அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் முன்னாள் இணைச்செயலாளரும்
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (MULF) தாபகச் செயலாளர் நாயகமும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் (SLMC) தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் இனத்துவ முரண்பாட்டு மாற்றமைவுக்கான
தமிழ் முஸ்லிம் அமைதிக் குழுவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளருமாகவும் முஸ்லிம்களுக்கான
அமைதிச் செயலகத்தின் செயலாளர் நாயகமுமாக கடந்த காலங்களில் செயல்பட்ட நில,கட்டிட அளவையாளர் ஜனாப் எம்.ஐ.எம்.மொகிதீன் எழுதிய இலங்கையின் இனத்துவ முரண்பாடும்
அதிகாரப் பரவலாக்கமும் நூல் வெளியீடு சித்திலெப்பை ஆய்வுமன்றத்தின் ஏற்பாட்டில் (2017-05-20) எதிர்வரும் சனிக்கிழமை 4 மணிக்கு கொழும்பு தபாலகக் கேட்போர்
கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எம்.ஐ.எம்.மொகிதீன்
, சிறப்பதிதியாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர்
சேகுதாவுத் விஷேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எம்.எம்.
நாஜிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அதேவேளை சிறப்புப்பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் எம்.எம். சுஹைர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். அனைவரையும் அன்புக்கரம்
நீட்டி அழைக்கிறது சித்திலெப்பை ஆய்வு மன்றம்.
Post a Comment