Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

தூய முஸ்லிம் காங்கிரஸின் கர்த்தாக்கள்

இன்றைய ஞாயிறு தினக்குரலில் வெளியான விருட்சமுனியின் கட்டுரை...

தினக்குரலுக்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக இருந்த பஷீர் சேகு தாவூத் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் ஒரு தனி மரம் போலவே காணப்பட்டார். ஆனால் கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கி வருகின்ற இன்றைய சூழலில் இவருடைய இலட்சிய பணியில் முக்கிய கட்டத்தை அடைந்து உள்ளார் என்று கூறுவது சால பொருத்தமானதாக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அடிமரம் என்று வர்ணிக்கப்படுபவர் ஹசன் அலி. கிழக்கில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவி கிழக்குக்கு வெளியே உள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியான செயலாளர் நாயகம் பதவி கிழக்கு மாகாணத்துக்கு உள்ளே உள்ளது என்கிற ஒரு வகையான திருப்தியில் கிழக்கு முஸ்லிம் மக்கள் இருந்து வந்தனர். ஆனால் தலைவருக்கு கடிவாளம் போடுவது போல அமைந்திருந்த செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்து, அதிகாரம் அற்ற பெயரளவிலான செயலாளர் பதவியை உருவாக்கி, கடந்த பேராளர் மாநாட்டில் ஹசன் அலியை ரவூப் ஹக்கீம் வெளியே போட்ட அநியாயம் பஷீரின் இலட்சிய பயணத்தில் புதிய படிமுறை வளர்ச்சியை உருவாக்கியது. கட்சி தலைவரை திருத்த வேண்டும் என்கிற கோஷத்தை முன்வைத்து அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடர் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்த தொடங்கிய ஹசன் அலிக்கு மக்கள் ஆதரவு பல்கி பெருகியது. பஷீர் சேகு தாவூத் திட்டமிட்ட வகையில் இக்கூட்டங்களில் பங்கேற்று இருக்கவில்லையாயினும் ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை ஹசன் அலிக்கு வழங்கி கொண்டே இருந்தார்.
ஹக்கீமை திருத்துவதாக சொல்லி ஹசன் அலி ஆரம்பித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் முதலில் வாய் அளவில் ஒப்பு கொண்டு இருந்தனர். ஆயினும் ஹசன் அலியின் பக்கம் மக்கள் நிற்கின்றனர் என்கிற நிதர்சனத்தை இவர்கள் ஏற்று கொள்ள வேண்டி ஆயிற்று. இது பஷீரின் காய் நகர்த்தலை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு சென்றது.
இந்நால்வரினதும் பொது எதிரி ரவூப் ஹக்கீம் ஆவார். அதே நேரம் கட்சியின் ஸ்தாபக பொருளாளர் வஃபா பாருக், ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸதீன் போன்றோரை தவிர்த்து முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒதுங்கிய ஆரம்ப போராளிகள் அனைவரும் ரவூப் ஹக்கீம் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் சேர்த்து கூட்டணி ஒன்றை அமைப்பதில் பஷீர் சேகு தாவூத் மும்முரமாகவும், தீவிரமாகவும் காணப்படுகின்றார். அதாவுல்லாவையும், றிசாத் பதியுதீனையும் பகைமையை மறக்க செய்வது மாத்திரம் கூட்டணி அமைக்கின்ற முயற்சியில் பாக்கியாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரங்களில் அதாவுல்லாவையும், றிசாத் பதியுதீனையும் சந்தித்து பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி ஆகியோர் பேசி உள்ளனர். இப்பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை ஊட்டிய நிலையில் அடுத்த நகர்வுகளுக்கு தயாராகி உள்ளனர்.
