වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொலிஸார் கட்டுப்படவில்லை என்றால் அந்தபதவியில் அவர்கள் தொடர்ந்து இருக்க அருகதை அற்றவர்கள் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
இப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா உரையாற்றியதை காணக்கிடைத்தது. இந்த நாட்டில் உள்ள ஓட்டு மொத்த முஸ்லிம்களும் முட்டாள்கள் என்ற நினைப்பில் அவரது உரை இடம்பெற்றிருந்தது
தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்து விமர்சனம் செய்துள்ள சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற மாவனல்லை கலவரத்துக்கு எதிராக அவர் அப்போது நிலைநாட்டிய நீதி என்ன? என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இதே சந்திரிக்காவின் அரசாங்கத்தில் 1999ம் ஆண்டு களுத்துறை வெட்டுமங்கடை UC மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல் முஸ்லிம் சிங்கள மக்களிடையே இனக்கலவரமாக வெடித்தது. அதன் போது முஸ்லிம்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன. அப்போது களுத்துறைத் தொகுதி UNP அமைப்பாளராக இருந்தவர் ராஜித சேனாரத்னவாகும். அன்று சந்திரிக்கா அம்மையாரின் அரசை கவிழ்க்க முஸ்லிம்களையே ஆயுதமாக பாவித்தனர்.அதற்கு சந்திரிக்கா அரசு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அலுத்கமை கலவரத்துக்கு என்ன நீதியை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை அவரது பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த முஸ்லிம்கள் அவரிடம்கேட்டிருந்தால் அவர் என்ன பதில் கூறியிருக்க முடியும்.
மைதிரியின் ரிமோட் கொன்றோலை தன்னிடம் வைத்துள்ள சந்திரிக்க இவ்வாறு நாடகமாடி மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை முட்டாள்களாக்க முயற்சிக்க கூடாது என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment