වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
அவர் வேறுயாருமல்ல மக்கள் விடுதலை முன்னணியூடாக அரசியலில் பிரவேசித்த அப்துர் ரஹ்மான் அஞ்சான் உம்மா ஆவார். இவர் 2004 இல் இடம்பெற்ற தேர்தலின்போது கம்பஹா மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு 111,755 வாக்குகளைப் பெற்றார். இது 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அமைச்சர் ஹலீம் பெற்றுக்கொண்ட (111,011) வாக்குகளை விட 744 வாக்குகள் அதிகமானதாகும்.எனவே, அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றவர் அஞ்சான் உம்மா ஆவார். 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் அஞ்சான் உம்மாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மணி சின்னத்தில் போட்டியிட்டு 10,834 வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்றம் பிரவேசித்தார். 2004 ஆம் ஆண்டு 13 ஆவது பொதுத் தேர்தலில் 111,755 வாக்குகளை பெற்று அஞ்சான் உம்மா சாதனை படைத்தார்.
இவர் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து விமல் வீரவன்ச அணியில் இணைந்து மஹிந்தவுடன் சேர்ந்து கொண்டார். அத்துடன், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் முக்கியஸ்தராகத் திகழ்ந்தார். மணியிலிருந்து விலக தனது அரசியல் வாழ்வுக்கு சாவுமணி அடித்துக்கொண்டார் என்றுதான் இந்த சந்தர்ப்பத்தில் கூறியாகவேண்ட
ும். பின்னர் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதிநிதித்துவத்தை இழந்தார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த விமலின் தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறினார். 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார். 2014 மார்ச்சில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அஞ்சான் உம்மாவால் போதியளவு விருப்பு வாக்குகளைப் பெறமுடியாமல்போனது. கள்எலிய பகுதியைச் சேர்ந்த அந்த ஆளுமை மிக்க பெண்மணியின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அஞ்சான் உம்மாவுக்கு முன்னதாக தேர்தல் ஒன்றில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பெற்றிருக்கிறார். இவர் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 100,200 வாக்குகளை பெற்றார். அதனைவிட 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 103,817 விருப்பு வாக்குகளை பெற்றார். இவரை விட 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் அப்துல் ஹலீம் 111,011 வாக்குகளையும் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட கபீர் ஹாசிம் 109,030 வாக்குகளையும் பெற்றனர். முதலாமிடத்தில் அஞ்சான் உம்மாவும் இரண்டாம் இடத்தில் அப்துல் ஹலீமும் மூன்றாமிடத்தில் கபீர் ஹாசிமும் இருக்கின்றனர். இவர்களை தவிர ஒரு இலட்சத்தை தாண்டிய விருப்பு வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 102,186 வாக்குகளை பெற்று ஐந்தாமிடத்தில் இருக்கின்றார்.
அஞ்சான் உம்மா கம்பஹா மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதரவுடனேயே இவ்வாறு அதிகப்படியான வாக்குகளை பெறமுடிந்தது. அது மாத்திரமன்றி அவர் பிரதிநிதித்துவப்படுத்த
ிய மக்கள் விடுதலை முன்னணியே அவரின் வாக்கு வங்கியை அப்போது உயர்த்தியது. அக்கட்சியிலிருந்து விலகியதையடுத்து பிரதிநிதித்துவத்தை இழந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.
கண்டி மாவட்டத்தில் விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முஸ்லிம் வாக்குகள் ஒன்று குவிந்து இரண்டு தொடக்கும் நான்கு எம்.பி.க்களை பெறக்கூடியதாக இருந்துள்ளது. எனினும் எம்.எச்.ஏ. ஹலீம் ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள சிங்கள மக்களின் பேராதரவுடனும் முஸ்லிம் மக்களின் தெரிவின் காரணமாவே அதிகூடிய வாக்குகளை பெற முடிந்தது. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமின் வெற்றிக்கு இரு விடயங்கள் காரணமாக அமைந்திருந்தன. முஸ்லிம் மக்களின் ஆதரவுக்கு மேலதிகமாக கண்டியில் ஓரளவு தமிழ் வாக்குகளும் சிங்கள வாக்குகளும் அவருக்கு கிடைத்தன.
கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட கபீர் ஹாசிம் 60 வீதத்திற்கும் மேற்பட்ட சிங்கள வாக்குகளினாலேயே 2015 ஆம் ஆண்டு 1 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். அமைச்சர் பெளஸி மாத்திரம் இரண்டு தடவைகள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். கொழும்பில் முஸ்லிம்கள் ஐ.தே.க.வுக்கு தொடர்ந்து அதிகப்படியான ஆதரவை வழங்கும் நிலையில் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெளசி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றமை சாதனையே.
இனிவரும் காலங்களில் தொகுதிவாரி தேர்தல் முறைமை அமுலுக்கு வருமாயின் இவ்வாறு விருப்பு வாக்குகளுக்கு முண்டியடித்துக் கொள்ளும் தேவை இராது. எனினும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை மத்திய கொழும்பு மற்றும் ஹாரிஸ்பத்துவ தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என ஊகிக்கலாம்.
SHM.Suhail
Comments
Post a comment