முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
!
-எம்.வை.அமீர்-
கிழக்குமாகாணத்தில்
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாக, துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை கிழக்கு
மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் ஆசியா பவுன்டேஷனும் இணைந்து செய்துவருகின்றது.
ஏற்கனவே
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குறித்த கலந்துரையாடல்கள்
இடம்பெற்றுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நிந்தவூர்
தோம்புக்கண்டம் ஹோட்டேலில் 2017-07-10 ஆம் திகதி
இடம்பெற்றது.
சப்ரஹமுவ
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்f.இபதுள்
கரீம் தலைமையில், ஆசியா பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின்
நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக சப்ரஹமுவ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி றாஜ் ரத்னாயக்க
மற்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டிருந்த அதேவேளை, ஆசியா
பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ரி.தங்கேசும் பங்குகொண்டிருந்தார்.
அம்பாறை
மாவட்டத்திலிருந்து சுற்றுலாத்துறை சார்ந்தோரும் ஏனைய துறைகளுடன்
சம்மந்தப்பட்டோருமாக பலரும் பங்குகொண்டிருந்தனர். நிகழ்வின்போது சுற்றுலாத்துறையை
ஊக்குவிப்பது தொடர்பாக குழுச்செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துப் பரிமாறல்கள்
இடம்பெற்றது.குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment