Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

அமைச்சுப் பதவி + இரண்டு கோடி..!


மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

தம்புள்ளை தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனக பண்டாரவின் மகன் மத்திய மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

மைத்திரி அணியினர் முயற்சி செய்து ஜனக பண்டாரவின் சகோதரரின் மகனையே வெற்றிடமான அந்த அமைச்சுப் பதவிக்கு நியமித்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சபையிலும் குழப்பம்.
மே தின நிகழ்வை அடுத்து வட மத்திய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மஹிந்தவின் விசுவாசியான கே.எச்.நந்தசேனவை மைத்திரி அப்பதவியில் இருந்து நீக்கினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எஸ்.எம்.சந்திரசேன அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.எம்.சந்திரசேனவை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரி மஹிந்த உறுப்பினர்கள் 17பேர் கையெழுத்திட்டு ஆளுநரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

அந்த மகஜர் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த 17பேரில் ஒருவரான சுசில் குணரட்ன மறுநாள் மைத்திரி பக்கம் பல்டி அடித்து விட்டார்.

பல்டியடித்த அவருக்கு எஸ்.எம்.சந்திரசேன வகித்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

மேலும் அடுத்தடுத்து இரண்டு பேர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.

இவர்களை வளைத்துப் போடுவதற்கு மைத்திரி தரப்பு எவ்வாறான பேரம் பேச்சுக்களை நடத்தியது என்று பாருங்கள்.

முதலைமைச்சர் பதவியைக் கைப்பற்றுதல் என்ற முடிவை அந்த 17பேரும் எடுத்ததும் அவர்கள் மஹிந்தவைச் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டைக் கூறினர். அந்தச் சந்திப்பில் 16 பேரே கலந்து கொண்டனர்.

மைத்திரியிடம் மத்திய அரசின் அதிகாரம் இருக்கும்போது இது சாத்தியமற்றது என்று மஹிந்த அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

அப்போது அவர்களுள் இருவர் ''சேர் மைத்திரி பக்கம் மாறினால் அமைச்சுப் பதவியும் இரண்டு கோடி ரூபா பணமும் தருவதாக மைத்திரி தரப்பு எங்களிடம் கூறியுள்ளது. நாங்கள் போக மாட்டோம்'' என்றனர்.

அப்போது 17ஆவது நபர் உள்ளே நுழைந்தார். ஏன் தாமதம் என்று வினவப்பட்டது. மைத்திரி பக்கம் பல்டியடித்தால் இரண்டு கோடி ரூபா பணமும் அமைச்சுப் பதவியும் தருவதாக மைத்திரியின் ஆட்கள் அவரைக் கூப்பிட்டுப் பேசியதாகவும் அதனால்தான் தாமதம் என்றும் கூறினார்.

''நான் பல்டியடிக்க மாட்டேன். ஆனால், யாராவது அவ்வாறு செய்வதற்கு நினைத்திருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தாருங்கள். எனக்கு பணப் பிரச்சினை அதிகம் உண்டு'' என்று அந்த நபர் மஹிந்தவிடம் கூறினார்.

இதைக் கேட்டு மஹிந்த சற்று ஆடியே போனார். இருந்தும், மறுநாள் அவர் உட்பட மூவர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவியைப் பெற்று விட்டனர்.

அமைச்சுப் பதவி மாத்திரமன்றி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு என்னவெல்லாம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

[எம்.ஐ.முபாறக்- சிரேஷ்ட ஊடகவியலாளர்]

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத