முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
பாரிய
எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை ஊழலின்றி மக்களுக்களுக்காக
செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட
அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இன்று
பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஏற்பாட்டில் அவரது வவுனியா அலுவலகத்தில்
இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வட
மாகாண சபை மிக நீண்ட காலத்துக்கு பிறகு எமது மக்களின் பாரிய
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் எனினும்
இப்பொழுது மாகாணசபைக்குள் நடப்பது என்னவென்றே விளங்கவில்லை.
வட
மாகாணசபையில் ஊழல்கள் காணப்படுமாக இருந்தால் மக்களுக்கும் யாரை மக்கள்
பிரதிநிதிகளாக தெர்ந்தெடுப்பது என்ற கேல்விநிலை தோன்றியிருக்கின்றது மக்கள்
பிரதிநிதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களின் தேர்வுகளில் பிழை என்பதை வட
மாகாண சபை நிரூபித்து விடாமல் மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிய
மாகாண சபையாக இருப்பதற்கான வழி வகைகளை தேடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உண்மையில்
யுத்தத்துக்கு பின்னர் வடக்கில் மீண்டும் தமிழ் மக்களின் கல்விநிலையில்
வளர்ச்சி ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது எனவே அதற்கு வட மாகாண சபை மேலும்
வலு சேர்க்க வேண்டும்
ஆனால் இன்று கல்விக்கு
வலு சேர்க்க வேண்டிய மாகாண கல்வியமைச்சில் ஊழல் , எமது பகுதிக்கே
உரித்தானது விவசாயம் ஆனால் இங்குள்ள விவசாய அமைச்சிலும் ஊழல் என்றால்
என்னதான் செய்வது.
கடந்த ஆட்சியில் ஊழல் அதிகமாக
காணப்பட்டதால் சிறுபாண்மையினரின் மூலம் இந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது ஆனால்
சிறுபாண்மையினர் பெரும்பான்மையாக காணப்படும் வட மாகாணசபையில் ஊழல் என்றால்
என்ன செய்வதென்று வட மாகாண மக்களே முடிவெடுக்க வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
Comments
Post a comment