වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
1989ன் இறுதிப்பகுதியில் என நினைக்கிறேன்
EPRLF தலைவர் திரு. பத்மநாபாவின் உத்தரவுக்கு இணங்க முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.வரதராஜப்பெருமாளினால் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை கையேற்று முஸ்லிம்கள் மத்தியில் பிரித்துக்கொடுத்ததை குற்றச்செயலாக சித்தரித்து கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவராயிருந்த முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் சேகு இஸ்ஸதீனை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர்.
இது அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சன் விஜேரத்னாவின் உத்தவின் பேரில் நடைபெற்றது.
இக்கைது நடைபெறும் வேளையில் முஸ்லீம்களின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்றைய வெளிவிவகார அமைச்சர் மர்ஹூம் A.C.S. ஹமீதின் காரியாலயத்தில் மு.கா. தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் தலைமையிலான குழுவுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தொலைபேசி அழைப்பொன்று வரவே அதை எடுத்து 'அஷ்ரப் உங்களுக்குத்தான் பேசுங்கள்' என்று அமைச்சர் ஹமீத் தொலைபேசியை மு.கா. தலைவர் அஷ்ரபிடம் கொடுத்தார். பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் முகம் மாறிக்கொண்டிருந்தது.
இரண்டு நிமிடங்களே பேசிவிட்டு டெலிபோனை அமைச்சர் ஹமீதிடம் கொடுத்தவராக கூறினார் 'ஜனநாயக, சட்ட ரீதியான வழிமுறைகள் இனி சரிவராது போல் தெரிகிறது. நாம் மாற்று வழிகளை பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டு மர்ஹூம் அஷ்ரப் இருக்கையை விட்டு எழுந்ததும் விடையம் ஏதென்று தெரியாமலேயே நாமும் ஆசனங்களிலிருந்து எழும்பினோம். ' என்ன அஷ்ரப் என்ன நடந்துது ஏன் இப்படி ஒரு பதட்டம் என்று அமைச்சர் ஹமீத் வினவவும் நின்றுகொண்டே 'இஸ்ஸதீனை கைது செய்துள்ளார்கள், இன்னுமென்ன பேச இருக்கின்றது. வேறு வழிகளை தேர்ந்து கொள்கிறோம் சேர்' என்று மர்ஹூம் அஷ்ரப் சற்று விரக்தியுடன் கூறினார்.
சற்று விபரமாக நடந்ததை கூறுங்கள் என அமைச்சர் ஹமீத் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கைதின் பின்னனியையும் சற்று விபரமாக கூறினார்.
விசயத்தை உள்வாங்கிக்கொண்டு அமைச்சர் ஹமீத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சிறில் ரணதுங்கவை தொடர்பில் எடுத்து 'இவ்விடையம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும், சுமுகமாக தீர்க்க முனையுங்கள் என்ற விதத்தில் பேசி விட்டு எம்மிடம் சொன்னார் 'ஆத்திரப்படவேண்டாம் சுமூகமாக தீர்த்துக்கொள்வோம்' என்று.
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் 'முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் பாதுகாப்பு தாருங்கள் என்று நாங்கள் கூக்குரலிட்ட போதெல்லாம் செவிடர்களாக இருந்துவிட்டு மாகாண சபையூடாக சட்ட ரீதியாக ஆயுதத்தை பெற்றதற்கு இஸ்ஸதீனை கைது செய்வது எந்த வகையில் நியாயம் சேர்? அப்படி கைது செய்வதென்றால் முதலில் ஆயுதத்தை வழங்கிய முதலமைச்சரையல்லவா கைது செய்ய வேண்டும். அதற்கு துணிவில்லை எங்களுடன் விளையாடுகிறார்கள்'என்று சொல்லிக்கொண்டிக்கும் போது தொலைபேசி அழைப்பொன்று வர அமைச்சர் ஹமீத் இம்முனையில் பேசினார்.
அவர் பேசியதை அவதானித்ததில் மறுமுனையில் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பேசுவதை ஊகிக்க முடிந்தது.
'எனது அமைச்சு விடயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்று திரு.ரஞ்சன் விஜேரட்னா கேட்டிருக்க வேண்டும் என்பதை அமைச்சர் ஹமீதின் உரையாடலிலிருந்து புரிந்து கொண்டோம். இறுதியாக சற்று காரமாக பேசிவிட்டு தொலைபேசி உரையாடலை துண்டித்துவிட்டு ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் தொடர்பை ஏற்படுத்தி நடந்து விடையங்கள் அனைத்தையும் கூறிவிட்டு இறுதியாக கூறினார் 'சேர் நாளை காலைக்குள் இஸ்ஸதீன் வெளிவரவில்லையென்றால் இந்த ஹமீத் கெபினட்டிலிருந்து வெளியேறி விடுவார் என்று கூறி ஜனாதிபதியுடனான உரையாடலையும் முடித்துக்கொண்டார்.
அமைச்சர் மர்ஹூம் ஹமீதின் இந்த தொலைபேசி உரையாடல்களை அவதானித்துக்கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி அமர்ந்திருக்க மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து சென்று அமைச்சர் ஹமீதை கட்டியணைத்து 'நாளை மறுமையில் நாங்கள் உங்களுக்காய் சாட்சி கூறுவோம் சேர் என்று கண்களில் நீர் கசியகூறியது இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கின்றது.
இதற்கிடையில் இஸ்ஸதீன் சேர் கைது செய்யப்பட்ட விடயம் நாடெல்லாம் பரவ மட்டக்கிளப்பிலிருத்து கொழும்பு நோக்கி வந்த ரயில் வாழைச்சேனையில் முஹைதீன் அப்துல் காதர் தலைமையிலான குழுவால் இடைமறிக்கப்பட்டு மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது வரலாறு.
இப்படியான தைரியமான தலைமைகளையும் மக்களையும் கண்டு மெய் சிலிர்த்த நாமெல்லாம் இன்னும் உயிரோடு இருக்கும் போதே அந்த கட்சிக்கு கயவன் ஒருவன் தலைமை தாங்கி காசுக்கு விலைபோய் சமூகத்தையும் தனது பதவிக்காக கோளைகளாக்கி கூட்டியும் காட்டியும் கொடுத்துவிட்டு இதையெல்லாம் சாணக்கியம் என்று வேறு அழைக்கின்றான்.
வரலாறும் தந்திரோபாயமும் தெரியாத ஒரு மோடர்கள் கூட்டம் போராளிகள் என்றும் பேர் சூட்டிக்கொண்டு நாரே தக்பீர் என்று முழங்குகிறான்.
-வபா பாறுக்-

Comments
Post a comment