ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
-எம்.வை.அமீர்-
அர்ஷத் காரியப்பர் பௌண்டஷனின் பிரதான அனுசரணையில் சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இரவுநேர மின்னொளியிலான விளையாட்டு போட்டி.
சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் 2017-07-09 ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த இறுதிச் சுற்றுப்போட்டிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கட்சியின் பிராத்தித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை நிகழ்வுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமை தாங்கவுள்ளார்.
அர்ஷத் காரியப்பர் பௌண்டஷனின் தலைவரும் கல்முனை பிராந்திய உள நலவைத்திய அதிகாரியுமானவைத்திய கலாநிதிஅர்ஷத் காரியப்பரும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment