ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முஸ்லிம் கூட்டமைப்புக்கு முயற்சி செய்வோரும் ஏற்கனவே இந்த சமூகத்தின் வாக்குகளை விற்று தின்றவர்களே
முஸ்லிம்களின் அரசியல் சக்தியைக்காட்டி அரசிடமிருந்து உரிமைகளை பெற்றுக்கொள்ள முஸ்லிம் கூட்டமைப்பு வேண்டும் என்ற கருத்து மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றும் தந்திரோபய வார்த்தையாகும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் உலமா கட்சியின் செயற்பாடு பற்றிய கலந்துரையாடல் கட்சி தலைமையகத்தில் நடை பெற்ற போது அவர் மேலும் கூறியதாவது
முஸ்லிம்களின் உரிமைகள் கிடைக்காமைக்கும், நல்லாட்சியில் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படுவதை தவிர்க்கவும் எதிர் வரும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக களமிறங்கி சமூகத்தின் அரசியல் பலத்தை காட்ட வேண்டும் என சிலர் சொல்வதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தின் கடந்த கால அரசியல் ஏமாற்று வரலாறு மறந்து விட்டதா என கேட்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு தமது அரசியல் சக்தியை உலகுக்கு காட்டியுள்ளனர். ஆனாலும் அந்த சக்தியை பெற்ற கட்சியும் முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம்களின் அரசியல் சக்தியை காட்டி சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தராமல் தமது ஆடம்பர வாழ்வை மட்டுமே பலப்படுத்திக்கொண்டனர் என்ற வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.
1994ம் ஆண்டு முஸ்லிம்களின் ஒற்றுமைப்பட்ட அரசியல் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரே கட்சியை ஏகபோக கட்சியாக முஸ்லிம்கள் பலப்படுத்தியதோடு சந்திரிக்காவுக்கு ஆட்சியதிகாரத்தை தீர்மாணித்த சக்தியாகவும் அக்கட்சியை முஸ்லிம்கள் ஆக்கியிருந்தனர். ஆயினும் முஸ்லிம்களின் ஒரு உரிமையாயினும் அக்கட்சி எழுத்து மூலம் உடன்படிக்கை செய்து பெற்றுத்தந்ததா? இல்லை. வெறுமனே அமைச்சு பதவிகளுக்கும் சேர்மன் பதவிகளுக்கும் சமூகத்தின் விடுதலை பலியாக்கப்பட்டதுடன் சமூகம் மிக மோசமாக காட்டிக்கொடுக்கப்பட்டது. அத்தகைய அரசியலின் பின்னரே முஸ்லிம்கள் பாரிய இழப்புக்களை சந்தித்தனர். தீகவாப்பி உட்பட பல முஸ்லிம்களின் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து முற்றாக பறி போயின.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஒற்றுமைக்காக, உயிரை துச்சமென மதித்து உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு மரம் பழுத்த பின் வந்த வவ்வால்கள் கட்சியை ஆக்கிரமித்தன. சமூகத்தை ஓரம் கட்டின.
அதன் பின் 2001ம் ஆண்டு இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசை நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு 12 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொடுத்து வரலாறு படைத்ததுடன் வெல்லவே முடியாது என மனமுடைந்து போயிருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியேற வைத்தனர்.
இந்த நிலையிலும் முஸ்லிம்களின் உச்ச அரசியல் அதிகார சக்தி வெளிக் காட்டப்பட்ட போதும் முஸ்லிம் சமூகம் எள்ளி நகையாடப்பட்டதே தவிர தலைவர்கள் தவிர சமூகம் நன்மையடையவில்லை. காரணம் நக்குண்ணி தலைவர்களின் சமூகம் பற்றிய அக்கறையின்றி தமது உல்லாச வாழ்வுக்கு சமூகத்தை விலை பேசியமையாகும்.
இவ்வாறான சுயநலத்தலைவர்கள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் துண்டுகளாகி பல கட்சிகள் உருவாகின. அதன் பின்னரே முஸ்லிம்கள் ஓரளவு அபிவிருத்திகளையும் சில உரிமைகளையும் பெற்றனர்.
முஸ்லிம் காங்கிரசால் ஓரம் கட்டப்பட்டிருந்த அக்கரைப்பற்று காத்தான்குடி என்பன வளம் பெற்றன. முஸ்லிம் காங்கிரசால் பெற்றுத்தர முடியாமல் போன மௌலவி ஆசிரியர் நியமனம் என்ற முஸ்லிம் சமூகத்தின் உரிமை உலமா கட்சியின் உருவாக்கத்தால் பெறப்பட்டது. ஹக்கீமினால் முற்றாக ஓரங்கட்டப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் ரிசாத் பதியுதீன் என்ற வேகமிக்க தலைமை மூலம் வளம் பெற்றனர். அதே போல் மு. காவுக்கு வாக்களித்து நடுத்தெருவில் விடப்பட்ட கிழக்கு முஸ்லிம்களும் அவரால் நன்மை அடைகின்றனர்.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் பல தடவை ஒற்றுமைப்பட்டு தமது அரசியல் சக்தியை காட்டியும் சுயநல கட்சிகள், தலைமைகள் காரணமாக சமூகம் புறந்தள்ளப்பட்டது. அதே போல் நல்லாட்சியை தீர்மாணிப்பதில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு போல் இனியும் வருமா என்ற நிலையிலும் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்றால் எதிர் வரும் கிழக்கு மாகாண சபையில் முழு கிழக்கும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்களித்தாலும் முஸ்லிம்களின் பலத்தின் நன்மை சமூகத்துக்கு கிடைக்காது என்பதகற்கு தற்போதைய கிழக்கின் ஆட்சியும் சாட்சியாகும்.
தற்போது கூட கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் என்பதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் சக்தி பாரிய அளவில் காட்டப்பட்டும் கிழக்கு முஸ்லிம்களின் ஒரு உரிமையாயினும் கிடைக்கவில்லை. மாறாக தலைவர்களின் சுக போகங்களே கிடைத்துள்ளன.
அதே போல் முஸ்லிம் கூட்டமைப்புக்கு முயற்சி செய்வோரும் ஏற்கனவே இந்த சமூகத்தின் வாக்குகளை விற்று தின்றவர்களே என்பதையும் நாம் மறக்க கூடாது.
ஆகவே முஸ்லிம்களின் அரசியல் பலத்தை காட்டுவதற்காக கிழக்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற ஏமாற்று வார்த்தைகளை அரசியல் விமர்சகர்களும் பொது மக்களும் தவிர்த்து விட்டு சுயநலனின்றி சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஒரு கட்சியில் ஒன்று பட்டு, சமூகத்துக்காக தமது உடல், உயிர், உடமைகளை தியாகம் செய்யக்கூடிய, சமயப்பற்றுள்ள புதிய உறுப்பினர்கள் ஒரு சிலரையாவது அவர்களை சுயேற்சையாகவேனும் பெறுவதன் மூலம் மட்டுமே முஸ்லிம்கள் தமது உரிமைகளை பெற முடியும். அதற்கான முயற்சிகளை கிழக்கு முஸ்லிம் சமூக பற்றாளர்கள் முடுக்கி விட வேண்டும் என்பதே உலமா கட்சியின் தூர நோக்கிய கோரிக்கையாகும்.

Comments
Post a comment