எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளார்! பௌத்த தேரர்கள் கடுமையாக சாடல் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளதாக மத சுதந்திரத்திற்கான அமைப்பின் பௌத்த தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேவஹூவே சந்திரானந்த தேரர், ஹீனடியே சமித்த நாயக்க தேரர், மகல்கடவல புண்ணியசார தேரர் ஆகியோர் இதனை கூறியுள்ளனர். மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தினர் கூறியுள்ளதை இந்த தேரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூன்று குடும்பங்களை கொண்டுள்ள ஞானசார தேரர் பல வருடங்களுக்கு முன்னர் நாட்டில் தீ மூட்டிய போது, அவற்றை செய்ய வேண்டாம் என எச்சரிக்காத அஸ்கிரிய மாநாயக்கர், ஞானசார தேரரின் நிலைப்பாடுகள் சரியானது எனக் கூறுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அஸ்கிரிய பீடம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அஸ்கிரிய மாநாய