Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

Y L S Hameed
_----------------

அடுத்த இரண்டொரு மாதங்களில் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்ற சூழ்நிலையில் சகல மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் ஒத்திப்போடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இம்மாகாண சபைத்தேர்தல்களை ஒத்திப்போடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கின்றதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிலர் அவ்வாறு செய்வதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை; என்று வாதிடுகையில், இன்னும் சிலர் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் அதனைச் செய்யலாம் என்று வாதிடுகின்றனர். வேறு சிலர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால்கூட அவ்வாறான ஒரு திருத்தத்தினை கொண்டுவர முடியாது; என வாதிடுகின்றனர்.

இதன் யதார்த்த நிலை என்ன?

13 வது திருத்தமும் மாகாணசபைத்தேர்தலும்
----------------------------------------

மாகாண சபைகளை கலைத்தல்
------------------------------

ஒரு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன் மாகாண சபைகளை இரண்டு வழிகளில் கலைக்கலாம்.

ஒன்று அரசியலமைப்புச்சட்டம்(13 வது திருத்தம்) சரத்து 154b (உப பிரிவு 8 c and d) இற்கு அமைவாக ஆளுனரால் மாகாண சபை கலைக்கப்படுதல்.

இங்கு மாகாணசபையில் முதலமைச்சர் பெரும்பான்மையை கொண்டிருக்கும்போது முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாகவே அன்றி,  அதாவது முதலமைச்சரின் சம்மதமின்றி கலக்கப்பட முடியாது; என்பதனை கவனத்திற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஜனாதிபதி விஷேட சூழ்நிலையின்கீழ் அதாவது சரத்து 154 L(1) இற்கு அமைவாக "மாகாண சபையின் அதிகாரத்தை தான் பெற்றுக்கொள்வது. இங்கு யதார்த்தத்தில் மாகாண சபை கலைக்கப்படுவதில்லை. வட கிழக்கு மாகாணசபையின் அதிகாரம் ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்ட போதும் சபையின் தவிசாளர் தொடர்ந்தும் பதவியில் இருந்ததை கவனத்திற் கொள்க.

மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைதல்
------------------------------------------

ஒரு மகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டால் மாகாணசபையை 'கலைத்தல்' என்பது இடம்பெறுவதில்லை. மாறாக சரத்து 154 Eஇன் பிரகாரம் தாமாகவே கலைந்ததாக கருதப்படும். இந்த சரத்துத்தான் இன்றைய வாதப்பிரதிவாதங்களின் பிரதான அம்சமாகும்.

இந்த சரத்தின் பிரகாரம் மாகாணசபையின் ஆயுட்காலத்தை அரசால் நீடிக்க முடியாது. மாகாணசபை சுயமாக கலைந்தவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்களை நடத்தியாக வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு  தேர்தல்களை பிற்போடுவதானால் அதற்குரிய உத்தரவினை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசு வழங்க வேண்டும்.

ஆனால் அப்படி வழங்குவதற்கு சட்டத்தில் எந்த ஏற்பாடுமில்லை. எனவே பாரளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டாக வேண்டும்.

மறுபுறம் அவ்வாறு சட்டத்திருத்தத்தினூடாக மாகாணசபைத்தேர்தல்களை ஒத்தி வைத்தாலும் மாகாண சபையை நிருவகிப்பது? யார் என்ற கேள்வி எழும்.

மேற்கூறிய சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி மாகாண அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஆளுனரூடாக மாகான சபையை நிருவகிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கின்றது. ஏனெனில் அங்கு ஏற்படுகின்ற விஷேட சூழ்நிலையே, சாதாரண
நிலையில் மாகணசபையை கொண்டு செல்ல முடியாதென்பதாகும்.

ஆனால் மாகாணசபை ஆளுனரால் கலைக்கப்படும்போதோ அல்லது பதவிக்காலம் முடிவடைந்து தாமாகக் கலையும்போதோ மாகாண நிருவாகத்தை ஜனாதிபதியோ அல்லது ஆளுனரோ முன்னெடுப்பதற்கு 13 வது திருத்தச்சட்டத்தில்   எதுவித ஏற்பாடுகளும் இல்லை. பொதுவாக நிறைவேற்றதிகாரம் ஆளுனரிடம் இருந்தாலும் நிதியைச் செலவழிப்பதற்கான அனுமதியை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தேர்தலைப் பிற்போட்டால் மாகாண நிருவாகத்தை யார் முன்னெடுப்பது என்பதில் பாரிய சட்டப்பிரச்சனை எழும். எனவே இங்கும் சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது.

சுருங்கக்கூறின் தேர்தலை ஒத்தி வைப்பது மற்றும் மாகாண நிருவாகத்தை முன்னெடுப்பது ஆகிய இரண்டு விடையங்களிலும் பிரதானமாக திருத்தம் தேவைப்படுகிறது. இத்திருத்தங்கள் 13 வது திருத்தச்சட்டத்திற்கு கொண்டுவரப்பட வேண்டியதாகும்.

எனவே இவற்றிற்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

இங்கு எழுகின்ற பிரதான கேள்வி அரசிடம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இருக்கின்றதா என்பதாகும்.

கடந்த தேர்தலில் பெறப்பட்ட ஆசனங்கள் பின்வருமாறு
ஐ தே க 106
ஐ ம சு க 95
த தே கூ 16
ஜே வி பி 6
SLMC 1
EPDP 1

எனவே ஐ ம சு கூ வை விடுத்து ஏனைய அனைத்துக் கட்சிகளும் இத்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினாலும் 130 ஆசனங்களே வரும். எனவே ஐ ம சு கூ வின் 20 ஆசனங்கள் இல்லாமல் இத்திருத்தத்தை செய்ய முடியாது.

சர்வஜன வாக்கெடுப்பு தேவையா?
-------------------------------

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியுமா? அவ்வாறு பெற்றுக்கொள்ள முடியுமானால் அரசு இத்திருத்தத்தை பற்றி யோசிக்கலாம். அதே நேரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் இத்திருத்தத்தை கொண்டுவர முடியாது; என்ற சிலரின் வாதத்தின் யதார்த்தம் என்ன?


மாகாணசபையின் ஆயுட்காலத்தில் திருத்தம் செய்வதென்பது மக்களின் ' வாக்குரிமையில்' தாக்கம் செலுத்துகின்றது. ' வாக்குரிமை' -Franchise - அரசியலமைப்பின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இம்மூன்றாவது சரத்தை மாற்றுவதற்கோ, அதில் தாக்கம் செலுத்துகின்ற திருத்தங்கள் செய்வதற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டும்; என்பது இவர்களது வாதமாகும். அது சரியானதே. ஆனால் அத்தாக்கம் வாக்குரிமையை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அதைத்தான் 19 வது திருத்தத்தினூடே பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தைக் குறைத்தபோதும் 18 வது திருத்தத்தினூடே ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தல் கேட்கலாம்; என்றபோதும் கண்டோம். ஏனெனில் மக்களிடம் விரைவாக செல்வதற்கும் மீண்டும் மீண்டும் செல்வதற்கும் அவை வழிசெய்தன. மாறாக பாராளுமன்றத்தின் அல்லது ஜனாதிபதிப் பதவியின் ஆயுட்காலத்தை நீடிப்பதாக இருந்திருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும். ஏனெனில் அது ' வாக்குரிமையில்' எதிர்மறையான தாக்கத்தை செலுத்துகின்றது.


மாகாணசபையின் ஆயுட்காலம் நீடிப்பு
-------------------------------------
13ம் திருத்தத்தின்படி மாகாணசபையின் ஆயுட்காலம் 5 வருடங்களாகும். எனவே ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதாது, சர்வஜன வாக்கெடுப்பும் தேவை. ஏனெனில் ஆயுட்கால நீடிப்பு ' வாக்குரிமையில்' எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; என்பது இந்த வாதத்தின் அடிப்படையாகும். இவ்வாதம் சரியான போதிலும் இங்கு ஒரு விதிவிலக்கு இருக்கின்றது.

அதாவது மாகாணசபை முறைமையை அறிமுகப்படுத்திய 13 வது திருத்தச்சட்டம் சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் வெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமே கொண்டுவரப்பட்டது. நாளை அரசு நினைத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாகாணசபை முறைமையையே நீக்கிவிடலாம். மக்களுக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தையே இல்லாமல் செய்துவிடலாம். அந்த நிலையில் இத்திருத்தத்தை செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. ( இன்ஷாஅல்லாஹ், இது தொடர்பான விரிவான சட்ட விளக்கத்தை எனது தொடர்கட்டுரையில் தர விழைகிறேன்)

எனவே அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்  பெற்றால் திருத்தம் சாத்தியம். தேர்தலை ஒத்திவைக்கலாம். பெறமுடியாவிட்டால் தேர்தல் நடத்தப்பட்டே ஆகவேண்டும்.

அவசரகால சட்டம்.
-------------------
அவசரகாலச்சட்டத்தைக் கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

முதலாவது அரசாங்கம் நாட்டின் சகவாழ்வு பாதிக்கப்படுகின்ற ( threatening the life of the nation) ஒரு சூழ்நிலை எழாமல் நினைத்த நேரம் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தினால் சர்வதேசரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். ஏனெனில் ICCPR சரத்து 4 இன் படி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கான வலுவான காரணத்தை ஐ நா வுக்கு வழங்க வேண்டும்.

இரண்டாவது, அவசரகாலச்சட்டத்தின் கீழ் எந்தவொரு பாராளுமன்ற சட்டத்தையும் இடைநிறுத்தலாம்; அல்லது அவற்றிற்கு முரணாக ஜனாதிபதி வர்த்தமானி மூலம் சட்டம் இயற்றலாம். ஆனாலும் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தையும் இடைநிறுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. மாகாணசபையின் ஆயுட்காலம் என்பது அரசியலைப்பில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.

எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது தேர்தல் ஒத்திவைக்கக்பட முடியாது.

வை எல் எஸ் ஹமீட்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய