BREAKING NEWS

nfgg அஸ்மினுக்கெதிராக‌ ல‌டாய்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம்  வடக்கு மாகாண சபை உறுப்பினராக  அய்யூப் அஸ்மீன் நியமிக்கப்பட்டார்.
தற்போது இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு பல்தரப்பினரை அக்கட்சி நாடியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்பமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் தலைமையில் குறித்த மாகாண சபை உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த காலங்களில் இம் மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக வைத்தும்  இவரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அணுகி இந்ந விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தவிர மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற முள்ளிக்குளம் மக்கள் போராட்டம் மற்றும் வில்பத்து வர்த்தமானி அறிக்கை தொடர்பாக குறித்த மாகாண சபை உறுப்பினர் தான்தோன்றித்தனமான கருத்துக்களை முன்வைத்து வருவது குறித்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் கட்சி ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் கட்சி ஆராய்ந்துள்ளது.
அத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட பகுதி விஜயம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் தனக்கு வேலை பளு உள்ளதாக கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரனம் சுமந்திரனுடன் வடமராட்சி பகுதியில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விடயம் கட்சிக்கு தெரியவந்துள்ளதை அடத்து கட்சிக்கும் குறித்த மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
3 வருடம் வடக்கு மாகாண சபையில் இவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதி கொடை தொடர்பிலான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விஜயத்தை அதாவது மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அந்த மாவட்டத்திற்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் இல்லாமல் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் குழு சந்தித்து சென்றது.
அது மாத்திரமன்றி அடுத்த நாள் கொழும்பில் நடைபெற்ற மன்னார் மாவட்ட பிரச்சினை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கூட அவரால் (வடக்கு மாகாண சபை உறுப்பினர்) கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் தற்போது கோபமடைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் வடக்கு மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் வடக்கு பட்டதாரிகள் பிரச்சினையை பிரதமர் ரணிலுடன் கதைப்பதாக சில பட்டதாரிகளை தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருடன் கொழும்பிற்கு சென்று பிரதமரிடம் கதைத்ததுடன் பட்டதாரிகளுக்கு அதன் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பாகவும் பட்டதாரிகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமையை சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வாறாக உள்ள நிலையில் குறித்த விசாரணையில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கட்சியில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த மாகாண சபை உறுப்பினர் தனது நண்பர் ஒருவர் மூலமாக தற்போது வெளிநாடு ஒன்றிற்கு அரசியல் தஞ்சம் ஒன்றினை பெற முயற்சிகள் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar