹ்மான் இப்னுஅவுப், முஸ்அபிப்னு உமைர் றழி இன்னும் பலர் சமூகத்தில் உயர் அந்தஸ்த்தும் மிகுந்த செல்வமும் உடையவர்களாகக் காணப்பட்டனர். இருந்தபோதிலும் முஹம்மதைப் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் கணக்கெடுக்கப்படாதவர்கள் என்றுதான் அபுசுப்யான் றழி கூறினார்கள். விசாரணை ஆரம்பிக்கும் முன்னர் உரோமநாட்டு மன்னர் நபித்தோழரான திஹ்யதுல் கல்பியைப் பார்த்து அபுசுப்யான் பொய்யுரைத்தால் சுட்டிக்கட்ட வேண்டும் என்று முன்கூட்யே சொல்லிவிட்டுத்தான் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். சமூகத்தில் கணக்கெடுக்கப்படாதவர்கள் என்று அபுசுப்யான் சொன்னபோதும் திஹ்யதுல் கல்பி றழி குறுக்கிட்டு இவர்  பொய் சொல்லுகிறார். சமூக அந்தஸ்தும் செல்வச் செழிப்புமுடையோரும் எம்மில் உள்ளனர் என்று  வாதிடவில்லை. புஹாரி ஹதீஸ் இல. 07, 2940, 2941.  ஏனெனில் ஒரு சமூகத்தின் அடையாளம் அச்சமூகத்தின் பெரும்பான்மையைக் கொண்டே தீர்மானிக்கப்படுவது யாவரும் அறிந்த உண்மை.

(4) இன்னுமொரு உதாரணத்தையும் கூறலாம். ஒரு கிராமத்தில் வாழும் மக்களில் 95 வீதமானோர் தம்மை அண்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்தே தமது ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்கின்றனர். இருப்பினும் தமது அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யமுடியவில்லை. இதே நேரம் அக்கிராமத்திலுள்ள 5 வீதமானோர் வர்த்தகத் தனவந்தர்கள் நிறை செல்வமுடையவர்கள். இப்போது இக்கிராமத்தை ஏழைகளைக் கொண்ட விவசாயக்கிராமம் என்பதா அல்லது வர்த்தகர்களைக் கொண்ட செல்வந்தக் கிராமம் என்பதா? இவ்வாறே ஈரான் ஒரு சீயா நாடு. அங்கு சுன்னாக்களும் கிறிஸ்தவர்களும் பஹாயியாக்களும் வாழ்கின்றனர். அதற்காக ஈரானை வேறு பெயர் கொண்டு அழைக்கலாமா? ஆகவே நபியவர்கள் வாழ்ந்த சமூகதில் ஒருசிலர் எழுதவாசிக்கத் தெரிந்தவர்கள் இருந்தபோதும் பெரும்பான்மையானவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாததால் பெரும்பான்மையினரை வைத்தே அச்சமூகம் அடையாளப்படுத்தப்பட்டது.

அடுத்ததாக “உம்மியுன்“ என்பதற்கும் அன்னபியில் “உம்மி“ என்பதற்கும் எழுத வாசிக்கத் தெரியாதவர் என்பதுதான் அர்த்தம் என்பதை நபியவர்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் ஏனைய ஸலபுஸ்ஸாலிஹீன்கள் இன்று வரையும் உள்ள மொழி நிபுணர்கள் உலகின் தலைசிறந்ந அறிஞர்களெனக் கருதப்படும் மத்ஹபுகளுடைய இமாம்களான சாபி, ஹனபி, ஹன்பலி, மாலிக் போன்றோரும் ஹதீஸ் கலையுடைய இமாமகளான புஹாரி, முஸ்லிம், அபுதாவுத், திருமதி, நஸாயி, இப்னுமாஜா, அஹ்மது, தாறமி, பைஹகி, தற்கால நவீன சிந்தனையாளர்கள் அடங்கலாக இன்னும் பலரும் இதே கருத்தையே தெளிவாகக் கூறியுள்ளனர்.
நபியவர்களுக்கு எழுதவாசிக்கத் தெரிந்திருந்தது என்னும் கருத்தை உலகுக்கு முன்வைத்தவர்கள் இஸ்லாமிய எதிரிகளான Orientalists களாவர். இவர்கள் நபியவர்களுக்கு எழுத வாசிக்கும் ஆற்றல் இருந்தது. அதனால் ஏனைய வேதங்களை வாசித்தறிந்த பிற்பாடு இதைத்தானே உருவாக்கிக் கொண்டார் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். (இவர்கள் யார் என்பதையும் அவர்களின் வரலாறு என்ன என்பதையும் பின்னர் தருகிறோம்) இவர்களிக் நச்சுக்கருத்தை் தெரியாத சிலர் இவர்களின் கருத்தை ஆதரிக்கின்றனர்.
அடுத்ததாக அத்தியாயம் 62 வசனம் 02க்கு விளக்கமளித்த முபஸ்ஸிரீன்கள், உம்மியுன் என்னும் பதத்திற்கு எழுத்தறிவற்ற சமூகம் என்னும் அர்த்தத்தையே வழங்கியுள்ளனர். ஏனெனில் குர்ஆன் இறக்கப்பட்ட அரேபிய சமூகத்தின் பெரும்பாலான மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவே காணப்பட்டனர்.   ஒரு சமுதாயத்தின் அடையாளம் அதன் பெரும்பான்மையைக் கொண்டே வெளிப்படுத்தப் படுவதாக மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். அவ்வாறு கூறிய இமாம்களின் கூற்றையும் அவர்களின் பெயர்களையும் கீழே தருகிறோம்.

இமாம் சம்ஆனி, இமாம் ஹாஸின், இமாம் சௌகானி, இமாம் சுகைலி, இமாம் இப்னு கதீர், இமாம் தன்தாவி, இமாம் செய்யித் குதுப்
1)
فَإِن قَالَ قَائِل: لم يكن كل قُرَيْش أُمِّيا، وَقد قَالَ: {فِي الْأُمِّيين} وَالْجَوَاب: أَن الله تَعَالَى سماهم أُمِّيين بِاعْتِبَار غَالب أَمرهم، وَقد كَانَت الْكِتَابَة نادرة فيهم،                                         تفسير السمعانى  
2)
هو الذي بعث) أرسل (في الأميين) أي إليهم والمراد بهم العرب من كان يحسن الكتابة منهم، ومن لا يحسنها لأنهم لم يكونوا أهل كتاب، والأمي في الأصل الذي لا يكتب ولا يقرأ المكتوب، وكان غالب العرب كذلك، تفسير فتح البيان
3)
إن العرب سموا الأميين لأنهم كانوا لا يقرأون ولا يكتبون- في الأعم الأغلب- وروي عن النبي- صلى الله عليه وسلم- أنه قال: الشهر هكذا وهكذا وهكذا وأشار بأصابعه وقال: «إنا نحن أمة أمية لا نحسب ولا نكتب «1» »                                           تفسير ظلال القران
4)
وقوله: الْأُمِّيِّينَ جمع أمى، وهو صفة لموصوف محذوف. أى: في الناس أو في القوم الأميين، والمراد بهم العرب، لأن معظمهم كانوا لا يعرفون القراءة والكتابة. »                                           تفسير الوسيط للطنطاوى
5)
والله سبحانه هو الذي أرسل في العرب الأميّين، حيث كان أكثرهم لا يقرأ ولا يكتب، أرسل فيهم رسولا من جنسهم، فهو أمّي مثلهم، يتلو عليهم آيات القرآن، ويطهرهم من الشرك، وينمي الخير فيهم، ويعلّمهم القرآن والسّنة  
تفسير الوسيط للزحيلى                    

அல்உம்மியுன் என்னும் குர்ஆனிய வர்த்தைக்கு அல்லது அல் உம்மத்துல் உம்மிய்யா என்னும்  ஹதீஸில் காணப்படும் சொற்றொடருக்கு மொழியியலாளர்களும் குர்ஆன் விரிவுரையாளர்களும் கொடுத்திருக்கும் வியாக்கியானங்களையும் அர்த்தங்களையும் பின்வருமாறு அவதானிக்கலாம்.

قَوْلُهُ تَعَالَى:" الْأُمِّيَّ" هُوَ مَنْسُوبٌ إِلَى الْأُمَّةِ الْأُمِّيَّةِ، الَّتِي هِيَ عَلَى أَصْلِ وِلَادَتِهَا، لَمْ تَتَعَلَّمِ الْكِتَابَةَ وَلَا قِرَاءَتَهَا، قال ابْنُ «3» عُزَيْزٍ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِّيًّا لَا يَكْتُبُ وَلَا يَقْرَأُ وَلَا يَحْسُبُ، قال الله تعالى:" وَما كُنْتَ تَتْلُوا مِنْ قَبْلِهِ مِنْ كِتابٍ وَلا تَخُطُّهُ بِيَمِينِكَ «4» ". وَرُوِيَ فِي الصَّحِيحِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ). الْحَدِيثَ ج7 ص298 تفسير القرطبى  اية 158من سورة الاعراف

இவ்வாறே அரபு அகராதியில் எத்தகைய அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன  என்பதையும் அவதானிக்கலாம். இதன்படி பிரபலமான அகராதிகளின் பெயர்களையும் அவைகளில் கொடுக்கப்பபட்டுள்ள அர்த்தங்களையும் நோக்குவோம்..

1) அல்காமூசுல் முஹீத்

والأُمِّيُّ والأُمَّانُ: مَن لا يَكْتُبُ، أو مَن على خِلْقَةِ الأُمَّةِ لم يَتَعَلَّمِ الكِتابَ، وهو باقٍ على جِبِلَّتِه
القاموس الحيط

2) அல்முஜமுல் வஸீத்

(الْأُمِّي) نِسْبَة إِلَى الْأُم أَو الْأمة وَمن لَا يقْرَأ وَلَا يكْتب والعيي الجافي
(الأمية) مؤنث الْأُمِّي ومصدر صناعي مَعْنَاهُ الْغَفْلَة أَو الْجَهَالَة
المعجم الوسيط

3) அல்முன்ஜித்

منلا يعرف الْكِتَابَةَ وَلَا القراءة  الْأُمِّي
الْكِتَابَةَ وَ القراءة  الأمية جَهلَ

4) காமூசுல்காரி அறபி இங்கிலிஸ்

الْجَهلَ بِاالْكِتَابَةَ وَ القراءة   الأمية
الْأُمِّي منجَهلالْكِتَابَةَ و القراءة
5) அல்காமூசுல் முஆசிர்

منلا يعرف الْكِتَابَةَ وَلَا القراءة  الْأُمِّي

 الْكِتَابَةَ وَ القراءة  الأمية جَهلَ
6) லிசானுல் அறப்
இந்நுால் தற்கால துறைசார் வல்லுநர்களிடம் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததும் முக்கியத்தும் உடையதுமாகும். உம்மி மனிதர், உம்மி சமூகம் என்றால் என்ன என்பதைப் பலமான ஆதாரங்கள் மூலம் தெளிவாக இந்நுால் முன்வைக்கப்படுகிறது.        
والأُمِّيّ: الَّذِي لَا يَكْتُبُ، قَالَ الزَّجَّاجُ: الأُمِّيُّ الَّذِي عَلَى خِلْقَة الأُمَّةِ لَمْ يَتَعَلَّم الكِتاب فَهُوَ عَلَى جِبِلَّتِه، وَفِي التَّنْزِيلِ الْعَزِيزِ: وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتابَ إِلَّا أَمانِيَ
؛ قَالَ أَبو إِسْحَاقَ: مَعْنَى الأُمِّيّ المَنْسُوب إِلَى مَا عَلَيْهِ جَبَلَتْه أُمُّه أَيْ لَا يَكتُبُ، فَهُوَ فِي أَنه لَا يَكتُب أُمِّيٌّ، لأَن الكِتابة هِيَ مُكْتسَبَةٌ فكأَنه نُسِب إِلَى مَا يُولد عَلَيْهِ أَيْ عَلَى مَا وَلَدَته أُمُّهُ عَلَيْهِ، وَكَانَتِ الكُتَّاب فِي الْعَرَبِ مِنْ أَهل الطَّائِفِ تَعَلَّموها مِنْ رَجُلٍ مِنْ أَهْلِ الحِيرة، وأَخذها أَهل الْحِيرَةِ عَنْ أَهل الأَنْبار. وَفِي الْحَدِيثِ:
إنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُب وَلَا نَحْسُب
؛ أَراد أَنهم عَلَى أَصل وِلَادَةِ أُمِّهم لَمْ يَتَعَلَّموا الكِتابة والحِساب، فَهُمْ عَلَى جِبِلَّتِهم الأُولى. وَفِي الْحَدِيثِ:
بُعِثتُ إِلَى أُمَّةٍ أُمِّيَّة
؛ قِيلَ لِلْعَرَبِ الأُمِّيُّون لأَن الكِتابة كَانَتْ فِيهِمْ عَزِيزة أَو عَديمة؛ وَمِنْهُ قَوْلُهُ: بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ
. والأُمِّيُّ: العَييّ الجِلْف الْجَافِي القَليلُ الْكَلَامِ؛ قَالَ:
وَلَا أعُودُ بعدَها كَرِيّا ... أُمارسُ الكَهْلَةَ والصَّبيَّا،
والعَزَبَ المُنَفَّه الأُمِّيَّا
قِيلَ لَهُ أُمِّيٌّ لأَنه عَلَى مَا وَلَدَته أُمُّه عَلَيْهِ مِنْ قِلَّة الْكَلَامِ وعُجْمَة اللِّسان، وَقِيلَ لِسَيِّدِنَا محمدٍ رَسُولُ اللَّهِ، صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ، الأُمِّي لأَن أُمَّة الْعَرَبِ لَمْ تَكُنْ تَكْتُب وَلَا تَقْرَأ المَكْتُوبَ، وبَعَثَه اللَّهُ رَسُولًا وَهُوَ لَا يَكْتُب وَلَا يَقْرأُ مِنْ كِتاب، وَكَانَتْ هَذِهِ الخَلَّة إحْدَى آيَاتِهِ المُعجِزة لأَنه، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَلا عَلَيْهِمْ كِتابَ اللَّهِ مَنْظُوماً، تَارَةً بَعْدَ أُخْرَى، بالنَّظْم الَّذِي أُنْزِل عَلَيْهِ فَلَمْ يُغَيِّره وَلَمْ يُبَدِّل أَلفاظَه، وَكَانَ الخطيبُ مِنَ الْعَرَبِ إِذَا ارْتَجَل خُطْبَةً ثُمَّ أَعادها زَادَ فِيهَا ونَقَص، فحَفِظه اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبيِّه كَمَا أَنْزلَه، وأَبانَهُ مِنْ سَائِرِ مَن بَعَثه إِلَيْهِمْ بِهَذِهِ الْآيَةِ الَّتِي بايَنَ بَينه وَبَيْنَهُمْ بِهَا، فَفِي ذَلِكَ أَنْزَل اللَّهُ تَعَالَى: وَما كُنْتَ تَتْلُوا مِنْ قَبْلِهِ مِنْ كِتابٍ وَلا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذاً لَارْتابَ الْمُبْطِلُونَ الَّذِينَ كَفَرُوا، ولَقالوا: إِنَّهُ وَجَدَ هَذِهِ الأَقاصِيصَ مَكْتوبةً فَحَفِظَها مِنَ الكُتُب.
لسان العرب

பகுதி -2 அல்லாஹ் தன் துாதர்களாக அனுப்பிய அனைத்து நபிமார்களுமே உலகின் ஈடிணையற்ற அறிவாளிகள் என்பதில் ஒரு முஸ்லிமிடம் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அப்படியானவர்கள் எழுத்தறிவற்றவர்கள் என்று வரும்போது அவர்களின் அறிவுக்கும் ஆழுமைக்கும் களங்கம் ஏற்படுவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் யதார்த்தபுர்வமாக சிந்திக்கும்போது நபியவர்கள் எழுத்தறிவில்லாமல் இருப்பதுவே அவர்கள் இறைவனின் துாதர் என்பதற்கும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கும் மலைபோன்ற சான்றாகும். ஏனெனில் நபியவர்கள் எழுத்தறிவில்லாமல் இருந்து கொண்டே. முன்சென்ற சமூகங்களுடைய வரலாற்றுச் சம்பவங்கள் பிற்காலத்தில் நடைபெறப்போகின்ற நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்புக்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப வளர்ச்சியின் பிரமிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுவார்களாயின் அவ்விளக்கங்கள் யாவும் முக்காலமும் அறிந்த இறைவனிடமிருந்து தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் கிடைத்திருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகுமென இஸ்லாமல்லாதோர்கூட ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்.

நபியவர்களுக்கு எழுத்தறிவு இல்லையென்பதற்கு 10 : 16  ,  29 : 48,   75 : 17  25 : 04-05  ஆகிய குர்ஆன் வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.

1) நபியவர்களை நோக்கி மக்கா காபிர்கள் முன்வைத்த பாரதுாரமான சில குற்றச்சாட்டுகளுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பதில், நபியவர்களின் சொந்த வாழ்க்கையைப் பார்த்துத் தெளிவுபெறுமாறு கூறினான். “உங்களிடம் இதற்குமுன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன் சிந்திக்கமாட்டீர்களா என்று முஹம்மதே கூறுவீராக“ அல் குர்ஆன் 10 : 16

ஆகவே குர்ஆன் இறைவேதம் என்று நபியவர்கள் கூறியபோது குர்ஆனைப் பொய்ப்பிக்கப் பல வழிகளிலும் முயற்சித்த அம்மக்கள்  அது முஹம்மதினால் இயற்றப்பட்டதென்று நபியவர்கள் காலத்துக் காபிர்கள் யாருமே வாதிடவில்லை. ஏனெனில்  நபியவர்களுக்கு எழுத்தாற்றல் இல்லையென்பது அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த அம்மக்கள் நேரடியாகக் கண்ட உண்மை. அது அம்மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

2) குர்ஆனுக்கு முன்வந்த வேதங்கள் யாவும் சுகுபுகளாகவும், தட்டுக்களாகவும்  ஒட்டுமொத்தமாக அச்சமுதாய நபிமார்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்தமான ஒன்றை நபியாக இருந்தாலும் உடனடியாக ஒருமனிதரால் செய்து முடிப்பதென்பது முடியாத காரியமாகும். ஆகையால் அது இறைவேதம்தான் என்றும் மற்றும் சிலசான்றுகள் மூலமாகவும் நம்பினர். ஆனால் குர்ஆனைப் பொறுத்த மட்டில் சிறிது சிறிதாக சந்தர்ப்பத்திற் கேற்ற விதத்தில் அருளப்பட்டது. அப்படி சிறிது சிறிதாக வரும் பட்சத்தில் முகம்மது தானே எழுதிக்கொண்டார் என்று எதிரிகள் சொல்வதற்குரிய வாய்ப்பே மிக அதிகமாக இருந்தது. அவ்வாறு இருந்தபோதும்கூட முகம்மது தானே எழுதிக்கொண்டார் என்று அம்மக்கள் கூறாமைக்கான காரணம் நபியவர்களுக்கு எழுத்தாற்றல் இல்லையென்பது அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நேரடியாகக் கண்டதிலிருந்து அம்மக்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது   என்பதே அப்பட்டமான உண்மை. இதையே அல்லாஹ் அல்குர்ஆனில் “(முகம்மதே!) இதற்குமுன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இல்லை.(இனியும்) உமது வலது கையால் எழுதவும்மாட்டீர். அவ்வாறு (எழுதுபவராக) இருந்திருந்தால் (நீங்கள் தான் எழுதியதென்று) வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். என்று கூறுகிறான் அல்குர்ஆன் 29 : 48

3) குர்ஆன் இறக்கப்பட்டதும் நபியவர்கள் அவசர அவசரமாக சகாபாக்களை அழைத்து  அவர்களின் தயவின் மூலம் எழுதவைத்துப் பாதுகாத்தார்கள். நபியவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால், மற்றவர்களை எழுதவைப்பதை விடவும் தானே தன்கைகளால் எழுதியிருப்பார்கள். அவ்வாறு செய்வது தனக்கு இலகுவானதும் மிகுந்த நம்பிக்கை உடையதுமாகும். ஆனால் அவ்வாறு தானே எழுத முடியாமையினால்தான் குர்ஆன் இறங்கியதும் நபியவர்கள் அவசர அவசரமாக மனனம் செய்ததும் ஸஹாபாக்களை அழைத்து எழுத வைத்ததுமாகும். அப்போது அல்லாஹ்  அவசரப்படவேண்டாம் குர்ஆனை ஒன்றுசேர்ப்பதும் அதை ஓதிக்காண்பிப்பதும் எமது கடமையாகும் என்று நபியவர்களின் அவசரத்தைத் தணித்தான்.. அல்குர்ஆன் 75 : 17.

ஆகவே, குர்ஆன் எழுத்துருவில் அல்லாது ஒலிவடிவத்தில் நபியவர்களுக்கு வழங்கப்பட்டதிலிருந்து நபியவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதிருந்தார்கள் என்பதே யதார்த்தமாகும்.

4) குர்ஆன் நபியவர்களுக்கு அருளப்பட்டதும் அதை நிராகரிப்பதிலும் இறைவேதம் இல்லையென்று நபியவர்களின் நுபுவ்வத்தைத் தட்டிக்கழிப்பதிலும் விடாமுயற்சியிலிறங்கிய அம்மக்கள், இது மனித ஆக்கமேயன்றி வேறில்லை என்பதைப் நிருபிக்கப் பலவழிகளில் பாடுபட்டனர். அதிலொன்றுதான் “இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவருக்கு வேறு சிலர் எழுதிக்கொடுத்துக் காலையிலும் மாலையிலும் வாசித்துக் காட்டப்படுகிறது.“ என்றார்கள். அல்குர்ஆன் 25 : 04-05.

