Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

புத்தளம் என்பது குப்பை மேடல்ல

பாராளுமன்றத்தில் அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி..

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 28 ம் திகதி நடந்த விசேட விவாதத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் உரையாற்றிய போது...

“இந்த சந்தர்ப்பத்தை எனக்களித்தமைக்கு நன்றி... முதற்கன் மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தமது உறவினர்களை இழந்த இன்னலுறும் அவர்களது குடுப்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன்..
குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இங்கு பேசிய அனைத்து எதிர் தரப்பு உறுப்பினர்களின் பேச்சையும் நான் செவிமடுத்தேன், அவர்கள் கூறியவற்றில் எனக்கு உடன்பாடில்லை. எமது நாட்டின் மூன்றாவது மாகாணசபையாக இருந்த வடமேல் மாகாணசபையின் சுற்றுச்சூழல் அமைச்சராக நான் இருந்த போது குருணாகல் பகுதியில் இதே போன்ற ஒரு பிரச்சினை உருவெடுத்தது, அதனை இரண்டு வருடங்களில் நாம் சரி செய்தோம். இங்கு பேசப்படும் அந்த முக்கிய பகுதியான அறுவாக்காடு, அங்கும் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டோம், அங்கு சுண்ணாம்பு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன, அதன் விளைவாக அங்கு பாரிய குழிகள் உருவாகின அதனையும் நாம் மண்ணை கொண்டு மூடினோம். இது போன்று நாம் எதிர்கொண்ட இன்னும் பல பிரச்சினைகளையும் முதலமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களின் தலைமையின் கீழ் நாம் தீர்த்து வைத்தோம்.
இன்று எதிரணி உறுப்பினர்கள் ஆளும்தரப்பை நோக்கி விரல் நீட்ட முடியாது, ஏனென்றால் கடந்த பத்து-பதினைந்து வருடங்களாக அனைத்து மாகாணசபைகள் உட்பட நாட்டின் 90 வீதமான ஆட்சி அதிகாரம் தற்போதைய எதிரணியினரின் வசமே இருந்தது. எனவே ஆரம்பத்திலேயே இப்பிரச்சினை அவர்காளால் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், எனவே முழு தவறும் முன்னைய அரசாங்கத்தையே சாரும்.
இங்கு புத்தளம், அறுவாக்காடு பற்றி பேசியவற்றை நான் செவியுற்றேன், புத்தளம் என்பது ஒரு குப்பை கொட்டுமிடம் என்று மக்கள் கருதுகின்றார்களோ தெரியவில்லை. முதலாவதாக 1965 ம் ஆண்டு சீமந்து தொழிச்சாலையை புத்தளத்தில் ஆரம்பித்தார்கள், இதன் மூலம் 20 வருடங்களுக்கும் மேலாக நாம் பாதிப்புற்றிருக்கின்றோம். சீமந்து தொழிச்சாலை தூசுகள் சுற்றுவட்டார பகுதி எங்கும் பரவியதால் எமது தென்னை உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே மக்கள் தமது பெறுமதிமிக்க நிலங்களை விற்றுவிட்டனர், அதேநேரம் டிபி, ஆஸ்துமா போன்ற மோசமான நோய்களும் பரவலாயின, துரதிஷ்டவசமாக இந்நிலை நீண்ட காலம் தொடர்ந்து சென்றது. எனக்கு நினைவிருக்கின்றது, மூன்றாவது மாகாணசபை தேர்தல் காலத்தில் இப்பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்துவதாக நான் வாக்குறுதியளித்தேன். நான் வெற்றி பெற்றபோது குறித்த வளிமண்டல சீர்கேடு தொடர்பாக கவனமெடுத்து காற்றில் கலக்கும் சீமெந்து துகள்களை சுத்திகரித்து பிரச்சினையை கட்டுப்படுத்தத முடிந்தது. அது நாம் செய்த முதலாவது விடயம்..
மிகவும் பிரபல்யமான ஹோல்சிம் சீமந்து ஆலை புத்தளத்திலேயே அமைந்துள்ளது, ஆனால் உங்களாலும் நம்ப முடியாது, சுமார் 1229 தொழிலாளர்கள் அங்கு பணியாற்றுகின்றார்கள், அதில் வெறும் 47 பேர்தான் புத்தளத்தை சேர்ந்தவர்கள். இன்று அந்நிறுவனத்தின் ஒரு சிறிய ஒப்பந்தங்கள் (ஊழவெசயஉவ) கூட புத்தளத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை, அவை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றது. இது கூட புத்தளத்தை குப்பை கொட்டுமிடமாக்கியது, அவை இங்கு கொட்டப்படுகின்றன ஆனால் அதன் மூலமான வருமானம் மட்டும் வேறு எவருக்கோ செல்கின்றன.
அதேபோன்று நுரைச்சோலை அனல்மின் நிலையம், இன்று சம்பூர் மக்கள் எதிர்ப்பது போல அன்று புத்தளம் மக்களாகிய நாமும் இதனை எதிர்த்தோம், கண்டித்தோம், ஆட்சோபனை தெரிவித்தோம், ஆனாலும் அவ் அனல்மின் நிலையம் நிறுப்பட்டது அதன் மூலம் இன்று நாம் பாதிப்புக்கு உள்ளகியுள்ளோம். அதன் கழிவு தூசிகள் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கின்றது, அதன் விளைவாக சுமார் 16,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகிவிட்டன. இதுதான் இன்று புத்தளத்தில் நடக்கின்றது. இவ் அனல்மின் உற்பத்தி நிலையத்திலும் சுமார் 1,200 பேர் பணியாற்றுகின்றார்கள், அதில் வெறும் 25-50 பேர் மாத்திரமே எமது புத்தளத்தை சேர்ந்தவர்கள். இது நிருவப்படுகின்றபோது கணிசமானளவு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, 50 வீதமான வேலைவாய்ப்புக்கள் புத்தளத்திற்க்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் துரதிஷ்டவசமாக நாட்டின் 50 வீத மின்சார தேவையை பூர்த்திசெய்யும் இந்நிறுவனத்தில் இன்று புத்தளத்தை சேர்ந்த 25-40 பேர்தான் பணிபுரிகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த மாதம் கூட சுமார் 40 தொழிலாளர்கள் புத்தளத்திற்க்கு வெளியே இருந்து நியமிக்கப்பட்டனர். எனவே இதன் மூலமும் எமது புத்தளம் மண் குப்பைமேடாகியது.
மேலும், இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிந்த விடயம் தான், விமானப்படை சுமார் 2000 ஏக்கர் நிலத்தை கல்பிட்டி கண்டக்குளி பகுதியில் தன்வசப்படுத்தியுள்ளது. அது அவர்களுடைய குண்டுவீச்சி பயிற்சித்தளம். இதன்மூலமும் சுமார் 7, 8 மக்கள் உற்பட கணிசமானளவு கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன. எனவே இதனையும் நாம் கண்டிக்கின்றோம். இது இன்னும் ஒரு குப்பைமேடு.
குப்பை கூளங்களை புத்தளத்தை நோக்கி கொண்டுசெல்ல நீங்கள் முற்படுகின்ற போது, புத்தளம் மக்கள் மிக பெரிய பிரச்சினையை உருவாக்குவார்கள், எமது மக்கள் இதனை வண்மையாக கண்டிக்கின்றனர், அதேநேரம் எமது மக்களின் மீது மிக அதிகமான கனமிக்க பாரங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 35,000 மேலதிக வாக்குகளை புத்தளம் தொகுதியிலிருந்து வாரிவழங்கி புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதியை வெற்றி பெறச்செய்தோம், அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் தொகுதியிலிருந்து 28,000 மேலதிக வாக்குகளை வழங்கி புத்தளம் மாவட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தினோம். எமது புத்தளம் மக்கள் இன்றையா ஜனாதிபதிக்கும், இன்றையா பிரதமருக்கும் தான் தமது முழு ஆதரவையும் வழங்கினார்கள். எனவே இன்று அவர்கள் குப்பை கூளங்கள் தான் இதற்கான கைமாறா என்று கேட்கின்றனர்.
கொழும்பிலிருந்து புத்தளத்திற்க்கு குப்பைகளை கொண்டு செல்வதன் செலவையும் மீள்சுழச்சி இயந்திரங்களை கொண்டு குப்பைகளை அகற்றுவதற்கான செலவையும் ஒப்பிடுகின்ற போது சுமார் பத்து மடங்கு வித்தியாசம் இருக்கின்றது. எனவே நான் இந்த விடயத்தை பிரதமர் தன் கையில் எடுக்கவேண்டும் என்று கூறுகின்றேன். அனைத்து அமைச்சகங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய பிரதமரினால் இப்பிரச்சினையை ஆறு மாத காலத்தில் தீர்த்துவைக்க முடியும்.
அமைச்சர் பைசர் முஸ்தபா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு குப்பைகளை கொண்டுசெல்வதை விடுத்து குறித்த இடத்திலேயே மீள்சுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை மாகாணத்திற்க்கு ஒன்று என்ற வீதத்தில் நிறுவுவாதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
கனேடிய நிறுவனம் ஒன்று என்னை சந்தித்த போது நான் அவர்களை குப்பைமேடு பகுதிற்க்கு அழைத்து சென்றேன், குப்பைகளை பார்த்த அவர்கள் உடனே கூறினார்கள் இது தங்கச்சுரங்கம் என்று, ஏனென்றால் அந்த குப்பைகளின் 50 வீதமானவை மீள்சுழற்சி செய்யப்படக்கூடியவை. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது..!!??
இது நடந்து எட்டு மாதங்களாகின்றன, அன்றிலிருந்து நாம் அங்கும் இங்கும் ஓடி திறிகின்றோம், அங்கும் இங்கும் அலுவலக ரீதியாக கூட்டங்களை கூட்டினோம். அதேநேரம் குறித்த நிறுவனம் பங்களாதேஷ்க்கு சென்றது, ஒரு மாத காலப்பகுதிற்க்குள் அங்கு ஒரு தொழிச்சாலையை நிறுவி வேலைகளையும் ஆரம்பித்துவிட்டது. இவ்விடயத்தை பிரதமர் கவனத்தில்கொள்வார் என்று நினைக்கின்றேன், அவர் இவ்விடயத்திக்கு விரைவாக தீர்வுகான வேண்டும், ஏனென்றால் நாம் மிக நீண்ட காலமாக பாதிப்புக்கு உள்ளகியுள்ளோம்.
புத்தளத்தில் இதுவரை பெரும்பாலான வீதிகள் செப்பனிடப்படவில்லை, புத்தளம் மக்களுக்கான வேலைவாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே பிரதமர் அவர்கள் எமது தேவைகளை முதலில் நிவர்த்திசெய்ய வேண்டும். எமது பகுதியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நான், துரதிஷ்டவசமாக எந்த மாவட்ட குழுவிலும் நான் இல்லை. எனது மக்கள் அவர்களுக்கான வீதி அபிவிருத்திகளையும் வேலைவாய்ப்புக்களையும் என்னிடம் கேட்கின்றனர். சுமார் 7000 ஏக்கர் விவசாய நிலங்கள் அனல்மின் நிலையத்தின் பாதிப்பினால் இன்று கைவிடப்பட்டுள்ளன. கூளங்களை புத்தளத்திற்க்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்க்கு முன்னர் எமது அவலங்களை சரிசெய்து தாருங்கள்.
குப்பை கூளங்களை புத்தளம் நோக்கி கொண்டு வருவதை ஒரு நாளும் புத்தளம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள், கடந்த மாதம் கூட இதுபற்றி தெரிந்து கொண்ட எம்மக்கள் இதற்க்கான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.
எனவே நான் கௌரவ பிரதமர் அவர்களிடம் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் படியும் இத்திட்டத்தை கைவிடும் படியும் தாழ்மையாக வேண்டுகின்றேன்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வாக்களித்த புத்தளம் மக்கள் தமக்கான சிறந்த கைமாறு வழங்கப்படும் என்று இன்றும் எதிர்பார்த்தவண்ணமே இருக்கின்றனர்...
நன்றி...

ஏ.எம்.றிசாத் 

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத