Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

ஏன் கட்டாரை தனிமைப்படுத்தப் பார்க்கிறார்கள்?


அஷ்கர் தஸ்லீம்

அரபுலக - மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க- அரசியலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகளை எந்த இடத்தில் வைத்து நோக்குவது என்பது அவ்வளவு சிக்கலான ஒரு காரியமல்ல. அரபு வசந்தத்தை தொடர்ந்து எழுந்து வந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினதும், துருக்கி - கட்டார் கூட்டணியினதும் செல்வாக்கை முடக்குவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் இந்த அறிவிக்கப்படாத கூட்டமைப்பு மிகச் கச்சிதமாக நடாத்தி வந்தமையானது, இந்நாடுகளின் பிராந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரங்களாகும்.

எகிப்து மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த  கலாநிதி முஹம்மத் முர்ஸியை சதிப்புரட்சி மூலம் கவிழ்ப்பதற்கு பல்வேறு தளங்களிலும் அணுசரனை வழங்கியது முதல் சில வருடங்களுக்கு முன்னர், வளைகுடா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் கட்டார் தலையிடுவதாகச் சொல்லி கட்டாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது மற்றும் திரைமறைவில் கட்டாரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக சியோனிஸ மதியுரையகங்களுடன் (Think Tank) இணைந்து வேலைகளைச் செய்தது வரையிலும் இதனைப் பட்டியலிடலாம். ஆக மொத்தத்தில், இந்த நாடுகளின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும், துருக்கி - கட்டார் கூட்டணிக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளன.

இவ்வாறிருக்கையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை மீண்டும் முறித்துக்கொள்வதாக இன்று (05) அறிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை (03), குளோபல் லீக்ஸ் என்ற ஹேக்கர்கள், அமெரிக்காவுக்கான எமிரேட்ஸ் தூதுவர் யூசுப் அல்உதைபாவின் ஈமெயிலில் ஊடுருவி, எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலிய ஆதரவு மதியுரையகமான எஃப்.டி.டி. (Foundation for Defense of Democracies)  இற்கும் இடையிலான இரகசிய உறவு  குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கின்ற நிலையிலேயே, எமிரேட்ஸ் உள்ளிட்ட இந்த நாடுகளின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த எஃப்.டி.டி. மதியுரையகத்துடன் இணைந்து கட்டாரை குறைமதிப்பிடு செய்து, கட்டாரை தாழ்த்துவதற்கான வேலைகளை எமிரேட்ஸ் செய்து வந்துள்ளமை இந்த ஊடுருவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதே நேரம் யூசுப் அல்உதைபா, கட்டாரை குறைமதிப்பீடு செய்து எழுதும் ஊடகவியலாளர்களுக்கு சன்மானங்கள் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதுவல்லாது, இந்த மதியுரையகத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவர், அர்தூகானை இரர்ணுவ அதிகாரத்தின் மூலம் பதவிகவிப்பது குறித்த கட்டுரையொன்றையும் எழுதியுள்ளார். எனவே, கடந்த வருடம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்டு, தோற்றுப்போன சதிப்புரட்சியில் எமிரேட்ஸின் திருவிளையாடலும் உள்ளதா என்ற சந்தேகமும் இப்போது வலுப்பெற்றுள்ளது என்பது மேலதிக தகவல்.

சவூதி அரேபியா கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொள்வது குறித்த செய்தியை, சவூதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டார் நாடானது பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளுக்கும், குழுவாதிகளுக்கும் புகலிடம் வழங்குவதாகவும் சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது. அத்தோடு, கட்டாருடனான எல்லையை மூடியுள்ள சவூதி அரேபியா, கட்டாருடனான வான், கடல்வழிப் போக்குவரத்தையும் இடைநிறுத்தியுள்ளது.

அத்தோடு, சவூதி அரேபியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான பஹ்ரைனும், கட்டாருடனான வான், கடல்வழி தொடர்புகளை துண்டித்துக்கொள்வதாக, அதன் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பஹ்ரைனின் உள்ளக விவகாரங்களில் கட்டார் தலையிடுவதாக பஹ்ரைனும் குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், எகிப்தின் வான் பரப்பு மற்றும் துறைமுகங்களை கட்டார் பயன்படுத்த முடியாது என்று எகிப்தும் இன்று (05) அறிவித்துள்ளது. மேலும், பயங்கரவாத, தீவிரவாத, குழுவாத அமைப்புக்களுக்கு கட்டார் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி வழங்குவதனால், கட்டாருடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக எமிரேட்ஸும், அதன் அரச செய்தி நிறுவனத்தின் ஊடாக இன்று அறிவித்துள்ளது. இந்த நாடுகள் அனைத்தும், கட்டார் இராஜதந்திரிகள் 48 மணித்தியாலங்களில் தமது நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கட்டார் பிரஜைகள் 2 வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளன.

இந்த நாடுகளின் முடிவு குறித்து கட்டார் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த முடிவானது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இந்த நாடுகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. இந்த முடிவால் கட்டார் பிரஜைகளதும், கட்டாரில் வாழ்வோரதும் சாதாரண வாழ்வுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த முடிவின் இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது. கட்டாரின் மீது அதிகாரம் செலுத்தவே இவர்கள் முயல்கின்றனர். இது கட்டாரின் இறையாண்மைக்கு எதிரானதாகும் என்றும் கட்டார் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரபுலகில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும், துருக்கி - கட்டார் கூட்டணியும் இருக்கின்றமையினாலேயே, இந்த வளைகுடா நாடுகளும், எகிப்தும் இணைந்து கட்டாரை தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக கட்டாரை தனிமைப்படுத்தும்போது, வேறு வழியில்லாமல், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு கட்டார் வழங்குவதாகச் சொல்லப்படும் ஒத்துழைப்பும் ஆதரவும் நிறுத்தப்படலாம் என்று இந்த நாடுகள் கனவு காண்கின்றன. ஆனால், இந்த தனிமைப்படுத்தல் முயற்சியை கட்டார் வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும் என்ற பரவலான எதிர்பார்ப்பு மத்திய கிழக்கு மக்களின் சமூக வலைதள பதிவுகளைப் பார்க்கையில் தெரிகின்றது.

இதேவேளை, யெமனில் ஈரானின் ஆதரவுடன் இயங்குகின்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுகின்ற சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டமைப்பில், இனிமேலும் கட்டாருக்கு எந்தவொரு வரவேற்பும் கிடையாது என்று, இந்த இராணுவக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. அத்தோடு, கட்டாரானது தமது எதிரிகளான ஹூதிகளுடன் இணைந்து செயற்படுவதானல், தாமும் கட்டாருடனான உறவை முறித்துக்கொள்வதாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள யெமனின் அரசாங்கமும அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உடனடிக் காரணம், சமீபத்தில் கட்டாரின் அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, வெளியிடப்பட்ட சில போலியான செய்திகளாகும் என்றும் நம்பப்படுகின்றது. கடந்த செவ்வாயன்று, கட்டாரின் அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, இந்த நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அறிக்கை வெளியிட்ட கட்டார் அரசு, அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அறிவித்தது. ஆனால், இந்த நாடுகளோ, மீண்டும் மீண்டும் அந்தப் போலியான செய்திகளை மீள்ஒளிபரப்பு செய்து, மக்கள் மனதை மாற்ற முனைந்தன.

அரபுலகில் பலம்வாய்ந்த நாடாக விளங்கிய ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அடுத்த இலக்கு கட்டாராக இருக்குமோ என்ற அச்சம் அரபுலகில் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜானதிபதி டொனல்ட் டிரம்ப் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட சில வாரங்களிலேயே, கட்டாருடனான இராஜதந்திர முறிவை சவூதியும் அதன் கூட்டாளிகளும் அறிவித்துள்ளமையானது, இந்த சந்தேகத்தை மீண்டுமொரு முறை வலுவுறச் செய்துள்ளது. எவ்வாறாயினும், கட்டார் இந்த சதிமுயற்சிகளை தாண்டிப் பயணிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத