ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
-எம்.வை.அமீர் யூ.கே.காலிதின்.-
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் இம்முறையும் கதீப் மற்றும்
முஅத்தின் மார்களுக்கான சமய, சமூக பயிற்சிப்பட்டறையும் சான்றிதழ் மற்றும் உதவி
வழங்கும் நிகழ்வு பள்ளிவாசலில் 2017-06-18 ஆம் திகதி தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில்
செயலாளர் யூ.கே.காலிதின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துள் உலமா சபையின் சாய்ந்தமருது
கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.சலீம் (ஷர்கி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
முன்மாதரியான இமாமும் முஅத்தினும் எனும் தலைப்பில் அஷ்செய்க் ஏ.எம்.றியாஸ் (பயானி)
யும் அதானும் அதன் முறைகளும் எனும் தலைப்பில் அஷ்செய்க் யு.எல்.அப்துல்லாஹ் ஜமால்(ஹிழ்ரி),பேஷ்
இமாம் தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் அவர்களும் கண்ணியமான இமாம்களும் முஅத்தின் மார்களும்
எனும் தலைப்பில் நிந்தவூர் அர் றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட
விரிவுரையாளர் அஷ்செய்க் ஏ.எம்.அப்துல் ஹமீத் (அஹ்சனி) அவர்களும் விரிவுரைகளை
வழங்கிய அதேவேளை துஆ பிராத்தனையை ஸஹ்த் அரபிக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க்
ஏ.எஸ்.எம்.ஹபீல் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வும் இறுதியில் சான்றிதழ்களும் உதவிப்பொருட்களும்
வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment