BREAKING NEWS

புத்தபெருமானின் சிலை எந்த முஸ்லிமையும் மதமாற்றப்போவதில்லைகொல்லிமலை சிலைவிவகாரத்தில் ஹக்கீம் சாணக்கியரே !!

அதிகளவிலாலான முஸ்லிங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில் இறக்காம பிரதேசத்தில் கொல்லிமலையில் வைக்கப்பட்ட புத்தபெருமானின் சிலை எந்த முஸ்லிமையும் மதமாற்றப்போவதில்லை என பகிரங்கமாக அறிக்கைவிட்ட நல்லாட்சி அரசின் இதயமான ஐ.தே.கட்சியின் கலகெதர தொகுதி அமைப்பாளரும் கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின்பா ராளுமன்ற உறுப்பினருமான நகர திட்டமிடல் அமைச்சர் சட்டமுதுமாணி அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகளையும் இந்த மாவட்ட மக்களையும் எப்படி கதை கூறி ஏமாற்றலாம் என்பதில் பாண்டித்தியம் பெற்றவரே !!

இது இவ்வாறு இருக்க இந்த சிலை வைப்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஐ.தே.கட்சி திகாமடுல்ல மாவட்ட எம்.பியும் மு.கா சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான (இறக்காமம் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசம்.) கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுவாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த சந்தேகம் மிகவும் வலுப்பெறும் நிலையை எட்டியுள்ளது ஏன் எனில் இந்த சிலை வைப்பினை கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசாமையும்  காரசாரமான எந்த நடவடிக்கையையும் கௌரவ எம்.பி எடுக்காததுமே  அதற்க்கு சாட்சியாக அமைத்துள்ளது.

கௌரவ பிரதமர் உறுதியளித்தார்,அதிமேதகு ஜனாதிபதி உறுதியளித்தார் என மக்களிடம் வந்து கூறிவிட்டுசென்ற அமைச்சரும்,அவரது படைபட்டாளங்களும் இப்போதும் இந்த சிலை அங்கிருந்து அகலாமல் ஆணிவேர் கொண்ட ஆலை மரமாய் இருப்பதை அறியாமல் இருப்பது வேடிக்கையே.

விரைவில் அந்த சிலையை சுற்றி விகாரை அமைக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் வந்தபின்னர் அதனையும் அகற்றுவோம்,விகாரையை இடிப்போம் என்றல்லாம் மக்களிடம் கதை சொல்ல தயாராகும் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர்களும் அவர்களது கைபொம்மைகளும் நாளைய தீர்ப்புநாளை நினைவில் கொள்ளுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.

மஹிந்த ஆட்சியின் போது முஸ்லிங்களுக்கு அநியாயம் நடந்தபோது அமைதியாக இருந்துவிட்டு மக்களின் தீர்ப்பினால் நடந்த  ஆட்சி மாற்றத்தில் நாங்களே பங்காளிகள் என மார்தட்டியது போல இப்போதும் இந்த நல்லாட்சியில் முஸ்லிங்களுக்கு தொடர்ந்தும் அநியாயங்கள் நடக்கின்ற போது அமைதியாக இருப்பது ஏன் ?

மஹிந்த ஆட்சியில் குடும்ப ஆட்சி,வாய்திறக்க முடியாதுள்ளது என்று கூறிய நீங்கள் உங்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சியில் வாய்திறக்காமல் இருப்பது ஏன் ?

வில்பத்தில் முஸ்லிங்களின் காணிகள் காடாகி வருவதும்,கல்லிமலையில் சிலைகள் உருவாவதுமாக பகிரங்கமாகவே இனவாதம் தலை தூக்கிவரும் இந்த காலகட்டத்தில் ஏன் இன்னும் எமது அரசியல் தலைவர்கள் அசமந்தமாகவே இருக்கிறீர்கள் ?

அமபாறையில் தயா என்கிற ஒரு அமைச்சரை எதிர்த்து  நிற்க்க அவரைவிட பெரிய அமைச்சையும் இரண்டு முக்கிய அரை அமைச்சையும் கிழக்கின் ஆட்சியையும்  ஐந்து மாகாண சபை பிரதிநிதிகளையும் அதில் ஒரு முக்கிய அமைச்சரையும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசால் முடியாது உள்ளது என்பதே எனது வினா ?

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரா ? அல்லது தொகுதி அமைப்பாளரா இந்த நல்லாட்சி அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதை நிருவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவ்வளவாக தனக்கு இல்லை என்பதையும் சிங்கள மக்களின் வாக்குகளே தனது பாராளுமன்ற ஆசனத்திட்க்கு காரணமாகும் என்பதையும் நன்றாக அறிந்தவர்.

இந்த வகையில் இந்த சிலை விவகாரத்தில் சாணக்கியம் எனும் புலித்தோலை போர்த்திய பூனையாக அமைச்சர் ஹக்கீம் தூங்க முற்படுவாரே தவிர இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரமாட்டார் என்பதே எதார்த்தம்.

அம்பாறையின் ஆளுகைமிகு அரசியல் அதிகாரம் மு.கா வசமிருக்கும் போது ம.கா வையும் தே.காவையும் விரல் நீட்டுவது தர்மமில்லை என்றாலும் அவர்களுக்கு கணிசமான வாக்குகளை இந்த இறக்காம மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மையே. அவர்களும் இந்த விடயத்தில் அமைதி காப்பது ஆபத்தான ஒரு விடயமே என்பதை காலம் எமக்கு கற்பிக்க தவறாது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபை,மாகாணசபை அரசியல் மேடைகளில் முழங்க்குவதட்க்கு நல்ல ஒரு விடயமாக இது இருக்கும் என்பதையும் இந்த சிலையை அகற்றித்தர எங்களுக்கு வாக்களியுங்கள் என சகல கட்சி வேட்பாளர்களும் உங்களிடம் வந்து நிற்பார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சிலையை அகற்ற எந்த காங்கிரசும் முன்வராது என்பதும் அப்படி முன்வந்தால் அவர்களுடைய கடந்தகால நினைவுகளால் நிர்க்கதியாக மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும், பதவிகளுக்கு ஆபத்து வரும் என்பதை அவர்கள் நன்றாக அறிவர்.

இதை இப்படியே விட்டுவைக்க முடியாது என்பதை உணர்ந்த சிவில் அமைப்புக்களும்,பொதுமக்களும் களத்தில் நின்று போராட முன்வரவேண்டும்.இது இறக்காமம்,வில்பத்து மக்களின் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் பிரச்சினை என்பதை நாம் உணர வேண்டும் இல்லது போனால் காலம் உணர்த்திவிடும் என்பதை அச்சத்துடன் தெரிவித்து வைக்கிறேன்.

நூருல் ஹுதா உமர்
தலைவர் ,
அல்-மீஸான் பௌண்டசன்
இலங்கை.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar