முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
( ஐ. ஏ. காதிர் கான் )
மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும், மினுவாங்கொடை கல்லொழுவையை
வதிவிடமாகவும் கொண்ட தமிழ் மொழி ஆசிரியை திருமதி றுவைதா மதீன் எழுதிய
"குடிபெயரும் கனவுகள்" எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, (02)
செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு, மினுவாங்கொடை - கல்லொழுவை அல் - அமான்
முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில், லேக் ஹவுஸ் தமிழ்ப் பிரசுரங்களின்
ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் நடைபெற்றது.
மினுவாங்கொடை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரி - கல்லொழுவை
கலை இலக்கிய வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில்,
வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டார். கலைஞர் கலைச் செல்வன், "காவ்யாபிமானி" கலைவாதி கலீல்,
டாக்டர் ஹஸ்மியா முனாஸிக் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரை நிகழ்த்தினர்.
கிண்ணியா அமீர் அலியினால் தொகுத்து வழங்கப்பட்ட இந் நிகழ்ச்சிகளின்
இறுதியில், அமைச்சர் றிஷாத் பதியுதீன், நூலாசிரியை றுவைதா மதீன் ஆகியோர்,
மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக்கினால்
பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதுடன், "முஸ்லிம்களின் தலைவன்-சேவைச்
செம்மல்" என்ற சிறப்புப் பட்டம் அமைச்சருக்கும், "இலக்கியத் தாரகை" என்ற
கெளரவப் பட்டம் நூலாசிரியைக்கும் இந் நிகழ்வில் டாக்டர் முனாஸிக்கினால்
வழங்கப்பட்டன.
மூத்த எழுத்தாளர் கலாபூஷணம்
மு.பஷீர், அதிபர் எம்.எச்.எம்.காமில், பிரதி அதிபர் ஏ.ஏ.எம்.றிஸ்வி,
மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதுர்தீன்
உள்ளிட்ட பிரமுகர்கள், ஆசிரியர் ஆசிரியைகள், எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment