Skip to main content

இனவாத அரசியல் டயரியில் கறிவேப்பிலை ஞானசாரவின் பக்கங்கள்


================================================

காட்சி 1

2011 டிசம்பர் மாதம் ஒரு பௌத்த துறவி தெற்கு அதிவேக சாலையில் பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்றதற்காக நிறுத்தப்படுகிறார். அந்த புத்த துறவி போலீசாரை கண்டபடி தூசணத்தால் கீழ்தரமாக ஏசுகிறார். அந்த வீடியோ சிங்கள வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. அநாகரீகமாக நடந்து கொண்ட இந்த புத்தபிக்கு யார் என்றும், யாரக இருந்தாலும் கீழ்தரமாக நடந்துகொள்ளும் இப்படிப்பட்ட புத்த துறவிகள் கைது செய்யப்பட்டு சிவுற (காவியுடை) களையப்படவேண்டும் என்பதே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவிகிறார்கள்.

காட்சி 2

2012 ஆகஸ்டு மாதம், மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மோசமாக படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மியன்மார் பங்களாதேஸ் எல்லையில் இருந்த ஒரு பௌத்த ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டத்தை காரணமாக கொண்டு ஒரு குழு டவுன் ஹோலில் இருந்து புறப்பட்டு பங்களாதேஷ் தூதுவராயத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்ட ஊர்வலம் போகிறார்கள். இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் தடை செய்யப்படவேண்டும் என்று பேனருடன் சென்று பங்களாதேஷ் தூதுவராலயத்துக்கு கற்களை வீசியெறிய சர்ச்சையில் முடிவடைகிறது ஆர்ப்பாட்டம். இலங்கையில் எப்போது முஸ்லிம்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று சிங்களவர்களே தங்களை தாங்களே நக்கலாக கேள்வி எழுப்பிய அந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு அதிவேக சாலையில் மோசமாக நடந்துகொண்ட அதே பௌத்த பிக்கு தலைமை தாங்குகிறார். ஊடகங்கள் நீங்கள் யார் என்று அந்த பௌத்த பிக்குவிடம் கேள்வி எழுப்ப, தனது பெயர் கலகொட்ட எத்தே ஞானசார என்றும் தமது அமைப்பு கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பொது பல சேனா என்றும் அறிவிக்கிறார்.

காட்சி 3

2012 செப்டம்பர் மாதம் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் (கிழக்கு, வடமத்திய, சபரகமுவ) நடத்தப்படுகிறது.

காட்சி 4

2012 ஒக்டோபர் மாதம் -  ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுப்பபடுகிறது என்று யாரோ ஊர் பெயர் தெரியாத கனடா பேராசியர் ஆய்வு செய்திருப்பதாகவும் அதனால் இலங்கையிலும் ஹலால் உணவுகளை சிங்களவர்கள் புறக்கணிக்கவேண்டும் என்று முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நடத்துகிறார். ஒருவருமே கவனிக்காத அந்த மாநாட்டின் கருத்துக்களை பரப்புவதற்கு என்றே புதுசு புதுசாக பேஸ்புக் பேஜ்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த கருத்துக்கள் திடீரென எங்கும் வைரலாக பரவுகின்றன. சமூக ஊடகங்களை தாண்டி தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள் என்று எங்குமே ஹலால் பிரச்சினை பேசுபொருளாகிறது.
ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள், உசுப்பெத்தல்கள் என்று பெரும் சர்ச்சையை கிளப்பிய ஹலால் பிரச்சினை இறுதியில் 2013 ஆம் பெப்ரவரி மாதம் இறுதியில் முற்றுபெறுகிறது.

காட்சி 5

2013 ஏப்ரல் மாதம் – காலியில் உள்ள பொது பல சேனா அலுவலகத்தை ஞானசாரவுடன் இணைந்து கோட்டா திறந்து வைக்கிறார்.

காட்சி 6

பௌத்த நாடான இலங்கையில் மாடு அறுப்பதை தடை செய்யணும் என்று ஒரு புதிய குண்டை தூக்கி போடுகிறார். ஞானசார. பொது பல சேனா அமைப்பினர் தெமட்டகொட மாடு அறுக்கும் இடத்தை சுற்றிவளைகிறார்கள். மீண்டும் முஸ்லிம்களின் வாழ்வு பேசுபொருளாகிறது. 2013 ஆம் ஆண்டு மே மாதம் போவத்த் இந்த்ரத்ன தேரர் என்பவர் மாடு அறுப்பதை தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னாள் தீ குளிக்கிறார்.

காட்சி 7

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்று மாகாண சபைகளுக்கான (மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு) தேர்தல்கள் அறிவிக்கப்படுகிறது.

காட்சி 8

புத்தாண்டுகளில் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துக்கள் பரப்பபடுகிறது. 2014 ஆம் ஆண்டு புத்தாண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பெப்பிலியான பேஷன் பக் பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்கப்படுகிறது.

காட்சி 9

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – தெற்கு மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் நடக்கிறது.

காட்சி 10

2014 ஆம் ஆண்டு மே மாதம்- பாணதுறையில் உள்ள நோலிமிட் தீ வைத்து கொளுத்தப்படுகிறது.

காட்சி 11

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்- அழுத்கமையில் நடந்த ஒரு மாநாட்டின் பின்னர் தர்கா டவுன், அழுத்கமையில் ஒரு பெரிய இரத்த கலவரம் நடந்து முடிகிறது.

காட்சி 12

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்- ஊவா மாகாணசபை தேர்தல் நடக்கிறது.

காட்சி 13

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இனவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்து நல்லாட்சியை உருவாக்குவேன் என்ற கோஷத்துடன் மைத்ரி வெற்றி பெறுகிறார்.

காட்சி 14

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் – பொது தேர்தல் நடக்கிறது. இதுவரை காலமும் சிங்கள இனத்தின் பாதுகாவலன் என்று தம்மை தாமே அழைத்துக்கொண்ட ஞானசராவின் பொதுபல சேனா கட்சி பொது தேர்தலில் படு தோல்வியடைந்து குப்பை தொட்டிக்குள் வீசப்படுகிறது. ஆத்திரமடைந்த ஞானசார தான் அரசியல் வாழ்வில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவிக்கிறார்.

காட்சி 15

மீண்டும் தனது இரண்டாவது இனிங்க்சை ஆரம்பித்து இருக்கிறார். .அவரின் ஒவ்வொரு வார்த்தையும் இதற்கு முன்னர் அதே (நார)வாயால் உச்சரிக்கப்படவையே. இதற்கு மேல் சிந்திப்பதற்கு அந்த இனவாத மூளைக்குள் எதுவும் இல்லை.

இந்த முறை கிழக்கு மாகாணத்தில் அதிகம் முகாமிட்டிருக்கிறார். ஆமாம்,  செப்டம்பர் மாதம் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவேண்டியிருக்கிறது. (காட்சி 3 ஐ போல ). இரண்டாவது இனிங்ஸிலும் மேற்கூறப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் மீண்டும் ஒருமுறை உயிர்ப்பிக்கப்படலாம். ஆனாலும் கரிவேப்பிலையான ஞானசார தனது இரண்டாவது இனிங்சில் விளையாடுவது மீண்டும் மஹிந்த அணிக்காகவா அல்லது நல்லாட்சி அணிக்காகவா அல்லது இது இரண்டும் இல்லாத சர்வதேச சக்தியொன்றால் ஸ்பொன்ஸர் செய்யப்பட்ட அணிக்காகவா என்பது இன்னும் சில நாட்களில் புரியும்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…