Skip to main content

Posts

Showing posts from July, 2017

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு சிங்களவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும்.

அர்ரா சக்க ++++++++ கிழக்கு மாகாண சபை கலைந்ததும், அதிகாரிகளுக்கு மேலதிகமாக,சபையில்  அரசியல் ரீதியாக அதிகாரம் பொருந்தியவர்கள் இருவர்தான் எஞ்சுவர். ஒருவர் ஆளுனர் ரோகித போகொல்லாகம, மற்றவர் சபைத் தவிசாளர் கலப்பதி ஆகும். மாகாண சபைகள் சட்டத்திற்கமைவாக சபையொன்றின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் பதவி, சபை கலைந்தவுடன் வறிதாகும். தவிசாளர் பதவி அடுத்த தேர்தல் முடிந்து புதிய சபை பதவியேற்கும் வரை தொடரும். எனவே, கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு சிங்களவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும். ஆதலால் கிழக்கின் அதிகாரம் முழுமையாக அடுத்த தேர்தல் வரை கிழக்கு சிறுபான்மை சமூகமான சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும். அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். ஆளுனர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர், தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். இவ்விரு தேசியக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதால் நன்மை அடையும். மாகாண சபைத் தேர்தல் எத்தனை வருடங்களுக்கு ஒத்திப் போடப்படும்? ஒத்திப் போடப்படும் வரையான அத்தனை காலமும் கிழக்கில் தனிச் சி

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவது அடுத்த இலக்கு! கலாநிதி ஜெமீல்

  தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராத்தியத்தில் உருவாக்கப்பட்டதன் காரணமாக கல்வியின் அடிப்படையில் இப்பிராந்தியம் எவ்வாறு கல்வியில் உயர்வுற்றதோ அதேபோன்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவி இன்னும் கல்வியாளர்களை உருவாக்கி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதே தங்களது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் கலாநிதி ஏ.எம்.ஜெமீலினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒலுவில் பிரதேசத்தில் தேவையுடைய 125 பேருக்கு கண்ணாடிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு 2017-07-29 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் முக்கியஸ்தர் ஏ.எல்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி என்பது கல்வியைக்கொண்டே அளவிடப்படுகின்றாது அந்த அடிப்படையில் இந்த பிரதேசத்தில் கற்ற ச

அரசியல்தீர்வில்அதியுச்சத்தைக்கோருவோர், முஸ்லிம்களைமிதிக்கநினைப்பதுஏன்?

முல்லைத்தீவில்அமைச்சர்றிஷாட் சுஐப்எம்காசிம் வடக்குமுதலமைச்சர்உட்படமுல்லைத்தீவுமாவட்டத்தின்ஒட்டுமொத்தஅரசியல்வாதிகள்இந்தப்பிரதேசமக்களுக்குமேற்கொண்டசேவைகளைக்காட்டிலும் , தானும்தனதுஅணியும்மிகவும்நேர்மையானமுறையில்கனதியான , காத்திரமானஅதிகளவுபணிகளைசெய்துள்ளதாகஅமைச்சர்றிஷாட்பதியுதீன்தெரிவித்தார். முல்லைத்தீவு , முள்ளியவளைநீராவிப்பிட்டியில்மீள்குடியேற்றவிசேடசெயலணிஊடாகவீடமைப்புக்கானநிதிஉதவிகள்வழங்கும்நிகழ்வில்பிரதமஅதிதியாகஅமைச்சர்றிஷாட்பதியுதீன்கலந்துகொண்டார். பாராளுமன்றஉறுப்பினர்காதர்மஸ்தான் , மாகாணசபைஉறுப்பினர்யாசீன்ஜவாகிர் , மீள்குடியேற்றசெயலணியின்பணிப்பாளர்யாசீன் , மீள்குடியேற்றசெயலணியின்மாவட்டஇணைப்பாளர்றிபாய்உட்படபலர்கலந்துகொண்டஇந்தநிகழ்வில்அமைச்சர்கூறியதாவது , முல்லைத்தீவுமாவட்டத்திலிருந்துயுத்தத்தினால்வெளியேறியசகோதரதமிழ்த்மக்களைமீள்குடியேற்றச்செய்வதிலும்இந்தப்பிரதேசத்தில்உடைந்துபோய்க்கிடந்த , அழிந்துபோயிருந்தஅத்தனைகட்டங்களையும்மீளக்கட்டியெழுப்பிதமிழ்மக்கள்இயல்புவாழ்க்கைக்குத்திரும்பிநிம்மதியாகவாழவேண்டுமென்பதில்முழுமூச்சுடன்உழைத்திருக்கின்றேன். இங்குள்ளகட்டடங்களும்குள

சாய்ந்தமருதில் ஐக்கிய தேசியக்கட்சியை புணரமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

-எம்.வை.அமீர்- சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாடுகளை விஷ்த்தரிக்கும் நோக்கில் அக்கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.றஸ்ஸாக் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் 2017-07-30 ஆம் திகதி இடம்பெற்றது. நீண்டகாலமாக கட்சியுடனேயே இணைந்திருக்கும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட குறித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு எதிர்வரும் 2017-08-07 ஆம் திகதி கிராம சேவகர் பிரிவு மட்டத்திலிருந்து கட்சியின் உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி அவர்களது கருத்துக்களையும் பெற்று முழுவீச்சில் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. மத்தியில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி இருக்கின்றபோதிலும் காலங்காலமாக அக்காட்சியிலேயே இணைந்திருக்கும் கட்சிக்காரர்கள் இரண்டாம்தர உறுப்பினர்களைப்போல் நடத்தப்படுவது தொடர்பில் உறுப்பினர்களால் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கட்சி தொண்டர்களை தக்கவைப்பது என்றால் இனியாவது அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கியே உயர்மட்டங

நமது நாடும் அதன் நடு நிலை பேணலின் பாதகமும்

பிராந்தியத்தில் தங்களது நலனையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்று 2015 இல்தீவிரமாக செயல்பட்டு அத்திட்டத்தில் வெற்றியும் கண்ட இரண்டு முக்கிய வெளிநாடுகள் தாங்கள் கொண்டுவந்த புதிய அரசு, நேற்று சீன அரச கம்பனியுடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிமிடம் படு தோல்வியைச் சந்தித்துள்ளன. ஹம்மாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதையும், மத்தல விமான நிலையம் இவ்வருட இறுதியில் சீனாவுக்கு வழங்கப்பட இருப்பதையும் சமன் செய்து ஈடு செய்ய, திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு என்று கூறி விரைவில் இந்தியாவுக்கு  வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தத்திலும், எட்கா ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையைழுத்திட உள்ளன.வடக்கில் உள்ள நாட்டு வளங்களும், ஏனைய சில கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் அமைந்துள்ள அரச துறைகளும் அபிவிருத்தி செய்வதற்கென இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன. ஆக, தெற்கை சீனாவுக்கும் வடகிழக்கை இந்தியாவுக்கும் கொடுத்து இலங்கை தன்னைத் தானாகவே இரண்டாகப் பிரித்துக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகளா

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

Y L S Hameed _---------------- அடுத்த இரண்டொரு மாதங்களில் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்ற சூழ்நிலையில் சகல மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் ஒத்திப்போடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இம்மாகாண சபைத்தேர்தல்களை ஒத்திப்போடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இருக்கின்றதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சிலர் அவ்வாறு செய்வதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை; என்று வாதிடுகையில், இன்னும் சிலர் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் அதனைச் செய்யலாம் என்று வாதிடுகின்றனர். வேறு சிலர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால்கூட அவ்வாறான ஒரு திருத்தத்தினை கொண்டுவர முடியாது; என வாதிடுகின்றனர். இதன் யதார்த்த நிலை என்ன? 13 வது திருத்தமும் மாகாணசபைத்தேர்தலும் ---------------------------------------- மாகாண சபைகளை கலைத்தல் ------------------------------ ஒரு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன் மாகாண

நபியவர்கள் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தார்கள்??

Zainudeen Cader நபியவர்கள் எழுதவ வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். அதனால் முன்னைய வேதங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவைகளை வைத்துக் குர்ஆனை உருவாக்கிக் கொண்டார்கள் என்று இஸ்லாமிய எதிரிகளான மேற்கத்தேய வாதிகளும் ஓரியண்டலிஸ்ட்களும் (Orientalists) நபியவர்களைக் களங்கப்படுத்தும் நோக்குடன் வாதிடுகினறனர். முஸ்லிம்களில் சிலரும் நபியவர்களை எழுத வாசிக்கத் தெரியாத முட்டாளாக்குவதா என்னும் சிந்தனையில் அதற்குத் துணை போகின்றனர். அதனால் நபியவர்கள் எழுதவும் வாசிக்கவும்  தெரிந்திருந்தார்களா என்பது இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாகப் முஸ்லிம்களைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இப்பதிவு இடம்பெறுகிறது. இது இருபகுதிகளைக் கொண்டது. பகுதி -1 உம்மி சமூகம் என்றால் என்ன என்பது பற்றியதும் பகுதி -2 உம்மி நபி என்றால் என்ன என்பது பற்றியதுமாகும். இப்பதிவேற்றத்தின் இறுதிப் பகுதியில் ஹ¬தைபியா உடன்படிக்கை பற்றிய ஹதீஸ்களும் அலசப்படுகின்றன. பகுதி -1 உலகத்தில் அல்லாஹ் மனித சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதற்காக அவ்வப்போது வேதங்களையும் நபிமார்களையும் அனுப்பி வைத்தான். இவ்வாறு அனுப்பப்பட்ட வேதங்களும் நபிமார்களும் அல்லா

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச