Skip to main content

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

பொதுபல சேனாவை எதிர்க்காமல் நிதானபோக்கில் சென்றமையின் பின்னணி

ராஜித பொதுபல சேனாவுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை அஸ்கிரிய பீடத்துக்கு வழங்கவில்லை.

பொது பல சேனாவை பாராளுமன்றம் அழைத்து வந்து அவர்களின்  கோரிக்கைகளை செவிமடுத்த தற்போதைய ஆட்சியாளர்கள், அஸ்கிரிய பீடத்தின் கோரிக்கையை கலந்துரையாடுவோம் என்றாவது கூறாது, தாங்கள் அதனை கவனத்தில் கொள்ள மாட்டோம் என கூறி இலங்கை நாட்டு பௌத்த மக்கள் அனைவரையும் இழிவுக்கு உட்படுத்தியுள்ளதோடு இவ்வாட்சியாளர்கள் இலங்கை முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தியுள்ளதையும் அறிந்துகொள்ளச் செய்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றியவரே  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது..

இலங்கையில் உள்ள முக்கியமான அனைத்து மஹாநாயக தேரர்களும் அஸ்கிரிய பீடத்தில் ஒன்று கூடி தற்போதுகொண்டுவர முயற்சிக்கப்படும் அரசியலமைப்பு தேவையற்றது என முடிவெடுத்துள்ளனர்.

இவர்களின் இக் கருத்து தற்போதைய அரசை இவ்விடயத்தில்  பாரிய சவாலுக்குட்படுத்தும் என அனைவரும் கருதிஇருந்த வேளையில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜிதசேனாரத்தன, மஹாநாயக்க தேரர்களின்  முடிவுகளை தாங்கள் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என்ற ரீதியில் கூறியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கும் ஞானசார தேரருக்குமிடையில் பாரிய பனிப்போர்  ஒன்றே இடம்பெற்றுவருகிறது.இந்த நிலையில் ஞானசார தேரரின் கூற்றுக்களையும் செயற்பாடுகளையும் யாருமே அங்கீகரித்ததாகஇல்லை. இருப்பினும் தற்போதைய அரசு அவர்களை பாராளுமன்றம் அழைத்து வந்து அவர்கள் கோரிக்கைகள்தொடர்பில் ஆராய்ந்திருந்தது.இவரை கைது செய்வதில், இவர் ஒரு மதகுருவாவதால் இவரை மிகக் கவனமாகவேகையாள வேண்டும் என்ற நியாயங்கள் கற்பிக்கப்பட்டிருந்தன.இறுதியில் அவருக்கு உச்ச மரியாதையும்சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன.இவை அனைத்தும் மத குரு என்ற போர்வையை அவர் போர்த்தியிருந்ததால்கிடைத்தவையாகவே மக்களுக்கு காட்டப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜித இலங்கை பௌத்த மக்களின் பெரும் மதிப்பிற்குரிய அஸ்கிரிய பீடங்களின் முடிவு தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்று கூட கூறாது அதனை நாங்கள் கணக்கெடுக்கப்போவதில்லை என கூறி இருப்பதானது பாரிய சந்தேகங்களை கிளறி விடுவதோடு இலங்கையில் முழு பௌத்த மக்களையும் அவமதிக்கும்செயற்பாடாகும்.

இப்படி ஒட்டு மொத்த இலங்கை மக்களின் ஆதரவைப் பெற்ற இப் பீடங்களின் கருத்துக்களை புறந்தள்ளுபவர்களுக்கு ஞானசார தேரரை தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. இவ்வரசு பௌத்த மத குருக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமைக்கு பல ஆதாரங்களும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வரசுக்கு ஞானசார தேரர் சம்பந்தமான விடயங்கள் என்றால் தான் பௌத்த மத குரு என்றசிந்தனை கிளம்பி அனைத்தையும் தடை செய்யும்.

இங்கு இவ்வாட்சியை கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை வழங்கிய இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒருசெய்தி உள்ளது. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை விடுத்து இவ்வரசுக்கு எதிராகசெயற்பட்டால் அவர் மீது இவ்வரசின் சட்டம் பாயும் என்பதுவே அதுவாகும்.பௌத்த மதகுருக்களின் விடயங்களை இவ்வாட்சியாளர்கள் கவனமாக கையாளுவதானால் அஸ்கிரிய பீடத்தின் இம் முடிவுக்கு அதிக மரியாதைவழங்கியிருப்பார்கள்.இவைகளிலிருந்து இவ்வரசின் உண்மையாக முகம் படிப்படியாக வெளிப்படுகிறது.

அரசியல் அமைப்பில் கைவைப்பதை எதிர்க்கும் மஹாபீடங்களை தைரியமாக எதிர்க்க தயாராகிவிட்ட நல்லாட்சி பொதுபல சேனாவை எதிர்க்காமல் நிதானபோக்கில் சென்றமையின் பின்னணியை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய