Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

ஐ. தே. க‌ ஆட்சிக்கு வ‌ர‌ முடியாது.- ஜ‌னாதிப‌தி மைத்திரி

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் மூன்று மாதத்­திற்கு என்­னிடம் தாருங்கள்,  தந்தால் மஹிந்த தரப்பு உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்­துள்ளார். 

மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு செலுத்­து­வதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சி­யினை உரு­வாக்­கலாம் என  கன­வு­ கா­ண­வேண்டாம். மஹிந்த தரப்­பி­னரை விட்­டு­விட்டு என்­னுடன் செயற்­ப­டு­ப­வர்கள் மீதே வழக்­குகள் தாக்­கல்­செய்­யப்­ப­டு­கின்­றன.  இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் எமது கட்­சியை ஓரம்­கட்ட பார்க்­கின்­றீர்கள் என்றும் ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்ற -04- ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது.  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட அமைச்­சர்கள் பங்­கேற்ற இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­யுள்ளார். 

 வழக்­குகள்  தாம­திக்­கப்­ப­டு­கின்­றமை கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற  ஊழல் மோச­டிகள் தொடர்பில் இது­வரை உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை குறித்து  அதி­ருப்தி தெரி­வித்த ஜனா­தி­பதி  இவ்­வி­டயம் குறித்து கடும்­தொ­னியில் கருத்து தெரி­வித்­துள்ளார்.   இங்கு ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில்,

சட்­டமா அதிபர் திணைக்­களம்,  நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு ஆகி­ய­வற்றின் அதி­கா­ரி­களை  அழைத்து நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்ப வழக்­குகள் தாம­த­மா­வ­தற்கு  என்ன காரணம் என்று நான் அவர்­க­ளிடம் கேட்­டி­ருந்தேன்.  இதற்குப் பதி­ல­ளித்த அவர்கள் மேலி­டத்­தி­லி­ருந்து அழுத்­தங்கள் வரு­கின்­றன என்று  தெரி­வித்­தார்கள்.   இவ்­வாறு ஜனா­தி­பதி தெரி­வித்த போது யார் அந்த அழுத்­தத்தைக் கொடுப்­பது அவர்­க­ளது பெயர்­களைக் கூறுங்கள் என்று அமைச்­சர்கள்  கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.  ஆனால்  பெயர் எத­னையும் குறிப்­பி­டாத ஜனா­தி­பதி மேலும் கூறு­கையில்;

 சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­லுள்ள  நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வையும் மூன்று மாத­கா­லத்­திற்கு  என்­னிடம் ஒப்­ப­டை­யுங்கள்.  அவ்­வாறு ஒப்­ப­டைத்தால் அந்­தக்­கா­லப்­ப­கு­திக்குள் மஹிந்த தரப்­பினர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் நிறுத்­திக்­காட்­டுவேன். தற்­போது அவர்­களை கைது­செய்­வ­தற்­கான அதி­காரம் என்­னி­டத்தில் இல்லை.  நீதி­ப­தி­களை  நிய­மிக்கும் அதி­கா­ரமும் என்­னி­டத்தில் இல்லை. அர­சி­யல்­யாப்பு சபையே அதனைத் தீர்­மா­னிக்­கின்­றது.  

 ஊழல் விசா­ரணை செய­லகம் பிர­த­மரின் கீழேயே உள்­ளது.  இந்த செய­ல­க­மா­னது வழக்­கு­களை  அர­சுக்குப் பாத­க­மா­கவும்,  எதி­ர­ணிக்கு சாத­க­மா­கவும் தயா­ரித்து  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பு­கின்­றது. இந்­த­தி­ணைக்­க­ளத்தில் நான்கு ஆலோ­ச­கர்கள், மற்றும்  ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் பலர் உள்­ளனர். இவர்­க­ளுக்கு பெரு­ம­ளவு சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன்  வாகன வசதி உட்­பட சகல வச­தி­களும்  வழங்­கப்­பட்­டுள்­ளன.  ஆனால்  எது­விதப் பிர­யோ­ச­னமும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. முக்­கிய நபர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­களை தாக்கல் செய்­யாத இவர்கள் சிறு­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவே வழக்குத் தாக்கல் செய்­கின்­றனர். எனது தரப்­பி­லுள்ள பிர­தேச சபை உறுப்­பி­னர்கள்,  மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே 76 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. 

 மஹிந்த தரப்­பி­ன­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. மீளவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வந்தால்  சரத் பொன்­சோ­கா­வுக்கு நடந்­த­தை­விட  எனக்­குத்தான் அதிக தீங்கு இழைக்­கப்­படும்.  மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு தெரி­விப்­பதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்று  ஒரு­போதும் கன­வு­கா­ண­வேண்டாம். அவர் ஆட்­சிக்கு வந்தால் எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்­குமே  ஆபத்­துள்­ளது.  நான் பெரிய கட்­சி­யொன்­றி­லி­ருந்து துணிந்தே ஜனா­தி­பதி தேர்­தலில்  கள­மி­றங்­கி­யி­ருந்தேன். அன்று நான் தோற்­றி­ருந்தால் எனது  மக­ளையும் மரு­ம­க­னையும் கைது செய்து எனக்கும் ஆபத்தை உரு­வாக்­கி­யி­ருப்பர்.  உங்­க­ளி­டத்தில்  அவ­ருக்கு கோப­மில்லை என்று எண்­ணி­வி­ட­வேண்டாம். மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் ஆயுள்­காலம் வரை நீங்கள்  மீண்டும் ஆட்­சிக்கு வர முடி­யாது. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையே அவர் அமைச்­சர்­க­ளாக நிய­மிப்பார். எனவே  அவ­ருக்கு ஆத­ரவு அளிப்­பதன் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி  ஆட்­சிக்கு வர­மு­டியும் என்று நீங்கள் எண்­ணக்­கூ­டாது. 

 எனவே சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் என்­னிடம் மூன்று மாதங்­க­ளுக்கு தாருங்கள் மஹிந்த தரப்­பையும் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  புலிகளுக்கு பணம் கொடுத்து  ஆட்சிக்கு வந்திருந்தார் என்று கூறியுள்ளார். 

 ஜனாதிபதி  இவ்வாறு கடும் அதிருப்தி  தெரிவித்தமையானது அமைச்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  இந்த அதிருப்தியின் பின்னர்  அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,  அமைச்சர் மலிக் சமரவிக்கமவும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.