இதனிடையில் கட்சியில் இருந்து ஒதுங்கி உள்ள மூத்த போராளிகள், கட்சி தலைமையின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து உள்ள இளையோர்கள் ஆகியோரை பஷீர் சேகு தாவூத் ஓரணி திரட்டி கூட்டங்கள் நடத்தி வருகின்றார். இவ்வகையில் கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரில் ஹசன் அலியின் இல்ல முன்றலில் நடத்தப்பட்ட கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கூட்டத்தில் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தூய முஸ்லிம் காங்கிரஸ் என்கிற பெயரில் மக்கள் முன் செல்வது என்று இங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பஷீரின் நகர்வில் மற்றுமொரு மைல் கல் ஆகும். பெருந்தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கப்பட்ட கட்சி யாப்பில் ரவூப் ஹக்கீம் கொண்டு வந்த மாற்றங்களே பிரச்சினைகளுக்கு வழி கோலின என்பதால் தூய முஸ்லிம் காங்கிரஸின் யாப்பாக அஷ்ரப் உருவாக்கி இருந்த யாப்பை அப்படியே ஏற்று கொள்வது என்றும் தீர்மானித்தனர். முஸ்லிம்களை பொறுத்த வரை இன்றைய கால கட்டம் மிக முக்கியமானதும், இக்கட்டானதுமாக இருக்கின்ற நிலையில் சமுதாய நலனை கருத்தில் கொண்டு தூய முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தே எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், பெருந்தேசிய கட்சிகளில் வேட்பாளர்களாக நிற்கவே கூடாது என்கிற நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கொண்டு வர வேண்டும் என்றும் இங்கு ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர், சட்டத்தரணி, கவிஞர் முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீனை அரவணைத்து வைத்து கொள்வதில் தூய முஸ்லிம் காங்கிரஸ் பேரார்வம் காட்டியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம், எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றில் சேகு இஸ்ஸதீனின் பங்கும், பங்களிப்பும் மிக கணிசமானது. ஸ்தாபக தலைவர் அஷ்ரப் தலைவருக்கு சமமான தவிசாளர் பதவியை இவருக்காகவே கட்சியில் உருவாக்கி இருந்தார். இவர் ஹசன் அலியின் சம்பந்தி என்பதால் இவரை வழிக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் இருக்கவில்லை. சேகு இஸ்ஸதீன் எழுதிய கவிதைகளின் தொகுப்பான வேதாந்தியின் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த முழுமதி இரவில் அக்கரைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றபோது பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி ஆகியோர் பேராளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கு ஹக்கீமும் அழைக்கப்பட்டு இருந்தார். ஆயினும் வேலை பளு காரணமாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாது இருப்பதாக இஸ்ஸதீனுக்கு முன்கூட்டியே அறிவித்து இருந்தார். இந்நிலையில் பேச்சாளர்கள் அனைவருமே இந்நூல் வெளியீட்டு விழா மேடையை ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அரசியல் மேடையாக அப்பட்டமாகவே பயன்படுத்தி கொண்டனர். மக்கள் முன்னிலைக்கு விரைவில் வருவார்கள் என்று வேதாந்தியின் சிஷ்யர்கள் முழங்கியதை எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலுடன் சேர்த்துத்தான் பார்க்க வேண்டி உள்ளது.
ஊடகவியலாளர் சலீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகின்ற விழா நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றபோது இதில் பேராளர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து அதன் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அடங்கலான முக்கியஸ்தர்களும், தூய முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி போன்றோர்களும் கலந்து கொண்டனர். மேடையில் சிறப்பு விருந்தனர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உரையாற்றி கொண்டிருந்தபோது ஹசன் அலியின் ஆசனத்துக்கு அருகில் வந்து அமர்ந்து ஹசன் அலி கூற கூற சில குறிப்புகளை றிசாத் பதியுதீன் எழுதி கொண்டது ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்பு பேசியவர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் அமீர் அலி எல்லா விடயத்திலும் தூய்மையையும், சிறப்பையும் எதிர்பார்க்கின்ற மக்கள் அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றபோதும் தூயவர்களையும், சிறந்தவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாத அதிரடி ஒன்று நடக்கும் என்று மறைபொருளில் சொல்லினார். இக்கூட்டம் முடிந்த பிற்பாடு தலைவர் றிசாத் அடங்கலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும், தூய முஸ்லிம் காங்கிரஸின் சிற்பிகளுக்கும் இடையில் மட்டக்களப்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இரகசிய சந்திப்பும், பேச்சுவார்த்தையும் இடம்பெற்றன. இரவு 11 மணி அளவில் ஆரம்பமான பேச்சுவார்த்தை அதிகாலை 3.00 மணி வரை நீடித்து உள்ளது.  
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பிரதி செயலாளராக இருந்து செயலாளருக்கு உரிய கடமைகளை செய்தவர் முன்னாள் அமைச்சர் எஸ். நிஜாமுதீன். ஹக்கீம் காரணமாக கட்சியில் இருந்து விலகிய மூத்த போராளிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் பஷீர் சேகு தாவூத்தின் சம்பந்தி ஆவார். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கூட்டணி அமைத்து செயற்பட முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இவரின் ஆதரவு நிலைப்பாடு தூய முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் என்பதில் பஷீருக்கு சந்தேகமே கிடையாது.
நுஆ கட்சியின் தலைவர் அசாத் சாலியையும் இக்கூட்டணியில் முக்கிய பங்காளியாக சேர்ப்பதற்கான முன்னெடுப்புகள் ஓரளவு வெற்றி கண்டு உள்ளன. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்டு சில சொற்ப வாக்குகளால் வெற்றியை தவற விட்டு இருந்தார் அசாத் சாலி. கிழக்கு மாகாணத்தின் இன்றைய முதலமைச்சர் நஸீர் அஹமட் அன்று தில்லுமுல்லு வேலைகள் செய்தே வெற்றி அடைந்தார் என்று அசாத் சாலி வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு கூட்டும் இனி மேல் வைத்து கொள்ளவே மாட்டார் என்று கடந்த வாரம் எமக்கு தெரிவித்தார். நுஆ கட்சியின் தலைவர் பதவியை எடுத்து செயற்பட வேண்டும் என்று ஹசன் அலியை நீண்ட காலமாக கோரி வருகின்றார் என்றும் இப்போதுதான் ஹசன் அலிக்கு நேரம் கிடைத்து உள்ளது என்றும் பொடி வைத்து பேசினார். கிழக்கு மாகாண சபை தேர்தல் உட்பட வருகின்ற தேர்தல்களில் நுஆ நிச்சயம் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டில் கண்டியில் வேட்பாளராக அசாத் சாலி போட்டியிட பூரண தயார் நிலையில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி ஆப்பு வைத்தவர்களில் முக்கியமானவர் ரவூப் ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தூய முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு அடிப்படையில் இணங்கி உள்ள தலைவர்கள் வரும் நாட்களில் கொழும்பில் ஒன்றாக சந்தித்து பேச முடிவெடுத்து உள்ளனர் என்று தெரிகின்றது. இவர்களில் ஒருவராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஹ்மானின் பெயரும் அடிபடுகின்றது.
இதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களையும் தூய முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்ளீர்க்கின்ற வேலை திட்டங்களும் உத்வேகத்துடன் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹாரிஸுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. தூய முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாம் நிலை முக்கியஸ்தர்களில் ஒருவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சில் சில பல மாதங்களுக்கு முன்னர் ஹாரிஸின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக பணியாற்றியவர். இவரே இப்பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனி மேல் அவருக்கு வளமான எதிர்காலம் இல்லை என்பதை ஹாரிஸ் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். வேதாந்தியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஹசன் அலி உரையாற்றியபோது ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருப்பவர்களில் பிரதியமைச்சர் ஹாரிஸ் மாத்திரமே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் கரையோர மாவட்ட கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார் என்று புகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளராக பதவி வகித்து இப்போதும் அக்கட்சியுடன் ஒட்டி நிற்கின்ற சட்டத்தரணி கபூர் அட்டாளைச்சேனைக்கான தேசிய பட்டியலை ரவூப் ஹக்கீம் இவருக்கே தர வேண்டும் என்று அடம் பிடித்து வருகின்றார். ரவூப் ஹக்கீம் இவருக்கு தேசிய பட்டியல் வழங்க போவதில்லை என்பது உறுதியாகின்றபோது இவராகவே வந்து தூய முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வார் என்பது வெளிப்படையான விடயம் ஆகும். தூய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி எழுந்து நிற்கின்றபோது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக இக்கூட்டணியில் வந்து இணைவார்கள் என்றும் ரவூப் ஹக்கீமின் விசுவாசிகள் மாத்திரம் ஹக்கீம் காங்கிரஸில் மிஞ்சி நிற்பார்கள் என்றும் கூட்டணி முக்கியஸ்தர்களில் ஒருவர் அதீத நம்பிக்கை வெளியிட்டார்.
ஊடகவியலாளர் சலீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகின்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாவை சேனாதிராசா கலந்து கொண்டார் என்று சொல்லியிருந்தோம் அல்லவா? இவர் இவ்விஜயத்தில் கிழக்கின் அரசியல் நிலைமைகளையும், கள நிலைவரங்களையும் கணிக்கின்ற முயற்சியிலும் ஈடுபட்டு இருந்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கம் இவரின் கவனத்தை நிச்சயம் ஈர்த்திருக்க வேண்டும். அதே நேரம் தமிழர்களும் சரி, முஸ்லிம்களும் சரி கிழக்கு மாகாணத்தில் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்கிற யதார்த்தத்தை தூய முஸ்லிம் காங்கிரஸின் கர்த்தாக்கள் உணர்ந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செயற்படுவது குறித்து மாவை சேனாதிராசாவுக்கு நல்லெண்ண சமிக்ஞைகளை இவர்கள் வழங்கினர் என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட தூய முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்து உள்ளது. தமிழ் தேசியத்துடன் இணைந்து பயணிப்பார்கள் என்பதாக ஹசன் அலி ஊடகங்களுக்கு கருத்து சொல்லி இருப்பது அவதானத்துக்கு உரியது.
தூய முஸ்லிம் காங்கிரஸ் குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் ரவூப் ஹக்கீமிடம் வினவி உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களுக்கு அரசியல் செய்ய ஒரு முகாம் தேவைப்படுகின்றது, அதனால்தான் கூட்டணி சேர்கின்றனர், ஆனால் இது குறித்து அலட்டி கொள்ள தேவையே கிடையாது, ஏனென்றால் முஸ்லிம் மக்களின் தேசிய கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே பலம் பெற்று விளங்குகின்றது என்று ஹக்கீம் பதில் சொன்னார்.
ஆனால் ஹக்கீம் சொல்லி இருப்பது போல தூய முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரானவர்களின் முகாமாக மாத்திரம் பார்க்க முடியாது உள்ளது. ஏனென்றால் கிழக்கு மாகாண மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த மாற்றத்துக்கான திறவுகோலாக இவர்கள் தூய முஸ்லிம் காங்கிரஸை காண்கின்றனர். மேலும் தமிழ் கட்சிகள் போல முஸ்லிம் கட்சிகளும் கூட்டமைத்து அமைத்து செயற்பட வேண்டும் என்கிற இவர்களின் நீண்ட கால விருப்பத்தையே தூய முஸ்லிம் காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது. எனவே கிழக்கு மாகாண மக்களின் எழுச்சியின் மறுவடிவமாகவே தூய முஸ்லிம் காங்கிரஸை பார்க்க வேண்டி உள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய