ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
( மினுவாங்கொடை நிருபர் )
டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த முப்பது
பேருக்கு எதிராக, மினுவாங்கொடை மாவட்ட நீதி மன்றில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் புரிந்த குற்றத்திற்காக தண்டப்பணமும்
அறவிடப்பட்டுள்ளது.
வீடுகள், உணவகங்கள் மற்றும்
அவற்றின் சுற்றாடலை அசுத்தமாக வைத்திருந்த குற்றத்தின் பேரில் இவர்கள்
மீது, மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபை பொது சுகாதாரப்
பரிசோதகர்களினால் இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மினுவாங்கொடை
பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் சீலனீ சத்துரந்தி பெரேராவினால் இவர்களுக்கு
எதிராக தண்டப் பணம் நியமிக்கப்பட்டது. சுற்றுச் சூழலை டெங்கு நுளம்புகள்
பரவும் வகையில் வைத்திருந்ததற்கான குற்றங்களை ஒப்புக்கொண்ட முப்பது
பேரிடமிருந்தும் தண்டப்பணமாக ஒரு இலட்சத்து 14 ஆயிரம் ரூபா பெற்றுக்
கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை, நில்பனாகொட, மடம்பெல்ல, வல்பிட்ட,
கொட்டதெனியாவ, படல்கம, மரதகஹமுல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30
பேரிடமிருந்தே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment