காரைதீவில் உள்ள இராணுவ முகாமை அகற்ற மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முயற்சிகள் நடை பெற்ற போது உலமா கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது.
தற்போதைய சுமுக சூழலில் மேற்படி இராணுவ முகாம் தேவையா என்ற கேள்விகள் எழுவது நியாயமே.
காரைதீவு சந்தி என்பது யுத்த காலத்துக்கு முன்பிருந்தே திருடர்களின் சந்தி என பெயர் பெற்றிருந்தது. காரணம் அச்சந்தியை சூழ மக்கள் குடியிருப்பு பாரிய அளவில் இல்லாமையும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்தமையாலாகும். கிழக்கில் தமிழ் முஸ்லிம் நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தியதே இந்த காரைதீவு சந்திதான்.
அவ்வழியால் வரும் முஸ்லிம்கள் இரவில் தாக்கப்படுதல் கத்தியை காட்டி வழிப்பறி போன்றவையே தமிழ் முஸ்லிம் கசப்புக்கு வழி வகுத்தன.
இன்றைய நிலையில் இராணுவம் அந்த இடத்தில் அவசியமில்லை என்ற போதும் நாளை முன்னர் இருந்தது போன்று காரைதீவுச்சந்தி திருடர்களின் சந்தியாக ஆக மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்விக்கு உரிய பதில் காரைதீவு மக்களிடம் இன்னம் இன்னமும் இல்லை.
இந்நிலையில் காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாயலை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளித்து அதனை விஸ்தரிப்பதற்கும் அனுமதிப்பதுடன் அதற்கு அருகில் உள்ள பகுதியில் முஸ்லிம்களின் கடைகளுக்கு அனுமதியும் தமிழ் தரப்பிலிருந்து கிடைக்கும் பட்சத்தில் காரைதீவு இராணுவ முகாமை அகற்ற முஸ்லிம்களும் துணை போகலாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். இவ்வாறு இதற்கு உத்தரவாதம் இல்லையாயின் மேற்படி இராணுவ முகாமை அகற்ற பிரதேச முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் துணை போகக்கூடாது என்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.

Post a Comment