ஆகவே, குர்ஆன் தெய்வீக வெளிப்பாடு என்பதை மறுக்கும் காபிர்கள் இது மனித ஆக்கம் என்றும் அதை நபியவர்களுக்கு வேறு சிலர் எழுதியும் கொடுத்து வாசித்தும் காட்டுகின்றனர் என்று அம்மக்கள் கூறுவதாக இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. இதன்மூலம் நபியவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்கள் என்பதை அவர்கள் காலத்து மக்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். இதனால் தான் மற்றவர்கள் எழுதிக்கொடுப்பதாகக் கூறினர். மற்றவர்கள்தான் எழுதிக் கொடுக்கின்றனர் என்பது மட்டுமல்ல மற்றவர்கள் என்ன எழுதிக் கொடுக்கின்றனர் என்பதைக்கூட வாசித்தறிந்து கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு வேறவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் எனக்கூறினர். இப்படியான நிலையில்தான், அம்மக்கள் நபியவர்களை உம்மியென அழைத்தார்கள்.

அடுத்ததாக அல்குர்ஆனின் 7ம் அத் 157, 158 ஆகிய வசனங்களில் காணப்படும்   النَّبِي الْأُمِّي
என்பதற்கு என்ன அர்த்தம் என்று நபி ஸல் அவர்கள் ஸகாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்பதை நபியவர்களுடன் வாழ்ந்த ஸகாபாக்கள் கூறியிருக்கும் விளக்கங்ளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். அதிலும் விசேடமாக குர்ஆனின் விரிவுரையாளர் எனவும் சமூகத்தின் பேரறிவாளியெனவும் நபியவர்களினால் பாராட்டப்பட்ட அவரின் சகோதரன் அப்னு அப்பாஸ் றழி அவர்களும்  கதாதா றழி போன்ற ஏனைய ஸகாபாக்களும் கூறுவதைக் கீழே தருகிறோம்.

தப்சீர் தபரி   7/  298-299
وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِّيًّا لَا يَكْتُبُ وَلَا يَقْرَأُ وَلَا يَحْسُبُ، قال الله تعالى:" وَما كُنْتَ تَتْلُوا مِنْ قَبْلِهِ مِنْ كِتابٍ وَلا تَخُطُّهُ بِيَمِينِكَ «4» ". وَرُوِيَ فِي الصَّحِيحِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ). الْحَدِيثَ.

- حدثنا بشر بن معاذ قال، حدثنا يزيد قال، حدثنا سعيد، عن قتادة قال: لما قيل: "فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون"، تمنّتها اليهود والنصارى، فأنزل الله شرطًا بيّنًا وثيقًا فقال: "الذين يتبعون الرَّسول النبيّ الأمي"، وهو نبيكم صلى الله عليه وسلم، كان أمِّيًّا لا يكتبُ. (2)
தப்சீர் இப்னுஅபீகாதிம்   1581/5
قَوْلُهُ تَعَالَى: الأُمِّيَّ
8334 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، أَنْبَأَ الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، ثنا يَزِيدُ، عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ قَوْلُهُ: الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ هُوَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أميا لا يكتب.
தப்சீர் தபரி    2/259
قال أبو جعفر: وهذا التأويل تأويل على خلاف ما يعرف من كلام العرب المستفيض بينهم، وذلك أن"الأمي" عند العرب: هو الذي لا يكتب.
* * *
قال أبو جعفر: وأرى أنه قيل للأمي"أمي"؛ نسبة له بأنه لا يكتب إلى"أمه"، لأن الكتاب كان في الرجال دون النساء، فنسب من لا يكتب ولا يخط من الرجال -إلى أمه- في جهله بالكتابة، دون أبيه، كما ذكرنا عن النبي صلى الله عليه وسلم من قوله:"إنا أمة أمية لا نكتب ولا نحسب"، وكما قال: (هُوَ الَّذِي بَعَثَ فِي الأُمِّيِّينَ رَسُولا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ) [الجمعة: 2] . (2) فإذا كان معنى"الأمي" في كلام العرب ما وصفنا، فالذي هو أولى بتأويل الآية ما قاله النخعي، من أن معنى قوله: (ومنهم أميون) : ومنهم من لا يحسن أن يكتب.
தப்சீர்மாவர்தி  5/ 54
الأمي: ما ذكر في آية أخرى، وهو قوله: (وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ. . .) الآية.

தப்சீர்பைழாவி  3/37
الْأُمِّيَّ الذي لا يكتب ولا يقرأ، وصفه به تنبيهاً على أن كمال علمه مع حاله إحدى معجزاته. الَّذِي يَجِدُونَهُ مَكْتُوباً عِنْدَهُمْ فِي التَّوْراةِ وَالْإِنْجِيلِ اسماً وصفة.
தப்சீர் றுாகுல்பயான் 3/251
الْأُمِّيَّ الذي لا يكتب ولا يقرأ وكونه عليه السلام اميا من جملة معجزاته فانه عليه السلام لو كان يحسن الخط والقراءة لصار متهما بانه ربما طالع فى كتب الأولين والآخرين فحصل هذه العلوم بتلك المطالعة فلما اتى بهذا القرآن العظيم المشتمل على علوم الأولين والآخرين من عير تعلم ومطالعة كان ذلك من جملة معجزاته الباهرة.
தப்சீர் றுாகுல்மஆனி5/75
ولا يخفى أن المراد بهذا الرسول النبي نبينا صلّى الله عليه وسلّم الْأُمِّيَّ أي الذي لا يكتب ولا يقرأ، وهو على ما قال الزجاج نسبة إلى أمة العرب لأن الغالب عليهم ذلك.
وروى الشيخان وغيرهما عن ابن عمر قال: قال رسول الله صلّى الله عليه وسلّم «إنا أمة أمية لا نكتب ولا نحسب»
தப்சீறுல்முனீர்9/117
والأمي: الذي لم يقرأ ولم يكتب، ولقب العرب بالأميين كما قال تعالى: هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ [الجمعة 62/ 2] وحكى تعالى عن أهل الكتاب: ذلِكَ بِأَنَّهُمْ قالُوا: لَيْسَ عَلَيْنا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ
[آل عمران 3/ 75] والنبي الأمي: هو محمد صلى الله عليه وآله وسلم.
مَكْتُوباً عِنْدَهُمْ فِي التَّوْراةِ وَالْإِنْجِيلِ باسمه ووصفه بِالْمَعْرُوفِ ما تعارفت العقول السليمة والفطر النقية على حسنه، وذلك موافق لما ورد الأمر به في الشرع.
தப்சீறு றுாகி வறைகான்  10/167
{النَّبِيَّ الْأُمِّيَّ} محمدا صلى الله عليه وسلّم؛ أي: الذي لم يمارس القراءة والكتابة، ومع ذلك جمع علوم الأولين والآخرين، فخرجت اليهود والنصارى وسائر الملل، والأمي إما نسبة إلى الأمة الأمية التي لا تكتب ولا تحسب - وهم العرب - أو نسبة إلى الأم، والمعنى: إنه باق على حالته التي ولد عليها، لا يكتب ولا يقرأ

தப்சீறுமபாதீகில் கைய்ப் 15/ 380
كَوْنُهُ أُمِّيًّا. قَالَ الزَّجَّاجُ: مَعْنَى الْأُمِّيَّ الَّذِي هُوَ عَلَى صِفَةِ أُمَّةِ الْعَرَبِ.
قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ»
فَالْعَرَبُ أَكْثَرُهُمْ مَا كَانُوا يَكْتُبُونَ وَلَا يَقْرَءُونَ وَالنَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ كَانَ كَذَلِكَ، فَلِهَذَا السَّبَبِ وَصَفَهُ بِكَوْنِهِ أُمِّيًّا. قَالَ أَهْلُ التَّحْقِيقِ وَكَوْنُهُ أُمِّيًّا بِهَذَا التَّفْسِيرِ كَانَ مِنْ جُمْلَةِ مُعْجِزَاتِهِ وَبَيَانُهُ مِنْ وُجُوهٍ: الْأَوَّلُ: أَنَّهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ كَانَ يَقْرَأُ عَلَيْهِمْ كِتَابَ اللَّه تَعَالَى مَنْظُومًا مَرَّةً بَعْدَ أُخْرَى مِنْ غَيْرِ تَبْدِيلِ أَلْفَاظِهِ وَلَا تَغْيِيرِ كَلِمَاتِهِ وَالْخَطِيبُ مِنَ الْعَرَبِ إِذَا ارْتَجَلَ خُطْبَةً ثُمَّ أَعَادَهَا فَإِنَّهُ لَا بُدَّ وَأَنْ يُزِيدَ فِيهَا وَأَنْ يُنْقِصَ عَنْهَا بِالْقَلِيلِ وَالْكَثِيرِ، ثُمَّ إِنَّهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَعَ أَنَّهُ مَا كَانَ يَكْتُبُ وَمَا كَانَ يَقْرَأُ يَتْلُو كِتَابَ اللَّه مِنْ غَيْرِ زِيَادَةٍ وَلَا نُقْصَانٍ وَلَا تَغْيِيرٍ. فَكَانَ ذَلِكَ مِنَ الْمُعْجِزَاتِ وَإِلَيْهِ الْإِشَارَةُ بِقَوْلِهِ تَعَالَى: سَنُقْرِئُكَ فَلا تَنْسى [الْأَعْلَى: 6] وَالثَّانِي: أَنَّهُ لَوْ كَانَ يُحْسِنُ الْخَطَّ وَالْقِرَاءَةَ لَصَارَ مُتَّهَمًا فِي أَنَّهُ رُبَّمَا طَالَعَ كُتُبَ الْأَوَّلِينَ فَحَصَّلَ هَذِهِ الْعُلُومَ مِنْ تِلْكَ الْمُطَالَعَةِ فَلَمَّا أَتَى بِهَذَا الْقُرْآنِ الْعَظِيمِ الْمُشْتَمِلِ عَلَى الْعُلُومِ الْكَثِيرَةِ مِنْ غَيْرِ تَعَلُّمٍ وَلَا مُطَالَعَةٍ، كَانَ ذَلِكَ مِنَ الْمُعْجِزَاتِ وَهَذَا هُوَ المراد من قوله: وَما كُنْتَ تَتْلُوا مِنْ قَبْلِهِ مِنْ كِتابٍ وَلا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذاً لَارْتابَ الْمُبْطِلُونَ [الْعَنْكَبُوتِ: 48]

  3/ 574  தப்சீர் துர்றுல் மன்துார்
وَأخرج ابْن أبي حَاتِم وَأَبُو الشَّيْخ عَن إِبْرَاهِيم النَّخعِيّ فِي قَوْله {النَّبِي الْأُمِّي} قَالَ: كَانَ لَا يكْتب وَلَا يقْرَأ
وَأخرج عبد بن حميد وَابْن أبي حَاتِم وَأَبُو الشَّيْخ عَن قَتَادَة فِي قَوْله {الرَّسُول النَّبِي الْأُمِّي} قَالَ: هُوَ نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم كَانَ أُمِّيا لَا يكْتب وَأخرج ابْن مرْدَوَيْه عَن عبد الله بن عَمْرو بن العَاصِي قَالَ خرج علينارَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا كَالْمُودعِ فَقَالَ: أَنا مُحَمَّد النَّبِي الْأُمِّي أَنا مُحَمَّد النَّبِي الْأُمِّي أَنا مُحَمَّد النَّبِي الْأُمِّي وَلَا نَبِي بعدِي أُوتيت فواتح الْكَلم وخواتمه وجوامعه وَعلمت خَزَنَة النَّار وَحَملَة الْعَرْش فَاسْمَعُوا وَأَطيعُوا مَا دمت فِيكُم فَإِذا ذهب بِي فَعَلَيْكُم كتاب الله أحلُّوا حَلَاله وحرِّموا حرَامه
وَأخرج ابْن أبي شيبَة وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مرْدَوَيْه عَن ابْن عمر قَالَ: قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّا أمة أُميَّة لَا تكْتب وَلَا تحسب وان الشَّهْر كَذَا وَكَذَا وَضرب بِيَدِهِ سِتّ مَرَّات وَقبض وَاحِدَة

தப்ஸீறுபக்ரில் உலுாம் லிசமர்கன்தி

قال: هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ يعني: في العرب. والأميون الذين لا يكتبون، وهو ما خلقت عليه الأمة قبل تعلم الكتابة. رَسُولًا مِنْهُمْ يعني: من قومهم العرب
தப்ஸீறுல் ஸம்ஆனி

{هُوَ الَّذِي بعث فِي الْأُمِّيين رَسُولا} روى مَنْصُور، عَن إِبْرَاهِيم: أَن الْأُمِّي هُوَ الَّذِي لَا يكْتب وَلَا يقْرَأ. وروى ابْن عمر أَن النَّبِي قَالَ: " نَحن أمة أُميَّة لَا نكتب وَلَا نحسب الشَّهْر هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ". وَأَشَارَ بأصابعه الْعشْر، وَحبس إبهامه فِي الْمرة الثَّالِثَة.
وَيُقَال: سمي الْأُمِّي أُمِّيا نِسْبَة إِلَى مَا وَلدته عَلَيْهِ أمه. وَيُقَال: سمي أُمِّيا لِأَنَّهُ الأَصْل فِي جبلة الْأمة، وَالْكِتَابَة لَا تكون إِلَّا بتَعَلُّم. وَعَن بَعضهم: سميت قُرَيْش أُمِّيين نِسْبَة إِلَى أم الْقرى وَهِي [مَكَّة] فَإِن قَالَ قَائِل: لم يكن كل قُرَيْش أُمِّيا، وَقد قَالَ: {فِي الْأُمِّيين} وَالْجَوَاب: أَن الله تَعَالَى سماهم أُمِّيين بِاعْتِبَار غَالب أَمرهم، وَقد كَانَت الْكِتَابَة نادرة فيهم،

தப்ஸீறுல் மாவர்தி

{هُوَ الَّذِي بعث فِي الْأُمِّيين رَسُولا} روى مَنْصُور، عَن إِبْرَاهِيم: أَن الْأُمِّي
{يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزالْحَكِيمِ هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ} يَعْنِي الْعَرَبَ كَانَتْ أُمَّةً أُمِّيَّةً لَا تَكْتُبُ وَلَا تَقْرَأُ {رَسُولًا مِنْهُمْ}

தப்ஸீறுல் பகவி

قوله عزّ وجلّ: هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ يعني: العرب، وكانوا لا يكتبون
 وقد شرحنا هذا المعنى في البقرة «2» رَسُولًا يعني: محمّدا صلّى الله عليه وسلم مِنْهُمْ أي: من جنسهم ونسبهم.
தப்ஸீறுசாதில் முயஸ்ஸர்
فِي الْأُمِّيِّينَ جمع أمي منسوب الى امة العرب وهم قسمان فعرب الحجاز من عدنان وترجع الى إسماعيل عليه السلام وعرب اليمن ترجع الى قحطان وكل منهم قبائل كثيرة والمشهور عند اهل التفسير ان الأمي من لا يكتب ولا يقرأ من كتاب وعند اهل الفقه من لا يعلم شيأ من القرآن كأنه بقي على ما تعلمه من امه من الكلام الذي بتعلمه الإنسان بالضرورة عند المعاشرة والنبي الأمي منسوب الى الامة الذين لم يكتبوا لكونه على عادتهم كقولك عامى لكونه على عادة العامة وقيل سمى بذلك لانه لم يكتب ولم يقرأ من كتاب

தப்ஸீறு மகாசினித்தவீல
09) بَعَثَ فِي الْأُمِّيِّينَ أي: العرب رَسُولًا مِنْهُمْ أي من أنفسهم،أميّا مثلهم، يَتْلُوا عَلَيْهِمْ آياتِهِ أي: مع كونه أميّا مثلهم لم تعهد منه قراءة ولا تعلم،

தப்ஸீறு அழ்வாயில்பயான்
مَعْنَى الْأُمِّيِّينَ فِي مُذَكِّرَةِ الدِّرَاسَةِ بِقَوْلِهِ: الْأُمِّيِّينَ أَيْ: الْعَرَبِ، وَالْأُمِّيُّ: هُوَ الَّذِي لَا يَقْرَأُ وَلَا يَكْتُبُ، وَكَذَلِكَ كَانَ كَثِيرٌ مِنَ الْعَرَبِ. اهـ.
وَسُمِّي أُمِّيًّا نِسْبَةً إِلَى أُمِّهِ يَوْمَ وَلَدَتْهُ لَمْ يَعْرِفِ الْقِرَاءَةَ، وَلَا الْكِتَابَةَ وَبَقِيَ عَلَى ذَلِكَ.
தப்ஸீறு பத்கில்பயான்

هو الذي بعث) أرسل (في الأميين) أي إليهم والمراد بهم العرب من كان يحسن الكتابة منهم، ومن لا يحسنها لأنهم لم يكونوا أهل كتاب، والأمي في الأصل الذي لا يكتب ولا يقرأ المكتوب، وكان غالب العرب كذلك، وقال النسفي: الأمي منسوب إلى أمة العرب لأنهم كانوا لا يكتبون ولا يقرأون من بين الأمم، وقيل: بدأت الكتابة بالطائف وهم أخذوها من أهل الحيرة، وأهل الحيرة من أهل الأنبار انتهى
தப்ஸீறு ழிலாலில்குர்ஆன்
إن العرب سموا الأميين لأنهم كانوا لا يقرأون ولا يكتبون- في الأعم الأغلب- وروي عن النبي- صلى الله عليه وسلم- أنه قال: الشهر هكذا وهكذا وهكذا وأشار بأصابعه وقال: «إنا نحن أمة أمية لا نحسب ولا نكتب «1» » .. وقيل: إنما سمي من لا يكتب أميا لأنه نسب إلى حال ولادته من الأم، لأن الكتابة إنما تكون بالاستفادة والتعلم.
وربما سموا كذلك كما كان اليهود يقولون عن غيرهم من الأمم: إنهم «جوييم» باللغة العبرية أي أمميون
தப்ஸீறு தன்தாவி
وقوله: الْأُمِّيِّينَ جمع أمى، وهو صفة لموصوف محذوف. أى: في الناس أو في القوم الأميين، والمراد بهم العرب، لأن معظمهم كانوا لا يعرفون القراءة والكتابة.
தப்ஸீறுல்சுகைலி
والله سبحانه هو الذي أرسل في العرب الأميّين، حيث كان أكثرهم لا يقرأ ولا يكتب، أرسل فيهم رسولا من جنسهم، فهو أمّي مثلهم، يتلو عليهم آيات القرآن، ويطهرهم من الشرك، وينمي الخير فيهم، ويعلّمهم القرآن والسّنة
தப்ஸீறுஇப்னுஅதிய்யா
 والأمي في اللغة الذي لا يكتب ولا يقرأ كتابا، قيل هومنسوب إلى الأم، أي هو على الخلقة الأولى في بطن أمه،
இதுவரையும் உம்மியுன் என்பதற்கும் அன்னபியில் உம்மி என்பதற்கும் நபியவர்கள் என்ன விளக்கத்தை ஸகாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடமிருந்து பாடம்கற்ற காசக்கள், தாபியீன்கள் தபஉத்தாபியீன்கள் முபஸ்ஸிரீன்கள் வரையும் கூறியதை மேலே குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் முஸ்லிம்களிடம் ஏற்றுக்கொளளப்பட்ட மொழி நிபுணர்களின் அகராதியையும் அவற்றில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களையும் முன்னர் சுட்டிக்காட்டியுள்ளோம். அவை அனைத்தும் நபியவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. அதற்கும் மேலாக இப்போது உலகின் பிரபலமான குர்ஆன் தர்ஜமாக்களை அவைகளை மொழிபெயர்த்தவர்களின் பெயர்களுடன் குறிப்பிடுகிறோம்.
1. அப்துல்லா யுசுப் அலி -  ஆங்கிலப்பதிப்பு
2. முகம்மது மர்மதுக் பிக்தால் -  ஆங்கிலப்பதிப்பு
3. ஸஹீகு இ.நெசனல் -  ஆங்கிலப்பதிப்பு  
4. மெளலானா முகம்மது அலி -  ஆங்கிலப்பதிப்பு
5. ஜபறுல்லா கான் -  ஆங்கிலப்பதிப்பு
6. ஹமீதுல்லா -  ஆங்கிலப்பதிப்பு
7. ஸாயித் -  ஆங்கிலப்பதிப்பு
8. முகம்மது முஹ்சின்கான் குழுவினர் -  ஆங்கிலப்பதிப்பு
9. அப்துல்ஹமீத் பாகவி – தமிழ் பதிப்பு
10. செய்யது அஹமது கான் – தமிழ் பதிப்பு
11. மௌலானா அபுல்கலாம் ஆசாத் – தமிழ் பதிப்பு
12. மௌலானா அப்துல்வஹாப் மன்பயி குழுவினர் – தமிழ் பதிப்பு
13. மௌலானா அபுல்அலா மௌதுாதி – தமிழ் பதிப்பு
மேலே கூறப்பட்ட எந்தப் பதிப்பிலும் உம்மியுன் என்பதற்கும் அன்னபியில் உம்மி என்பதற்கும் எழுத வாசிக்கத் தெரியாதவர் என்பததை்தவிர வேறு எந்த மொழிபெயர்ப்பும் காணக்கிடைக்க வில்லை.
ஆகவே, “உம்மியுன்“ என்பதற்கும் அன்னபியில் “உம்மி“ என்பதற்கும் எழுத வாசிக்கத் தெரியாதவர் என்பதுதான் அர்த்தம் என்பதை நபியவர்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் ஏனைய ஸலபுஸ்ஸாலிஹீன்கள், இன்று வரையும் உள்ள மொழி நிபுணர்கள் மற்றும் தர்ஜமாக்கள் ஆகியவைகளை ஆதாரமாக முன்வைத்துள்ளோம்.
இது தவிர இன்று வரையுமுள்ள உலகின் தலைசிறந்ந அறிஞர்களெனக் கருதப்படும் மத்கபுகளுடைய இமாம்கள், ஹதீஸ் கலையுடைய இமாம்கள், தற்கால நவீன சிந்தனையாளர்கள் அடங்கலாக இன்னும் பலரும் இதே கருத்தையே தெளிவாகக் கூறியுள்ளனர்.
சிலர் நபியவர்களுக்கு எழுதவும் வாசிக்கவும் மிகுந்த ஆற்றல் இருந்ததாகக் குறிப்படுகின்றனர். அதற்கு ஆதாரமாக ஹ¬தைபியா உடன்படிக்கையில் நபியவர்கள் தனது பெயரை எழுதினார்கள் என்பதாக வாதிடுகின்றனர். ஹ¬தைபியா உடன்படிக்கை தொடர்பாக

புகாரி ஹதீஸ் இல. 2699, 3184, 4251
முஸ்லிம் ஹதீஸ் இல. 1783,1873,1784
இப்னு ஹிப்பான் ஹதீஸ் இல. 4869, 4870, 4873
தாறமி ஹதீஸ் இல. 2549
மேலும்  அஹ்மது, நஸாயி,  போன்ற கிரந்தங்களிலும் காணக்கிடைக்கிறது. தனித்தனியாக ஒவ்பொரு ஹதீஸிலும் முழுமையான தகவல் பெறப் போதுமானதாக இல்லை. அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது பின்வரும் விடயத்தை நாம் காணமுடிகிறது. அதாவது ஹிஜ்ரி 6ம் ஆண்டு நபியவர்களும் அவர்களுடன் 1400 ஸஹாபாக்களும் உம்றாச் செய்யும் நோக்குடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவாசிகளுக்கு எட்டியதும் முஸ்லிம்களின் வருகை தங்களுக்கு ஆபத்தாகி விடுமோ என்னும் பீதியில் மக்காவுக்குள் நுழையும் எண்ணத்தைக் கைவிடுமாறு கோரி ஹ¬தைபியா என்னுமிடத்தில் ஓர் உடன்படிக்கை நடந்தேறியது. இதுவே ஹ¬தைபியா உடன்படிக்கையாகும்.
ஒப்பந்தம் எழுதப்படும்போது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது ஸல் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் சரத்துக்கள் என எழுதப்பட்டது. அப்போது காபிர்கள் குறுக்கிட்டு அல்லாஹ்வின் துாதர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுமாறு கேட்டனர்.நபியவர்கள் அதில் விட்டுக் கொடுப்புச் செய்து உடனே ஒப்பந்தம் எழுதிய அலி றழி அவர்களைப் பார்த்து “அல்லாஹ்வின் துாதர் முஹம்மது“ என்பதை அழித்து விட்டு “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது“ என்று எழுதுமாறு நபியவர்கள் சொன்னார்கள். ஆனாலும் அல்லாஹ்வின் துாதர் என்பதைத் தன்கையால் அழிக்க அலிறழி மறுத்ததும் நபியவர்களுடைய கையால் அவர்களே அழித்துவிட்டு மீண்டும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதப்பட்டது. அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதியவர் யார் என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும்.
நபியவர்களுக்கு எழுத்தாற்றலுண்டு எனக்கூறுவோர் நபியவர்கள்தான் எழுதினார்கள். இதனால் நபியவர்களுக்கு எழுத்தாற்றலுண்டு என்றும் மறுப்போர் அலி றழி தான் எழுதியதாகக் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டிலும் எது சரியான நிலைப்பாடு என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலே கூறப்பட்ட ஹதீஸ்களை நிதானமாகவும் நடுநிலையாகவும் சற்று ஆழமாகவும் அவதானித்தால் ஒப்பந்தத்தை எழுதிய அலி றழியே அதையும் எழுதினார்கள் என்பது தெளிவாகும். பின்வரும் காரணிகள் அதற்குத் துணை நிற்கின்றன.
1) மேலே கூறப்பட்ட சகல தப்சீர்களும் நபியவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாதென்பதை மிகத் தெளிவாகக் கூறுகின்றன. அத்துடன் முன்னர் குறிப்பிட்ட 10 : 16  ,  29 : 48,   75 : 17  25 : 04-05  ஆகிய குர்ஆன் வசனங்களுடன் தொடர்புபடுத்தி நாம் கொடுத்த விளக்கப்படி நபியவர்கள் குர்ஆனைத் தன்கைப்பட எழுதிக்கொண்டதாகக் காபிர்கள் எந்தக் கட்டத்திலும் வாதிடவில்லை.

அத்துடன் நபியவர்கள் நபித்துவத்துக்கு முன்னரும் பின்னரும் 63 வருட காலத்தில் ஏதாவது ஓர் ஆவணத்தைத் தன்கையால் எப்போதாவது எழுதியதாக எந்தச் சான்றுமில்லை. மாறாக வஹி இறங்கியதும் பாதுகாப்பதற்காக அவசர அவசரமாக எழுதத் தெரிந்த ஏனைய ஸஹாபாக்களின் உதவியையே நாடியுள்ளார்கள். எழுத்தறிவுள்ளவர்கள் மிகக்குறைவாக இருந்த காலக்கட்டத்தில் உயிரிலும் மேலான குர்ஆனைப் பாதுகாப்பதற்காகத் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தாது  ஹ¬தைபியா உடன்படிக்கையை மட்டுமே தன்கையால் எழுதியிருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்படுவதை  விடவும் ஹ¬தைபியா உடன்படிக்கை நபியவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உடையதா?

2) நபியவர்களுக்கு எழுத்தாற்றல் இருந்ததாக நபியவர்கள் வாழ்ந்த சமூகமோ, ஸஹாபாக்களோ, அல்லது ஏனைய அவர்களது உறவினர்களோ கூறியதில்லை. எழுத்தாற்றல் இல்லையென்றே தெளிவாகக் கூறியுள்ளனர். உதாரணமாக இப்னு அப்பாஸ், கதாதா றழி போன்றோர்களின் கூற்றைக் கீழே தருகிறோம். இதில் இப்னு அப்பாஸ் நபியவர்களின் பெரியப்பாவின் மகன் தம்பி. அல்குர்ஆன் 29 : 48 க்கு விளக்கம் அளிக்கும்போது பின்வருமாறு கூறுகிறார்கள்.

-13286 وَأَخْبَرَنَا أَبُو حَازِمٍ الْحَافِظُ، أنبأ أَبُو بَكْرٍ الْإِسْمَاعِيلِيُّ، ثنا عَلِيُّ بْنُ سِرَاجٍ الْمِصْرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ أَخِي حُسَيْنٍ الْجُعْفِيُّ، ثنا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ، وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ} [العنكبوت: 48] قَالَ: " لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ وَلَا يَكْتُبُ "
السنن الكبرى للبيهقى  
 
حدثنا بشر بن معاذ قال، حدثنا يزيد قال، حدثنا سعيد، عن قتادة قال: لما قيل: "فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون"، تمنّتها اليهود والنصارى، فأنزل الله شرطًا بيّنًا وثيقًا فقال: "الذين يتبعون الرَّسول النبيّ الأمي"، وهو نبيكم صلى الله عليه وسلم، كان أمِّيًّا لا يكتبُ. (2)

3)  நபியவர்களுக்கு எழுதமுடியாதென்பதை நபிஅவர்களே தெளிவாகக் கூறியுள்ளார்கள். இது தொடர்பாக புஹாரியில் வரக்கூடிய 1913 ம்  இலக்க ஹதீஸைக் கீழே தருகிறோம்
 -1913 حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:28]، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ
நபியவர்களுக்கு எழுதமுடியாதென நபியவர்கள் கூறிய விடயம் மேலும் பல அறிவிப்புக்களில் காணப்பபடுகிறது. அதாவது  புஹாரி 1790, முஸ்லிம் 1081, 1893, அபுதாவுத் 2319, 1979, நஸாயி 2140, 2141 அஹ்மது 4870, 5116, 6094, 5017, 6129, 4488, பைஹகீ 7580-250 ஆகியவைகளில் காணலாம்.
4)  மேலே கூறப்பட்ட காரணங்களையும் தாண்டி நபியவர்களுக்கு எழுத்தாற்றலுண்டு என யாராவது வாதிட்டால்   மேலே நாம் குறிப்பிட்ட ஹ¬தைபியா உடன்படிக்கை தொடர்பாக புகாரி ஹதீஸ் இல. 2699, 3184, 4251 முஸ்லிம். 1783,1873,1784 இப்னு ஹிப்பான். 4869, 4870, 4873 தாறமி. 2549  ஆகியவைகளை அவதானித்தால் ஹ¬தைபியா உடன்படிக்கையை   நபியவர்கள் எழுதவில்லை என்பதையும் எழுதும் ஆற்றல் அவர்களுக்கிருக்கு இருக்கவில்லை (புஹாரி 3184)  என்பதையும் துல்லியமாகக் காட்டுகிறது. அதைக் கீழே காணலாம்.
وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ،
5) அது தவிர இன்னுமொரு முக்கிய விடயத்தையும்     அவதானிக்கலாம். ஹ¬தைபியா உடன்படிக்கையின் நகலில்  “அல்லாஹ்வின் துாதர் முஹம்மது“ என்று எழுதப்படும்போது காபிர்கள் அதற்கு ஆட்சேபித்ததையும் நபியவர்கள் அதற்கு விட்டுக் கொடுத்து ஒப்பந்தத்தை எழுதிய அலி றழியைப் பார்த்து “துாதர்“ என்பதை அழித்துவிட்டு “அப்துல்லாவின் மகன் முஹம்மது“ என்று எழுதுமாறு கட்டளையிட்டதையும் அலி றழி அழிப்பதற்கு மறுத்ததையும் நாம் முன்னர் குறிப்பிட்டோம். இதனால் நபியவர்கள் ஒப்பந்தத்தைத் தன்கையில் எடுத்து “அல்லாஹ்வின் துாதர் முஹம்மது“ என்னும் வார்த்தையைத் தன்கையால் அழிப்பதற்காக அச்சொற்றொடர் ஒப்பந்தத்தில் எங்குள்ளது என்று காட்டுமாறு அலி றழியிடம் கேட்டபோது  நபியவர்களுக்கு  உரிய சொற்றொடரையும் அது இருந்த இடத்தையும் அலி றழி அவர்கள் காட்டியபிற்பாடு நபியவர்கள் தங்கள் கையால் அதை அழித்தார்கள். அதைக் கீழே தருகிறோம். புஹாரி 3184
-3184 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي البَرَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلَّا ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ: فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ [ص:104] بَيْنهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ» قَالَ: وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَتِ الأَيَّامُ، أَتَوْا عَلِيًّا، فَقَالُوا: مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ، فَذَكَرَ ذَلِكَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ» ثُمَّ ارْتَحَلَ
இதேவிடயத்தை புஹாரி 3184, 2698, 2699, 4251, முஸ்லிம் 1483, 1783, இப்னு ஹிப்பான் 4873, 4869, பைஹகி 13288, 13289 ஆகியவைகளிலும் காணலாம்.
இதை மிகவும் ஆழமாகச் சிந்தியுங்கள். எழுதவாசிக்கக் கற்றுக் கொள்ளும் ஒரு மனிதன் முதன் முதலில் கற்றுக் கொள்வது தனது பெயரை எழுதுவதற்கென்பது எல்லோரும் அறிந்த உண்மை. நபியவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் ஒப்பந்தத்தில் தனது பெயர் எங்கிருக்கிறதென அலி றழியிடம் கேட்பார்களா? தனது கையில் இருக்கின்ற ஒரு சிறிய பத்திரத்தில் தனது பெயர் எங்கிருக்கிறதென்று ஒருவர் மற்றவரிடம் கேட்டுத்தான் அறியவேண்டிய நிலையில் இருப்பாராயின் அவரை எழுத வாசிக்கத் தெரிந்தவர் என்று யாராவது கூறுவாரா? சிந்திப்பவர்களுக்குப் படிப்பினையும் நேர்வழியுமுண்டு. அல்குர்ஆன் 40 : 54,    39 : 21
 6) இறுதியாக நபி ஸல் அவர்கள்ஹ¬தைபியா உடன்படிக்கையை எழுத வில்லை என்பதற்கு முஸ்லிம் 1874, இப்னு ஹிப்பான் 4873, 4869 ஆகிய ஹதீஸ்களை முன்வைக்கின்றோம்
4873 فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِتَابَ وَلَيْسَ يُحْسِنُ يَكْتُبُ، فَأَمَرَ فَكَتَبَ مَكَانَ رَسُولِ اللَّهِ مُحَمَّدًا، فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، صحيح ابن حبان
-4869 أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: لَمَّا حَضَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الْبَيْتِ صَالَحَهُ أَهْلُ مَكَّةَ عَنْ أَنْ يَدْخُلَهَا، وَيُقِيمُ بِهَا ثَلَاثًا، وَلَا يَدْخُلُهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلَاحِ السَّيْفِ وَقِرَابِهِ وَلَا يَخْرُجُ مَعَهُ أَحَدٌ مِمَّنْ دَخَلَ مَعَهُ وَلَا يَمْنَعُ أَحَدًا يَمْكُثُ فِيهَا، مِمَّنْ كَانَ مَعَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «اكْتُبِ الشَّرْطَ بَيْنَنَا هَذَا، مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، فَقَالَ الْمُشْرِكُونَ لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ بَايَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «امْحُهُ وَاكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ» ، فَقَالَ عَلِيٌّ: لَا أَمْحُوهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «امْحُهُ، وَاكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ» ، فَقَالَ عَلِيٌّ: لَا أَمْحُوهُ، فَقَال سُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرِنِي مَكَانَهُ، حَتَّى أَمْحُوَهُ، فَمَحَاهُ، وَكَتَبَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ» صحيح ابن حبان
(1784) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ قُرَيْشًا صَالَحُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «اكْتُبْ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»، قَالَ سُهَيْلٌ: أَمَّا بِاسْمِ اللهِ، فَمَا نَدْرِي مَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللهُمَّ، فَقَالَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ»، قَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللهِ لَاتَّبَعْنَاكَ، وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ»، فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ، وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، أَنَكْتُبُ هَذَا؟ قَالَ: «نَعَمْ، إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللهُ، وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا»  مسلم
மேற்படி ஹதீஸ்கள் யாவும் நபியவர்களுக்கு எழுத முடியாமையினால் “அல்லாஹ்வின் துாதர் முஹம்மது“ என்பதை அழித்து விட்டு “ அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது“ என்று எழுதுமாறு அலி றழிக்குக் கட்டளையிட்டார்கள் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. ஆகவே ஹ¬தைபியா உடன்படிக்கை சம்பந்தமான ஹதீஸ்கள் எதுவுமே நபியவர்களுக்கு எழுத வாசிக்கும் ஆற்றல் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அவை அனைத்தும் நபியவர்களுக்கு எழுத வாசிக்கும் ஆற்றல் இருக்கவில்லை என்பதற்கு சான்றாகவே அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய