වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
2000.09.12 ஆம் திகதிசெவ்வாய்க்கிழமை
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்அவர்கள் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் முஸம்மில், அக்கரைப்பற்றைச் சேர்ந்தபொறியியலாளர் நஸீர்ஆகியோர்களோடு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர்ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கொழும்புவீட்டுக்குச் சென்று மன்சூர்அவர்களையும் அவரதுகுடும்பத்தினரையும் சந்தித்தார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களும் முன்னாள்அமைச்சர் மன்சூர் அவர்களும் ஒருவரைஒருவர் கட்டிப்பிடித்து அன்பைவெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதன் பின்னர் மர்ஹும் அஷ்ரப்அவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூர்அவர்களைப் பார்த்து “காக்கா (நானா) உங்களின் அரசியல் கொள்கைதான்முற்றிலும் சரி. எல்லாஇனத்தவர்களையும் அனைத்துச்செல்கின்ற உங்களின் செயல்பாடுதான்தற்போது நாட்டிற்குத் தேவை. அதனைநான் தற்போது உணர்ந்துவிட்டேன். அதன் நிமிர்த்தம் நான் தற்போது தேசியஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியைஆரம்பித்துள்ளேன். எங்களோடுநீங்களும் உங்கள் மகன் றஹ்மத்மன்சூரும் இணைந்து கொள்ளவேண்டும். கட்சிக்காக நீங்கள் எதுவும்செய்ய வேண்டிய அவசியமில்லை. எங்களோடு நீங்கள் இருந்தால் அதுவேபோதும். உங்களுக்கு செய்யப்பட்டஅநியாயத்துக்கு எப்பாடு பட்டாவதுஉங்களை ஒரு பிரதிநிதியாகபாராளுமன்றம் அனுப்பி அதன் மூலம்நான் சந்தோஷப்படுவேன்”. என்றுகூறுகின்றார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களின்வேண்டுகோளை மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்.
இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டுநாட்கள் கடந்த பின்னர்
2000.09.14 ஆம் திகதி வியாழக்கிழமைபாராளுமன்றத்தில். . . . . . .
அன்று குழுக்களின் பிரதித் தலைவர்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்செயலாளர் நாயகம் இன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள்,
கெளரவ பிரதி சபாநாயகர் அவர்களே! இன்னும் மகிழ்ச்சியான ஒரு விடயத்தைபேசிவிட்டு எனது உரையைமுடித்துக்கொள்கின்றேன். எமது தேசியஐக்கிய முன்னணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் என்ற நற்செய்தியைஇந்த சபைக்கு அறிவிக்கவிரும்புகின்றேன்.
பாராளுமன்ற ஹன்ஸாட் 2000.09.14 பக்கம் 363
இவர் பாராளுமன்றத்தில் பேசியஇரண்டு நாட்களின் பின்னர்
2000.09.16 ஆம் திகதி சனிக்கிழமைகாலை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்ஹெலிகொப்டர் விபத்தில் மரணமானார். ( இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிஊன் )
மர்ஹும் அஷ்ரப் அவர்களின் அகாலமரணத்தின் பின்னர், கட்சியில்முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள்எந்த வகையில் மதிக்கப்பட்டுள்ளார்? அவருக்கு கட்சியில் உரிய இடம்வழங்கப்பட்டதா? குறைந்தது அவரின்அரசியல் அனுபவங்களையாவதுகட்சியின் உயர்பீடம் பெற்றுக்கொள்வதற்கு முற்சித்ததும் உண்டா? மர்ஹும் அஷ்ரபினால் அன்பாககட்சியில் இணைக்கப்பட்டு உரிய இடம்வழங்குவதற்கு திட்டமிடப்பட்டவரும்தற்போதய தலைவர் ரவூப் ஹக்கீம்அவர்களால் இவரின் கட்சி இணைவைபாராளுமன்றத்தில் பெருமையாகபேசப்பட்டவருமான முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் சரியான முறையில் மதிக்கப்படாமல் கறிவேப்பிலையாகவே பாவிக்கப்பட்டார் என்பதே உண்மை.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின்இறுதிக்கால ஆசைப்படி முன்னாள்அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் உயிருடன் இருந்த போது கட்சியால் சரியாக அன்னார் மதிக்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அவருக்குஉரிய இடம் வழங்கப்படவில்லை.அவருடைய தமிழ் முஸ்லிம் உறவுக்கானசேவைத் திறனுடைய அனுவங்களையும்பெற்றுக்கொள்ளவில்லை.
Comments
Post a comment