Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

உடலையும் உள்ளத்தையும் நோயின்றி வைத்துக் கொள்ளும் நோன்பு


    

   உடலையும் உள்ளத்தையும் நோயின்றி வைத்துக்கொள்ளவும், ஆசைகளிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுதலை பெறவும், அல்லாஹ்  இஸ்லாமிய மக்களுக்கு நோன்பை கடமையாக்கியுள்ளான்.
   நோன்பு என்பது,  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இறை குணங்களை உணருவதற்கும், மன இச்சைகளைக் கட்டுப்படுத்துவற்குமான ஒரு வழிமுறையாகும்.
   ஒரு நாளில் பத்துத் தடவைகளுக்கு மேல்  டீ , கோப்பி மற்றும் குளிர் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கிறார்கள். 
ஒரு மணி நேரத்திற்குள் பல முறை பீடி, சிகரெட் என்று புகைப்பவர்களும், சதா வெற்றிலை பாக்குடன் வாயில் போட்டுக்  குதப்புபவர்களும், நேரம் காலம் இல்லாமல்  வயிறு புடைக்க உணவை உண்பவர்களும் இருக்கின்றார்கள்.
   இவர்கள் ஒருமாத 
காலம் அல்லாஹ்வின் கட்டளைப்படி  நோன்பு இருப்பதன் மூலம், தமது உடல் முறையற்ற பழக்கங்களுக்கு உட்படாமலும், நோயின்பால் ஈர்க்கப்படாமலும் நன்முறையில்  புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றது.
      நோன்பு என்பது,  பசியை உணருவதற்காக    அல்ல.
   அல்லது தண்ணீரையோ, பழங்களையோ சாப்பிட்டு விட்டு உணவு உண்ணாமல் இருப்பதல்ல. சுமார் 14 மணிநேரம் வரை  தண்ணீரையோ,  உணவையோ உட்கொள்ளாமல் எந்த ஜீரண உறுப்புக்களுக்கும் வேலை கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த நோன்பாகும். அப்போது தான், உடல் தன்னிடம் தேக்கிவைத்துள்ள சக்தியை (Stored Energy)
உடலின் இயக்கதிற்குத் தக்கவாறு செலவிடும். அதனால், தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படும்.
   ஆஸ்துமா என்பது நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒரு நோய். அதிகாலையில் ஆஸ்துமா நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்க்கின்றோம்.
ஆஸ்துமா நோய், அந்த அதிகாலை வேளையில் ஏன் அவர்களை  எழுப்பவேண்டும் ... ?
   சீன அகுபங்சர் மருத்துவத்தின் தத்துவப்படி,  நமது   உடல்      உள் உறுப்புக்கள்  ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட  இயக்க நேரம் உள்ளது. (Biological Clock). 
   மனிதன் நாள் முமுவதும் சுவாசித்தாலும்,  அவனது நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். நமது நுரையீரல், நாள் முழுவதும் இயங்குவதற்கான எனர்ஜியை, அந்த நேரத்தில் தான் வெளிப்புற பிரபஞ்ச சக்தியிலிருந்து கிரகித்துக் கொள்கிறது.
   நாம் தூங்கும்போது ஐம்புலன்களும் முழுமையாக இயங்காமல் இருக்கும். தூக்க நிலையில் நுரையீரல் இயங்குவதை விட, விழித்திருக்கும் போது இயங்கும் சுவாசமானது, நுரையீரலை நன்முறையில் புதிப்பிக்கின்றது.
    இஸ்லாமிய பெருமக்கள் அல்லாஹ்வின்  கட்டளைப்படி நோன்பு காலங்களில் நோன்பு நோற்கவும், ஏனைய  நாட்களில் அதிகாலையில் தொழுகைக்கு  ( தஹஜ்ஜுத், பஜ்ர் )  ஆயத்தமாவதும், தமது நுரையீரலை சிறந்த முறையில் இயங்க வைக்க வேண்டும் என்கின்ற, நல்ல தத்துவத்தின் அடிப்படையிலான செயற்பாடுகளாகும்.
   நோன்பு வைப்பவர்கள், அதிகாலை வேளையில்  நோன்பிற்கான உணவை (சஹர்) சாப்பிடுவார்கள். அதன் மூலம், நாம் வழக்கமாக உண்ணும் உணவின் நேரம் திசை திருப்பிவிடப்படுகிறது.  இதனால் அனைத்து நோய்களுக்கும் காரணமான வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற நமது ஜீரண உறுப்புக்களில் அமில சுரப்பிகள் குறைந்து, அவ்வுறுப்புக்கள் வலுப்பெற்று வயிற்று உப்புசம், தலைவலி, புளித்த ஏப்பம், மயக்கம், வயிற்று எரிச்சல், அடிக்கடி பசித்தல், மலச்சிக்கல் போன்ற பலவிதமான நோய் உபாதைகளிலிருந்து விடுதலை பெறுகிறோம். 
   மேலும், நீண்டகால நோய்களுக்குக் காரணமாகவுள்ள,  உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன. நம் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன.  "சஹர்" எனும் அதிகாலை உணவை,  யாருக்கெல்லாம் சாப்பிடமுடியாமல் மயக்கம் ஏற்படுவது போலவும், வாந்தி வருவது போலவும் தோன்றுகின்றதோ அவர்களுடைய ஜீரண உறுப்புக்கள் கெட்டுப்போய், பித்தம் அதிகமாக தேக்கம் கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
காலையிலிருந்து,  மாலை நோன்பை முடிக்கும் நேரம் வரை, அடக்கி வைத்திருக்கும் உணவின் ஆசையை நோன்பு முடித்து, உணவு உண்ணும் நேரத்தில் கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது, நோன்பின் அடிப்படைக் காரணத்தையே இது தகர்த்துவிடும்.
   நோன்பை முடிக்கும் தருவாயில் அதிகமாக பசியும், தாகமும் இருப்பது இயற்கை தான். அதைப் பின் வருமாறு கடைப்பிடிப்பது நமது உடலுக்கு நல்லது.
   நோன்பு துறக்கும் போது பலவித அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து இருக்கும். அந்த அமிலங்களையும், வயிறு மற்றும் குடல்களில் உள்ள கசடுகளையும் நீக்கும் சக்தி வாய்ந்த மருந்து, சுத்தமான தேன் ஆகும். இது வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்புசம், புளித்த ஏப்பம், உணவு ஜீரணிக்காமல் இருத்தல்,  விக்கல் போன்ற பலவிதமான உபாதைகளை நீக்குவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கக்கூடியது.
*  பேரிச்சம் பழத்தை தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
*  எலுமிச்சம் பழச் சாற்றில் ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் இனிப்புக்கு ஏற்றவாறு, தேன் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது.
*  எலுமிச்சம் பழச் சாற்றை விரும்பாதவர்கள் சாத்துக்குடி, அன்னாசி பழச்சாறு போன்றவற்றை  தேனில் கலந்து சாப்பிடலாம்.                            *  சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள், காய்கறி சூப், நாட்டுக் கோழி சூப், ஆட்டு சூப் போன்றவைகளை காரம் சேர்க்காமல் சிறிது மிளகு, சீரகம் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.
*  நோன்புக் கஞ்சி கொண்டு நோன்பைத்  திறப்பவர்கள், முதலில் பேரிச்சம் பழத்தை நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.  அதன் இனிப்புச் சுவை நமது வயிற்றின் இயக்கத்தைத் தூண்டி, ஜீரணத்தை நிலைபடுத்தக் கூடியது. எந்த உணவுக்கு முன்பும் சிறிது இயற்கையான இனிப்பு வகை  சாப்பிடுவது, வயிற்றின் இயக்கத்திற்கு நல்லது. 
*  கஞ்சியுடன் பேரிச்சம் பழம், சிறிது தண்ணீர் தவிர வேறெந்த உணவையும் சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.
* எண்ணெய்யில் பொறித்தவைகளை, அவசியம் இயன்றளவு நோன்பு திறக்கும் நேரத்தில் தவிர்ந்து கொள்ள  வேண்டும். தேவைப்பட்டால்  ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது.
*  தேனீர், கோப்பியைத் தவிர்க்க முடியாதவர்கள், சுமார் அரை மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். 
*  எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது.  அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள், எண்ணெய்யில் பொரித்த பஜ்ஜி, வடை, சமோசா போன்றவைகளை உணவு உண்ணும்போது சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
*  ஐஸ் மற்றும் குளிர் பானங்கள், சோடா, கோலா மற்றும் சீனி கலந்த பானங்களை  பருகவே கூடாது. 
   மேலே சொல்லப்பட்ட பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு, சுமார் 45 நிமிடம் வரை எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
    இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு உண்ணுவதால், உணவு நன்கு ஜீரணிக்கப்பட்டு வயிற்று உபாதைகள் இல்லாமலும், இரவு நேர வணக்கத்தில் ( தஹஜ்ஜுத் ) மயக்கம், தளர்ச்சி,  சோர்வு, இல்லாமலும் உடல்  நல்ல முறையில் இயங்கும்.
*  அதிகம் சாப்பிட நினைப்பவர்கள் உணவை இரண்டு வேளையாக பிரித்து 7 மணிக்கு ஒருவேளையும், 10 மணிக்கு இன்னொரு வேளையுமாகச்  சாப்பிடுட வேண்டும்.  
*  வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கஷ்டப்படுபவர்கள், சிறிது சிறிதாக கொஞ்சம் வெந்நீர் அருந்தினால்,  ஜீரணத்திற்கேற்பவாறு வயிறு பதப்பட்டுவிடும்.
*  "வருடா வருடம் நோன்பு வைக்க நினைக்கிறேன். ஆனால்,  என்னால் முடியவில்லை. எனது உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை" என நினைப்பவர்கள் 
NUX VOMICA - 30c  என்கின்ற ஜெர்மன் ஹோமியோபதி மாத்திரை ஒன்றை 20 மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து, நோன்பின் முதல் நாள் அன்று இரவு தூங்கச் செல்லும்போது குடித்துவிட வேண்டும். தேவைப்பட்டால், வீட்டில் உள்ள அனைவர்களும் சாப்பிடலாம். 
   ஒரே ஒரு வேளை  சாப்பிட்டால் போதும். 
மேற்கூறியவைகளைக் கடைப்பிடிப்பதால், 
"வருடம் முழுவதும் நோன்புக் காலமாக இருக்கக் கூடாதா ... ?" 
என, நமது  மனதில் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்.
    இம்மாதம் நாம்  வைக்கும் நோன்பிற்கும், இதற்கு முன்பு நாம் வைத்த நோன்பிற்கும் இடையில் நிறைய  வித்தியாசங்களை எம்மால் நன்கு  உணர்ந்து கொள்ள முடியும்.
     அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான உடலையும், தெளிவான உள்ளத்தையும் கொடுத்து, நோன்பின் நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்கு  நல்லருள்  புரிவானாக ... !
 ஆமீன் ... !

- மெளலவி ஐ. ஏ. காதிர் கான் ( தீனிய்யா )

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத