றமழான் காலத்தில் நாம் சாப்பிடுகின்ற விதமாகச் சாப்பிட்டால்

Mohamed Najimudeen
றமழான் காலத்தில் நாம் சாப்பிடுகின்ற விதமாகச் சாப்பிட்டால் நோன்பின் தேக ஆரோக்கிய நன்மைகளை அடையலாமா?
அபூதாபியில் உள்ள பெர்ஜீல் வைத்தியசாலையில் கடந்த வருடம் றமழான் மாதம் நோன்பு துறந்த பின்னர்  அதிகமாகச் சாப்பிட்டதனால் ஏற்பட்ட உபாதைகளின் காரணமாக நாளாந்தம் 160-180 பேர் சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (The National  UAE  Staurday May 13, 2017)
சென்ற வருடம் அராபிய நாடு ஒன்றில் றமழான் மாதத்தில் நிறை குறைபவர்களுக்கு ஒவ்வொரு கிலோகிராம் நிறை குறைவிற்கும் ஒரு பவுண் வீதம் தங்கம் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

றமழான் மாதத்தில் நம்முடைய உணவு முறைகள் எப்படி அமைய வேண்டும்?
(அ) நோன்பு துறக்கும் (இப்தார்) வேளையில் மூன்று பேரீச்சம் பழங்கள் ஒரு கிண்ணம் நீர் மற்றும் ஒரு கோப்பை அரிசிக் கஞ்சி. அரிசிக் கஞ்சி ஒரு சிறந்த உணவாகும். இலகுவாகச் சீரணிக்க வல்லது. அதிகமான நீரைக் கொண்டது. உடனடியாகப் பசியைப் போக்க வல்லது. அரிசிக் கஞ்சி தென் இந்திய முஸ்லிம்களின் முதுசொம்.
(ஆ) தறாவீஹ் என்று பொதுவாக அறியப்பட்ட இரவு நேரத் தொழுகை. இது மெல்லிய ஆனால் உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் தேவையான ஒரு சிறந்த அப்பியாசம். நோன்பின் களைப்பை நீக்கிப் புத்துணர்வை அளிக்க வல்லது. எவ்வளவு  தொழ வேண்டும் என்பது அவரவரின் உடலையும் நம்பிக்கையையும் பொறுத்தது.
(இ) அதன் பின்னர் ஏதாவது  நீர் ஆராகரம். இரவு நேரங்களில் போதியளவு நீர் அருந்த வேண்டும். அதற்காக அதிக அளவு சீனியைப் பாவிக்க வேண்டாம்.
(ஈ ) தானிய வகைகளையும் காய் கறி மற்றும்.இலை சார்ந்த மரக்கறி வகைகளையும்   அதிகமாகச் சாப்பிட வேண்டும். இவைகளில் நார்ச் சத்து அதிகம். அதனால் பசித்தன்மை உருவாகாது. மலச்சிக்கல் ஏற்படாது. பழங்கள் உடம்பிற்கு நல்லது.
(ஈ) சஹர் வேளையில்  மிகவும் சிறிய அளவு உணவும் அதிக அளவு நீரும் உட்கொள்ளப்படல் வேண்டும். அதிகமாக நீர் அருந்தினால் அதிக பசி ஏற்படாது. அதிகம் உண்ண வேண்டிய தேவை ஏற்படாது.
தயிர் ஒரு நல்ல உணவு. ஆனால் தயிரோடு அதிக அளவு சீனியைச் சேர்த்து அதன் பலனைக் கெடுத்துக் கொள்கின்றோம்.
இப்படி நம் உணவை மாற்றிக் கொண்டால் நோன்பின் மருத்துவ நன்மைகளை முற்றாக அடைய முடியும். உடம்பில் உள்ள கொழுப்புக்கள் எல்லாம் கரைந்து விடும். இரத்தக் குழாய்களில் உறைவு ஏற்படும் பாதிப்பு குறையும். இப்படியாக உணவுண்டால் றமழான் மாத முடிவில் இரண்டு கிலோகிராம் நிறை குறையும்.
இந்த உணவுப் பழக்கம் றமழானின் பின்னரும் தொடர வேண்டும். அதனால் சிறந்த ஆரோக்கியத்தை அடைய முடியும்.
துரதிஷ்டவசமாக றமழானில் நம்முடைய உணவு முறைகள் அதன் நோக்கத்தையே பாழ்படுத்தி விடுகின்றன. பொரியல், வறுவல், அவியல், துவையல், இடியல் என்று பெண்கள் சமையலிலேயே  சங்கமமாகி விடுகின்றார்கள்.  றமழான் வந்தால். அதிக வேலை. அதிக செலவு
றமழான் மாதத்தில் நம்முடைய தூக்க நேரம் குறைகின்றது. மாறுபடுகின்றது.  ஒவ்வொருவருக்கும் ஒரு குறித்த நேரம் தூக்கம் அவசியமாகும். இரவு நேரம் முழுவதும் வீணான கதைகளில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மறுநாள் பகல் நேரம் முழுவதும் வேலை நேரத்தில் தூங்கி வழிந்து நோன்பின் புனிதத்தைக் கெடுப்பது நல்லதல்ல.
அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்று அவன் அருள் பெற்ற நல்லடியர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.  .

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்